முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நெருப்பாற்றை நினைவில் கொள்வோம்!

ஜீன்ஸ் அணிந்தார் என்பதற்காக பீகாரில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, நிர்வாணமாக தார்பங்காவில் உள்ள மாவட்ட மாஜிஸ்திரேட் வீட்டின் முன்பு வீசிவிட்டுச் சென்றிருக்கிறது இந்துத்துவா! இந்து மாணவ, மாணவிகளுடன் சேர்ந்து குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டதற்காக இஸ்லாமிய மாணவர் ஒருவர் கடத்தப்பட்டு அவரின் ஆணுறுப்பு சிதைக்கப்படுகிறது. கோவிந்த் பன்சாரே சுட்டுக் கொல்லப்படுகிறார். எளிய மக்களிடமிருந்து எவ்வித ஒப்புதலுமின்றி நிலத்தைப் பிடுங்கி, தனியார் கொழுக்க அவர்களுக்குத் தாரை வார்க்க ஓர் அடாவடியான அயோக்கியத்தனமான சட்டம் அவசரவசரமாக செய்யப்படுகிறது. வன்முறையும், கொடூரமும் அன்றாடச் செய்திகளாகிவிட்டன. மதவாதமும், முதலாளித்துவமும் கைகோர்த்து நாட்டை வேட்டைக்காடாக்குகின்றன. எதிர்காலம் என்று நீட்டக் கூட வாய்ப்பில்லை. எதிர்வரும் நாட்களே கேள்விக்குறிகளாயிருக்கின்றன. வேகமாய் நடக்கும் அத்தனை கொடூரங்களும், கொடுங்கோலர்களின் இறுதிநாளுக்கான முன்னறிவிப்பு என்பது மட்டும் புரிகிறது. ஆனால் அதற்குள் நாம் கடக்கவேண்டியது ஒரு நெருப்பாறு என்பதை நினைவில் கொண்டே பயணிக்க வேண்டியிருக்கிறது.