முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

June, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அது ஒரு மழைநாள்!

அது ஒரு மழைநாள்! பள்ளி விரைவாக மூடப்பட்டுவிட்டது. நான் ஆறாம் வகுப்பில் எஸ்.எம்.எஸ். பள்ளியில் சேர்ந்து சில மாதங்கள் தான் ஆகியிருக்கும். பள்ளி விரைவாக விட்டாலே எழும் குதூகலம் - மழையைத் தாண்டி எங்களை மகிழ்ச்சியில் நனைத்திருக்கிறது.

எப்போதும் பள்ளிவிடும் நேரத்திற்கு வந்து அழைத்துச் செல்ல வரும் அய்யாவுக்கு (அப்பாவுக்கு Samy Samatharmam) சீக்கிரம் பள்ளி மூடப்பட்ட தகவல் தெரியாதே என்று எனக்கொரு சந்தேகம். அப்போது நாங்கள் இருந்த திருவள்ளுவர் திருநகர், சர்ச் 5-ஆம் தெருவிலேயே ’நரம்பி’ என்று எங்களால் செல்லமாக அழைக்கப்படும் நாராயணன் என் வகுப்பிலேயே என்பவனும் படித்துவந்தான். இன்னொரு வகுப்புத் தோழன் வேலுச்சாமியுன் உடன் சேர மழைவிட்டு தூறிக் கொண்டிருந்த சாலையில் நடக்கத் தொடங்கிவிட்டோம்.

நடக்கத் தொடங்கியதற்கு இவ்வளவு பில்ட் அப்பா? என்று கேட்கத் தோன்றலாம். காரணம் உண்டு. பள்ளிக்கோ எங்குமோ நடந்து சென்று பழக்கமில்லாத ஆள் நான். எத்தனைப் பணி இருந்தாலும், சரியான நேரத்திற்கு எங்களை அய்யா வந்து அழைத்துச் செல்லாத நாளே இல்லை. எங்கள் அய்யாவின் வண்டிச் சத்தம் கேட்டாலே என்னுடன் படிக்கும் மாணவர்கள் கூட பள்ளி முடியப்போக…

சமா @ 70

எம் பாதை...  எம் பயணம்...  அத்தனையும்  நீ விட்ட வழி!
எம் பார்வை... எம் நோக்கு... அத்தனையும்  நீ தந்த விழி!
எம் வாழ்வின் பக்கங்களை நாங்களே செதுக்க... உளி செய்து தந்தது நீ!
எமைத் தூக்கிச் சீராட்டி நீ ரசித்ததைப் போல, உன் பார்வை முதல் பல்லால் மேலுதடு கடிக்கும் உன் பழக்கம் வரை  ரசித்தபடியே வளர்ந்தோம்!
உலகை ரசிக்க நீதான் கற்றுத் தந்தாய்! உலகை ரசித்துக் கொண்டுமட்டும்  இராதே என்று நீயே சொன்னாய்!
கண்டதையும் படிக்காதே என்று கண்டித்தாய்! கடல்புறா படித்த போது சாண்டில்யனிடம்  வர்ணனைகள் அதிகம் என்று சலித்துக் கொள்வதுபோல் பெய்து கொண்டிருந்த மழையை  வாசலில் நின்று ரசித்தபடி நான் வாசிப்பதை  அங்கீகரித்தாய்!
அதே மழையில்...  கண்மாய் மீன்கள்  எதிர்த்து வரும்  என்று குடையில்  மீன்பிடிக்கக்  கற்றுக் கொடுத்தாய்! பிடித்த மீன்களை ’பாவம்...’ என்று மீண்டும் தண்ணீரில் விட்டு பின்... மழையில்  ஏன் நனைந்தாய் என்று நீயே வந்து மருந்து கொடுத்தாய்!
கிறுக்கன் மாதிரி பாடிக் கொண்டே இருக்காதே என்பாய்! பாடலை ரசித்துப் பாட எங்களுக்குத் தெரியாமல் பாடமெடுப்பாய்!
முரண்பாடாய் சிலருக்குத் தெரிவாய் நீ! எமக்கும் கூட சில நேரம்...! உற்…