முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

January, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காலங்கடந்த பதிவு! - சிந்தாநதிக்கு இரங்கல்!

யாருடைய நினைவு என்றைக்கு வரும் என்று சொல்லமுடியாது? திடீரென்று சாலையின் விளக்கொளியைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதோ, வாகனத்தில் பயணித்துக் கொண்டிருக்கும்போதோ, எப்போதோ சந்தித்தவர்களின் நினைவு தோன்றும்! பிறகு அது வாய்ப்பான நேரத்தில் மீண்டும் நினைவுக்கு வருவதும், வரும் நேரத்தில் தொடர்பு கொள்ளவோ, விசாரிக்கவோ வாய்ப்புக் கிடைப்பதும் அரிது!

அப்படி யாரையாவது தொடர்புகொள்ள, தேடிக் கொண்டிருக்கும் போது அந்த நபர் மறைந்துவிட்டார் என்ற செய்தி கிடைத்தால் எப்படி இருக்கும்? ’அவர் போயி வருசம் ஆச்சே!’ என்று ஊரில் யாரைப் பற்றியாவது கேட்டால் கிடைக்கும் பதிலைப் போலத் தான் ’சிந்தாநதி’ மறைந்து இரண்டாண்டுகள் ஆயிற்று என்ற தகவலையும் நான் தெரிந்துகொண்டேன்.

வலைப்பூவில் எழுதத்தொடங்கிய காலத்தில், blogspot-இல் எழுதும் எனக்கு, Wordpress-காரர்களே அந்நியமாகத் தெரிவார்கள். யாருமே பயன்படுத்தாத blogspirit.com-இல் ஒருவர் எழுதிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? அதிலும் கஜகஜவென்று, எந்த மூலையிலாவது துடித்துக் கொண்டோ, எரிந்துகொண்டோ இருக்கும் ஏதாவது ஒரு GIF படத்தோடு கூடிய அந்த வடிவமைப்பைப் பார்க்கும்போதெல்லாம், எல்லா கலரையும்…

கள்ள நோட்டைக் கண்டுபிடிப்போம் வாங்க!

கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே எ.எ.வி.வி. (எண்ணி எழுதாமல் விட்ட விசயம்) மற்றொன்று - கள்ளநோட்டு விவகாரம். நாடெங்கும் இப்பிரச்சினை கவனம் பெற்றிருக்கும் சூழலில் இப்போதாவது எழுதிவிடுவோம் என்ற வேகத்துடன் அதிகாலை 4மணிக்கு எழுதத் தொடங்குகிறேன். -------------------------------------------------------------------- கையில் கிடைக்கும் நோட்டு ஒத்தையோ கத்தையோ, அது கள்ள நோட்டா நல்ல நோட்டா என்று சோதனை செய்து, பணத்தைக் கொடுத்தவர் வயிற்றில் பீதியைக் கிளப்பி ஆராய்ச்சி செய்யும் பழக்கம் 2010-ன் இறுதிவாக்கில், மின்னஞ்சலில் கிடைத்த தகவல்களைக் கொண்டு எதார்த்தமாய் தொடங்கியது. 
எனது ஆய்வில்... கிட்டத்தட்ட ஆய்வாகவே இதைச் செய்தேன் என்பதை அருகில் உள்ளவர்கள் அறிவார்கள்- நொந்த மனத்துடன்....! ஏன்னா அவங்க கிட்ட இருந்துதானே கத்தையைப் புடுங்கி ஆராய்ச்சி பண்ணுவேன். அவங்களுக்கும் இந்த ஆய்வு நோய் தொற்றிக் கொண்டது என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.
எங்களது ஆய்வில் மிகக் குறைந்த அளவு என்று எடுத்துக் கொண்டாலும் 15 % முதல் 25% வரை கள்ள நோட்டுப் புழக்கம் இருந்துவருகிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. உண்மையில் அது பெரிதும் …

ஒரே மெட்டு - எத்தனை பாடல்!! அடடா...என்றும் ராஜா!

அவசியம் எழுத வேண்டும்; பிறருக்குச் சொல்ல வேண்டும் என்று நாம் கருதி பணி/சோம்பல் காரணமாக தள்ளிப்போடும் செய்திகள் பல பிறரால் சொல்லப்பட்டுவிடும் போது, நாம் நினைத்தது வந்துவிட்டதே என்ற மகிழ்ச்சியும், கொஞ்சம் இயலாமையால் உருவான பொறாமையும் ஏற்படுவதை மறுக்க முடியாது. ஆனால் அதை மீறி, மகிழ்ச்சியை வளர்த்துக் கொள்ளுதலே நமது உடலுக்கும் மனதுக்கும் நல்லது என்கிற உணர்வில் தான் இது வரை செயல்பட்டு வந்திருக்கிறேன். (வேற வழி...!)

அந்த வகையில் நீண்ட நாட்களாக நினைத்துவைத்திருந்த சில விசயங்கள் பதிவாகவோ, செய்தியாகவோ, படத்திலோ வெளிவந்து விட்டன. எனவே இனியும் அவற்றைக் காலம் கடத்தாமல் பதிவது என்ற நோக்கில் தொடங்கிவிட்டேன். அநேகமாக, அடுத்த ஓரிரண்டு பதிவுகளும் இதே திக்கில் இருக்கலாம்..

---------------------------------------
இளையராஜாவின் பாடல்களைத் தொடர்ந்து கேட்டு, அணுஅணுவாய் ரசிக்கும் பழக்கம் அண்ணன்களிடமிருந்து தொற்றியது. ஒவ்வொரு இசை நுணுக்கங்களையும் ரசித்து, வியந்து, மகிழ்வது தனிசுகம்.

இப்போதிருக்கும் சன் மியூசிக் வருவதற்கு முன்னால், சன் தொடங்கிய சில ஆண்டுகளில் சன் மூவீஸ் என்றும், சன் மியூசிக் என்றும் இரண்டு சேன…

தமிழில் பிறந்தநாள் வாழ்த்துப்பாடல்! நன்றி தோழர்களே!

”எனக்கு இன்னிக்கு ஹேப்பி பர்த்டே!” என்று சொல்லிக் கொள்ளும் குழந்தைகளைப் பார்த்திருக்கிறீர்களா? அன்றைக்கு முழுமையும் அவர்களுடைய நாள் என்ற உணர்வு தான் அதற்கு காரணம். எல்லா நாளும் நம்முடைய நாள் தான் என்றாலும் கொண்டாட்டத்திற்குரிய நாள்களாக பிறந்தநாள், திருமணநாள் போன்றவை அமைகின்றன.

கூடுமானவரை, மறக்காமல் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்வதும், இயன்றவரை குட்டிக் குட்டி கொண்டாட்டங்களை கேக் வெட்டி நடத்துவதும் எமது வழக்கங்களில் ஒன்று.

அப்போதெல்லாம் "Happy Birthday To You|" பாடுவதற்கு பதிலாக, தமிழில் அதே ராகத்தில் “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்; இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று பாடுவேன். தமிழில் நல்ல பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் இல்லையே என்ற வருத்தமும், நமது இசைக் கலைஞர்களை வைத்து ஒன்று தயாரித்து வெளியிட வேண்டும் என்ற எண்ணமும் இருக்கும்; இருக்கிறது.

அந்த ஏக்கத்தினைத் தீர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது - முகில் படைப்பகம் வழங்கியிருக்கும் பிறந்தநாள் வாழ்த்துப் பாடல். வித்யாசாகரின் நற்றமிழில் ஆதியின் இனிய இசையில் சரோ என்ற மென்குரல் நாயகனின் குரலில் தேனாய் பா…