முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

July, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தாத்தா ரெட்டமலை சீனிவாசன்: மீசையா, மீசையில்லாமலா?

திவான் பகதூர் தாத்தா ரெட்டமலை சீனிவாசனாரின் பிறந்தநாள் இன்று (ஜூலை 7)!
இந்நாள் நினைவுக்கு வந்ததும், உடன் நினைவுக்கு வந்த மற்றொன்று அம்பேத்கர் திரைப்படம். தமிழில் அம்பேத்கர் திரைப்படத்தைப் பார்த்தபோதிலிருந்தே இதை எழுத வேண்டும் என்றுநினைத்துக் கொண்டிருந்தேன். முதல் இரண்டு வட்ட மேசை மாநாடுகளிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக அண்ணல் அம்பேத்கருடன் பங்கேற்றவர் ராவ்பகதூர் ரெட்டமலை சீனிவாசன் (திரைபடத்தில் அப்படித்தான் குறிக்கப்பட்டிருக்கிறது). ஜாபர் பட்டேலின் ”டாக்டர்.பாபாசாகேப் அம்பேத்கர்” படத்தில் வரும் வட்ட மேசை மாநாட்டுக் காட்சியைப் பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. 

முறுக்கு மீசையுடன் நாம் பார்த்துப் பழகிய ரெட்டமலை சீனிவாசனை அங்கு காணோம். மாறாக தலையில் முண்டாசுடன் மீசையில்லாத ஒரு பார்ப்பனரைப் போலவே காட்டப்பட்டிருப்பார். ராவ்பகதூர் சீனிவாசன் என்ற பெயரைப் பார்த்ததும், ஜாபர் பட்டேலின் (சீனிவாச அய்யங்கார்கள் மாதிரி) மனதில் அப்படியோர் பிம்பம் தோன்றியிருக்குமோ என்னமோ? அம்பேத்கர் படத்தில் வரும் (https://youtu.be/hScBhoGOJZc?t=1h36m33s) இந்த இணைப்பையொட்டிய காட்சிகளைப் பாருங்கள். 

உண…