கவிப்பேரரசு வைரமுத்துவின் 'பெய்யெனப் பெய்யும் மழை' தொகுப்பில் தோழிமார் கதை என்றொரு கவிதை உண்டு.
"ஆத்தோரம் பூத்தமரம்
ஆனை அடங்கும்மரம்
கெளையெல்லாம் கூடுகட்டிக்
கிளியடையும் புங்கமரம்
புங்க மரத்தடியில்
பூ விழுந்த மணல் வெளியில்
பேன் பார்த்த சிறுவயசு
பெண்ணே நெனவிருக்கா?"
என்று தொடங்கும்.
காட்சியாய் விரியும் விவரணைகள். கனியினும் இனிதான வைரமுத்துவின் குரல்.
கள்ளிக்காட்டு கன்னிகளின் நட்பை எத்தனை ஆழமாய் விவரித்திருக்கிறார் கவிஞர்? வைரமுத்து பெண் பெயரோ? என ஒரு கணம் திகைக்க வைக்கிறது கவிதை.
முன்பே ஒருமுறை சக பதிவர் பிரேம்குமார் இந்தக் கவிதையைப் பதிவிட்டிருக்கிறார். அதில் விடுபட்ட வரிகளை என் நினைவிலிருந்து நான் சேர்த்திருக்கிறேன் -பின்னூடத்தில்...
எண்ணற்ற கவிஞர்களைப் பார்க்கிறோம்.கவிதைகளை வாசிக்கக் கேட்கிறோம். இரண்டிரண்டு முறை படிக்கப்படும் கவியரங்கங்களின் வாசிப்பை லொள்ளு சபாவில் கிண்டல் செய்கிறோம். ஏனெனில் கவிதைகளை படைக்கத் தெரிந்த அளவுக்கு உணர்வோடு அதைப் படித்துக் காட்டத் தெரிந்த கவிஞர்கள் குறைவு என்றே தோன்றுகிறது. ஆனால் கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைகளை அவர் படிக்கும் விதமே அலாதியானது.
எனக்கு மிகவும் பிடித்தவற்றை உங்களோடு பகிர விரும்புகிறேன்.
கல்லை உருக்கும் அந்த 'தோழிமார்கதை'யை கவிஞரின் குரலில் கேளுங்கள்.
இன்னும்...
1. "இந்தப்பூக்கள் விற்பனைக்கல்ல" தொகுப்பில் இருந்து 'எப்போதோ பெய்த மழை'
2. "கொடிமரத்தின் வேர்கள்"

Vairamuthu-Thozhi ... |
இன்னும்...
1. "இந்தப்பூக்கள் விற்பனைக்கல்ல" தொகுப்பில் இருந்து 'எப்போதோ பெய்த மழை'
|
2. "கொடிமரத்தின் வேர்கள்"
Vairamuthu-Sontha ... |
கருத்துகள்