முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

October, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

’நறுக்கு’த் தீனி (அக்டோபர் 2012)

மினி ப்ளாக்குகள் எனப்படும் ட்விட்டரும், பேஸ்புக்கும் வந்த பிறகு, விரிவாக எழுதுவதற்கான அவசியமோ, பெரிய தயாரிப்போ இல்லாமல் கூட, உடனுக்குடன் தோன்றும் கருத்தை எழுதிவிட முடிகிறது. அதனால் வலைப்பூவில் எழுத நினைக்கும் செய்திகள் கூட அங்கேயே முடிந்துவிடுகின்றன. அல்லது சோம்பலால் முழுமையாகப் பதிவு செய்யப்படாமல் விடுபட்டுப் போகின்றன. 
எனவே அவற்றை அப்படியே இங்கு பதிவு செய்யவோ, அல்லது கொஞ்சம் விரிவாக்கி எழுதவோ வேண்டும் என்று பல காலமாக நினைத்துள்ளேன். அதற்கான பகுதிக்கு நல்ல பெயர் வைக்க வேண்டும் என்று யோசித்து, யோசித்தே தாமதித்துவிட்டேன். நல்ல பெயரோ என்னவோ- இப்ப வச்சாச்சு... தொடங்கியாச்சு...
’நறுக்கு’த் தீனி

விஜயகாந்த் கோபம்?

விஜயகாந்த் வீடியோவைப் பார்த்தேன். ‘நீ யார்’ என்று அந்த பத்திரிகையாளரைப் பார்த்துக் கேட்கிறார். அவர் எந்த பத்திரிகையிலிருந்து வருகிறார் என்று கடைசி வரை சொன்னதாகத் தெரியவில்லை. அதன் பிறகு பத்திரிகையின் / தொலைக்காட்சியின் பெயரோடு வந்து கேட்டவர்களுக்கு அவரின் பதில் ஓரளவு மரியாதையாகத் தான் இருக்கிறது. அதற்கும் பிறகு மீண்டும் அந்த நபர் வந்து வம்பிழுக்க இழுக்க வேகம் கூடுகிறது. (அவருக்கு ’ச…

தமிழன் பேர் சொல்லி மிகு தமிழரிடைத் தமிழ்நாட்டில் வாழ்ந்திட்டாலும்...

பார்ப்பனர்கள் குறித்த எச்சரிக்கையை விடுக்கும் போதெல்லாம் ’அவர்களும் தமிழர்கள் தானே! அவர்களுக்கும் மொழிப் பற்றெல்லாம் உண்டு’ என்று நம்மவர்களே திரண்டு வருவார்கள். அதிலும் அந்தப் பார்ப்பனரால் பலனோ, விளம்பரமோ கிடைக்கும் என்றால் இந்தக் குரல் இன்னும் வேகமாக எழும்புவதோடு, ”இன்னும் ஆரியர், திராவிடர், பார்ப்பனர் என்றெல்லாம் திட்டிக் கொண்டு...” என்று நம்மை ஏதோ பிற்போக்குவாதிகள் போலப் பார்ப்பார்கள். பார்ப்பதோடு மட்டுமல்லாமல், அதைப் பகரவும் செய்வார்கள். ஏனெனில் அத்தகையோருக்குத் தான் விபீஷணப் பட்டமும், பார்ப்பனர்களின் விளம்பர சடகோபமும் கிடைக்கும்.
அண்மைக் காலமாக, பனியாவின் பத்திரிகை ஒன்றில் ஆசிரியராக நுழைந்திருக்கும் பார்ப்பனர் ஒருவர் எங்கெங்கு தமிழ்ச்சங்கங்கள் இருந்தாலும், அங்கெல்லாம் விஜயம் செய்து வருகிறார். அந்த அச்சு அசல் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனரான வைத்தியநாத அய்யர்வாளுக்கு, திடீரென தமிழ்ப் பற்று பீறிட்டு அடித்துக் கொண்டிருக்கிறது. இந்தியத் தேயமெங்கும் அதைப் பாய்ச்சுவதைக் கடமையாகக் கொண்டு செயலாற்றிவருகிறார். (அழைத்தால் வெளிநாடுகளுக்கும் அவாள் வரத் தயார். ’கடல் தாண்டக் கூடாது என்பதெல்லாம் பழைய க…

இன்னும் நீக்கப்படவில்லை அம்பேத்கர் கார்ட்டூன்!

பாடப்புத்தகத்தில் அம்பேத்கர் மீதான காழ்ப்புணர்வைக் கொட்டி, எப்போதோ பத்திரிகையில் வெளியிடப்பட்ட கார்ட்டூனை மீண்டும் வெளியிட்டிருந்த போக்கு அனைவராலும் கடுமையாகக் கண்டிக்கப்பட்டது.   
இதனை அடுத்து, அந்த படம் - பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், இணையத்தில் இன்னும் அந்தப் படத்துடனே பாடம் வைக்கப்பட்டுள்ளது.

http://ncert.nic.in/NCERTS/textbook/textbook.htm?keps2=1-10
பார்க்க: பக்கம் 18


இந்த நேரத்தில் சமச்சீர் கல்வி விசயத்தில் நடந்த ஒன்று நினைவுக்கு வருகிறது. 2011-ஆம் ஆண்டு மே 22-ஆம் நாள் அதிமுக அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் சமச்சீர் கல்விப் பாடத்திட்டங்கள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அன்று ஞாயிற்றுக் கிழமை - நான் சென்னையில் இல்லை. இணைய வாய்ப்பு இல்லாத காரணத்தால் உடனடியாக அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, தமிழக அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும் சமச்சீர் கல்விப் பாடங்களைப் பதிவிறக்கம் செய்து வைக்கச் சொன்னேன். பதிவிறக்கம் செய்யப்பட்டவற்றை ஒரு தனியார் இலவச இடம் ஒன்றில் பதிவேற்றம்ச் செய்தும் வைத்துவிட்டோம்.

அன்று ஞாயிற்றுக் கிழமையாதலால், எப்பட…