முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

May, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சார் பெட்ரோல் எங்க போடுறாங்க தெரியுமா?

”மணி ஏழரை ஆயிடுச்சு! எட்டு மணிக்குள்ள பில் கட்டியாகணும். இல்லைன்னா எனக்கு கால் பண்றது கஷ்டமாயிடும்” என்று அக்கா புலம்பிய காரணத்தால், கலையை இழுத்துப் போட்டுக் கொண்டு மாண்டியத் சாலையில் இருக்கும் ஒரு தனியார் செல் நிறுவன பணம் உறிஞ்சியகத்திற்கு சென்றேன்.

அதென்ன பணம் உறிஞ்சியகமா? சொல்கிறேன். மாத செல் கட்டணம் கட்ட சென்ற இடத்தில், ’கார்டா? கேஷா?’ என்றார்கள். வழக்கமாக ’கார்டு’ என்றால், அங்கே போய் தேய்த்துக் கொள்ளுங்கள். பணம் என்றால் இங்கே கட்டுங்கள் என்பார்கள். ஆனால் கேஷ்ன்னா அங்க தனியா ஒரு மெஷின் இருக்கும் அதில போய் கட்டிடுங்க என்றார். உண்மையில் முதல் முறையாக இப்போது அந்த இயந்திரத்தைப் பார்த்தேன். ஏ.டி.எம்-இல் பணம் எடுப்பதைப் போல ஒவ்வொரு நோட்டாக வாயில் வைத்தால் மாட்டுக்கு தீனி கொடுப்பதைப் போல சரேலென உறிஞ்சிக் கொள்கிறது. ஒரு 500 நூபாய் நோட்டை வைத்தேன். உறிஞ்சிக் கொண்டு, பெற்றுக் கொண்டதற்கான சிட்டையை நீட்டியது. கிழித்தெடுத்துக் கொண்டு வந்துவிட்டேன்.

ஏ.டி.எம்-களில் பணம் எடுக்கும் போதெல்லாம், ’இதே போல பணம் கட்டுவதற்கு இடம் இல்லையல்லவா? இருந்தால் நன்றாக இருக்குமே.. அவரவர் வங்கியில் காத்திருப்பது…