முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

September, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விளையாட்டிலும் ஜாதி என்று பேசாதீங்க..

”விளையாட்டிலும் ஜாதி என்று பேசாதீங்க..”
”விட்டால் விளையாட்டிலும்
இட ஒதுக்கீடெல்லாம் கேட்பீங்க போல...”
என்றெல்லாம் பேசும் அரைகுறைகளுக்கு,
அதாவது ‘ஹிந்தியர்’களுக்கு
இப்படம் சமர்ப்பணம்!

“விளையாட்டில் ஜாதி பார்க்காதே”
என்று ஜாதி பார்ப்பவனிடம் போய்ச் சொல்!
ஜாதிப் பாகுபாடு இருக்கிறது என்று
எடுத்துச் சொல்பவனிடம் வாய்ஜம்பம் காட்டாதே!

திறமை உள்ளவன் எல்லாம்
தெருவில் கிடக்கையில்
தகுதி திறமை எல்லாம்
பூணூல் கயிற்றில் ஆடுகிறது என்று சொல்லும்
கூட்டத்தில் போய்ச் சொல்...
“ஜாதி பார்க்காதே” என்று!


ஏர் பிடிக்காத எம்.எஸ்.சுவாமிநாதனை
வேளாண் விஞ்ஞானி என்று சொல்லி
நிலத்தைப் பாழ்படுத்திய
பார்ப்பனக் கூட்டத்திடம் போய்ச் சொல்...
“ஜாதி பார்க்காதே” என்று!

கிரிக்கெட்டில் இத்தனை சதவிகிதம்
எஸ்.சி/ எஸ்.டி...
இத்தனை சதவிகிதம்
ஓ.பி.சி...
இத்தனை சதவிகிதம்
சிறுபான்மையினர்
என்று
இல்லாத இடஒதுக்கீட்டை
இருப்பதாய்க் காட்டி
கிண்டல் செய்யும்
வட இந்திய மின்னஞ்சலைப்
நண்பர்களுக்குப் பரப்பும் முன்
நிரம்பி இருக்கும்
பார்ப்பன கிரிக்கெட்டர்களைக்
கணக்கெடுத்துவிட்டுச் சொல்
“ஜாதி பார்க்காதே” என்று!

(மணிவர்மாவின் கீழ்க்காணும் புகைப்படக் க…