முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கொஞ்சம் தயக்கத்தோடும், நிறைய வருத்தத்தோடும்...

எனதருமை தமிழீழச் சொந்தங்களே! கொஞ்சம் தயக்கத்தோடும், நிறைய வருத்தத்தோடும் உங்களிடம் இதனைப் பேசத் துணிகிறோம். இதைப் பேசுகிற உரிமை எமக்கிருக்கிறதென்றும் கருதுகிறோம். இதனால் எம்மீது உங்களில் சிலருக்கும், எம்மில் சிலருக்கும் கூட வருத்தம் உண்டாகலாம். ஆயினும் யாரேனும் ஒருவர் இது குறித்துப் பேசியே ஆகவேண்டும். தமிழக அரசியலில் யார் யார் எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி அருள்கூர்ந்து நீங்கள் கருத்து தெரிவிக்காதீர்கள். இனப்பாசத்தின் அடிப்படையில், எம் உறவுகள் என்ற அடிப்படையில், தமிழனுக்கென ஒரு கொடி உலக அரங்கில் பறக்கட்டும் என்ற ஆசையில் தமிழீழத்துக்கான எங்கள் ஆதரவு அமைகிறது. அதே வேளையில் எம் தமிழ்நாட்டின் நிலைக்கேற்ப, எங்களின் தேவைகளுக்கேற்ப, இங்குள்ள சூழல்களைப் பொறுத்து யாரை ஆதரிப்பது, யாரை எதிர்ப்பது என்பது எங்கள் விருப்பம். அதை விடுத்து, உங்கள் விருப்பத்திற்கு செயல்படவில்லை என்பதற்காக கலைஞரைத் திட்டுவது, ஆசிரியர் வீரமணியைத் திட்டுவது, திருமாவை, சுப.வீ-யைத் திட்டுவது, தரக்குறைவாகப் பேசுவது என்று நீண்ட உங்கள் பட்டியல், இப்போது வைகோ வரை வந்திருக்கிறது. தெளிவாகச் சொல்கிறோம்... உங்களுக்காக நாங்க

ஈழப் பற்றாளர்களே! இவருக்கா உங்கள் ஆதரவு?

மாவீரன் பிரபாகரன்பற்றி சட்டமன்றத்திலேயே ஜெ கூறியது என்ன? 16.4.2002 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா முன்மொழிந்த தீர்மானம் வருமாறு: நான் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த போதெல்லாம் இந்திய அரசாங்கத்தை ஸ்ரீலங்கா அரசுடன் தொடர்பு கொண்டு பயங்கரவாத அமைப்பான LTTE.-யின் தலைவரான பிரபாகரனை ஸ்ரீலங்கா நாட்டிலிருந்து இங்கு கொண்டு வந்து சேர்த்து, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நீதிமன்றத்தின்முன் நிறுத்தவேண்டுமென திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தேன். 20.9.1991 ஆம் தேதியிட்ட எனது கடிதத்தில், அப்போது மாண்புமிகு பாரதப் பிரதமராக இருந்த திரு. பி.வி. நரசிம்மராவ் அவர்களை, தேவைப்படும் பட்சத்தில் ஸ்ரீலங்கா அரசினுடைய அனுமதி பெற்று நம்முடைய இராணுவத்தை அனுப்பியேனும், பிரபாகரனைப் பிடித்து இந்தியாவிற்குக் கொண்டுவரவேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். முன்னாள் பிரதமர், அமரர் திரு. ராஜீவ்காந்தியின் படுகொலையைப் புரிந்தமைக்காக விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை இந்திய நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டுமெனக் கோரியிருந் தேன். அதன் பின்னர் பலமுறை இதே கோரிக்கையை வலியுறுத்தினேன். அப்போது பாரதப்

தேமுதிக-வினரே! பாவம்! விட்டுவிடுங்கள் விஜயகாந்தை...!

திரையுலகில் நாயகனாக வாழ்க்கையைத் தொடங்கி, அரசியலில் காமெடியனாக பரிணமித்து, இன்று பரிதாபத்திற்குரியவராகக் காட்சியளிக்கிறார் விஜயகாந்த். கொள்கைத் தெளிவோ, அரசியல் புரிதலோ இல்லாமல் கேப்பில் கட்சி தொடங்கிய கேப்10, திரைப்படங்களில் இயக்குநர்கள் சொல்படி நடித்ததைப் போல, மனைவி, மச்சானின் இயக்கத்தில் அரசியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். எதிர்பார்ப்பு இல்லாத காலத்தில், கேப்டன் பிரபாகரன் என்று படத்துக்கும், தன் பிள்ளைக்கும் பெயர் வைத்த விஜயகாந்த், அரசியல் கட்சி ஆரம்பித்த பின் ஈழத்தமிழர் பிரச்சினை உச்சத்தில் இருந்தபோது காங்கிரசைக் கண்டிக்கவோ, குறைந்தபட்சம் ’ஆங்’ என்று அவர் ஸ்டைலில் கண்ணடிக்கவோ கூட செய்யவில்லை. காரணம் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசின் தயவை எதிர்பார்த்து நின்றது. இதனால் அப்போதே தமிழர்கள் இவரின் வீராதிவீரத்தைப் புரிந்துகொண்டார்கள்.  சென்னை, சேலம் என மாநாடு என்ற பெயரில் இவர் அடித்த கூத்து பத்தாது என ஊர் ஊராய் சென்று தன் ’புகழைப்’ பரப்பி வருகிறார். மக்களுடனும் (இதய)தெய்வத்துடனும் தான் கூட்டணி என்று இப்போது களம் இறங்கியிருக்கும் பிரச்சாரத்தில், விஜயகாந்தின் காமெடி காட்சிகள் அவருடைய ம

அவலை நினைத்து உரலை இடிக்காதீர்! ஆத்திரப்பட்டு அறிவை இழக்காதீர்!

கோபம் அறிவை மறைக்கும் என்ற அரிச்சுவடி தெரியாதா உங்களுக்கு? ’ஈழத்தை அழித்த காங்கிரசை ஒழிக்கிறேன்’ பேர்வழி என்று சொல்லிக் கொண்டு அதனினும் கொடிய விசத்தை, தமிழகத்தை அழிக்கும் பார்ப்பனிய பார்த்தீனியத்தைக் கொண்டு வந்து அமர்த்தத் துடிக்கிறீர்களே! கொஞ்சம் உளச் சுத்தியோடும், அறிவு நாணயத்தோடு சொல்லுங்கள்! ஈழத்தை காங்கிரசு மட்டும் அழித்ததா? அல்லது இவர்களைப் பயன்படுத்தி பார்ப்பனியம் அழித்ததா? தனித் தமிழீழம் அமையக் கூடாது என்று துடிப்பவர்கள் யார்? ஒட்டுமொத்த பார்ப்பனர்களின் உணர்வு என்ன இவ்விசயத்தில்! தமிழர்களுக்கென்று நாடு அமைவதை விரும்பாதவர்கள் பார்ப்பன நலம் காக்கத் துடிப்போர் அல்லவா? 63 சீட்டுக்காகக் கூட்டணியை விட்டு வெளியில் வரத் தயாரான கலைஞர், ஈழத் தமிழர் அழிவின் போது காங்கிரசு கூட்டணியை விட்டு வந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று கேட்கிறார் அண்ணன் சீமான்! எப்படி இருந்திருக்கும்?  வெளியில் வந்து பினாத்த முடியாமல் உள்ளே முடங்கியிருப்பார் சீமான்!  67-இல் தமிழ்நாட்டில் முறியடிக்கப்பட்ட காங்கிரஸ் கொல்லைப்புற வழியாக ஆட்சியைப் பிடித்திருக்கும். அ.தி.மு.க.வின் ஆதரவோடு ஆட்சியில் காங்கிரஸ் அமர்