முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சாமியார் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

"தீராத விளையாட்டுப் பிள்ளை" Part -1

"எ ன்னத்த சொல்றது? கலி முத்திடுத்து... பாருங்கோ இந்தப் புள்ளாண்டானை எல்லாரும் என்னமா நம்பிண்டிருந்தா.... இப்போ என்னடான்னா... இப்படி நடந்திண்டிருக்கானே.. ஹிந்து மதத்துக்கே அவமானம். நம்ம மதத்தையே அசிங்கப்படுத்துற இந்த மாதிரி ஆசாமிகளையெல்லாம் என்ன பண்றதுன்னே தெரியலை... ஈஸ்வரா?" என்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை நோக்கி தொழுகிறார்களாம். அருணாசலேஸ்வரப் பெருமானின் அருள்பார்வை விழும் திருவண்ணாமலையில் தானே இத்தனையும் நடந்திருக்கிறது. அதைக் கண்டு கொள்ளாதவனிடம் இதைக் கேட்கலாமா? அதெப்படி அவர் கண்டு கொள்வார்? அங்கே நடந்தது சிவலிங்க பூஜைதானே! இதுவாவது அருணாசலேஸ்வரரின் பேரில் அவரது ஊர்க்காரரால் நடந்தது. கண்டுகொள்ள முடியாமல் போய்விட்டது என்று சொல்லலாம். இன்னொரு ஈஸ்வரரான மச்சேஸ்வரரின் சன்னதியிலேயே தேவநாத லீலைகள் நடந்தபோதும் அல்லவா அவர் கண்டுகொள்ளாமல் இருந்தார். பிறகு அவரிடம் முறையிட்டு என்ன பயன்? இங்கேயெல்லாம் கடவுளின் கண்கள் வேலை செய்தனவோ இல்லையோ, கேமராவின் கண்கள் ஒழுங்காக வேலை செய்திருக்கின்றன என்பதை நம்மால் தெளிவாகப் (:P) பார்க்க முடிகிறது. எல்லா படங்களையும் இவர்களே வாங்கி விநியோகிக்கிறார...

கர்நாடகத்தில் கவுந்த க....மலம்!

தமிழ்நாட்டில் கணக்குத் திறந்துவிடடோம் என்று மகிழ்ந்து திராவிடக் கட்சிகளின் தோளில் ஏறி சவாரி செய்துவந்த பதவிப் பசிக்கு இரையான பா.ஜ.க, இரண்டு கட்சிகளும் தூக்கி எறிந்தவுடன் காணாமல் போனதுபோல் தான் நடந்திருக்கிறது கர்நாடகத்தில்! 13 நாள் இந்தியாவை ஆண்டு சாதனை செய்த பா.ஜ.க. தனது சாதனையை தானே முறியடித்துக் கொண்டுள்ளது. எட்டு நாளில் கவிழ்ந்து விட்டார் எடியூரப்பா! எப்படியாவது ஆட்சிக் கட்டிலில் ஏறிவிடமாட்டோமா என்ற ஏக்கத்தில் ஆரம்பம் முதலே இந்த வெட்கங்கெட்ட கூத்துகளை நடத்தி வந்தது பா.ஜ.க.. இதில் முதல்முறையாக தென்னகத்தில் ஆட்சியைப் பிடித்துவிட்டோம் என்ற பூரிப்பில் அத்துவானி முதல் அத்தனைப் பேரும் ஆஜராகி ஆசிவேறு. வாழும் கலையை சொல்லித்தரும் (சாமியார்) ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் என்பவரிடம் ஆசி பெற்று பதவியேற்றவர் வாழ்வை வெறுத்துவிடுவார் போலிருக்கிறது!! முதலில் ஆதரவு மறுத்து, வெறுத்து... அப்புறம் துரத்தி.... மீண்டும் ஆதரவு தந்து... பிறகு நிபந்தனைகள்... ஏற்கனவே தேசிய அரசியலில் நுழைந்து பிரதமராகி, பின்பு மீண்டும் முதல்வர் பதவிக்குத் தயாரன தந்தையைப் போலவே, முதல்வர் பதவி வகித்து ஆண்டுவிட்டு, அடுத்த சில நாட்களில் து...

தீபாவளி வாழ்த்துகள்!

பெரியாரிடமிருந்துதான்... காரணமில்லாமலில்லை. தீபாவளி என்று சொல்லப்படும் பண்டிகையின் தத்துவம் என்று சொல்லப்படுவது என்ன? தீமை செய்தவருக்கு தண்டனை கிடைத்த நாளே தீபாவளி! அப்படியெனில் இன்று நான் தீபாவளி வாழ்த்து சொல்வது சரியானது தான். இந்திய அரசாங்கமே தண்டத்தில் தொங்கும் கோவணத் துணியில் தான் முடிச்சிடப்பட்டிருக்கிறது என்ற மமதையில் திரிந்த ஒரு கொலைகாரன் சரியாக மூன்றாண்டுகளுக்கு முன் இதே நவம்பர் 11-ஆம் தேதி இரவில்தான் கைது செய்யப்பட்டான். தண்டத்தை தூக்கிப்போட்டுவிட்டு நேபாளப் பெண்ணோடு ஓடியவனைத் தேடிக் கண்டுபிடிக்க அன்றைய குடியரசுத்தலைவராக இருந்த வெட்கங்கெட்டவனின் மனைவி தலைமையில் அமைக்கப்பட்டது குழு. அக்குழு விளக்குப் பிடித்தபடி தேடி தலைக்காவிரியில் போய் சல்லாபம் செய்து கொண்டிருந்தவனைப் பிடித்து வந்தது. 'கோவணம் காயவைக்கும் தண்டத்தை விட்டுவிட்டு வந்துவிட்டீர்களே!' என்று கேட்டதற்கு, "தண்டத்தின் சக்தியை என்னுடலில் ஏற்றிக் கொண்டேன்" என்றது நடுவால். இதனால் ஆதிசங்கரன் அமைத்த நான்கு பீடங்கள் தவிர, ஐந்தாவதாக உருவாக்கப்பட்ட டூப்ளிகேட் மடத்தின் பெரிய வால் அதிர்ச்சிக்குள்ளானது. அதற்கிடைய...

சீசன் பிசினசில் ஏசு பெருமான்!

தீபாவளிக்கு வெடிக்கடை, பொங்கலுக்கு கரும்புக் கடை, வெயிலுக்கு இளநீர்க்கடை என்று சீசனுக்கு சீசன் தொழில் மாற்றுபவர்களைப் பார்த்திருப்போம். அதேபோல, எப்போதும் E.N.T. Specialist (காது, மூக்கு, தொண்டை நிபுணர்) மாதிரி செவிடர் காது கேட்க வைக்கும், குருடர் கண் பார்க்க வைக்கும், முடவர் கால்களை இயங்க வைக்கும் சர்வ வல்லமை படைத்த எல்லாம் வல்லவராகிய 'ஏசு'வும், அவரை சந்தைப்பபடுத்தும் சீடர்களும் சீசன் பிஸினசில் இறங்கியிருக்கிறார்கள். இது தேர்வுக் காலமல்லவா? அதனால் பள்ளிகளின் தேர்வு எண்ணிகைய உயர்த்த ஜெபக்கூட்டங்களை நடத்தி வருகிறார்களாம் தினகரன், பால் தினகரன் குடும்பத்தினர். ஒட்டுமொத்தமாய் 100% தமிழகத்தில் தேர்ச்சி விகிதம் கிடைக்கட்டும் நாமும் நம்புவோம். மானவர், மாணவியர் படித்து நல்ல மதிப்பெண் எடுத்தால், திறமையைத் திருடி பலன் அனுபவிக்க இவர்கள் தயாராக இருக்கிறார்கள். சரி! சரி! பிசினஸ்-னு இறங்கியாச்சு! அப்புறம் எதையும் விட்டு வைக்கக் கூடாது! இது கிரிக்கெட் சீசன் ... வாங்க பால் தினகரன் தலைமையில் ஜெபம் பண்ணுவோம்! (எல்லோரும் கண்களை மூடிக்கொண்டு ' தினகரன் & கோ போல் நடியுங்கள்... சாரி... ஜெபம்...

சாய்பாபாவும், வயதான ஹீரோக்களும்

ஏற்கனவே பார்த்த பதிவுகளில் உள்ள படங்களில் சாய்பாபா சிக்கியதைப் போல இப்போதும் சிக்குவார் என எதிர்பார்த்து நம்முடைய நண்பர்கள் யாரும் சாகச வேலைகளில் இறங்க முடியாது. பாபா சுதாரித்துக் கொண்டார். வருவோர், போவோர் எல்லாம் கையடக்க கேமரா வைத்துக் கொண்டு கண்ட கண்ட ஆங்கிள்களில் படமெடுத்து தனது 'கையடக்க' சித்து விளையாட்டுக்களை அம்பலப்படுத்த ஆரம்பித்தால் என்னாவது. சினிமாவின் நுணுக்கம் தெரிந்த நமது ஹீரோக்கள் தான் எந்த ஆங்கிளில் தன்னை எடுக்கக் கூடாது என்று முன்கூட்டியே தெளிவாக சொல்லிவிடுவார்கள். எடுத்துக்காட்டாக , லோ ஆங்கிளில் இருந்து எடுத்தால், தாடையின் கீழ் சதை தொங்குவது துண்டாக தெரியும். அதனால் ஆரம்ப காலங்களில் வில்லனுடன் சண்டையிடும் காட்சிகளிலும், அறிவுரை வசனங்கள் பேசும்போதும் விரும்பிக்கேட்ட லோஆங்கிளை, வயதான பின்னாளில் அவர்களே வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள். இது நிற்க.... லோ ஆங்கிள் என்பது எடுக்கப்படும் பிம்பத்தை உயர்த்திக்காட்டப் பயன்படும் ஆங்கிளாகும். இதனால் அவ்வளவு பெரிய திரையில் நடிகரின் பிம்பம் தெரியும் போது, அதைப் பார்க்கும் நமக்கு, அவர் மிகப் பெரியவர், பலம் வாய்ந்தவர் என்ற உள்ளுண...

“மர்ம சாமியார் சாயிபாபா”

பி.பி.சி.யில் பரபரப்பாகப் பார்க்கப்படும் “மர்ம சாமியார் சாயிபாபா” யோகிகள், குருக்கள் என்று கருதப்படும் சாமியார்கள் புனிதமானவர் களாகக் கருதப்படுவது இந்தியாவின் பாரம்பரியமாகும். ஏறுக்குறைய 3 கோடி பக்தர்களைக் கொண்ட சத்ய சாயி பாபாதான் இத்தியாவிலேயே மிகப்பெரிய ஆன்மீகத் தலைவராகக் கருதப்படுகிறார். தென்னிந்தியாவில் பெங்களூர் நகரின் அருகே உள்ள புட்டபர்த்தியை அவர் தன் இருப்பிடமாகக் கொண்டுள் ளார். அவரது ஆரஞ்சு வண்ண உடையும், அடர்ந்த தலை முடியும் அவரைத் தனித்து அடையாளம் காட்டுபவை. மனிதப் பிறவியான இவர் தன்னையே கடவுளாக, கடவுளின் அவதாரமாக அறிவித்துக் கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார். இந்தியாவில்; இருந்து மட்டுமல்ல உலகின் 165 நாடுகளில் தனக்கு பக்தர்கள் உள்ளனர் என்று அவர் பெருமையுடன் கூறிக் கொள்கிறார். ஆனால் பி.பி.சியின் உலகக் குழு ஒன்று இந்தியாவில் இருந்து கலிபோர்னி யாவுக்குப் பயணம் செய்தபோது, தங்களின் வாழ்வையே பாபா கெடுத்து விட்டதாக அவரின் முன்னாள் பக்தர்கள் பலர் தெரிவித்தனர். பாபா தன்னைப் பாலியல் ரீதியில் பயன்படுத்திக் கொண்டதாகக் கூறும் முன்னாள் பக்தர் அலயா கூறினார்: “நான் கூறுவதைப் போல நீ ச...

இப்படித்தான் அம்பலமானார் சாய்பாபா

இது ஒரு தபா! படவிளக்கம்: 1. முதலில் தண்ணீர் குடிப்பது போல பாவனை 2.லிங்கம் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கைக்குட்டையை கையிலெடுக்கிறார். 3. வாயைத் துடைப்பது போல் பாவனை 4. அப்படியே லிங்கத்தை வாயினுள் திணிக்கிறார். கவனிக்க: இடதுகை விரல்கள் 5. வாய்க்குள் லிங்கம் சென்றதும் முகத்தைத் துடைப்பது போல் ஒரு நடிப்பு. 6. மீண்டும் தண்ணீர் நடிப்பு (5,6,7-படங்களில் கவனியுங்கள் உதவியாளரின் பரபரப்பு.) 7. வாந்தி எடுப்பது போல் நடிப்பு 8, 9 வாயில் வைத்திருந்த லிங்கம் வெளியே வருகிறது. துரைமுருகனுக்கு மோதிரம் கொடுத்தது தொடர்பான பதிவை இங்கே படிக்கலாம்.

இணையத்தில் அம்பலமான சாய்பாபா

இது சில ஆண்டுகளுக்கு முன்பு நான் படித்த கட்டுரை, அதை பிய்த்து பிய்த்து உங்களுக்குத் தருகிறேன். இணையத்தில் அம்பலமான சாய்பாபா கடவுள் அவதாரம் எனக்கூறிக் கொள் ளும் சாயிபாபாவை பல ஆண்டுகளாக திராவிடர் கழகம் அம்பலப்படுத்தி வருவது தமிழ்நாட்டுக்குப் புதிதல்ல. தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பல முறை சாயிபாபாவின் மோசடிகளை தோலுரித்துக் காட்டியுள்ளார். பாபா செய்யும் மேஜிக்கு களை தி.க. பிரச்சாரகர்கள் மக்கள் மத்தியில் தொடர்ந்து செய்து காட்டி வருகின்றனர். நாம் இப்படிப் பகுத்தறிவு பரப்புரைகளை செய்து வரும் நிலையில் சாயிபாபாவின் முன்னாள் சீடர்கள் இணைய தளத்தில் இந்த வேலையை செய்து அசத்தியுள்ளனர். முன்பு ஒரு முறை ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு சாயிபாபா முன்னாள் சீடர் மலேசியாவைச் சேர்ந்த ஹரிராம் ஜெயராம் என்பவர் சாயிபாபா வின் மோசடி குறித்து தனது கருத்தை கடிதம் வழி எழுதியிருந்தது இங்கு நினைவு கூறத் தக்கது. இப்போது இவரைப் போன்றே சில சீடர்கள் இந்த மோசடிகளை அம்பலப்படுத்த தனி இணைய தளத்தையே துவக்கியுள்ளனர். www.exbaba.com என்ற இணைய தளம் பாபாவை அக்குவேறு ஆணிவேறாக புட்டுப் புட்டு வைத்திருக்கிறது. அதிலுள்ள படங்க ளையே...

சாய்பாபா மேஜிக் ஷோ! டிக்கெட் ரெண்டு ரூபாய்

தெலுங்கு கங்கை திட்டத்திற்காக 200 கோடி வழங்கிய சாமியார் சாய்பாபாவுக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் "ஆன்மீக சக்தியால் மொதிரம் வரவழைத்து கொடுத்தார் பாபா" என்று பெருமிதம் கொண்டாராம். செய்தி வெளியிட்டிருக்கிறது 'தினமலர்'. அதே கூட்டத்தில் (21.1.2007 காலை நிகழ்ச்சியில்) மத்திய அமைச்சர் மாண்புமிகு தயாநிதி மாறன் பேசும் போது, "அருள்மிகு பாபா முதலமைச்சர் வீட்டிற்கு வந்தபோது, எனக்கு மோதிரம் வரவழைத்துக் கொடுத்தார். அப்போது அவருக்கு மோதிரம் கொடுத்துவிட்டீர்கள், எனக்கும் ஒரு மோதிரம் தாருங்கள் என்று அமைச்சர் துரைமுருகன் கேட்டார். உடனே அவருக்கும் மோதிரம் வரவழைத்துக் கொடுத்தார். எங்களுக்குக் கொடுத்து விட்டீர்கள்; கலைஞருக்குக் கொடுங்கள் என்று (துரைமுருகன்) கேட்டபோது, அவருக்கு என் மனதையே தருகிறேன் என்றார். அவர் மனதில் நானும், என் மனதில் அவரும் இருக்கிறார் என்று பாபா தெரிவித்தார்.’’ (`தினத்தந்தி’, 22.1.2007) என்று கூறியுள்ளார். ஆகா! அற்புதம்...அற்புதம்....மோதிரம் ஸ்டாக் தீர்ந்து போச்சுங்கிறதை எவ்வளவு அழகா சமாளிச்சிருக்கிறாரு பாபா! இல்லாட...