முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சுயசரிதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நினைவூட்டல் குறிப்புகள்

பணியில் இருக்கும்போது படித்துக் கொண்டிருக்கும்போது போனில் யாருடனும் பேசிக் கொண்டிருக்கும்போது பயணத்தில் இருக்கும்போது அடுத்தடுத்து செய்ய வேண்டியவற்றை நினைவில் வைக்கக் குறித்துக் கொள்வதுண்டு. துண்டுச் சீட்டோ டிக்கெட் பின்புறமோ சரியான குறிப்பேடோ சட்டை உள்மடிப்போ செல்பேசியோ உள்ளங்கையோ பத்துரூபாய் நோட்டோ குறிப்பெடுக்கப் பயன்படும். தேர்வு நேரங்களில் அமைதியான சூழலில் கேள்விக்கான பதிலை விட அடுத்தடுத்து செய்ய வேண்டிய பணிகளோ, நெடுங்காலத் திட்டங்களுக்கான நினைவூட்டல்களோ கேள்வித் தாளில் பிட் என்று கருத முடியாத அளவிற்கு குறித்துவைத்துக் கொள்வதுண்டு. எதுவும் இல்லையென்றால் பக்கத்தில் இருப்பவர் தான் என் குறிப்பேடு. எனக்கு மறந்துவிட்டாலும் ஏன் நினைவூட்டவில்லையென்று அவர் மேல் பொறுப்பைப் போடலாம். யாருடைய வேண்டுகோளானாலும் ’நீங்களே மீண்டும் மீண்டும் நினைவூட்டி என்னிடமிருந்து வேலையை முடித்துக் கொள்ளுங்கள். நான் தவறாக நினைக்க மாட்டேன்’ என்று சரண்டர் ஆகிவிடுவதுண்டு. நினைவூட்டுவதற்கு இவை, இவர்கள் இல்லாமல் என்ன செய்வது என்று யோசித்ததுமுண்டு. கையில் தாளோ, எழுதுகோலோ பக்கத்தில் ஆளோ செல்பேசியோ கணினியோ இருக்க முடியா...

#restartகதைகள்

எப்போது என் கணினியை மறு தொடக்கம் (Restart) செய்வது என்பதை நான் முடிவு செய்வதில்லை. Shut down / Turn off எல்லாம் ஆண்டுக்கு ஓரிரு முறை நிகழ்ந்தாலே ஆச்சரியம் தான். பயணங்களுக்குத் தயாராகும்போதும், ‍ Hybernate / Sleep mode / Stand by இல் தான் மடிக்கணினிப் பைக்குள் புதையும். நான் உறங்கும்போது அதுவும் சற்று அயருமே தவிர, எந்நேரமும் அரைத் தூக்கத்தில் விழிப்போடு இருக்கும் வீட்டுக் காவலரைப் போல் தான் கடமையாற்றும். மறு தொடக்கம் செய்வதற்கு எனக்கொரு அளவுகோல் உண்டு. 'கண்ணைக் கட்டுது...கொஞ்சம் கேப் கொடுடா..!' என்று என் கணினி என்னிடம் சொல்வதற்கு மைக்ரோசாப்டுக்குத் தெரியாத மொழி ஒன்று உண்டு. மைக்ரோசாப்டுக்குத் தெரிந்த மொழி என்பது, 'கடுப்பாகி', அதுவே தானே மறுதொடக்கம் செய்வது! நான் சொல்வது அதற்கும் முந்தைய நிலை. நான் பயன்படுத்தும் தமிழ் எழுதி ‍ யை இயக்குவதற்கு F3 பொத்தானை அமுக்கினால், எப்போது தமிழ் எழுத்து வராமல், டொய்ங் என்ற ஒலியோடு Find பட்டி திறக்கிறதோ, அது தான் என் மடிக்கணினி எனக்குத் தன் அயர்வைத் தெரிவிக்கும் முதல் தருணம். அப்போது நான் கவனித்துவிட வேண்டும். எனினும் இரக்கமற்றவனாய், உடனே...

நெட்டிலிங்க மரமும் பாவாடை அணிந்த சிறுமியும்

கணிதத்தின் அடிப்படையைப் புரிய வைக்க முயலாமல் கணக்கு போடுவதற்கு எளிய முறை என்று பல வழிமுறைகளை பயிற்றுவிப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? எங்கள் சிறு வயதில்... பள்ளிக்கு பல்வேறு துறைகளைச் சார்ந்தோர் வருவார்கள். அவரவர் முயற்சியில் பல புதிய விசயங்களை அறிமுகப்படுத்துவார்கள். உண்மையில் அப்படிப்பட்ட அறிமுகங்கள் ஆர்வத்தை விதைத்தன என்பதை மறுப்பதற்கில்லை. மேஜிக் செய்பவர், அறிவியல் விளக்கங்கள் சொல்பவர், எளியமுறை கணிதம் என்று கணித விளக்கம் சொல்பவர், தாளை நறுக்கி அதில் பல்வேறு வேலைப்பாடுகள் செய்பவர், ஓவியத்தில் பூ வேலைப்பாடுகள் கற்றுத் தருபவர், குட்டிக் குட்டித் தையல்கள், பந்து-கூடைகள் நெய்யக் கற்றுத் தருபவர், விதவிதமான பேனா பென்சிகள் விற்பவர், பெட்ரோலைச் சேமிக்கும் புதிய வகை கார்ப்பரேட்டர் விற்பவர் என்று ஏராளமாக வருவார்கள். அவர்களில் சிலர் தங்கள் திறமைக்கு டிக்கெட் பணம் போல இரண்டு ரூபாய், அய்ந்து ரூபாய் வாங்கிக் கொள்வார்கள். சிலர் 8 பக்கத்திலோ, 16 பக்கத்திலோ ஏறத்தாழ சாம்பலைத் தாண்டி கருப்புக்கு நெருக்கமான நிறத்திலான சாணித் தாளிலும், அதே தரத்தில் மிக மெல்லிய காகிதக் கொடி தடிமனிலான வண்ண மேல்தாளிலு...

சமா @ 70

எம் பாதை...  எம் பயணம்...  அத்தனையும்  நீ விட்ட வழி! எம் பார்வை... எம் நோக்கு... அத்தனையும்  நீ தந்த விழி! எம் வாழ்வின் பக்கங்களை நாங்களே செதுக்க... உளி செய்து தந்தது நீ! எமைத் தூக்கிச் சீராட்டி நீ ரசித்ததைப் போல, உன் பார்வை முதல் பல்லால் மேலுதடு கடிக்கும் உன் பழக்கம் வரை  ரசித்தபடியே வளர்ந்தோம்! உலகை ரசிக்க நீதான் கற்றுத் தந்தாய்! உலகை ரசித்துக் கொண்டுமட்டும்  இராதே என்று நீயே சொன்னாய்! கண்டதையும் படிக்காதே என்று கண்டித்தாய்! கடல்புறா படித்த போது சாண்டில்யனிடம்  வர்ணனைகள் அதிகம் என்று சலித்துக் கொள்வதுபோல் பெய்து கொண்டிருந்த மழையை  வாசலில் நின்று ரசித்தபடி நான் வாசிப்பதை  அங்கீகரித்தாய்! அதே மழையில்...  கண்மாய் மீன்கள்  எதிர்த்து வரும்  என்று குடையில்  மீன்பிடிக்கக்  கற்றுக் கொடுத்தாய்! பிடித்த மீன்களை ’பாவம்...’ என்று மீண்டும் தண்ணீரில் விட்டு பின்... மழையில்  ஏன் நனைந்தாய் என்று நீயே வந்து மருந்து கொடுத்...

அட சின்னச் சின்ன அன்பில் தானே...

தொப்பிகளின் ரசிகன் நான்!  காரைக்குடியில் இருந்தவரை காலை அணியும் தொப்பியை இரவு வீட்டுக்குத் திரும்பும் வரை கழற்றும் வழக்கம் இல்லை. விதம்விதமான தொப்பிகளின் மேல் எப்போதும் ஈர்ப்பு உண்டு. வழக்கமான முன் பக்கம் மட்டும் நிழல் தரும் தொப்பி, கிரிக்கெட் அம்பயர்கள் & சில வீரர்கள் பயன்படுத்தும் வட்ட வடிவ திடமாக நிற்கும் பட்டியுடைய நிழல் தரும் தொப்பி, இன்றைக்கு சேரன் உள்ளிட்ட சில இயக்குநர்கள் பயன்படுத்துவதைப்போல வட்ட வடிவமாக, ஆனால் மடங்கியிருக்கும் தொப்பி (எம்ஜிஆர் தொப்பியின் நவீன வடிவம்) என்று எல்லா வகையிலும் பல வண்ணங்களில் குறைந்தது 10 தொப்பிகளாவது வீட்டில் இருக்கும்.  குஷி படம் வந்த பின் வழக்கத்தை விட நீளமான வளைந்த முன்பகுதியுடனான தொப்பிகள் வரத் தொடங்கின. கார்த்திக் ஸ்டைல் தொப்பி அய்யாவுக்குப் பெரிதும் பிடிக்காவிட்டாலும், அதன் மேல் ஓர் ஆசை எப்போதும் உண்டு எனக்கு! இவை தவிர முன் பக்கம் கொஞ்சம் காற்றோட்டம் வரும் வசதியுள்ள சிங்கப்பூர் தொப்பி (அது என்ன அப்படி பெயர் என்றெல்லாம் கேட்கக் கூடாது; அப்போது அப்படி ஒரு தொப்பி சிங்கப்பூரிலிருந்து வந்தது.  அதனால் அந்தப்...

என் முதல் தோழியை நினைவுகூர்ந்து...

உலகெங்கும் இன்று மகளிர் நாள்! எனக்கு அன்னையர் நாளும் கூட! உண்மையைச் சொன்னால் இன்றொரு நாள் தான் உன்னை நினைக்கிறேன். அம்மா என்றவுடன் என் நினைவுக்கு வரும் இரண்டாம் அம்மாவை இருக்கும் போதே அடையாளம் காட்டிச் சென்றாய்! தங்கையாய், அக்காவாய், அண்ணியாய், மகளாய், ஆசிரியராய், தோழியாய்... இன்று, உன் இடத்தை நிரப்ப எண்ணற்றோரை அம்மாவாகப் பெறும் அளவு என்னை வளர்த்துவிட்டிருக்கிறாய்! உன்னைத் தோழியாய்ப் பார்த்துப் பழகியது தான்... இன்று எல்லோரையும் தோழியராகப் பார்க்க வைத்திருக்கிறது. நீ எனக்குச் செய்ததில் முதன்மையானதாக இது தான் தெரிகிறது. நான் இதை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் ‘கள்ளிக்காட்டில் பொறந்த தாயே’ பாடல் கலைஞர் தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த ’அம்மா’ செண்டிமெண்ட் எல்லாம் எனக்குக் கிடையாது என்று என்னைத் தெரிந்த எல்லோருக்கும் தெரியும். எல்லாமே எனக்குத் ’தோழி’ செண்டிமெண்ட் தான். ஆகவே என் முதல் தோழியை நினைவுகூர்ந்து அத்தனைத் தோழியர்க்கும் என் மகளிர் நாள் வாழ்த்துகள்!

ஆயிற்று பத்தாண்டுகள் அருமைத் தோழர்களே!

(அழகப்பா அரசு கலைக் கல்லூரி - இளம் வணிகவியல் 1999-2002 (B.Com 99-02) மாணவ நாட்களின் நினைவாக...) ஆயிற்று பத்தாண்டுகள் அருமைத் தோழர்களே! நம்ப முடிகிறதா நம்மால்? 2002 ஏப்ரல் 25! கடைசி நாள் மாணவர்களாய் கண்கலங்க விடைபெற்று ஆயிற்று பத்தாண்டுகள்! கல்லூரி கலங்க ஆடி மகிழ்ந்த நாட்கள் அடங்கி ஆயிற்று பத்தாண்டுகள்! அடிதடி... கும்மாளம்... ஆர்ப்பாட்டம்... அந்யோந்நியம்... அத்தனையும் முடிந்ததாய் மனம் நொறுங்கி ஆயிற்று பத்தாண்டுகள்! பவநகர் ஸ்டேடியம்... அழகப்பர் நினைவிடம்... அஞ்சல் நிலையம்... வாசல் பெட்டிக் கடை... தைல மரங்கள்... சைக்கிள் ஸ்டாண்ட்... ஸ்டோர் நோட்புக்கு... நூலகத்தின் பின்னோடும் ரயில்வே சிக்குபுக்கு... கேண்டீன் கணக்கு... ஆங்காங்கே மரத்தடியில் ’கடலை’ ஆமணக்கு! மர பெஞ்ச் ஓவியம்... கரும்பலகைக் கவிதை... அன்பு, நட்பு, காதலென்று அவரவர் நினைப்புக்கேற்ப அழியாத ஒரு விதை! டுர்டுர் வண்டியில ரெண்டு வருசம் டூரு! மலை மலையாய் ஏறி, கடல் கடலா குளிச்சு, அருவி அருவியா நனைஞ்சு, விடிய விடிய முழிச்சு சீட் இல்லாட்டி சூட்கேஸு... அதுவும் இல்லைன்னா தரையி...

பெரியாரின் மயிரைப் பிடுங்கி...

தொண்டு செய்து பழுத்த பழம் தூய தாடி மார்பில் விழும் - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வான் தவழும் வெண்மேகத் தாடியாடும் வளையாத சிந்தனைக்கோர் ஆட்டம் இல்லை - கவியரசு கண்ணதாசன் வெண்தாடி வெளிச்சம் - கவிஞர் கலி.பூங்குன்றன் நின் அடையாளம் தாடியும் தடியும் நீதான் எங்கள் அடியும் முடியும் - கவிப்பேரரசு வைரமுத்து உன் முகத்தில் படர்ந்திருக்கும் நரைமுடிகள் போதிமர வேர்கள்! - கவிஞர் பழநிபாரதி சவரம் செய்யும் நேரம் கூட என் சமூகத்திற்குப் பயன்பட வேண்டும் என்று நினைத்த தங்கள் தலைவனின் அடையாளத்தை பாடி மகிழ்ந்தனர் கவிஞர்கள். சுருக்கமாகச் சொன்னால் தந்தை பெரியாரின் தடிக்கு நிகராய் பாடல் பெற்ற தலம்தான் தாடி. சிங்கமாய்ச் சிலிர்க்கும் அந்த முகத்துக்கு வனப்பு சேர்த்தது அவரது தாடி! பார்ப்போரை கவர்ந்திழுத்த அந்தத் தாடியைக் கவர்திழுத்த கதை தெரியுமா? இதோ கேளுங்கள்! 06.03.1973 - காரைக்குடி பகுதிக்கு எப்போது வந்தாலும், கல்லுக்கட்டியில் இ...

நான் இந்துவல்ல; மானமுள்ள தமிழன்!

ராமேஸ்வரத்தில் ஒரு தெருமுனைக்கூட்டம். திராவிடர் கழகத்தின் தலைமைக்கழகப் பேச்சாளர் உரையாற்றிக் கொண்டிருக்கிறார். கடவுள்கதைகளின் யோக்கியதையைத் தோலுரித்துக் கொண்டிருக்கிறார். கூடியிருந்த நல்ல கூட்டத்தினைப் பொறுக்க முடியாமல் பக்கத்திலிருந்து ஒரு குரல் வருகிறது. 'நிறுத்து பேச்சை!' குரலோடு ஒரு சின்ன கும்பல் சேர்ந்துகொள்கிறது. "நிறுத்துடா பேச்சை!" வார்த்தைகள் தடிக்கின்றன. ஒன்றல்ல; இப்படி ஓராயிரம் சலசலப்புகள் கண்டது திராவிடர் கழகம். இந்த கத்தலுக்கெல்லாம் பேச்சை நிறுத்தியிருந்தால் பெரியார் பட்டிதொட்டிக்கெல்லாம் எப்படி சென்றிருப்பார். கவனம் சிதறாமல் மேலும் வேகமாக பேச்சு தொடர்கிறது. "ஏய்! நீ சொல்றதையெல்லாம் நாங்க கேகணுமா? நிறுத்துறியா இல்லையாடா!" என்றபடி மேடைக்கருகில் சூழ்ந்துகொண்ட 5, 6 பேர் ஒலிவாங்கியைப் பிடுங்க முயற்சிக்க... சூழல் மாறுகிறது. பேச்சாளரைப் பாதுகாக்க தோழர்கள் அவரைச் சூழ்ந்துகொள்ள, காவல்துறையின் முழுக்கவனம் திரும்புவதற்குள் சின்ன கைகலப்பு அரங்கேறுகிறது. வந்தது: சொல்லித் தெரியவேண்டியதில்லை... ஆர்.எஸ்.எஸ். காலிகள் பேச்சாளர்: தி.என்னாரெசு பிராட்லா காரணம்: வழக...

சொந்த மண்ணிலும் உதை வாங்கவா? தேசஒற்றுமையாம்- மயிராச்சு! (வீடியோ)

பர்மா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, மலேசியா, சவுதி உலகெங்கும் உழைத்து உதைப்பட்ட தமிழன் சொந்த நாட்டிலும் உதைபடுவதை பவா சமத்துவன் தனது வரிகளில் வெளிப்படுத்துகிறார். "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கும் முந்தோன்றிய மூத்தக்குடி, இந்திய மாநிலத்திற்குள்ளும் கால்பந்தாய் உதைபடுகிறான்... கேரளாவிலிருந்து துரத்தப்பட்டான் கர்நாடகாவிலிருந்து விரட்டப்பட்டான். மராட்டியத்திலிருந்து திருப்பப்பட்டான்.! சொந்த மண்ணாவது சொல்லிக் கொள்ளும்படி இருக்கிறதா...?" இந்தக் கேள்வியின் நியாயமும், வலியும் கண்முன்னே புரிந்தது ஒருநாள். 28-03-2006: திரைப்படக் கல்லூரியின் உணவு இடைவேளையில் எதிரிலிருக்கும் செல்வம் கடையில் உணவுண்பது வழக்கம். அப்படி ஒரு மதிய வேளையில் எங்கள் உணவுத்தட்டுக்குப் பக்கத்தில் வந்து விழுந்தது ஒரு கல். திடீரென சலசலப்பு... எழுந்து பார்ப்பதற்குள் கூட்டம் கூடியிருந்தது. மாணவர்களுக்குள் எழுந்த மோதல். தரமணி கல்வி வளாகத்தில் அவ்வப்போது இப்படி மாணவர் மோதல் சிறிய அளவில் நிகழும். அதில் ஏதோ ஒன்று என்று எல்லோரும் அமைதியகிவிட்டார்கள். சாலைக்கு வந்துவிட்ட வன்முறை எதுவாக இருப்பினும் காவல் துறைக்கு தகவல் தர வே...

பக்குரித்தல்

எனக்கு விழுப்புண் பட்டு நீண்ட நாட்களாகிறது. விழுந்து புண் பட்டதுதான் விழுப்புண் என்பதாகும். சேற்றிலாட முடியாமல் வளர்ந்ததால் சிரங்கு வரும் வாய்ப்பில்லை! செருப்பில்லாமல் நடந்ததில்லை என்பதால் சேற்றுப்புண்ணுக்கும் வழியில்லை! மிதிவண்டி பழகியதில் தொடங்குகிறது எனது விழுப்புண் வரலாறு! வாடகைக்கு எடுத்த வண்டியில் விழுந்தபோதும் விருந்தினர் கொணர்ந்த வண்டி ஓட்டி விழுந்தபோதும் என் சிராய்ப்புகளுக்கு மருந்து போடுகையில் 'புதுப்புது மொழிகளை உருவாக்கி உளறியதாய்' அண்ணன் சொல்லிச் சிரித்தபோது ஆறிவந்த தடத்தின் பக்குகளை உரித்தபடி பொருமிக் கொண்டிருந்திருக்கிறேன். ஜான்டிரோட்ஸ் போல பாய்ந்து பிடிக்கிறேன் என ஆர்வக்கோளாறில் விழுந்து எழுந்தபோது வழிந்த குருதி துடைத்தபடி வீடு நோக்கி நடந்திருக்கிறேன். காயம்பட்ட இடத்தில் களிம்பு தடவிப்பின் காத்திருந்து தடவிப் பார்க்கையில் இடறுகின்ற பக்குகளை மெதுவாய் உரிப்பதொரு... சுகம்! வெங்காயத் தோல்களாய் விரியும் அடுக்குகளுக்குள் வடுக்களாய் ஒளிந்திருக்கிறது காலம்! காயாத பகுதிவரை கிழிப்பதில் வேண்டும் தனிக்கவனம்! விழுப்புண்கள் குழிப்புண்கள் ஆகிவிடாதிருக்க தேவை எச்சரிக்கை! உதடுகள...

முதல் பிறந்தநாள் வாழ்த்து!

இணை(ய) தளம் ஆறாம் வகுப்பில் சென்று அமர்ந்த நாள்முதல் எனக்கு நண்பன் அவன்... எவ்வளவுக்கு எவ்வளவு நண்பனோ, அவ்வளவுக்கு அவ்வளவு போட்டியாளன்... முதலிடத்திற்கான போட்டியில் முட்டிக் கொண்டபடியே பத்தாம் வகுப்பு முடிந்து பிரிந்தபோதும்... ஆட்டோகிராப் அவசியமில்லை என எங்கள் நட்பைப் புகழ்ந்துகொண்ட போதும் கூட.. அவன் பிறந்தநாள் தெரியாது எனக்கு... பிறந்தநாள் கொண்டாட்டங்கள் பெரிதாய்ப்படாத அந்த நாட்களில்... கேட்காமலே கடந்து வந்துவிட்டோம்! பின்னொரு நாள்... கல்லூரியில் வெவ்வேறு துறைகளில் சந்தித்த போது... இவன் என் நண்பனென யாரோ ஒருவர் எனக்கு அறிமுகப்படுத்த நாங்கள் சிரித்த சிரிப்பில் வெட்கிப் போனான் அவன்... உள்ளூர நாங்களும்... அன்று தொடங்கியது இரண்டாம் இன்னிங்ஸ்... இன்னும் ஆட்டம் முடியாத எங்கள் நட்புக்காலத்தில்... ஒரு முறையேனும் கேட்கத் தோன்றவில்லை எனக்கு அவன் பிறந்தநாளை... அவனுக்கு என் பிறந்தநாளை! இருவரும் பங்கேற்கும் நண்பர்கள் பிறந்தநாளின்போதுகூட அவனிடம் கேட்க நினைப்பது அசிங்கமாகப் பட்டதெனக்கு.... அப்படியே கரைந்துபோன வருடங்களின் தொடர்ச்சியில் என் பிறந்தநாள் கேட்டு மிதந்து வந்த ஒரு மின்னஞ்சல் சொன்னது அவன் பிற...

எம் இல்லத்தின் மீது தாக்குதல்! கா(வி)லிக்கூட்டத்தின் கைவரிசை

காரைக்குடி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சாமி சமதர்மம் அவர்களின் (எமது) இல்லத்தின் மீது ஆர்.எஸ்.எஸ். காலிகள் சற்றுமுன் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். ராமன் பாலம் என்ற புரட்டைக் கட்டவிழ்த்துவிட்டு சேது சமுத்திரத் திட்டத்தை தடுக்கும் முயற்சியில் உள்ள காவிக் கூட்டத்திற்கு தமிழர் தலைவர் வீரமணியும் தமிழக முதல்வர் கலைஞரும் விட்ட அறைகூவல்களையொட்டி கலவரமடைந்துள்ள காவிக்கூட்டம் வன்முறையில் இறங்கியுள்ளது. இரு சக்கர வாகனத்தில் வந்த ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. காலிகள் கல்வீசியதில் எமது வீட்டுக் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின. "உங்களையெல்லாம் உயிரோடு விட்டுவைக்கக்கூடாது? விரைவில் முடிவு கட்டுகிறோம்." என்று உரக்கக் கத்தியபடியும், கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்துவிட்டும் வண்டியில் ஓடி ஒளிந்திருக்கிறார்கள். கல்வீச்சில் மாடி வீட்டின் கண்ணடியும், வரவேற்பறையின் கண்ணாடியும் உடைந்து நொறுங்கியிருக்கிறது. படுக்கை அறையில் . காவல் துறையினர் வந்து விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதே நேரத்தில் (இரவு 12 முதல் 12:30க்குள்) காரைக்குடி நகர தி.மு.க. செயலாளர் துரை.கணேசன் மற்றும் இலுப்பக்குடி நாராயணன் ஆகிய...

நான் சின்னப் பப்பா!

சரியாக ஓராண்டாகிறது. விஜய் தொலைக்காட்சியின் 'நீயா? நானா?' விவாதத்திற்கு வந்த அழைப்புக்காக தயாராகிக்கொண்டிருந்தேன். மாலை 6 மணிக்கு வந்துவிடுங்கள் என்ற அழைப்போடு, எங்கள் அணியில் பேசத் தோழர்களையும் அழைத்துவருமாறு சொல்லியிருந்தார்கள். உடன் தோன்றிய சிலரில் 'மிதக்கும் வெளி' சுகுணா திவாகரும் ஒருவர். (அப்போது எனக்கு மிதக்கும் வெளியாக அறிமுகம் ஆகியிருக்கவில்லை.) தகவலைச் சொல்லி அழைத்தேன். தன் நண்பர் செந்தில் வந்திருப்பதாகவும், இணையத்தில் ப்ளாக் எழுதுகிற திராவிடத் தமிழர்கள் இன்றைக்கு மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்காவில் சந்திக்கவிருப்பதால் தான் அங்கே செல்வதாகவும் தெரிவித்தார். உடன் செந்திலின் எண் வாங்கிக் கொண்டேன். அவரிடம் பேசியபோதுதான், "திராவிட ராஸ்கல்கள் முன்னணி" என்று தாங்கள் இயங்கப் போவாதாக தெரிவித்தார். இணைய ஊடகம் நம் கையை விட்டுப் போய்விடுமோ என்று எண்ணியிருந்தவனுக்கு இப்படி ஒரு சந்திப்பு என்றதும் ஆனந்தம். அதிலும் சென்னை மட்டுமல்லாமல், நெல்லை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தெல்லாம் வந்து சந்திக்கிறார்கள் என்றதும், பழைய பேனா நண்பர்கள் முறையின் நினைவு... மு...

ஆயித்தில் ஒருவன்!

பழைய திரைப்படங்களை எனக்கு நிறைய போட்டுக்காட்டி, திரைப்படங்களின் மீதான ஆர்வத்தை எனக்கு வளர்த்தது என் அய்யாதான்!(அய்யா என்று குறிப்பிடுவது என் தந்தையை!) வீடியோ வந்த புதிதில் எங்கள் இல்லத்தில் மூன்று, நான்கு வீடியோ டெக்குகள் வாடகைக்கு விடுவதற்காக வைத்திருப்போம். வாடகைக்கு டெக் எடுத்து படம் பார்த்த காலம்.. ஆதலால் அன்றைக்கு(1980-ன் இறுதிப்பகுதிகளில்) அது நல்ல தொழில்! தனக்குப் பிடித்த தமிழ் திரைப்படங்கள், தன்னை வியக்கவைத்த ஆங்கிலத் திரைப்படங்கள் என தொடர்ந்து தேடி எடுத்து, படங்களை (வீடியோ கேசட்டுகளை) வாங்கிவருவார் என் தந்தை. எனவே தினம் ஒரு திரைப்படம் எங்கள் இல்லத்தில் நிச்சயம். அப்படித்தான் பீம்சிங் படங்கள், நடிகர் திலகம் சிவாஜி நடித்த திரைப்படங்கள், பழம்பெரும் திரைப்படங்கள்(சகஸ்ரநாமம் நடித்த 'போலீஸ்காரன் மகள்' போன்றவை), தேர்ந்தெடுத்த எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் என நிறைய பார்த்துக் குவித்திருக்கிறேன். அதிலும் ஆயிரத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்களை பின்னாட்களில் சன் தொலைக்காட்சியின் துணைகொண்டு நிறைய முறை பார்த்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த எம்.ஜி.ஆர். படங்களில் 'ஆயிரத்தில் ஒருவன...