முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

April, 2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழர்கள் தூக்கிச் சுமந்த மூத்திரச் சட்டி!

ராமன், அனுமன் வேடங்களில் இருப்போர் ஒன்னுக்கு அடிப்பதைப் போன்ற திரைப்பட சுவரொட்டி பற்றிய எமது பதிவுக்கு பின்னூட்டமிட வந்த அனானி ஒருவர் பெரியார் மூத்திரம் இருப்பதைப் போன்ற படத்தை சுவரொட்டியாக அடித்து ஒட்ட விரும்பியிருக்கிறார். அவருக்கு உதவியாக இருக்கட்டுமே என்று...
___________________________________________________________________

பெரியார் ஒன்னுக்கு அடிப்பதைப் போன்ற படத்துக்காக அவ்வளவு சிரமப்படவெல்லாம் வேண்டாம். மூத்திரம் வெளியேறும் போதெல்லாம் 'அம்மா அம்மா' என்று அலறித் துடித்தபிறகும், தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு தன் மக்களுக்காக பிரச்சாரம், பயணம் என்று சுற்றிய பெரியாரையும் அவரது மூத்திரச் சட்டியையும் தூக்கிச் சுமந்தவர்கள் தமிழர்கள்!அதனால் அந்தப் படத்தை தாராளமாக தமிழகமெங்கும் போஸ்டர் அடித்து ஒட்டுங்கள்.. அப்போதுதான் இன்றைய தமிழனுக்கு பெரியாரின் பெருங்குணமும் அவரது கடும் உழைப்பும் விளங்கும்! அனானியின் இந்த முயற்சிக்கு நாம் துணை நிற்போம்! அதற்காக அந்த புகைப்படங்களை பதிவாக இடுவதில் நாம் பெருமை கொள்கிறோம்.

ஒவ்வொரு சொட்டாக மூத்திரம் இறங்கும் போதெல்லாம் வலியால் துடித்து முகம் சிவந்தபடி…

ராமனுக்கு வராதா ஒன்னுக்கு?

தென்னவன் கலைக்கூடம் சார்பில் தயாரிக்கப்படும் 'வணக்கம்மா' என்ற திரைப்படத்தின் தொடக்க விழா நேற்று சென்னை ஏ.வி.எம். அரங்கில் நடைபெறவிருந்தது. தொடக்க விழாவுக்கான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன. இந்நிலையில் சுவரொட்டி ஒட்டியவர்களைக் கைது செய்தது காவல் துறை. காரணம் இந்துமுன்னணி உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக காரணம் கூறப்பட்டது.
பிறகு தொடக்கவிழாவின் போதும் இந்து முன்னணி உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் தங்கள் காலித் தனத்தை அரங்கேற்றி உள்ளன.

என்னடா காரணம்ன்னா...."ராமனை இழிவுபடுத்திவிட்டார்கள்! எங்கள் மனம் புண்பட்டுவிட்டது" என்று தேய்ந்து போன நொந்து போன பழைய ரெக்கார்டை ஓட்டி இருக்கிறார்கள்.
சரி.. அப்படியென்ன இழிவுபடுத்திவிட்டார்கள்ள்ள்ள்-னு கூப்பாடு போடுறீங்கன்னு கேட்டா...
"ராமனும் அனுமானும் ஒன்னுக்கு போவது போல சுவரொட்டி ஒட்டப்பட்டிருக்கிறது. அது எங்கள் மனதைப் புண்படுத்திவிட்டது." அப்படின்னு நம்ம ராம கோமாளி சொல்றாரு.
புண்பட்டதெல்லாம் அப்புறம் இருக்கட்டும்... இப்படியே புண்பட்டுப் போச்சு... புண்பட்டுப் போச்சுன்னு இவங்க சொன்ன கணக்குப் படி பார்த்தா இதயம…