முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

May, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேடுகிறோம்... தேடுகிறோம்...

தேடலின் கதையைத் திரையில் காட்ட வாய்ப்பளிக்கின்றன Google-உம் Youtube-உம்!
இது என் தேடல் மட்டுமல்ல... ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் தேடல்!
அந்தத் தேடலின் கதை???

IC on tamils??? (International Community on Tamils???)
உங்கள் தேடலை நீங்களும் படமாக்கலாம்... இங்கே!

தினமலரின் நிர்வாணக் குதியாட்டம்!

(இந்த இடுகையை முழுதாகப் படிக்கவும், இணைக்கப்பட்டுள்ள காணொளியைக் காணவும் மேலே உள்ள தலைப்பை ஒரு முறை சொடுக்கவும்.)
"மூடநம்பிக்கைகளை நாங்கள் எதிர்க்கிறோம்." "மத நம்பிக்கைகள் என்பது வேறு; மூட நம்பிக்கைகள் என்பது வேறு" கடவுள், மத மறுப்பை, மூடநம்பிக்கைகளை தோலுரிக்கும் போது இப்படியெல்லாம் பலர் உதார் விடுவதைப் பார்த்திருப்பீர்கள்.
ஆனால், மூடநம்பிக்கைகளும் மத நம்பிக்கைகளும் வேறுவேறானவை அல்ல.. மூடநம்பிக்கைகள் தான் மதத்திற்கான வருவாய், கூட்டம் சேர்க்கும் காரணிகள் என்பது நாம் அறிந்ததே!
அதற்கான இன்னொரு சாட்சி - தினமலரின் இந்த வீடியோ செய்திக் காட்சி!
சென்னை கோட்டுர்புரத்தில் உள்ள அரசு நிறுவனமான "பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம்" * குழந்தைகளுக்கான மூன்று நாள் அறிவியல் முகாம் ஒன்றை நடத்தியிருகிறது. இதில் பல்வேறு வகுப்புகளின் ஊடாக 'இந்திய பகுத்தறிவாளர் இயக்கங்களின் கூட்டமைப்பான FIRA' -வின் செயலாளரும், நாடறிந்த மூடநம்பிக்கை எதிர்ப்பாளரும், 'மந்திரமா? தந்திரமா?' செயல் விளக்க வித்தகரும், பெங்களூருவைச் சேர்ந்த பேராசிரியருமான நரேந்திர நாயக் அவர்களின் அறிவியல் விளக…

அந்த நாள் என் நினைவில் இருக்கிறது...

அந்த நாள்
என் நினைவில் இருக்கிறது...

இன்றோ...
நாளையோ...
விடியும்
எங்கள் வாழ்வு என்று
வானோக்கியிருந்த
எங்களை
இருட்டு வந்து
சூழ்ந்த
அந்த நாள்
என் நினைவில் இருக்கிறது...

பதுங்குவது
பாய்வதற்கே என்று
போரின்
நாட்குறிப்புகளைப்
புரட்டிப் பார்த்து
நிம்மதி கொண்டிருந்த
எங்களுக்கு
நாளை குறிக்க
தாளே இல்லை என்ற
குறிப்பு வந்து சேர்ந்த
அந்த நாள்
என் நினைவில் இருக்கிறது...

'மக்களைக் காக்க
நாங்கள் இருந்த
நாள் போக...
எங்களைக் காக்க
மக்களா?
எங்கள் துவக்குகள்
மௌனிக்கும்'
என்ற குரல் கேட்ட
அந்த நாள்
என் நினைவில் இருக்கிறது...

"வெள்ளைக் கொடி
ஏந்தினாலும்
கொல்லுவோம்...
தமிழர்களை
கடைவாயில்
மெல்லுவோம்..."
-கொக்கரித்த கொடூரனின்
ரத்தம் வடிந்த
புன்னகை கண்ட
அந்த நாள்
என் நினைவில் இருக்கிறது...

தந்தையை..
தமையனை..
கணவனை...
களத்திற்குத் தந்து
தனயனை..
களத்திற்கனுப்பிய
தாய் போல்..
"எம் பிள்ளைகளை
நாட்டுக்கே கொடுத்திட்டனப்பா"
என்ற எம் தலைவனின்
பெருமிதம் கேட்ட
அந்த நாள்
என் நினைவில் இருக்கிறது...

கள நிலைக்குத்
திரையிட்டு
எம் அரிப்புக்கு
சொறிந்துவிட்ட
வாய்ப்பந்தல்
வீரர்களின்
பொய்கள் வெளித்தெரிந்த

ரத்தச் சாட்டை எடுத்தால்...

மே நாளையொட்டி பதிவிட வேண்டும் என்று நினைத்து இந்தப் பாடலைத் தேடித் தேடி பின்னர் ஒரு வழியாக cooltoad.com-இல் கண்டெடுத்தேன். பின்னர் பாடல் வரிகளை எழுதி இப்போதுதான் பதிவிட முடிகிறது. "எரிமலை எப்படிப் பொறுக்கும்?" - இந்தப் பாடலை எனக்கு அறிமுகம் செய்தவர் கவிப்பேரரசு வைரமுத்து. அட, பழக்கம் எல்லாம் கிடையாதுங்க... ஒரு முறை தொலைக்காட்சியில்(சன் ஆக இருக்கக்கூடும்) சிறப்பு நிகழ்ச்சி நடக்கும் நாள் ஒன்றில் (எந்த நாளென்று நினைவில்லை) (அப்போதைய) கவியரசு வைரமுத்து பங்கேற்கும் "பாட்டு பட்ட பாடு" என்ற அறிவிப்பு கேட்டுக் காத்திருந்து பார்த்த நிகழ்ச்சி.

சென்சார் துறையின் கத்திரிகளால் வெட்டப்பட்ட அல்லது அதற்காக மாற்றப்பட்ட பாடல்கள் பற்றிய நிகழ்ச்சி அது. அவை குறித்து விரிவான தனிப்பதிவொன்றையும் அப்பாடல்களுடனான எனது அனுபவத்தையும் எழுதலாம். எழுதுவேன். அப்படி வந்த பாடல்களின் வர்சையில் சிவப்பு மல்லி படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலையும் பற்றிக் குறிப்பிட்டார் வைரமுத்து. நான் அப்போதுதான் அந்தப் பாடலை முதல் முதலாகக் கேட்கிறேன். நெருப்புத் தெறிக்கும் அந்த வரிகளில் அப்போதே நரம்பு முறுக்கேறியது என…