தினமும் வரும் பல மின்னஞ்சல்களிலும், செல்குறுஞ்செய்திகளிலும் நான் ரசிக்கும் வெகு சிலவற்றை அனைவரோடும் பகிர்ந்து கொள்ள ஆசை. வழக்கமாக மின்னஞ்சல்களை கணினியிலும், செ.கு.செ.க்களை எழுதி அனுப்பியவர் பெயரோடு தொகுப்பாகவும் சேமித்து வைத்துக்கொள்வது எனது பழக்கம். இனி நல்ல செ.கு.செ.க்களை தொகுத்து இந்த வலைத்தளத்திலும் பதிந்து, யாம் பெற்ற இன்பத்தை இவ்வுலகுக்கு பகிர்ந்திட விரும்புகிறேன். இதில் இன்னொரு வாய்ப்பும் என்னவென்றால், காலத்துக்கும் அவை நிற்கும். என்னிடமும் சேரும் துண்டுச்சீட்டுகளின்/ கோப்புகளின் எண்ணிக்கை குறையும். செ.கு.செ: என்னதான் பெரிய பக்திமானா இருந்தாலும், அவரால கப்பல் கிளம்புறதுக்கு முன்னாடி எலுமிச்சைபழம் வைக்க முடியாது. -பகுத்தறிவோடு யோசிப்போர் சங்கம் அனுப்பியவர்: காமராசு (பச்சையப்பன் கல்லூரி மாணவர்) மின்னஞ்சல்: தாஜ்மஹால் ஆக்ரா-வில இருந்து பூனேவுக்கு மாறுதுன்னா உங்களால நம்ப முடியுமா? கொஞ்சம் சிரமம் தான் இல்லையா? இங்க பாருங்க. . . . . . . அனுப்பியது: சக்தி சரவணன் (பொறியியல் மற்றும் திரைப்பட வல்லுனர்)
சிரமப்படாதீங்க... பதம் பிரிச்சு சொல்றேன். "பிரின்சு என் ஆர் சமா". இப்படித்தான் படிக்கணும்.