முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஈழத் தமிழர்களுக்காக கலைஞர் உண்ணாவிரதம்!

ஈழ்த்தமிழர்களுக்காக கலைஞர் உண்ணாவிரதம் தொடங்கினார். இன்று காலை அண்ணா நினைவிடத்தில் தனது உண்ணாவிரதத்தை தொடங்கினார். தமிழர்தலைவர் கி.வீரமணி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அண்ணா நினைவிடத்துக்கு விரைந்தனர். இதையொட்டி தி.மு.க.வினர் தமிழகம் முழுக்க உண்ணாவிரதம் தொடங்கியுள்ளனர். நாளை சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தத இழுத்து மூடும் போராட்டத்தை திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அமைப்புகள் நாளை நடத்தும் எனெ கி.வீரமணி அறிவித்துள்ளார்.

வள்ளல் அழகப்பருக்கு நூற்றாண்டு விழா

"கோடி கொடுத்த கொடைஞன் குடியிருந்த வீடும் கொடுத்த விழுத்தெய்வம் தேடியும் அள்ளிக் கொடுத்த அழகன் அறிவூட்டும் வெள்ளி விளக்கே விளக்கு!" என்று பாடப் பெற்ற வள்ளல் அழகப்பரின் நூற்றாண்டு விழா இவ்வாண்டு! காரைக்குடி இன்று பெற்றிருக்கும் அத்துணை வளர்ச்சிக்கும் வள்ளல் அழகப்பர் தான் காரணம் என்றால் அது மிகையில்லை. காரைக்குடியை கல்விக் குடியாக மாற்றியதோடு, மத்திய மின் வேதியியல் ஆய்வகம் உருவாகவும் காரணமாக இருந்தவர் அழகப்பர். அடிப்படைக் கல்வி முதல், ஆராய்ச்சிக் கல்வி வரை படித்து முடிக்கும் பெருவாய்ப்பு காரைக்குடி மண்ணில் உருவாகிட முழு முதற் காரணமான வள்ளல் அழகப்பரின் நூற்றாண்டு விழா நன்றியுடையோர் எல்லோராலும் நினைவோடு காரைக்குடியில் கொண்டாடப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, சென்னையில் வசிக்கும் அழகப்பா கல்வி நிறுவன முன்னாள், இந்நாள் மாணவர்கள் மற்றும் காரைக்குடியின் வளர்ச்சியினால் பயனடைந்தோர் சார்பில், அண்ணா பல்கலைக் கழகத்தில் அமைந்துள்ள வள்ளல் அழகப்பர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய ஏற்பாடாகியுள்ளது. வரும் 05.04.09 ஞாயிறு காலை 10 மணிக்கு வள்ளல் அழகப்பரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்படவுள்ளது. அ