முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கட்டிய வீடுகளே கல்லறைகளாய்...

“வாழ்க்கை இரும்படிக்கும்போது கலை பூப்பறிக்கலாமா?” என்ற தலைப்பில் இம்மாத விகடன் ஒன்றில் (11.12.13) கண்ட ஒரு செய்தி. கலையை மனிதநேயத்திற்குப் பயன்படுத்தும் விதமாக, நிகழ்காலத்தின் மக்கள் பிரச்சினைகளையும் கலை மூலமாகச் சொல்ல வேண்டும் என்ற நோக்கில் உத்தர்காண்ட் பேரழிவு குறித்து கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பாடல் எழுதி, அதனை ஸ்ரீநிதி கார்த்திக் அவர்கள் பரதநாட்டியமாக அரங்கேற்றவுள்ளார். ’வாழ்க்கை இரும்படித்துக் கொண்டிருக்கும்போது கலை பூப்பறிக்க முடியுமா?’ என்ற கேள்வியோடு தங்கள் படைப்பை அறிமுகப்படுத்தியிருந்தனர். 

இதைப் படித்ததும் என் நினைவுச் சக்கரம் சுழன்று சுமார் 13 ஆண்டுகளுக்கு முன் என்னை இழுத்துச் சென்றது. 2001 ஜனவரி 26 - பூஜ் நகரத்தில் ஏற்பட்ட நில நடுக்கம் பல்லாயிரம் பேரை பலிகொண்டது. நாடெங்கும் மனிதநேய உணர்வோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேசக்கரம் நீட்டினர். அதன் ஒரு பகுதியாக, காரைக்குடியில் குஜராத் மக்களுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
அந்த காலகட்டத்தில் அழகப்பா அரசு கலைக் கல்லூரி கலையரங்கத்தை மொத்தமாகக் குத்தகை எடுத்துக் கொண்டிருந்தது எங்கள் குழு தான். அதெல்லாம் பிறகொரு சூழலில்…

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

புகை ‍= பகை: பிடிக்கிறவங்களுக்கு மட்டுமில்லை

தண்ணியடிக்கிறவனைக் கூட மன்னிச்சிடலாம். தக்காளி... புகைப்பிடிக்கிறவனை மன்னிக்கவே முடியாது. தண்ணியடிக்கிறதனால் ஒண்ணு அவன் சாவான், இன்னொன்னு அவன் குடும்பம் அழியும். தறுதலையை அப்படியே விட்டுக்கிட்டிருக்கிறதுக்கு அல்லது பொறுத்துக்கிட்டிருக்கிறதுக்கு அது தண்டனைன்னு கூட சொல்லிறலாம். (குடிச்சுப்புட்டி வண்டி ஓட்டி சாகிறதை விட, சாகடிக்கிறது தான் என்னைப் பொறுத்தவரை மோசம்.)

ஆனால் இந்த புகைக் கூட்டம் இருக்கு பாருங்க.... தானும் கெட்டு அடுத்தவனையும் கெடுத்து... இவன் பாதி உறிஞ்சி, மிச்சத்தை சுத்தியிருக்கிறவனுக்கெல்லாம் ஊதிவிட்டு... என்னமோ பெரிய சாதிச்சவன் மாதிரி ஒரு லுக்கு வேற கொடுப்பானுங்க... ங்கொய்யால... அப்படியே சிகரெட்டை திருப்பி வச்சு வாய்க்குள்ள அமுக்கிவிட்றலாம்னு தோணும்... அதிலேயும் டாய்லெட்டுக்குள்ள பீடி, சிகரெட், சுருட்டு குடிக்கிறங்களையெல்லாம்..... நற... நற... அப்படியே அங்கேயே அமுக்கிடலாம். காத்தே வெளியில போகாத இடத்தில ஊதி, உள்ள போறவனையெல்லாம் சாவடிப்பானுங்க...


பேருந்து நிறுத்தத்தில, பேருந்துக்குள்ள, தொடர்வண்டியில, சாப்பிடுற, டீ குடிக்கிற இடத்துக்கு பக்கத்தில, பொது இடங்களில ஊதி ஊதி உசிரை எ…

மாமிச செண்டிமெண்ட்!

மத செண்டிமெண்ட் கருதி, மாமிசம் விற்பதை ரிலையன்ஸ் நிறுத்திக் கொள்கிறதாம்.நாடு எங்க போய்க்கிட்டிருக்குன்னு நாங்களும் பார்த்துக்கிட்டு தான் இருக்கோம்...

நீ புலால் விற்கிறதை நிறுத்துறது மட்டுமில்ல, உன்னுடைய எல்லா சில்லறைக் கடைகளையும் நிறுத்தணும்..னு தான் நானும் நினைக்கிறேன்.

ஆனால், அதை நிறுத்துறதுக்கு நீ ஒரு காரணம் சொல்றபாரு...
.... ....
அதைத் தான் என்னால தாங்க முடியல!

எந்த மத செண்டிமெண்ட் கருதி மாமிசம் விற்கலையாம்? இந்து மதமா?

அதில எத்தனை சதவீதம் பேர் மாமிசம் சாப்பிடாதவங்க? அப்போ மாமிசம் சாப்பிடுறவனெல்லாம் இந்து கிடையாதா? (ஆமாம்னு சொல்லிடுங்கடா நல்லதா போச்சு)
இல்ல, மாமிசம் சாப்பிடுறவனுக்கு செண்டிமெண்ட் இல்லையா? அவனெல்லாம் இன்னும் வெட்கங்கெட்டுப் போய் உன் கடைக்கு சாமான் வாங்க வரலாமா?அதென்னடா எத்திகல் மூவ்? அப்போ, எங்களுக்கெல்லாம் எதிக்ஸ் இல்லையா? பார்ப்பான் சாப்பிடல... உயர்ஜாதிக்காரன் சாப்பிடல.... அதைத் தாண்டி குஜராத்தியும், ஜெயினும் சாப்பிடல... அதுக்காகத் தான் நிறுத்துறோம்னு சொல்றான்னா.... குஜராத் மாடலுக்கு இந்தியா வரணுமாம்ல... எல்லா பயலும் மாமிசம் சாப்பிடுறதை நிறுத்திடுங்கன்னு சொல்றா…

மில்லீனியம் தாண்டாத மெலடிகள்

மில்லீனியம் தாண்டாத
மெலடிகளாக
இசைத்துக் கொண்டிருந்தது
நேற்று பயணித்த பேருந்தில்!

காதல் வழிய...
காமம் நெளிய...
துள்ளல் மகிழ...
சோகம் கவிழ...
பல்வேறு உணர்ச்சிகளை
உதிர்த்தபடி நகர்ந்தது
பேருந்தின் ஒலிபரப்பி!

ஓட்டுநருக்கோ
நடத்துநருக்கோ
விருப்பமான பாடல்களாக
இருக்கக் கூடும்.
இல்லையெனில்
அத்தனை ரசனை
சாத்தியமில்லை!

சிவாஜிக்கும் எம்.ஜி.ஆருக்கும்
குரல் கொடுத்த டி.எம்.எஸ்-சைப் போல்...
கமலுக்கும் ரஜினிக்கும்
பாடிய எஸ்.பி.பி-யைப் போல்...
அஜித், விஜய்
இருவருக்காகவும்
உருகி உருகிப்
பாடிக் கொண்டிருந்தார்
ஹரிஹரன்!

பயணிகளில்
பதின்ம வயதினருக்கு
பழைய பாடலாகவும்,
அறுபதின்மருக்கு
அதுவே
புதிய பாடலாகவும்!

உள்ளம் கொள்ளாத
உணர்வுகளோடு
கண்களில்
நினைவுகள் விரிய
வாய்கள்
முணுமுணுத்தபடி..

தவறவிட்ட
தங்கள்
பால்யத்தையோ,
இளமையையோ
தேடிக் கொண்டிருந்தன
இருபது-முப்பதுகள்!

(நன்றி: படம்- visualfotos.com)

எழுத்தாளர் பைரவன் alias வாஞ்சி அய்யர்!

தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தின் திறப்பு விழாவிலிருந்து, அதன் சுற்றுச் சுவரின் ஒரு பகுதி அரசால் இடிக்கப்பட்டது வரை எல்லாமே விவாதப்பொருளாகிக் கொண்டிருந்தது ஒரு புறம். அதே வேளையில், தோழர்கள் சிலர் அதில் பெரியார் படம் இல்லையென்றும் வருத்தப்பட்டார்கள். அது தொடர்பான பல பதிவுகளும், அதற்கு நெடுமாறன் தரப்பிலிருந்தும், மணியரசன் போன்றோர் தரப்பிலிருந்தும் சாக்குகளும், சால்ஜாப்புகளும், ஜெயமோகன் செய்ததற்கிணையான ’யார் இலக்கியவாதி’ போன்ற ஆராய்ச்சி முடிவுகளுமாக போய்க் கொண்டிருந்தது.


நேரிலேயே முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு சென்று பார்த்து தங்கள் வருத்தங்களைப் பதிவு செய்தவர்களிடமும், “பாருங்கள்... இங்கே வெறும் இலக்கியவாதிகள் கவிஞர்கள், படைப்பாளிகள் படம் தான் இருக்கிறது. இதில் பெரியார் படம் வைக்கமுடியுமா?” என ரொம்பவே இலக்கிய அணிவகுப்பின் மீது அக்கறையோடு ’அங்கே’ இருந்தவர்கள் பதில் சொன்னார்களாம். முள்ளிவாய்க்கால் முற்றம்கிறது போராட்டத்தின் நினைவுகூரல் தானே, இதென்ன இலக்கியவாதிகள் கண்காட்சியான்னெல்லாம் நீங்க கேட்கக் கூடாது. தமிழ்த் தேசியமாச்சே! சொன்னது சொன்னது தான் மாத்த முடியாதே!

என…

அசிஸ்டெண்ட் டைரக்டருகளா... நோட் பண்ணுங்கடா... நோட் பண்ணுங்கடா...

திரைப்படம் என்பது காட்சிக்குக் காட்சி தொடர்பிருப்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கும் ஏமாற்று வித்தையின் தொகுப்பு தான். ஒரே காட்சிக்கான அடுத்தடுத்த காட்சித் துணுக்குகள் (Shots) சில நாட்கள்... ஏன் பல மாதங்கள் கழித்துக் கூட எடுக்கப்படும். ஏ.வி.எம் செட்டுக்குள்ளிருந்து கதவைத் திறந்தால் அமெரிக்காவோ, அண்டார்டிகாவோ கூட தெரியும். இது தான் சினிமா.

நம்பமுடியாத பல விசயங்களைக் கோர்த்துத் தான் உருவாக்குவார்கள். அவை பற்றி யோசிக்க நேரம் தராமல் அடுத்தடுத்த காட்சிகளுக்குள் பார்வையாளனை இழுத்துக் கொண்டு போய்க் கொண்டே இருக்க வேண்டும்.

ஆனால், இது எதுவும் பார்வையாளர்களை உறுத்தாதபடி உருவாக்குவதில் தான் திரைப்படத் துறையினரின் உழைப்பு இருக்கிறது. இவை அதிகம் உறுத்தத் தொடங்கினால் படத்தின் ஒவ்வொரு நொடியிலும் திரைக்குப் பின்னாலான குறைகள் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். ஒரு காட்சி எடுக்கும்போது இருந்த துணை நடிகர்கள் இல்லாமல் இருக்கலாம்; கால நிலை மாறிப்போகலாம்; திரையில் தொடர்ச்சியாகப் பார்க்கும்போது பெரும்பாலானவை கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனால், மீண்டும் மீண்டும் பார்த்தாலோ, கணினி உதவி கொண்டு முன்னுக்குப் பின் ஓட்டிப…

புதிய தலைமுறையா? பா.ஜ.க. விளம்பரப் படையா?

புதிய தலைமுறையின் முகநூல் பக்கத்தில் கீழ்க்காணும் ”விளம்பரம்” ஒன்று வெளியாகிருந்தது. (இது பெய்டு நியூசா? இல்லை கூட்டணி நியூசா?ன்னு தெரியல)

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, 
தமிழக மீனவர்கள் மீது,
இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு
நடத்தி, ஒரு மீனவர் கொல்லப்பட்டார்.
உடனே, அன்றைய இலங்கை பிரதமர்
ரணில் விக்கிரமசிங்கேயை,
வாஜ்பாய் தொலைபேசியில்
அழைத்தார்.
“இனி ஒரு துப்பாக்கி தோட்டா,
இந்திய மீனவர்கள் மீது பாயுமானால்,
இலங்கைக்கான
அனைத்து பொருளாதார
உதவிகளையும் உடனடியாக
நிறுத்துவோம்’ என எச்சரித்தார்.
விளைவு, வாஜ்பாய் பிரதமராக
இருந்த வரை, தமிழக
மீனவர்களை தொட்டு பார்க்கும்
தைரியம்,
இலங்கை கடற்படைக்கு இல்லாமல்
இருந்தது.
(https://www.facebook.com/Puthiyathalaimurai.tv/posts/620858547975925:0)

வாஜ்பாய் போன் பண்ணி ரனிலை மிரட்டினாராம். ரனில் சொல்லி, உடனே இலங்கை கடற்படைக்காரனுகள்லாம் துப்பாக்கியைத் தூக்கி பேண்டுக்குள்ள சொருகிக்கிட்டாய்ங்களாம்... என்னங்கப்பா... APCO worldwide கம்பெனியோட கூட்டு எதுவும் வச்சுக்கிட்டிங்களா? அள்ளிவிடுறதில உங்களுக்கு அளவேயில்லையா?
சரி, அன்னாருடைய ஆட்சிக் காலத்தில் இந்தியாவுக்கு எதிர்த் திசையில் தான் இலங…