முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

December, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எல்லை தாண்டிய பயங்கரவாதம்!

சிப்பிகள் பொறுக்க வந்தோம்
சிதைகள் தந்தாய் - எங்கள்
கடல் தமிழர் வாழ்க்கை இன்று
புதை குழி மண்ணாய்!

கடல் நீர் நடுவே பயணம் போனால்
குடிநீர் கிடைப்பது கடினம்;
கடல்நீர் நாட்டுள் பயணம் வந்தது
வடிந்தது எங்கள் உதிரம்!

நாட்டுக்குள் பூகம்பம் வந்தது
மக்கள் கடற்கரை சென்றனர்.
கடலுக்குள் பூகம்பம் வந்தது
கடற்கரையே காணாமல் போனது!உயிரைப் பணயம் வைத்தோர்
உயிருடன் வந்தனர் - தங்கள்
உறவுகள் காவு போனதைக்
கண்டதும் வெந்தனர்!

கடல் என்னும் கந்துவட்டிக்காரன்
பணயப் பொருளை மாற்றி கைக்கொண்டான்!
தடைச் சட்டம் போட ஆளில்லை - கடல்
தடைக்கெல்லாம் தயங்குகிற ஆளில்லை!

இது
மனித குலத்தின் மீது
எல்லை தாண்டிய பயங்கரவாதம்!
இயற்கை
என்ன செய்யும் பாவம்?

ஆழ்துளை போட்டான்
அணுகுண்டு வீசினான்

கடற்கரைக் காடுகள் அழித்து
களியாட்ட விடுதிகள் கட்டினான்

நீரை உறிஞ்சினான்
நிலத்தடியில் வறட்சி..
கோலா பாட்டில் குளிர்ச்சி!

சுற்றுச்சூழலின்
சூத்திரம் மாற்றினான்..
தற்கொலைத் தூதனைத்
தானே தேடினான்!


தன்னை கவனிக்காத
மனிதனைத்
தானும் கவனிக்கவில்லை
இயற்கை!

பயங்கரவாதி இயற்கையா?
இல்லை மனிதன்!

கொலை
செய்தவனை விட
தூண்டியவனுக்கே
தண்டனை அதிகம்!
பெற்றுவிட்டோம்!

பழித்…

இலவசக் கழிவறையும், சில கழிவுகளும்

மதுரை பேருந்து நிலையம் அருகில் நவீன இலவச கழிப்பிடம் ஒன்றைக் கட்டப்பட்டிருக்கிறது! அவரைப் பாராட்டுவதை விட்டுவிட்டு அழகிரி படம் இருப்பதைப் புகைப்படம் எடுத்துக் காட்டி கிண்டல் அடிக்கிறார் ஒருவர். அங்கே ராசா படம் வைக்கவேண்டும்; பெண்கள் பகுதிக்கு கனிமொழி, நீராராடியா என்று ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறீர்கள். வேலையத்த வெட்டிகளைப் போல உங்கள் அருவெறுப்பை இங்கே வந்து காட்டுவதா?
http://www.facebook.com/photo.php?fbid=1693166976473&set=a.1134458769117.21317.1456758830&pid=1725248&id=1456758830
கோடிகோடியாய்க் கோயிலுக்குக் கொட்டி அழுபவர்களும், திருவிழா, கொண்டாட்டம் என்று பாவக் கணக்கை தீர்க்க செலவு செய்து கொண்டிருப்பவர்களும் லட்சக்கணக்கில் இருக்கின்றனர். அப்படி நடக்கும் திருவிழாக்களில் கூட முறையாகக் கழிப்பிட வசதி செய்து கொடுக்காமல், போகும் வரும் இடங்களில் எல்லாம் அசுத்தம் செய்து ஊரையே கழிவறையாக்கிவிட்டுச் செல்லும் படி திருவிழா நடத்துகிற கோயில்களையும், அதன் மூலம் கொள்ளையடிக்கிற கும்பலையும் கண்டிக்க ஒருமுறையாவது உங்களுடைய விரல்கள் கணினியைத் தொட்டிருக்குமா? சுகாதரமற்ற குளங்களினாலும், கோவிலைச் …

பாவாணர் துரோகியோ?

துரோகி முத்திரை குத்துவதற்கு இப்போது ஆதாரங்களையெல்லாம் தேடி அலைய வேண்டியதில்லை.
கலைஞரைப் பாராட்டி, வாழ்த்தி யார் பேசினாலும், அவர்களுக்கெல்லாம் ’துரோகி’ முத்திரை குத்தி குதூகலிப்பதுதான் தமிழ் தேசியத்தை வளர்க்கும் பணி என்றும், ஈழத்திற்கு செய்யும் பணி என்றும் கருதிக் கொண்டு இணையக் களங்களில் எண்ணற்றோர் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் கலைஞரை கரிகால் வளவனோடு ஒப்பிட்டு ’திராவிட ஞாயிறு’* பாவாணர் அவர்கள் பேசியிருப்பதைப் படித்ததும், அவருக்கும் துரோகி முத்திரை குத்திவிடுவார்களோ என்று பயமாய் இருக்கிறது. 
திரவிட மொழி நூல் ஞாயிறு பாவாணர் பார்வையில் கலைஞர் ”கரிகால் வளவனே திரும்ப நம் கருணாநிதியாராகப் பிறந்தானோ என்றுகூட நாம் நம்பும்படியாக இருக்கின்றது. அந்தக் கரிகால் வளவனும் காவிரி நாட்டிலேதான் பிறந்தான். இவரும் அந்த நாட்டிலேதான். அந்தப் பூம்புகாரை அவன் வளப்படுத்தினான். இவரும் இப்போது அதைப் புதுப்பித்து வருகின்றார்.... அவன் இளமையிலே பகைவராலே இடர்ப்பட்டுத் துன்பப்பட்டு அதிலிருந்து தப்பினான். அப்படியே இவரும் போன பொதுத் தேர்தலிலே (1971) எப்படியோ பகைவரிடத்தில் அகப்பட்டுத் தப்பினார்... அந்தக் காலத்தி…

என்னாச்சு பிளாக்கருக்கு? வலைப்பூ காணாமல் போச்சு :(

திடீர் திடீரென சில வலைப்பூக்கள் காணாமல் போகின்றன. என்னவென்று அந்தந்த வலைப் பதிவரைக் கேட்டபோது தான் அவரும் கவனித்தார்.

இவ்வாறு ”நீங்கள் தேடும் வலைப்பூவைக் காணவில்லை. நீங்கள் இவ்வலைப்பூவின் உரிமையாளரானால் கணக்கில் நுழைக” என்று பதில் வருகிறது. தனது கட்டுப்பாட்டகத்துக்குள் சென்று அவர் பார்த்த போது மேலும் அதிர்ச்சி. வலைப்பூ இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் காணாமல் போயிருக்கிறது. ஆனால், google தேடலில், cached இணைப்பில் முந்தைய பதிவுகள் கிடைக்கின்றன. 
சரி, இது குறித்து Blogger-க்கு தெரிவிக்கலாம் என்றால், அங்கே ஒரு வாரமாக இது குறித்து முனங்கி முறையிட்டுக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது. என்ன பிரச்சினை? என்ன செய்யலாம்? என்று  விவரம் தெரிந்தவர்கள் பாருங்கள். முடிந்தால் தமிழில் இது குறித்த விளக்கங்களைத் தாருங்கள்.
http://www.google.com/support/forum/p/blogger/label?lid=0271191b4249689a&hl=en
இது போல பதிவுகளைத் தொலைத்தவர்கள் அங்கே போய் முறையிடுங்கள். அவர்கள் தீர்வை முன்மொழியும் போது மின்னஞ்சலில் அது குறித்த தகவல் கிடைக்க வழியேற்படும். 
அப்புறம் என்னை மாதிரி பல பதிவுகள் வைத்திருப்போர், சுற்றுலாவிற்…