முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

February, 2007 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சென்னை சங்கமம் -மூன்றாம் நாள்

ஒய்.எம்.சி.ஏ. திறந்தவெளி அரங்கில் "Mozart Meets India" என்ற பெயரில் சிம்பொனி இசையில் செவ்வியல் இசையை எவ்வாறு தரமுடியும் என்று ஜேசுராஜன் என்பவரின் முயற்சியில் இந்த புதிய வடிவம் அமைக்கப்பட்டிருந்தது.!

தமிழ் மய்யம் இயக்குனர் ஜெகத் கஸ்பார் ராஜ் தொடங்கி வைக்க நிகழ்ச்சி தொடங்க இருந்தது. திறந்தவெளி அரங்காதலால், கொசு தன் கடமையாற்ற வந்தது. வேறு வழியின்றி, சுற்றிலும் இருந்த குப்பைகளை கொளுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த சமுதாயக் கடமையயும் ஆற்றிவிட்டோம் நண்பர்களுடன்! இரண்டு மணி நேரம் சுற்றிலும் இருந்த குப்பைகள் பற்றி எரிந்து, புகை கிளம்பி கொசுக்கள் இல்லாமல் நிம்மதியாக இசையை ரசித்தார்கள். ஒளிவெள்ளத்தில் புகை வந்து வந்து போனது ஏதோ mist effect போல இருந்தது. வயலின், வாய்ப்பாட்டு ஆகியவற்றில் சிம்ப்பொனியை கலந்திருந்தார்கள். நன்றாகத்தானிருந்தது.

தமிழ்நாடு - தனிநாடு

அண்மையில் ரசித்த கவிதை....

"காவேரி பிரச்சினை
தமிழக எல்லையை
கர்னாடகம் மூடியது;

பெரியாறு பிரச்சினை-
சேலம் கோட்டம் பிரச்சனை
தமிழக எல்லையை
கேரளம் மூடியது;

பாலாறு பிரச்சினை
தமிழக எல்லையை
ஆந்திராமூடியது;

தமிழ்நாடு
தனிநாடானது"

சென்னை சங்கமம் - 2

சென்னை சங்கமத்தின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிக்கும் மீண்டும் நண்பர்களுடன் அய்.அய்.டி.க்கு தான் சென்றிருந்தேன். எனவே அது அப்படியே ரிப்பீட்டு!


இரண்டாம் மூன்றாம் நாள் புகைப்படங்கள் விரைவில்...

அதுக்கு முன்னாடி, மெரினாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் எடுத்த
ஒரே ஒரு குறு வீடியோ காட்சி: (சும்மா முன்மாதிரி)


சென்னை சங்கமம் - தொடக்க விழா!

'சென்னை சங்கமம்' பற்றி சக பதிவர் (அய்.அய்.டி.யில் படிப்பவர்) ஒருவர் பதிவிட்டிருக்கிறார். அய்.அய்.டி.யில் தொடக்கவிழா நடைபெறுகிறது என அறிந்தவுடனே போய்ப் பார்த்துவிடவேண்டும் என்ற எண்ணம் திண்ணமாகிவிட்டது. அதனால், கல்லூரி விளையாட்டு விழாவின் களைப்பையும் பொருட்படுத்தாமல் கிளம்பினேன். மாற்றார் யாரையும் எளிதில் அனுமதிக்காத அய்.அய்.டி, கதவு திறந்து வரவேற்றது தமிழக முதல்வரை வரவேற்கும் விளம்பரத் தட்டியோடு!
'சமத்துவப்பொங்கல்' என்ற அறிவிப்பின், வேண்டுகோளின் மூலம் இந்த ஆண்டுப் பொங்கலை கலைஞர் தித்திப்பாக்கியதைப்போல, 'சென்னை சங்கமம்', சென்னை முழுக்க பல்வேறு இடங்களிலும், 'எண்ணற்ற கலை நிகழ்ச்சிகள்', அதிலும் 'ஒடுக்கப்பட்ட மக்களின், தமிழர்களின் பாரம்பரிய கலைகளுக்கு முக்கியத்துவம்' என்னும் செய்தியே மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது. சர்வ சாதாரணமாக நுழையமுடியாத, அதிலும் தமிழர்களோ, ஒடுக்கப்பட்டோரோ நுழையமுடியாதபடி சென்னையின் முக்கியப்பகுதியில் இருந்தாலும் தனித்தீவாக இயங்கிவரும் அய்.அய்.டிக்குள் மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், புலியாட்டம், பொய்க்கால்குதிரை, …

அசத்தப்போவது யாரு? - சன் டிவியின் தோல்வி

சனியன்று (17.2.2007) சன் தொலைக்காட்சியில் 'அசத்தப்போவது யாரு?' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. விஜய் தொலைக்காட்சியின் 'கலக்கப்போவது யாரு?' -இன் காப்பி, மறுபதிப்பு என்பது அப்பட்டமாக அனைவருக்கும் தெரிந்தது. அத்தோடு மட்டுமல்லாமல், அதில் பங்கேற்ற அனைவரும் இந்நிகழ்ச்சியில்...!

'பிரபல தொலைக்காட்சிகளில் புதிய முகங்களால் புதிதாக சொல்லப்படும் கருத்தக்கங்கள் அவர்களிடம் நிராகரிக்கப்பட்டு, அடுத்த வாரமே புதிய தலைப்பில், அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவிடும்' என்ற குற்றச்சாட்டு வெகுநாளாக நிலவிவருகிறது. இந்நிலையில்தான் இந்த நிகழ்வு!
வியாபார உலகில் இது சாதாரணமானதுதான் என்று சொல்லிவிடலாம். வெளிநாட்டு நிகழ்ச்சிகளை தமிழில் எடுத்து வெற்றியடைச் செய்வது போல்தான் இதுவும். ஆனால், சன் தொலைக்காட்சி தனக்கென வள்ர்த்து வைத்திருக்கும் பிம்பத்திற்கு இது முற்றிலும் மாறானது.

இதுநாள் வரை தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் அதிகமாக திரைப்படம் மற்றும் அது தொடர்பான நிகழ்ச்சிகளையும் தயாரித்து அதன் மூலம் தனது தயாரிப்புச் செலவுகளைக்க் குறைத்துக் கொண்டு, கொள்ளை லாபம் சம்பாதித்து வந்தது. எப்படி என்கிறீர்களா? ப…

காதல் பற்றிப் பேசுகிறார் தந்தை பெரியார்...

இன்றைய தினம் காதலைப் பற்றிப் பேசுகிறவர்கள், அன்பு, நேசம், ஆசை, காமம், மோகம் என்பவை வேறு; காதல் வேறு என்றும், அது ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் தங்களுக்குள் நேரே விவரித்துச் சொல்ல முடியாத ஒரு தனிக் காரியத்துக்காக ஏற்படுவதாகும் என்றும், அதுவும் இருவருக்கும் இயற்கையாக உண்டாகக் கூடியதாகும் என்றும், அக்காதலுக்கு இணையானது உலகத்தில் வேறு ஒன்றுமில்லை என்றும், அதுவும் ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடமும், ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடமும் மாத்திரந்தான் இருக்க முடியும் என்றும், அந்தப்படி ஒருவரிடம் ஒருவருக்குமாக இருவருக்கும் ஒரு காலத்தில் காதல் ஏற்பட்டுவிட்டால், பிறகு எந்தக் காரணங்கொண்டும் எந்தக் காலத்திலும் அந்தக் காதல் மாறவே மாறாது என்றும், பிறகு வேறொருவரிடம் காதல் ஏற்பட்டுவிட்டால், அது காதலாயிருக்க முடியாது; அதை விபசாரமென்றுதான் சொல்ல வேண்டுமே ஒழிய, அது ஒருக்காலும் காதலாகாது என்றும், ஒரு இடத்தில் உண்மைக்காதல் ஏற்பட்டுவிட்டால், பிறகு யாரிடமும் காமமோ விரகமோ மோகமோ ஏற்படாது என்றும் சொல்லப்படுகின்றன.

அழகைக்கொண்டோ, பருவத்தைக்கொண்டோ, அறிவைக் கொண்டோ, ஆஸ்தியைக்கொண்டோ, கல்வியைக்கொண்டோ, சங்கீதத்தைக் கொண்டோ, சாயலைக்கொண்டோ…

"பொருத்தம் பார்த்தல்" என்னும் ஆபாச மோசடி!

இன்று எம்மவர் மத்தியிலே காதல் திருமணம், பேச்சுத் திருமணம் என்று இரு வகையான திருமணங்கள் காணப்படுகின்றன. முன்னைய காலத்தில் தமிழர்கள் காதல் திருமணம் மட்டுமே செய்து வந்தார்கள். அதுவே தமிழர் பண்பாடாகவும் இருந்தது. பின்பு தமிழினத்திற்குள் ஆரியர்களால் வர்ணாச்சிரம தர்மத்தின் பெயரில் ஜாதிகள் திணிக்கப்பட்ட பொழுது, ஜாதியைக் காப்பதற்காக பேச்சுத் திருமணம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்குள் பார்ப்பனர்கள் எண்ணில் அடங்காத ஆபாசங்களையும் நுளைத்துவிட்டனர். இன்று வரை ஜாதியோடு, பேச்சுத் திருமணத்தையும் எமது தமிழர்கள் கைவிடாமல் கட்டிக் காத்து வருகிறார்கள். இதில் இடையிடையே காதல் திருமணம் சிறந்ததா? பேச்சுத் திருமணம் சிறந்ததா? என்று பட்டிமன்றமும் நடத்துவார்கள். இந்த பேச்சுத் திருமணத்தில் பொருத்தம் பார்ப்பது முக்கியமான ஒன்றாக இருக்கும். இதைப் போல ஒரு முட்டாள்தனமான விடயம் உலகத்தில் இருக்க முடியாது. இந்தப் பொருத்தம் பார்ப்பதில் "திரிம்சாம்சம்" போடுதல் என்கின்ற ஒரு விடயம் உண்டு. இதன் மூலம் வரப் போகும் பெண்ணின் குணத்தை அறிய முடியுமாம்.

இதன்படி ஏறக்குறைய 40 வீதமான தமிழ் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்களாக இருக்கிறா…

"நீதிமன்றப் பூனைக்கு மணி"

"....இருந்தாலும் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு செயல்படுவதை இந்த நீதிமன்றம் அனுமதிக்காது". இப்படி ஒரு வசனத்தை பல்வேறு திரைப்படங்களிலும் நீதிபதிகள் பேசக் கேட்டிருக்கிறோம்.
அதையே நீதிபதிகளுக்கு திருப்பி அடித்திருக்கிறார் அமைச்சர் ஆற்காடு வீராசாமி.

"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை விட, தங்களை எந்தவிதத்தில் உயர்ந்தவர்களாக நீதிபதிகள் கருதிக்கொள்கிறர்கள்."
"ஆகாயத்தில் இருந்து குதித்தவர்களல்ல இவர்களெல்லாம்..."
"தமிழ்நாட்டில் சில நீதிபதிகள் தங்களை அப்படி கருதிக் கொண்டிருக்கிறார்கள்"
"மக்கள் பிரதிநிதிகளின் அதிகார வரம்புக்குள் தலையிடுவதும், சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு செயல்படுவதும் நல்லதல்ல...." என்கிற தொணியில் சும்மா பிரித்தெடுத்துவிட்டார் போங்கள்.

முதல்வர் கலைஞரும் அதை வழிமொழியும் விதமாக, "இதுவரை பூனைக்கு மணியை யார் கட்டுவது என்றிருந்த நிலையில், அந்தப் பணியை ஆற்காட்டார் செய்துவிட்டார்" என்று பாராட்டியிருக்கிறார்.


முழுமையான பேச்சை நாளை செய்தித்தாள்களிலிருந்து எடுத்துப் போடுகிறேன். அல்லது இணைப்பைக் கொடுத்துவிடுகிறேன். சன் செ…

விடுதலையை நோக்கி எழும்பும் இசை

தமிழீழ விடுதலையை எதிர்நோக்கும் புதிய தலைமுறை இளைஞர்களின் படைப்பு. பாப் இசை வடிவத்தில்.....
சுஜித்.ஜி, பாடல் வரியில், அவரும், சந்தோஷும் இணைந்து பாடி திரயிலும் தோன்றி
வந்திருக்கிறது இப்பாடல்..

"நோவும் வரும் சாவும் வரும்
ஏதோ ஒரு நாள் விடிவும் வரும்;
கொஞ்சம் பொறு; ஓய்ந்தே இரு
நாளைய நாளில் வரமாய் வரும்."

வலிகளைச் சுமந்து வரும் வரிகளில் விடிவுக்கான ஏக்கமும் தெரிகிறது.
உலகெங்கும் இசை வடிவில் தங்கள் அடிமை சமூகத்தை விடிவுக்கான பாதையில் அழைத்துச் சென்ற இசை மேதைகள் இருந்திருக்கிறார்கள். கருப்பின பாடகர் மைக்கேல் ஜாக்சன் கூட தனது பாடல் வரிகளில் விடுதலைக் குரல்களையும், கருப்பின அடிமைத் தனத்திற்கு எதிரான குரலையும் பதிவு செய்திருக்கிறார் என்று படித்திருக்கிறேன்.
நமது தமிழகத்தில் தான் சமூக விடுதலைக்கும், தங்களுக்கும் சற்றும் தொடர்பில்லாதது போல் நடந்து கொள்ளும் இசை மேதைகளும், மக்களுக்காக பாடுவது வீணானது என்று பேசும் இசைஞானிகளும் இருக்கிறார்கள்.

புரட்சிப்பாடகர் கத்தாரைவிட, இவர்களால் சமூகத்திற்கு ஒன்றும் பயனில்லை. அப்படி எண்ணாமல், தங்கள் இசைத் திறனை விடுதலையை முன்னிறுத்தி வெளிப்படுத்தியிருக்கும் இவ்விள…

பி.எஸ்.என்.எல் காரங்களுக்கு ஒரு நற்செய்தி....

"ஏண்டா, இங்கதான இருக்க.. ஒரு மெசேஜ் அனுப்ப கூடாது"
"சரியான கஞ்சண்டா நீ, ஒரு மெசேஜ் அனுப்பினா குறைஞ்சா போயிடுவ "
இப்படி ஒரு பக்கம் கூடப் படிக்கிறவன்லாம் திட்ட.....

"மெசேஜ் பண்ற காசுக்கு உனக்கு போனே பண்ணிடலாம்" னு உண்மை நிலைமையை சொன்னாலும், "அப்ப போன் பண்ணு நான வேண்டாம்னேன்"னு சிலரு வாரிவிட

ஊரே இலவச செல்குறுஞ்செய்தி அனுப்பி மகிழ்ச்சியா இருக்க... நாம மட்டும் வர்ற செ.கு.செ.வை படிச்சிட்டு, நல்லா ரசிச்சதைக்கூட பிறருக்கு அனுப்ப முடியாமல் தவிக்கிற அவஸ்த்தைக்கு ஒரு விடிவு காலம்.

ஏற்கனவே indiatimes குடுத்த மாதிரி இந்தியா முழுமைக்குமான இலவச செ.கு.செ. சேவையை பெற உடனே போங்க! way2sms.com

"இன்பர்மேசன் இஸ் வெல்த்" பாய்ஸ் படத்தில வர்ற பண்டாரம் 'செந்தில்' சொல்றாமதிரி!

இணையத்தில இருந்த படியே செ.கு.செ.வையும் குடுத்து அசத்தலாம்.
நான் உடனே அனுப்பிச்சு பாத்துட்டென்பா!

இப்படிப்பட்ட 'ஓசி' விசயங்களை சரியாக பயன்படுத்த ஆரம்பிச்சுட்டா...
இந்த நாள். வருகிற நாள் எல்ல்லா நாளும் இனிய நாள்