குறும்படங்களின் வருகை தமிழில் அதிகரித்திருக்கிறது. பலருக்கு அது திரைப்படத்துறையில் நுழைவதற்கான அடையாள அட்டை. காட்சி தொடர்பியல் மாணவர்களுக்கு அது மதிப்பெண். ஆனால் அவ்வடிவம் தமிழில் கவனம் பெற்றிருக்கிறது என்பது உண்மை. அதற்கு வணிக ரீதியான வரவேற்பு வரும் நாளும் எதிர்காலத்தில் வரக்கூடும்.
சரி, இப்போது நம் செய்திக்கு வருவோம். முதன்முதலில் கதை எழுதுவோருக்கு என்று பொதுவாக சில கருக்கள் இருக்கும். ஏழைத் தாய், அநாதைச் சிறுவன்... இப்படி..
அதேபோல், நாடகம், குறுநாடகம், பள்ளி, கல்லூரி கலைநிகழ்ச்சிகளில் செய்வதற்கென்று தயாராக எய்ட்ஸ், தேசீய ஒருமைப்பாடு ... இப்படி சிலதுகள் இருக்கும்.
அதேபோல குறும்படம் எடுக்க நினைப்போருக்கும் சில பொதுவானவை உண்டு...
ரொம்ப சீரியஸான சிலரின் முதல் ஸ்கிரிப்ட் கண்டிப்பாக பாலியல் தொழிலாளிகள் பற்றியதாக இருக்கும். அவை போக இன்னும் புகைப்பிடித்தல், எய்ட்ஸ், சாலைவிதிகள் இப்படி சில....
அந்த வகையில் திரைப்படக்கல்லூரியில் சேர்ந்த பிறகுநான் எடுத்த முதல் குறும்படமும் சம்பிரதாயத்தை மீறாமல்(இதில் மட்டும்) புகை பற்றியதே. ஏதோ கொஞ்சம் நக்கல் தொணியில் சிந்தித்தேன்.
மற்றபடி, என்னுடைய முதல் குறும்படம் அதற்கு முன்பாகவே செய்யப்பட்டுவிட்டது. அதனைப் பின்னொரு வேளையில் பதிவிட்டு பழிவாங்குவேன். அது பெண்ணியம் தொடர்பான பாடல்
இப்போதைக்கு 'புகை' உங்களுக்குப் பிடிக்கிறதா என்று பார்ப்போம்.
துவக்க கட்ட முயற்சியாதலால் வழக்கம்போல் இசை மட்டுமே! வசனம் கிடையாது! தவறுகள் இருக்கும். பொறுத்துக்கொள்க.
இந்தக் குறும்படம் முடித்து நண்பர் அழகுராஜவுக்கு போட்டுக் காட்டியபோது அவர் இன்னொரு கோணத்தில் முடிவைச் சொன்னார். உங்களில் பலருக்கும் அது தோன்றலாம். முயற்சியுங்கள்... இல்லாவிட்டால் பின்னூட்டத்தில் சொல்கிறேன்.
(குறிப்பு:
1. போட்டி ஒன்று வைப்பதாக முன்னுரையில் அறிவித்திருந்தேன். வேறு வழியில்லை..இதையே போட்டியாக ஆகிவிடுகிறேன். பரிசெல்லாம் கேட்கக் கூடாது ஆமா...
2. இந்தப் பதிவுக்கு பின்னூட்டத்தை அதிகரிக்கவும் வேறு வழியில்லை...ஹி ஹி ஹி)
தலைப்புக்குக் குறிப்பு: நிறைய பேர் புகை என்று தலைப்பு வைத்து எடுத்திருக்கக்கூடும் என்பதால் கம்பேனி பெயரிலேயே பதிந்துவிடுவோம் அதுதான்... "NRS Creations-ன் புகை".
"புகை 2005" என்று தலைப்பு வைக்கலாம் என்றும் யோசித்தேன். 2005-லேயே ஏகப்பட்ட புகை வந்திருக்கக்கூடும் என்பதால் இந்த முன் ஜாக்கிரதை. இதுக்கும் ஹி.ஹி.ஹி.

கருத்துகள்
2. இந்தப் பதிவுக்கு பின்னூட்டத்தை அதிகரிக்கவும் வேறு வழியில்லை...ஹி ஹி ஹி)//
:))
கடைசியில் அந்த புத்தகம் படிக்கும் அன்பர் தன் கர்ச்சீப்பால் தன் முகத்தில் கட்டிக் கொள்வது மாதிரியிருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ...
அன்புடன்,
சீமாச்சு...