முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

October, 2007 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

துரோகத்தின் நூற்றாண்டும், தியாகத்தின் பொன்விழாவும்!

செப்டம்பர் 11:இந்த நாள் பலருக்கு பயங்கரவாதிகளால் அமெரிக்க இரட்டைக் கோபுரம் இடிக்கப்பட்ட நாளாக நினைவிருக்கும்.

இன்னும் சிலருக்கு அமெரிக்கப் பயங்கரவாதத்தால் சிலி அதிபர் அலண்டே படுகொலை செய்யப்பட்டது நினைவு வரும். ஆனால் நம் நாட்டில், அதுவும் தமிழகத்தில் நடந்த ஒரு படுகொலையும், அதனைத் தொடர்ந்த கலவரமும் நம்மில் பலருக்கு தெரிந்திருக்குமா என்று சொல்லமுடியவில்லை.
தனக்கு நிகராக எதிரில் அமர்ந்து, தன்னால் தாழ்த்தப்பட்டவர்களாக கருதப்படுவோரைத் தலைமை தாங்கி நடத்துகிறார் என்பதற்காக ஒருவர் கொல்லப் படக் கூடுமா?கூடும் என்கிறது தமிழக வரலாறு... 1957 பொதுத் தேர்தாலையும், இடைத்தேர்தலையும் ஒட்டி, முதுகுளத்தூர் பகுதிகளில் எழுந்த கொந்தளிப்புகளை அடக்க மாவட்ட ஆட்சித் தலைவர் கூட்டிய அமைதிக்கூட்டத்தில் தனக்கு நிகராக எதிரில் அமர்ந்து, தன்னால் தாழ்த்தப்பட்டவர்களாக கருதப்படுவோரைத் தலைமை தாங்கி நடத்துகிறார் என்பதற்காக கொல்லப்பட்டவர்தான்...தியாகி இம்மானுவேல் சேகரன்ஊர் ஊராகச் சென்று தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு தன் 34-ஆவது வயதிலேயே தான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காகவே தியாக மரணத்தைச் சந்தித்த பெருமை இவருக்கு உ…

இந்தியில் வருகிறார் 'பெரியார்'!

பெரியார் திரைப்படத்தின் இந்திப் பதிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது. மொழி மாற்றம் செய்யப்பட்டு தணிக்கை செய்யப்பட்டு வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறார் இந்திப் 'பெரியார்'. வடபுலத்துத் தலைவர்கள் பார்ப்பதற்கு விரைவில் சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்யப்படவிருக்கிறது. உத்திரப் பிரதேச முதல்வர் மாயாவதி விரைவில் பெரியார் படத்தைப் பார்க்கவுள்ளார். இந்தியாவெங்கும் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் வழிகாட்டியாக பெரியார் இன்னும் செல்லவிருக்கிறார் வெகுதூரம்.

தொடர்ந்து பெரியார் டி.வி.டி. இங்கிலீஷ் மற்றும் பிரெஞ்சு மொழிகளின் துணைத் தலைப்புடன் (subtitle) வரவிருக்கிறது.
'பெரியார்' திரைப்படம் இந்தியன் பனரோமா பிரிவில் இடம் பெற்றிருப்பதையொட்டி இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இனமுரசு சத்யராஜ், இயக்குநர் ஞான ராஜசேகரன் ஆகியோரோடு கலந்துகொண்டபோது தமிழர் தலைவர் கி.வீரமணி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

முதல் பிறந்தநாள் வாழ்த்து!

இணை(ய) தளம்
ஆறாம் வகுப்பில் சென்று
அமர்ந்த நாள்முதல் எனக்கு நண்பன் அவன்...
எவ்வளவுக்கு எவ்வளவு நண்பனோ, அவ்வளவுக்கு அவ்வளவு போட்டியாளன்...
முதலிடத்திற்கான போட்டியில் முட்டிக் கொண்டபடியே பத்தாம் வகுப்பு முடிந்து பிரிந்தபோதும்... ஆட்டோகிராப் அவசியமில்லை என எங்கள் நட்பைப் புகழ்ந்துகொண்ட போதும் கூட.. அவன் பிறந்தநாள் தெரியாது எனக்கு...

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் பெரிதாய்ப்படாத அந்த நாட்களில்... கேட்காமலே கடந்து வந்துவிட்டோம்!
பின்னொரு நாள்... கல்லூரியில் வெவ்வேறு துறைகளில் சந்தித்த போது... இவன் என் நண்பனென யாரோ ஒருவர் எனக்கு அறிமுகப்படுத்த நாங்கள் சிரித்த சிரிப்பில் வெட்கிப் போனான் அவன்... உள்ளூர நாங்களும்...
அன்று தொடங்கியது இரண்டாம் இன்னிங்ஸ்... இன்னும் ஆட்டம் முடியாத எங்கள் நட்புக்காலத்தில்... ஒரு முறையேனும் கேட்கத் தோன்றவில்லை எனக்கு அவன் பிறந்தநாளை... அவனுக்கு என் பிறந்தநாளை!
இருவரும் பங்கேற்கும் நண்பர்கள் பிறந்தநாளின்போதுகூட அவனிடம் கேட்க நினைப்பது அசிங்கமாகப் பட்டதெனக்கு....
அப்படியே கரைந்துபோன வருடங்களின் தொடர்ச்சியில் என் பிறந்தநாள் கேட்டு மிதந்து வந்த ஒரு மின்னஞ்சல் சொன்னது அவன் பிறந்தநாளை! இப்போது எந்தத் தயக்கமுமின்ற…

உலகத் திரைப்பட விழாவில் 'பெரியார்'!

இந்திய அரசின் திரைப்பட இயக்ககத்தின் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பெறும் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த திரைப்படங்கள் "இந்தியன் பனரோமா" எனும் பிரிவில் திரையிடப்படும். இதிலிருந்து சிறந்த திரைப்படங்கள் பின்னர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும். உலகளவில் இந்திய திரைப்படங்கள் கவனம் பெற இவ்விழா ஒரு பெரும் வாய்ப்பாகும்.
இந்தாண்டு நவம்பர் 23 முதல் டிசம்பர் 3 வரை நடைபெறும் 38-ஆவது உலகத் திரைப்பட விழாவில் இந்தியன் பனரோமா பிரிவுக்கு தமிழ் திரைப்படங்கள் இரண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

தந்தை பெரியாரின் வாழ்க்கையைப் பதிவு செய்த 'பெரியார்' திரைப்படமும், 'அம்முவாகிய நான்' திரைப்படமும் தேர்வாகியுள்ளன. பெரியாரை உலகெங்கும் இருந்து வரும் திரைப்படக் கலைஞர்களும், பத்திரிகையாளர்களும் பார்த்து பெரியாரின் பெரும் பணியைக் கண்டு வியப்புறும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்தியா கோப்பை வெல்ல 'போப்' பொட்டுனு போவனுமா?

// Year 1981 1. Prince Charles got married 2. Liverpool crowned Champions of Europe 3. Australia lost the Ashes 4. Pope Died
1 Year later 1982 Football World Cup won by Italy
1 Year later 1983 India won the world Cup!!!

Year 2005 1. Prince Charles got married 2. Liverpool crowned Champions of Europe 3. Australia lost the Ashes 4. Pope Died
1 year later 2006 Football World Cup won by Italy
1 Year later 2007 2007 Cricket World Cup: INDIA ???//
இப்படி ஒரு மின்னஞ்சல் 2007 உலகக் கோப்பையின்போது வந்ததே நினைவிருக்கா? அப்போது பிடுங்க முடியாததால் தங்கள் கணிப்பை நிலைநிறுத்த 20-20 உலகக் கோப்பையின் வெற்றியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள், அதுதான் கீழ்காணும் மின்னஞ்சல் வரிகளில் வெளிப்படுகிறது.
//Naanga ellam yaaru….. India will WIN WC in 2007-nu sonnom..Nadandichulla….. For once, this sort of prediction has been proven right – though this was intended for a different contest….!!!! //

இதுதான் ஜோசியத்தின் திறமை.. அதாவது யாருடைய வெற்றியையாவது தன்னுடையதாக்கிக் கொள்வது. நாஸ்ட்ரடாமஸ் தொடங்கி சாதாரண கிள…

பெஞ்சுகளைச் சுத்தப்படுத்துவோம் வாருங்கள்!

காப்பிக் கறை
டீக்கறைகளைவிட பெரும்
காவிக்கறை
படிந்து கிடக்கிறது
பெஞ்சுகளில்!

காலங்காலமாய் எம்மை
ஏறி மிதித்து நடந்ததில்
காலடியில் ஒட்டிய
எங்கள் ரத்தக் கறையுடன்
கருப்பு அங்கி தரித்து
கால் மேல் கால்போட்டு
கர்வமாய் அமர்ந்திருக்கின்றன
காட்டேரிகள்!

இவை
வகுப்பறைத் தவறுக்காக
ஏறி நிற்கும்
பள்ளிக் கூட
பெஞ்சுகள் அல்ல;
ஒய்யாரமாய்
ஏறி நின்றபடி
குற்றவாளிகள்
தீர்ப்புச் சொல்லும்
பெஞ்சுகள்!

கரன்சிகளின்
எடை காரணமாய்
கையிலிருந்து நழுவுகிறது
நீதியின் தராசு!

ஆணை.. ஆணை... என்று
தட்டப்படும் சுத்திகளின்கீழ்
உடைந்து நொறுங்குகின்றன
சட்டத்தின்
சமத்துவக் கூறுகள்!

மதவாத ஆணிகள்
அறையப்படுகின்றன நேரடியாக
மக்கள் முதுகில்!

சட்டங்களுக்குள்
சிறைப்படாமல்
மனுவின் நீதியிலிருந்து
புறப்படுகின்றன தீர்ப்புகள்!

அதிகாரத்தின் உச்சியில்
நுழைந்ததும்
அக்கிரகாரத்தின்
சுவீகாரப் புத்திரர்களுக்கு
புதிதாய் முளைக்கிறது
பூணூல்!

குடுமி இழந்த தலைகள்
அதிகாரத்தின்
குடுமியைத்
தன் கையில்
பெறத் துடிக்கின்றன.

இந்த மர பெஞ்சுகளின்
அதிகார வேர்கள்
'திலக் மார்க்'கிலிருந்தபடி
'சன்ஷத் பவனி'ன்
அடியைப் பெயர்க்கின்றன!

காப்பிக் கறை
டீக்கறைகளைவிட பெரும்
காவிக்கறை
படிந்து கிடக்கிறது
பெஞ்சுகளில்!

பெஞ்சுகள…

எவன் மசுர புடுங்கப் போனீங்க!

ஒரு மாநிலத்தின்
ஒரு நாள்
பொருளாதார வளர்ச்சியை
பாதிக்கிறதாம் - 'பந்த்'...
ஒப்பாரி வைக்கின்றன
உச்சநீதிமன்றமும்
உயர்ஜாதி ஊடகங்களும்!
தூங்கிக் கிடந்த
சேதுத் திட்டத்தினால்
நூறாண்டுகளாய்
எங்கள் பொருளாதாரம்
தேங்கிக் கிடந்தபோது
எங்கே போயிருந்தார்கள் இவர்கள்?

மக்களைப் பற்றிக்
கவலை கொள்வதாய்
மாய்மாலம் காட்டுவோரே!
மக்கள் நலத் திட்டத்தை
மதத்தின் பேரால்
முடக்கி தடை சொல்லும்போது
எங்கே செருகியிருந்தன
உங்களின் எழுதுகோல்கள்?

ஒரு நாள்
இயல்பு வாழ்க்கைக்கு
குந்தகம் வந்தது;
அய்யகோ பறிபோனது
அடிப்படை உரிமை என்று
அலறும் இவர்களின் கரிசனம்...
இடஒதுக்கீட்டுக்கெதிராய்
உயிர்களோடு விளையாடிய
எய்ம்ஸ் பூணூல்களின்
சண்டித்தனத்தின் போது
எங்கே போயிருந்தது?

கோடை விடுமுறையில்
உல்லாசமாய்
தூங்கப் போனதால்
தேங்கிக் கிடக்கும்
வழக்குக் கோப்புகள்
கேட்கின்றன...
நாங்கள் வெள்ளிவிழா, பொன்விழா
கொண்டாடுகையில்
நீங்கள் எங்கே போயிருந்தீர்கள்?

"தமிழக அரசுக்கெதிராய்
தயாரா 356?" என
ஆட்சியைத் துண்டிக்கத் துடிக்கும்
நீதியின் வாள்கள்;
'உச்சநீதிமன்றமா?'
ம்ஹூம்... முடியாதென
கேரள, கர்நாடாக அரசுகள்
கேளாமல் இருந்தபோது
யாருக்கு சவரம் செய்து கொண்டிருந்தன?

பெட்டிக் கடைக்கு
போக…

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா?
இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த
"சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து....

KalangaraiVilakkam...


சங்க நாதம்
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

உச்சநீதி மன்றத்திற்கு மக்கள் தந்த செருப்படி!

அரசாங்கத்தின் மூன்று கூறுகளில்(Legislature, Executive, Judiciary) தானே மேலானவன் என்று நிலைநிறுத்துவதற்கு உச்சிக் குடுமி நீதிமன்றம் தொடங்கி உள்ளூர் நீதிமன்றம் வரை முயன்று கொண்டிருக்கின்றன. நீதிமன்றத்திலிருந்தபடி நாடாள வேண்டும் என்ற எண்ணம் நீதிபதிகளுக்கு எழுந்திருக்கிறது.
தமிழகத்தின் நலனுக்கெதிரான மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து பந்த் என்று அறிவித்ததை சட்ட விரோதம் என்று தடை செய்தது உச்சநீதி மன்றம்.

அந்த அறிவிப்புதான் இன்று தமிழர்களை ஒன்றிணையச் செய்திருக்கிறது. தி.மு.க.வும் தோழமைக் கட்சிகளும் பந்த் நடத்துவதில்லை என்றறிவித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதென அறிவித்துவிட்டன.

தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்துவதாக அறிவித்து செயல்படுகிறது. கலைஞர் உண்ணாவிரதப் பந்தலில் இருந்து கிளம்பி கோட்டையில் சென்று பணியில் ஈடுபட்டுவிட்டார்.

இந்நிலையில் தமிழர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி எல்லோருக்கும் இருந்தது. தங்களுக்கு யாரோ குரல் கொடுப்பார்கள் என்று சும்மா இருந்துவிடப் போகிறார்களா? இல்லை, தங்கள் ஆதரவைக் காட்டுகிறார்களா?
ஆனால் தமிழகம் முழுக்க இன்று தங்கள் ஆதரவை தமிழக மக்கள் காட…