முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

வரலாற்றுக்குறிப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கொடித் திருடர்களை வேரறுப்போம்! தமிழீழ இலச்சினைகளை மீட்டெடுப்போம்!

தமிழீழம் என்னும் கனவைச் சுமந்தும், புலிகளையும், தலைவர் பிரபாகரனையும் நேசித்தும் வருவோர்க்கு தமிழீழக் கொடி தரும் உணர்வு எத்தகையது என்பதை எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. ஈழத் தமிழர்க்கென்றொரு நாடு அமைவதை, நாடு கடந்தும் தன் நாடாகப் பார்க்கும் மனம் அது. துப்பாக்கித் தோட்டாக்கள் தெறிக்க, முன்னங்கால் பறக்க கூண்டை விட்டுப் பாயும் புலியின் உருவம் தரும் சிலிர்ப்பும், எழுப்பும் உணர்வலையும் நம் உயிர் அடங்கும் வரை ஓயாதது. அத்தகைய உயர் சின்னத்தை, உயிர்க் கொடியை, உலுத்தர் கூட்டம் பயன்படுத்துவதையும், அதனால் அது கீழ்மையுறுவதையும் காணச் சகிக்கவில்லை. சிந்தை பொறுக்கவில்லை. புலிகள் தங்களை மௌனித்துக் கொண்டபிறகு முளைத்த காளான்களெல்லாம் புதிது புதிதாய் கதையளந்துகொண்டும், புலி வேஷம் கட்டிக் கொண்டும் அலைந்து கொண்டிருப்பதும் காலத்தின் கொடுமை. எத்தனையோ ஈகியர்கள் தங்கள் உயிர் தந்து காத்த சின்னங்கள் இவை. ஆனால், இன்று பலியாகிக் கால்கைகள் உடல்கள் சிந்தும் பச்சைரத்தம் பரிமாறி இந்த நாட்டைச் சலியாத வருவாயும் உடைய தாகத் தந்ததெவர்? அவரெல்லாம் இந்த நேரம் எலியாக முயலாக இருக்கின் றார்கள்! ஏமாந்த காலத்தில் ஏற்றங்...

எங்கள் குலக் கொழுந்தின் குரல் ஒலிக்கிறது கேள்...

எங்கள் குலக் கொழுந்தின் குரல் ஒலிக்கிறது கேள்... உலக அற மன்றமே! கேள்!! துப்பாக்கிக் குண்டுகளுக்கு திறந்த மார்பு காட்டிய எங்கள் வீரப்புதல்வன் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்! உன் கேளாக் காதுகளுக்கு இப்படி உரத்துச் சொல்ல இன்னும் எத்தனை உயிர்கள் வேண்டுமுனக்கு? எங்கள் குலக் கொழுந்தின் குரல் ஒலிக்கிறது கேள்... உலக அற மன்றமே! கேள்!!

தீபாவளியன்று வீட்டுக்கு வந்த பெரியார்

...... 1949க்குப் பிறகு அய்யா அவர்கள் எனது இல்லத்தில் தான் தங்குவார்கள் (காரைக்குடி வரும்போது) என்பது எனக்குக் கிடைத்த பெருமையாகும். ஒருமுறை 1950வாக்கில் தீபாவளி அன்று திடீரென்று பெரியார் அவர்கள் எங்கள் இல்லத்திற்கு வந்து விட்டார்கள். முதல் நாளில் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட நிகழ்ச்சி முடித்து மதுரை வந்த அய்யா மேலூர், திருப்பத்தூர் வழியாக காரைக்குடிக்கு வந்து விட்டார்கள். நேராக எனது கடைக்கு முன் அய்யாவின் வேன் வந்து நின்றுள்ளது. நான் அந்த நேரம் கடையில் இல்லை. எனது மைத்துனர் தனுக்கோடிதான் கடையில் இருந்தார். அப்போது மதியம் 3-4 மணி இருக்கும். வந்தவுடன் "சாமி எங்கே?" என்று கேட்டதும், "வீட்டிலிருக்கிறார். இதோ கூட்டி வருகிறேன்" என்று கிளம்பியவரை நிறுத்திவிட்டு, அய்யா அவர்களே தனியாக கடை எதிரே உள்ள ஒரே நீளமான சந்தில் வருகிறார். (படம்:பெரியார் நடந்து வந்த சந்தின் இன்றைய தோற்றம்) (உள்படம்: என்.ஆர்.சாமியும், பேராண்டாள் அம்மையாரும், கையில் குழந்தையாக திராவிடச்செல்வம்) நான் கருப்புச்சட்டையுடன் எதிரே வருகிறேன். சற்று தூங்கிவிட்டு வருவதால் எனக்கே ஒரு சந்தே...

’தமுக்கு’ வீரமணி: ஆசிரியரின் அறிக்கையும், அலர்ஜிக்காரர்களின் அரிப்பும்!

தமுக்கு வீரமணி என்று பட்டம் தருகிறார்களாம்! அதற்கு ஆதரவு தந்து கை தூக்குகின்றனராம் அலர்ஜிக்காரர்கள்!  http://www.facebook.com/photo.php?fbid=166589886723898&set=a.132067643509456.20892.100001186622923&comments தமுக்கு எங்கள் ஒடுக்கப்பட்டோரின் இசைக்கருவி தான்! அதைச் சுமப்பதிலும் அடிப்பதிலும், அதன் மூலம் அடைமொழிபெயர் பெறுவதிலும் கூட எங்களுக்கு ஒன்றும் மனஒதுக்கீடு இல்லை! இன்னும் சொல்லப்போனால் அந்தப் பெயருக்கு ஒரு பொருத்தமும், கூடவே வரலாறும் உண்டு! ”1995 செப்டம்பரில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா உத்தரப்பிர தேச அரசு சார்பில் மூன்று நாள்கள் கோலா கலமாகக் கொண்டாடப்பட்டது. இந்தியா முழுவதுமிருந்தும் மக்கள் லட்சக்கணக்கில் வந்து குவிந்தனர். இதனைப் பொறுக்க மாட்டாத ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சந்திராசாமி பின்னணியில் பிள்ளையார் பால் குடித்ததாக இந்தியா முழுமையும் பரப்பினர். இது புரட்டு என்பது நிரூபிக்கப்பட்டது பிள்ளையார் கொழுக்கட்டை தின்றால் ரூபாய் ஒரு லட்சம் பரிசு என்று அன்றைய திராவிடர் கழக பொதுச்செயலாளர் கி. வீரமணி அவர்கள் சென்னை அண்ணா சாலையில் தமுக்கு (டாம்டாம்) அடித்துப் பிரச்சாரம் செய்...

அந்த நாள் என் நினைவில் இருக்கிறது...

அந்த நாள் என் நினைவில் இருக்கிறது... இன்றோ... நாளையோ... விடியும் எங்கள் வாழ்வு என்று வானோக்கியிருந்த எங்களை இருட்டு வந்து சூழ்ந்த அந்த நாள் என் நினைவில் இருக்கிறது... பதுங்குவது பாய்வதற்கே என்று போரின் நாட்குறிப்புகளைப் புரட்டிப் பார்த்து நிம்மதி கொண்டிருந்த எங்களுக்கு நாளை குறிக்க தாளே இல்லை என்ற குறிப்பு வந்து சேர்ந்த அந்த நாள் என் நினைவில் இருக்கிறது... 'மக்களைக் காக்க நாங்கள் இருந்த நாள் போக... எங்களைக் காக்க மக்களா? எங்கள் துவக்குகள் மௌனிக்கும்' என்ற குரல் கேட்ட அந்த நாள் என் நினைவில் இருக்கிறது... "வெள்ளைக் கொடி ஏந்தினாலும் கொல்லுவோம்... தமிழர்களை கடைவாயில் மெல்லுவோம்..." -கொக்கரித்த கொடூரனின் ரத்தம் வடிந்த புன்னகை கண்ட அந்த நாள் என் நினைவில் இருக்கிறது... தந்தையை.. தமையனை.. கணவனை... களத்திற்குத் தந்து தனயனை.. களத்திற்கனுப்பிய தாய் போல்.. "எம் பிள்ளைகளை நாட்டுக்கே கொடுத்திட்டனப்பா" என்ற எம் தலைவனின் பெருமிதம் கேட்ட அந்த நாள் என் நினைவில் இருக்கிறது... கள நிலைக்குத் திரையிட்டு எம் அரிப்பு...

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களுக்கு வீரவணக்கம்

சமூக நீதிக் காவலரும், "ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக எனது பதவியை இழக்கிறேன் என்றால் அதைவிட மகிழ்ச்சி வேறில்லை" என்று சிங்கமென முழங்கிய இந்திய வரலாற்றின் ஈடிணையற்ற மதிக்கத்தகுந்த ஒரே பிரதமர் வி.பி.சிங் (விஸ்வநாத் பிரதாப் சிங்) அவர்கள் இன்று மறைவுற்றார். அவருக்கு நமது செலுத்துவதோடு அவர் விட்டுச் சென்ற பணிகளை தொடர்வோம் என்று உறுதியேற்போம்.

பெரியாரின் மயிரைப் பிடுங்கி...

தொண்டு செய்து பழுத்த பழம் தூய தாடி மார்பில் விழும் - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வான் தவழும் வெண்மேகத் தாடியாடும் வளையாத சிந்தனைக்கோர் ஆட்டம் இல்லை - கவியரசு கண்ணதாசன் வெண்தாடி வெளிச்சம் - கவிஞர் கலி.பூங்குன்றன் நின் அடையாளம் தாடியும் தடியும் நீதான் எங்கள் அடியும் முடியும் - கவிப்பேரரசு வைரமுத்து உன் முகத்தில் படர்ந்திருக்கும் நரைமுடிகள் போதிமர வேர்கள்! - கவிஞர் பழநிபாரதி சவரம் செய்யும் நேரம் கூட என் சமூகத்திற்குப் பயன்பட வேண்டும் என்று நினைத்த தங்கள் தலைவனின் அடையாளத்தை பாடி மகிழ்ந்தனர் கவிஞர்கள். சுருக்கமாகச் சொன்னால் தந்தை பெரியாரின் தடிக்கு நிகராய் பாடல் பெற்ற தலம்தான் தாடி. சிங்கமாய்ச் சிலிர்க்கும் அந்த முகத்துக்கு வனப்பு சேர்த்தது அவரது தாடி! பார்ப்போரை கவர்ந்திழுத்த அந்தத் தாடியைக் கவர்திழுத்த கதை தெரியுமா? இதோ கேளுங்கள்! 06.03.1973 - காரைக்குடி பகுதிக்கு எப்போது வந்தாலும், கல்லுக்கட்டியில் இ...

கலைக்கட்டும் கலைஞர் அரசை!

('கலைத்துப்பார் கலைஞர் அரசை' என்றுதான் முதலில் தலைப்பு வைக்க நினைத்தேன்... சவால் விடுவதைப்போல! இப்போதல்ல... உச்சநீதிமன்றத் தடையை மீறி மக்கள் நடத்திய கடையடைப்பு என்ற மூக்கறுப்பு நிகழ்ந்தபோது, தலையில் முளைத்த நீதிபதிகள் கலைஞர் அரசைக் கலைக்க பரிந்துரை செய்தனரே! அப்போது வைத்த தலைப்பு. சவால் விட்டு ஒருவேளை கலைக்காமல் போய்விட்டால்.... அதனால் அந்தத் தலைப்பை விட 'கலைக்கட்டும் கலைஞர் அரசை!' என்பதுதான் சரியெனபட்டது.) காலை எழுந்ததும் கலைஞர் அரசைக் கலைக்கக்கோரி ஒரு அறிக்கையை விட்டுவிட்டு காலைக்கடன் முடிக்கப்போகும் அம்மையாரைப் போல அல்ல... நாங்கள் கோருவது! கொள்கைக்காக ஆட்சியை இழந்தார் கலைஞர் என்ற வரலாறு மீண்டும் பதிவாக 'கலைக்கட்டும் கலைஞர் அரசை!' தமிழின நன்மைக்காக ஆட்சியை இழந்தார் கலைஞர் என்று வையம் வாழ்த்த 'கலைக்கட்டும் கலைஞர் அரசை!' தமிழ்ச்செல்வன் படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்தமைக்காக ஆட்சியை இழந்தார் கலைஞர் என்ற வரலாறு உருவாக ''கலைக்கட்டும் கலைஞர் அரசை!'' அவ்வப்போது கூட்டணிக் கட்சிகளால் எழும் சிறு சிறு சலசலப்புகள் கூட இல்லாமல் முழுமையான, மெஜாரிட்டி...

துரோகத்தின் நூற்றாண்டும், தியாகத்தின் பொன்விழாவும்!

செப்டம்பர் 11: இந்த நாள் பலருக்கு பயங்கரவாதிகளால் அமெரிக்க இரட்டைக் கோபுரம் இடிக்கப்பட்ட நாளாக நினைவிருக்கும். இன்னும் சிலருக்கு அமெரிக்கப் பயங்கரவாதத்தால் சிலி அதிபர் அலண்டே படுகொலை செய்யப்பட்டது நினைவு வரும். ஆனால் நம் நாட்டில், அதுவும் தமிழகத்தில் நடந்த ஒரு படுகொலையும், அதனைத் தொடர்ந்த கலவரமும் நம்மில் பலருக்கு தெரிந்திருக்குமா என்று சொல்லமுடியவி ல்லை. தனக்கு நிகராக எதிரில் அமர்ந்து, தன்னால் தாழ்த்தப்பட்டவர்களாக கருதப்படுவோரைத் தலைமை தாங்கி நடத்துகிறார் என்பதற்காக ஒருவர் கொல்லப் படக் கூடுமா? கூடும் என்கிறது தமிழக வரலாறு... 1957 பொதுத் தேர்தாலையும், இடைத்தேர்தலையும் ஒட்டி, முதுகுளத்தூர் பகுதிகளில் எழுந்த கொந்தளிப்புகளை அடக்க மாவட்ட ஆட்சித் தலைவர் கூட்டிய அமைதிக்கூட்டத்தில் தனக்கு நிகராக எதிரில் அமர்ந்து, தன்னால் தாழ்த்தப்பட்டவர்களாக கருதப்படுவோரைத் தலைமை தாங்கி நடத்துகிறார் என்பதற்காக கொல்லப்பட்டவர்தான்... தியாகி இம்மானுவேல் சேகரன் ஊர் ஊராகச் சென்று தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு தன் 34-ஆவது வயதிலேயே தான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காகவே தியாக மரணத்தைச் சந்தித்த பெருமை இ...

செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்!

இன்றொரு வரலாற்றுக் குறிப்புநாள். 'பெரியார்' படத்தில் பெரியாரின் மீது செருப்பு வீசப்படும் காட்சி அனைவருக்கும் நினைவிருக்கும். திரையரங்கில் பெரும் கைதட்டல்களை அள்ளிய காட்சிகளில் அதுவும் ஒன்று. திரைப்படத்திற்கான கால சமரசம் உள்ளிட்ட பிற காரணங்களுக்காக அந்தக் காட்சியில் சில மாற்றங்கள் உண்டு. உண்மையில் நடந்த நிகழ்வு இன்னும் சுவாரஸ்யமானது. ஆண்டு-1944: கடலூர் மாவட்டம் உள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் 'தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு' நடைபெற்றது. கடும் மழையிலும் தந்தை பெரியார் எழுச்சியுரையாற்றுகிறார். கூட்டம் முடிந்து பெரியார், தொண்டர்கள் புடைசூழ கைவண்டி ரிக்சாவில் வைத்து திருப்பாதிரிப்புலியூர் தொடர்வண்டி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். பெரியாரும் தோழர்களும் கடிலம் நதி பாலத்தைக் கடக்கும்போது எங்கும் இருட்டு சூழ்ந்திருக்கிறது. அப்போது பெரியாரின் மீது பாப்பு வீசப்படுகிறது. தோழர்கள் பாம்பு, பாம்பு எனக் குரல்கொடுக்க, பின்னர் அது தண்ணீர் பாம்பு என்பதால் தொடர்ந்து பாலத்தைக் கடந்துவிட்டனர். சிறிது தூரம் சென்றபின், பெரியார் வண்டியைத் திருப்பச் சொல்லியிருக்கிறார். வந்த திசையி...