முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சொந்த மண்ணிலும் உதை வாங்கவா? தேசஒற்றுமையாம்- மயிராச்சு! (வீடியோ)

பர்மா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, மலேசியா, சவுதி உலகெங்கும் உழைத்து உதைப்பட்ட தமிழன் சொந்த நாட்டிலும் உதைபடுவதை பவா சமத்துவன் தனது வரிகளில் வெளிப்படுத்துகிறார்.

"கல்தோன்றி மண்தோன்றாக்
காலத்துக்கும்
முந்தோன்றிய
மூத்தக்குடி,
இந்திய மாநிலத்திற்குள்ளும்
கால்பந்தாய்
உதைபடுகிறான்...

கேரளாவிலிருந்து
துரத்தப்பட்டான்
கர்நாடகாவிலிருந்து
விரட்டப்பட்டான்.
மராட்டியத்திலிருந்து
திருப்பப்பட்டான்.!

சொந்த மண்ணாவது
சொல்லிக் கொள்ளும்படி
இருக்கிறதா...?"


இந்தக் கேள்வியின் நியாயமும், வலியும் கண்முன்னே புரிந்தது ஒருநாள்.

28-03-2006:
திரைப்படக் கல்லூரியின் உணவு இடைவேளையில் எதிரிலிருக்கும் செல்வம் கடையில் உணவுண்பது வழக்கம். அப்படி ஒரு மதிய வேளையில் எங்கள் உணவுத்தட்டுக்குப் பக்கத்தில் வந்து விழுந்தது ஒரு கல். திடீரென சலசலப்பு... எழுந்து பார்ப்பதற்குள் கூட்டம் கூடியிருந்தது. மாணவர்களுக்குள் எழுந்த மோதல்.
தரமணி கல்வி வளாகத்தில் அவ்வப்போது இப்படி மாணவர் மோதல் சிறிய அளவில் நிகழும். அதில் ஏதோ ஒன்று என்று எல்லோரும் அமைதியகிவிட்டார்கள். சாலைக்கு வந்துவிட்ட வன்முறை எதுவாக இருப்பினும் காவல் துறைக்கு தகவல் தர வேண்டியது கடமை என்பதால், அந்தப் பகுதி காவல் நிலைய எண்ணைத் தேடி உடன் தகவல் கொடுத்தேன்.
எப்போதும் என் பையிலிருக்கும் Panasonic Handy Cam-ஐ எடுத்து, (நான் சாப்பிட்டுக் கொண்டிருந்ததால்) எனது சீனியர் அர்ஜூன் என்பவரிடம் தந்து நடக்கும் வன்முறையைப் படம் எடுக்கச் சொன்னேன்.

அடுத்த சில நிமிடங்களில் அங்கிருந்து ஓடிய மாணவர்களைக் கவனித்தேன். என்னுடன் தினமும் தொடர்வண்டியில் வரும் மாணவர்கள்- அருகிலிருக்கும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் (IIHM) -இல் படிப்பவர்கள்; சமையற்கலை மாணவர்கள். அவர்களை விரட்டிச் சென்ற நானும் என் நண்பன் ரவியும், என்ன நடந்ததென்று விசாரித்த போதுதான் தெரிந்தது. வட நாட்டு மாணவர்கள் சேர்ந்து, தமிழ்நாட்டு மாணவர்களைத் தாக்கியுள்ளனர் என்பது.

"ஏன்டா.. நம்மூர்லயே நம்மள அடிக்கிறான்னு ஓடுறீங்கண்ணா நாங்க எதுக்குடா இருக்கோம். சொல்ல வேண்டியதுதானே" என்று சீறினான் ரவி. இப்போது ஓடினால் பிரச்சினை நம் மீது திரும்பும், எனவே உடனடியாக கல்லூரி திரும்புங்கள் என்று சொல்லிவிட்டு, கையிலிருந்த கேசட்டை உடன் சென்று கணினியில் படத்தொகுப்பு செய்து பத்திரம் செய்துவிட்டுக் காத்திருந்தேன். "கம்புகளோடு சுமார் 20 பேர் இருப்பார்கள். கண்மூடித்தனமாக தாக்குகிறான் சிகப்பு பனியன் மாணவன். கையில் கத்தியோடு மிரட்டுகிறான் சிங் ஒருவன்." தனித் தனியாய் வட்டமிட்டுக் கொண்டேன்.

இதற்கிடையில் அடிபட்ட பையனை மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டார்கள். கடையெல்லாம் அந்தப் பகுதியில் மூடப்பட்டு காவல் துறை வாகனம் வந்துவிட்டது.

பக்கத்துக் கல்லூரியிலிருந்து மாணவர்கள் என் வகுப்பறைக்கு வந்தார்கள். என்னவென்று விசாரித்த போது, "அடித்தது தமிழ் மாணவர்கள் தான் என்று குற்றம் சாட்டுகிறார்கள். அடித்துவிட்டு வட இந்திய மாணவர்கள் நல்ல பிள்ளைகளைப்போல் கல்லூரி சென்றுவிட்டார்கள். நீங்கள் வீடியோ எடுத்ததாக அறிந்தோம். எங்களைக் காத்துக் கொள்ள ஆதாரம் வேண்டும்" என்றார்கள். என் துறைத்தலைவர் "உனக்கேன் இந்தப் பிரச்சினை" என்றார். உடனிருந்த நண்பர்கள் "அவனை விடுங்க சார், அவன் ஒருத்தன் தான் தைரியமா இருக்கான். நீங்க என்ன?" என்று சொன்னார்கள்.

மூல ஆதாரத்தைக் கையில் கொண்டு IIHM சென்று காவல் துறையிடம் போட்டுக்காட்டினேன். நான்தான் தகவல் தந்தவன் என்பதால் என்னிடம் நடவடிக்கை எடுப்பதாக உறுதிதந்து விட்டு, கல்லூரி நிர்வாகத்தின் வேண்டுகோளுக்காக வழக்கு போடாமல், விட்டதோடு, என்னிடமிருக்கும் கேசட்டையும் வாங்கிவைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திவிட்டு சென்று விட்டார்கள்

"வேண்டுமானால் நகல் தருகிறேன். ஒரிஜினல் கேசட் தரமாட்டேன்" என்று மறுத்த நான், எனது இதழியல் தொடர்பையும், இயக்கத் தொடர்பையும் சொல்லி, உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பிரச்சினை பெரிதாகும் என்பதையும் வலியுறுத்தினேன். ஒன்றும் நடக்கவில்லை.
மறுநாள் அடிபட்ட மாணவன் ரமேஷ்-அய் பார்க்கச் சென்றபோது, காவல்துறையில் வழக்கு தொடர்ந்தால் தமிழ் மாணவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் மிரட்டியது தெரிந்தது.

மேலும் வடநாட்டு ஆசிரியர்கள் அனில்கோயல், வாசிம், டோபோ விஜய்கர், சந்தீப் ஆகிய நால்வரின் முழு ஒத்துழைப்போடு தாக்குதல் நடந்ததும், கடந்தவார விளையாட்டுப் போட்டியில் 'ஒத்தைக்கு ஒத்தை வா' என்று தமிழ்நாட்டு மாணவர்களை ஆசிரியரே வம்பிழுத்ததும் செயல் முதல்வராக இருந்த நாகராஜன் என்ற தமிழர் செயல்படாமலேயே இருந்ததும் தெரியவந்தது. இது தொடர்கதை என்பதும், அந்தக் கல்லூரியில் இருக்கும் வட இந்திய ஆதிக்கமும் கூடுதல் செய்திகள்!



அடுத்த இரண்டு நாட்கள் நடவடிக்கை இல்லை;2006 மார்ச்- 30-ஆம் தேதி விடுதலையிலும் 31-ஆம் நாள் தினகரனிலும் செய்தி வெளியானது. விடுதலை செய்தியைக் கண்டதும் அன்று மாலையே சுற்றுலாத் துறைச் செயலாளர் (வரப்பிரசாத் ராவ் IAS என்பதாக நினைவு) எங்கள் கல்லூரி முதல்வரைத் தொடர்புகொண்டு என்னைக் கட்டுப்படுத்தி வைக்கச் சொல்லியிருக்கிறார். எங்கள் இரண்டு கல்லூரியும் அவரது துறையின் கீழ்தான் அப்போது இருந்தது. அதனால் IIHM-இலிருந்து IAS மூலம் வந்த நெருக்கடி.

கழகத்தலைமையின் ஒப்புதலோடு மாணவர்களையும் இணைத்துக் கொண்டு போராட்டம் என முடிவாகிவிட்டது. தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்ததால் என் செல்பேசி அணைந்துபோனது. கல்லூரியிலிருந்து தொடர்புகொள்ள முடியவில்லை. பிற கல்லூரி மாணவர்களையும் இணைத்துக் கொள்ள நினைத்தால் எல்லாம் தேர்வு, விடுமுறை, தேர்வுக்கட்டணம் என்று பிரிந்திருந்தார்கள். கல்லூரிக்கு ஒரு பிரதிநிதியை மட்டும் அழைத்துக்கொள்ள முடிவெடுத்தோம்.


இரவெல்லாம் சுவரொட்டி, சுவரெழுத்து என்று அந்தப் பகுதியில் விடிகாலை 5 மணி வரையில் தோழர்கள் கலை, வடிவேல், ராஜூ, வேலவன் ஆகியோருடன் பணியாற்றியதால் நான்தான் இயங்குகிறேன் என்பது என் கல்லூரிக்கு தெரிந்துபோனது.

மீண்டும் திடலுக்குப் போய்விட்டு, தோழர்களை சேர்த்துக் கொண்டிருந்தபோது, துறைத்தலைவரிடமிருந்து அழைப்பு... "முதல்வர் பேச விரும்புகிறார். எங்கிருக்கிறாய்" என்று. "வேறு பணியில் இருப்பதால் கல்லூரிக்கு இன்று கல்லூரிக்கு வரமாட்டேன். முடிந்தால் மதியம் வருகிறேன்" என்று பவ்யமாக சொல்லிவிட்டேன். முகத்தில் துணி கட்டியபடிவந்த IIHM மாணவர்களையும் சேர்த்துக் கொண்டு போராட்டம் தொடங்கியது.

"வடநாட்டுக் காலிகளைக் கைது செய்"
"வடநாட்டு மாணவர்கள் மீது நடவடிக்கை எடு"
"வடநாட்டானே வெளியேறு!" என்ற முழக்கத்தில் நான் அழைக்காமலேயே என் கல்லூரித் தோழர்களும் பெருமளவில் சேர்ந்து கொண்டார்கள். காவல்துறை காலை முதலே வட்டமிட்டுக்கொண்டிருந்தது.
இனமான நடிகர் எம்.ஏ.கிரிதரன் இந்தியில் "சாலா உத்தர்வாலா நிக்காலோ! நிக்காலோ!! மதராஸி சே நிக்காலோ!" என்று குரலெழுப்பியபோது வடநாட்டானை வெளியேறச் சொல்லுகிறார் என்ற அளவில் புரிந்துகொண்டு அனைவரும் சேர்ந்துகொண்டார்கள். (பிறகுதான் சாலா-வுக்கு அர்த்தம் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.)

பின்னர் நடந்த பேச்சு வார்த்தையில் தமிழ்மாணவர்கள் மீது குற்றத்தை திசை திருப்பினால் மேலும் போராட்டம் வலுக்கும் என்பதை தெளிவுறுத்தினோம். வட இந்திய மாணவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்படியே உள்ளே சென்று ரெண்டு அப்பிஅப்பிவிட்டு வரலாம் என்று யோசித்த மாணவர்களை கட்டுப்படுத்தி வெளியில் கொண்டு வந்தோம். அன்று திருச்சி சட்டக் கல்லூரியிலும் தாக்குதலைக்கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

போராட்டம் வெற்றி என்றெல்லாம் எனக்கு அப்போது தோன்றவில்லை. மாலையே கல்லூரியிலிருந்து 'விசாரணை'க்கு அழைப்பு வந்தது.

மேலதிகாரிகளின் அழுத்தத்தால் கோபமாக இருந்த எங்கள் கல்லூரி முதல்வரிடம், தெளிவாக மூன்றே விசயங்களைச் சொன்னேன்.
" 1.நான் பயன்படுத்தியது என் கேமரா. என் கேசட்
2. பிரச்சினை நடந்தது கல்லூரிக்கு வெளியில் - சாலையில் & மதிய இடவேளையில். நம் கல்லூரிக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை...பிரச்சினையுமில்லை. அதனால் தங்கள் கவனத்திற்கு வரவேண்டிய அவசியமிலை.
3. போராட்டம் நடந்த அன்று நான் கல்லூரி வரவில்லை; அதனால் எனது பிற நடவடிக்கைகள் கல்லூரியை பிரச்சினைக்குள்ளாக்காத வரை என்னைக் கட்டுப்படுத்தமுடியாது. எவ்விடத்திலும் நான் திரைப்படக் கல்லூரி மாணவன் என்பதை நான் பதிவு செய்யவில்லை"

"உன் தந்தையிடம் பேச வேண்டும்" என்றார். "காலையில்தான் பேசினேன். போராட்டம் நல்லபடியாக முடிந்ததா என்று கேட்டார்" என்றேன். சரி, கிளம்பு என்று சொல்லிவிட்டார்.

தப்பித்த மகிழ்வோடு பணியைத் தொடர்ந்தேன். சமையற் கலையின் ஓராண்டு படிப்பில்தான் அதிகம் தமிழ் மாணவர்கள் அந்தக் கல்லூரியில் படிக்கிறார்கள். படிப்பு முடிந்த பிறகும் இன்றுவரை IIHM கல்லூரி தமிழ்மாணவர்கள் மிகுந்த பாசத்தோடு என்னுடன் தொடர்பில் உள்ளார்கள்.
நேற்றுகூட(7/11/2007) என் கல்லூரித் தம்பி கண்ணனைச் சந்தித்த IIHM முன்னாள் மாணவன் என்னை விசாரித்ததாகத் தகவல் வந்தது. அதனால்தான் இந்த நினைவு வந்தது.
எனது காரைக்குடி கல்லூரி காலத்திலும் இப்படி எத்தனையோ போராட்டங்கள், மோதல்கள், காவல்துறை தலையீடு போன்றவற்றை என் நண்பர்களுக்காக சந்தித்திருந்தாலும் (இயக்கம் தவிர்த்து) நான் முன்னெடுத்த மறக்க முடியாத போராட்டம்... என்பதை விட உடனடி எதிர் நடவடிக்கைக்கு விளைவு இருந்ததுதான் மகிழ்ச்சி.

அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் என்பதாக நினைவு..
பறக்கும் ரயிலில் என் கல்லூரிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தேன். IIHM சீருடையோடு ஒரு புதுமுகம். நான் யாரென்பது அவருக்குத் தெரியாது. சாதாரணமாக
'என்ன படிக்கிறீர்கள்?'
'எப்படி இருக்கிறது கல்லூரி?'
'ரேகிங் எல்லாம் உண்டா?' என்று கேட்டுக் கொண்டிருந்தேன்.

"ரேகிங்-லாம் இல்லை. தமிழ்ப்பசங்க தான் விசாரிப்பாங்க. எனக்கு இந்தி தெரியும்; நான் இந்தி பேசுறதைப்பார்த்து நார்த் இண்டியன் ஸ்டூடண்ட்ஸ் அன்னைக்கி கூப்பிட்டு ரேகிங் பண்ண ஆரம்பிச்சாங்க.. அப்புறம் ஒருத்தன் வந்து இவன் தமிழ்ப் பையன்டா-ன்னு சொன்னதும் விட்டுட்டுப் போயிட்டாங்க" என்றான்.

நான் "ஏன்?" என்றேன் எதுவும் தெரியாதவனாக.

"போன வருசம் ஏதோ பிரச்சினையாம். அதனால் நார்த் பசங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்காங்க" என்று பதில் வந்தது. நான் என்னை அறிமுகப்படுத்தி கொள்ளவில்லை; பேசாமல் இருந்துவிட்டேன்.

"எங்க மண்ணிலயும் நாங்க உதை வாங்கணுமா? தேச ஒற்றுமையாம்... மயிராச்சு!" என்று தோன்றியது. (தலைப்பு- டாக்டர். ராஜசேகர் பாணியில் இருந்தாலும் தவிர்க்க முடியவில்லை)

"எழுக,
என் தாய்நாடே!
இப்போதாவது
எழுந்து நில்
என் தலைமுறையே!"
(பவா சமத்துவனின் முழுமையான கவிதை வரிகள் இங்கே)

கருத்துகள்

குழலி / Kuzhali இவ்வாறு கூறியுள்ளார்…
போராட்டத்தை நடத்தியதற்கும் அது வெற்றிபெற்றதற்கும் வாழ்த்துகள்....
PPattian இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் உள்ள உரம் வியக்க வைக்கிறது.

//வட இந்திய மாணவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது//

என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
bala இவ்வாறு கூறியுள்ளார்…
பிரின்சு என் ஆர் சமா அய்யா,

போங்கடா,பிரிவினை பேசும் வெங்காய பன்னிகளா.அதனால் தன் "திராவிடமாம்,தமிழ் தேசியமாம்,மயிராச்சு" என்று சொல்கிறோம்.

பாலா
மாசிலா இவ்வாறு கூறியுள்ளார்…
நேற்றே உங்களது இந்த வீடியோ பதிவை பார்த்தேன். மூச்சே அடைந்து போய்விட்டது. என்ன எழுதுவது என்ற மனம் குழம்பிய நிலை.

bala //போங்கடா,பிரிவினை பேசும் வெங்காய பன்னிகளா.அதனால் தன் "திராவிடமாம்,தமிழ் தேசியமாம்,மயிராச்சு" என்று சொல்கிறோம்.//

தனித்துவம், சுயமரியாதைக்கு அர்த்தம் புரிந்துகொள்ளத் தெரியாத மடையன்களெல்லாம் கருத்து சொல்ல வந்துட்டானுங்க.

டேய் பாலா நீ இன்னும் செத்து போகலையா?

இதோ இப்போது சொல்கிறேன்,

"செத்துப்போ!"
Osai Chella இவ்வாறு கூறியுள்ளார்…
kalakkal thozha!
குசும்பன் இவ்வாறு கூறியுள்ளார்…
மிக தைரியமா இருந்துஇருக்கிறீர்கள்.

""உன் தந்தையிடம் பேச வேண்டும்" என்றார். "காலையில்தான் பேசினேன். போராட்டம் நல்லபடியாக முடிந்ததா என்று கேட்டார்" என்றேன். சரி, கிளம்பு என்று சொல்லிவிட்டார்."

இது போல் ஒரு பதிலை அவர் எதிர்பார்த்து இருக்க மாட்டார்:)
சதுக்க பூதம் இவ்வாறு கூறியுள்ளார்…
good job
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் பற்றும் ஆதரவும் என்றும் தொடர்ந்து இருக்கவேண்டும் தமிழர்கள் மீது வட இந்திய சோம்பேரிகள் சிந்திக்கும் உழைக்கும் தமிழனைக்கண்டால் இப்படித்தான் செய்வார்கள் வடைந்தியாவில் தனியாக வசிப்பவனுக்குதான் தெறியும் அந்த வளி அதை நான் அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்.
நன்றி தோழரே
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
தமிழனுக்கு பிறந்தவனுக்குத்தான் தமிழ்மீதும் தமிழன் மீதும் பற்று இருக்கும் பற்று இல்லாதவன் எப்படி என்று அவனே தாயைகேட்டு தெறிந்துகொள்ளட்டும்
-L-L-D-a-s-u இவ்வாறு கூறியுள்ளார்…
நல்லது செய்தீர்கள்.. வாழ்த்துக்கள்..
TBCD இவ்வாறு கூறியுள்ளார்…
நல்லா நாலு போடனும் அவனுங்களுக்கு.."இந்தி"யான்னு பேர் வச்சதாலே..எல்லாமே அவனுங்க ராஜ்ஜியம் தான்னு நினைச்சிக்கிறாங்க..

திரைப்படத்திலெ வர மாதிரி...புள்ளி விவரத்தோடு அடிச்சிட்டீங்க...

அதிரட்டும்....
CAPitalZ இவ்வாறு கூறியுள்ளார்…
தமிழ் நாட்டில் தமிகனுக்கே இந்த நிலமையா என்று எண்ணும் போது கவலையாக தான் இருக்கிறது. போராடி நியாயம் கிடைக்க வேண்டும் என்கிற அளவில் இருக்கு தமிழனின் நிலமை.

எங்க சொல்லி அழுவது...

_________
CAPpitalZ
Jay இவ்வாறு கூறியுள்ளார்…
உங்களைப் போன்ற தமிழனைப் பார்ப்பதில் பெருமை!!!
இரவி சங்கர் இவ்வாறு கூறியுள்ளார்…
அப்படி போடு தமிழா!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam