முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

August, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ராகு காலம் பார்த்தாரா வீரமணி?

இணைய தளத்தில் அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட சின்மயி விவகாரம் குறித்து புத்தகம் எழுதிய விமலாதித்த மாமல்லன் என்பவர், தனது வலைத்தளத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறித்து அவதூறு பரப்பியுள்ளார். அதைச் சில அறிவிலிகளும் பரப்பிக் கொண்டிருக்கின்றன.
//பெரியவர், தம் வீட்டுப் பிள்ளையின் திருமணத்துக்குப் பெண் தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில், தி.க. வீரமணி அவர்களின் பேத்தி திருமணத்துக்கு இருப்பதாகத் தெரிய வரவே அவருடன் தொடர்புகொண்டிருக்கிறார். இருவரும் பலவருடங்களாய் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள் என்பதால் மகிழ்வுடன் அளவளாவத் தொடங்கிவிட்டனர். பெண்பார்க்க வரும் நாளையும் முடிவுசெய்துகொண்டனர். அன்று மாலை ஒரு நான்கரை மணி வாக்கில் வருகிறோம் என்று கூறியிருக்கிறார் பெரியவர். நாலரை வேண்டாம் அன்றைய தினம் நாலரை ஆறு ராவுகாலம் எனவே அதற்கு அப்புறமாக வாருங்கள் என்றிருக்கிறார் திரு. தி.க.வீரமணி.//
யார் இந்தத் தகவலை திரு.விமலாதித்த மாமல்லன் அவர்களுக்குச் சொன்னவர்? அந்தப் பெரியவரேவா? இல்லை. அந்த சோ கால்ட் பெரியவரின் உறவினராம். அவர் என்ன வகை உறவினர்; எத்தனை விட்ட உறவினர் என்பதெல்லாம் தெரியவில்லை.
ச…

வாழையும் கொஞ்சம் வாழ்க்கையும்!

விவசாய விளைபொருட்களுக்குப் பெரும்பாலும் பேரம் பேசாமலும், ஏன் என்று கேட்காமலும் வாங்கி வந்துவிடுவேன். ’விலைப்பட்டியல் போட்டு விற்பவனிடம் பேரம் பேசாமல், அன்றாடம் பிழைப்பவரிடம் என்ன பேரம்?’ என்பது தான் அதற்குக் காரணம். இருந்தாலும் சில நேரம் இளநீர் விலை ரூ. 30, 35 எனும் போது கொஞ்சம் ஜெர்க் ஆகித் தான் போகிறேன். 


நேற்றும் இன்றும் வாழைப்பழம் வாங்கப் போனபோதும் இதே நிலை தான். பெரிய மேடு, சூளை பகுதிகளில் 10:30-க்குமேல் எங்கும் வாழைப்பழம் இல்லை. மசூதிக்கு எதிரில் உள்ள கடையில் 4 ரூபாய் என்றார் ஒரு பழம்! சின்னப் புள்ள விரல் தண்டி இல்ல அந்த வாழைப்பழம்.. - அது 4 ரூபாயாம்... சரி, நேரமாயிட்டதுனால அப்படியிருக்கும்னு நினைச்சேன். இன்னிக்கு வேற ஒரு கடையிலயும் அதே 4 ரூபாய் தான். ஒன்ஸ் ஏறுனா அதில இருந்து இறக்காம,  ஃபிக்ஸ் பண்ணிடுவாங்க போலிருக்கு!
ரூபாய்க்கு எத்தனை என்று கேட்கும் நிலை போய், இப்போ 10 ரூபாய்க்கு ஒன்றா இரண்டா எனக் கேட்க வேண்டியிருக்கும் போல!  ஊரில் இருக்கும் வரை எனக்கு நிரம்பப் பிடித்தது ரஸ்தாலி தான்! பூவன் பழம் சளிப் பிடிக்கும் என்று எங்க அய்யா வாங்க மாட்டார். சித்தப்பா வீட்டில் பச்சை நாடா வாங…