முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

October, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆம். அந்த நாள் நாளை தான்! (Back to the Future)

ஆம். அந்த நாள் நாளை தான்!

30 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த Back to the Future திரைப்படத்தில் கால இயந்திரத்தில் பயணம் செய்து, அவர்கள் வந்து சேரும் நாள் அக்டோபர் 21, 2015.

இதோ, கால வெள்ளத்தில் நாமும் வந்துசேர்ந்துவிட்டோம் அந்த நாளுக்கு! 30 ஆண்டுக்கு முன் வருங்காலம் என்று நீண்டு காணப்பட்ட அந்த நாள் இதோ நிகழ்காலம் என்ற நிலையை எட்ட இருக்கிறது.

அப்படி என்ன சிறப்பு 2015 அக்டோபர் 21க்கு? 2012-இல் உலகம் அழியும் என்று சொல்லப்பட்டதைப் போல ஏதாவது...?

ஒன்றும் கிடையாது.

Back to the Future படத்தில் சொல்லப்படும் சாதாரண நாள் தான். ஆனால், இந்த நாளில் உலகம் (அல்லது ஓர் அமெரிக்க நகரம்) எப்படியிருக்கும் என்று கற்பனையில் உருவாக்கியிருந்த நிலை இன்று நடப்பில் இருக்கிறதா? எவ்வெவற்றைக் கடந்து வந்திருக்கிறோம். எவையெல்லாம் எதிர்பார்ப்பைத் தாண்டியிருக்கிறது என்பதையெல்லாம் குறித்துப் பேச, அறிவியல் புனைவுப் படங்களின் மீதான ஆர்வத்தைப் பகிர்ந்து கொள்ள சரியான ஒரு நாளாக இது இருக்கும் என்பத் தான் இந்நாளின் சிறப்பு

எனவே, நாளை Back to the Future படங்களின் திரையிடலுக்கும், மகிழ்ச்சியான ஒரு கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்துள…