முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திடலிலிருந்து 'தீபாவளி மலர்'

'பூமா தேவிக்கும், பன்றி அவதார எடுத்த மகாவிஷ்ணுவுக்கும் பிறந்த நரகாசுரனைக் கொன்ற நாளே தீபாவளி!'

'நரகாசுரன் யார்?'

'அவன் ஒரு அசுரன். அரக்கன்'

பூமாதேவிக்கும் விஷ்ணு பகவானுக்கும் பிறந்த பிள்ளை எப்படி அசுரனாக முடியும். நாய்க்கும் நாய்க்கும் பிறக்கும் பிள்ளை நாயாகத்தானே இருக்க வேண்டும். தேவருக்கும் தேவிக்கும் பிறந்த பிள்ளை அசுரனான மாயம் என்ன? அதிருக்கட்டும், நரகாசுரன் ஏன் கொல்லப்பட வேண்டும்?'

'அவன் பூதேவர்கள் செய்த யாகங்களை அழித்தான். அதனால் அவன் அசுரன். எனவே அவனைக் கொல்ல வேண்டும்'

'விலங்குகளையும், உணவுப்பொருள்களையும் யாகம் என்னும் பெயரால் அழித்த கயவர்களை காவு வாங்குவது தானே மன்னன் கடமை. அப்படியாயின் நரகாசுரன் செய்தது சரிதானே!'

'??????'
- - - - - - - - - - - - - - -
சும்மா இந்த கேள்விளுக்கே கலங்கிட்டா எப்படி?

தினகரன் தொடங்கி, தீக்கதிர் வரைக்கும் தீபாவளி மலர் வெளியிட்டுக் கொண்டிருக்க, பெரியார் திடலிலிருந்து தீபாவளி மலர் வந்தால் எப்படி இருக்கும்!

இதோ, கடந்தாண்டு தீபாவளியை ஒட்டி வெளிவந்த கருவூலம் போன்ற விடுதலை 'நரகாசுரன் மலர்' வண்ணமயமாக உங்களுக்காக!

பதிவிறக்கம் செய்து அசுரன் மலரைப் படியுங்கள்!

அறிவு விரிவு பெற்று அசுர குலமாம்

தமிழினத்தின் பெருமை உணருங்கள்!

கருத்துகள்

ஜெகதீசன் இவ்வாறு கூறியுள்ளார்…
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி....
bala இவ்வாறு கூறியுள்ளார்…
//நாய்க்கும் நாய்க்கும் பிறக்கும் பிள்ளை //

பிரின்சு என் ஆர் சமா அய்யா,
தப்பு, தகரம் தலை மேல குட்டு;நாய்க்கும் நாய்க்கும் பிள்ளை பிறக்காது.ஈ ரோட்டுல நாய க்கரா பிறக்கும்.இது கூட தெரியாத நீங்களெல்லாம் தாடிக்காரனோட சிஷ்யன்னு சொல்லிக்கவே வெக்கப் படணும்.

பாலா
thurogi இவ்வாறு கூறியுள்ளார்…
7.11.2007 தேதியிட்ட ஆனந்த விடனில் 'ஆய் மதன்' பகுதியைப் படித்தீர்களா?

அதில் 'நரகாசுரனின் அப்பா அம்மா யார்?' என்ற கேள்விக்கு, 'நடமாடும் என்சைக்லோபிடியா' மதன் பதிலளித்துள்ளார்...

இரண்யாசுரன் என்ற அசுரனை மகாவிஷ்ணு பன்றி வேடமிட்டு துரத்திக்கொண்டு போனதாகவும், அப்போது தடுக்கி விழுந்த இரண்யாசுரனின் கொம்பு (எந்த கொம்பு என்று சொல்லவில்லை) பூமியில் குத்தியதாகவும் அதனால் பூமாதேவி கற்பமடைந்து பெற்றெடுத்ததுதான் நரகாசுரன் என்று 'வரலாற்று பேராசான்' மதன் சொல்லுறாரு
bala இவ்வாறு கூறியுள்ளார்…
//அப்போது தடுக்கி விழுந்த இரண்யாசுரனின் கொம்பு (எந்த கொம்பு என்று சொல்லவில்லை) பூமியில் //

துரோகி அய்யா,
ஆமாங்க .எனக்கும் சந்தேகமா இருக்கு.எந்த கொம்புன்னு?அப்புறம் பூமாதேவி கர்ப்பமடைஞ்சாங்க,சரி?தமிழ்த் தாய் ஏன் அடையல?ஒருவேளை பூமா தேவி அப்போ தமிழ்த் தாயா?கன்பியூஷன்.

பாலா

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ஜெயா தொலைக்காட்சிக்கு என் இரங்கல்!

ஜெயா தொலைக்காட்சியில் மூடிக் கிடக்கும் போயஸ் தோட்டத்தின் கதவுகளைக் காட்டியபடி, முதலமைச்சரின் மறைவுச் செய்தி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆம்... ஜெயா தொலைக்காட்சிக்கு இப்போது மட்டுமல்ல, எப்போதும் அவர் தான் முதலமைச்சர்.


அது காலம் முழுக்க ஜெயலலிதா அம்மையாரின் சிறப்புகளைச் சொல்வதற்காகவே உருவாக்கப்பட்டு செயல்பட்டு வரும் தொலைக்காட்சி. தேர்தல் தோல்வி என்றால் கூட அடுத்த சில நிமிடங்களில் தேர்தல் செய்திகள் கூட அதில் வராது. முதலமைச்சர் பதவி இல்லையென்றாலும் அதற்கு ஜெயலலிதா தான் முதல்வர். "மக்கள் முதல்வர்" என்ற பெயரை உருவாக்கிக் கொடுத்ததும் அதுதான்.

ஜெயலலிதா மீண்டும் ஜெயித்த போது இரட்டிப்பு போனசெல்லாம் வழங்கி மகிழ்ந்திருக்கிறார். பணியாற்றிய அனைவருக்கும், பதவி வேறுபாடற்று ஒரு லட்சம் ரூபாய் போனஸ் வழங்கியெல்லாம் கூட கொண்டாடியிருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அதிமுக என்ற கட்சியினுடையது என்றெல்லாம் அந்தத் தொலைக்காட்சியைச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. பிற கட்சி ஊடகங்களைப் போல, அதன் இரண்டாம் கட்ட, வருங்காலத் தலைவர்களுக்கெல்லாம் முக்கியத்துவம் தராதது. அது முற்றும் முழுதாக ஜெயலலிதா அவர்களின…

ராகு காலம் பார்த்தாரா வீரமணி?

இணைய தளத்தில் அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட சின்மயி விவகாரம் குறித்து புத்தகம் எழுதிய விமலாதித்த மாமல்லன் என்பவர், தனது வலைத்தளத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறித்து அவதூறு பரப்பியுள்ளார். அதைச் சில அறிவிலிகளும் பரப்பிக் கொண்டிருக்கின்றன.
//பெரியவர், தம் வீட்டுப் பிள்ளையின் திருமணத்துக்குப் பெண் தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில், தி.க. வீரமணி அவர்களின் பேத்தி திருமணத்துக்கு இருப்பதாகத் தெரிய வரவே அவருடன் தொடர்புகொண்டிருக்கிறார். இருவரும் பலவருடங்களாய் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள் என்பதால் மகிழ்வுடன் அளவளாவத் தொடங்கிவிட்டனர். பெண்பார்க்க வரும் நாளையும் முடிவுசெய்துகொண்டனர். அன்று மாலை ஒரு நான்கரை மணி வாக்கில் வருகிறோம் என்று கூறியிருக்கிறார் பெரியவர். நாலரை வேண்டாம் அன்றைய தினம் நாலரை ஆறு ராவுகாலம் எனவே அதற்கு அப்புறமாக வாருங்கள் என்றிருக்கிறார் திரு. தி.க.வீரமணி.//
யார் இந்தத் தகவலை திரு.விமலாதித்த மாமல்லன் அவர்களுக்குச் சொன்னவர்? அந்தப் பெரியவரேவா? இல்லை. அந்த சோ கால்ட் பெரியவரின் உறவினராம். அவர் என்ன வகை உறவினர்; எத்தனை விட்ட உறவினர் என்பதெல்லாம் தெரியவில்லை.
ச…