முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

January, 2007 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சாய்பாபாவும், வயதான ஹீரோக்களும்

ஏற்கனவே பார்த்த பதிவுகளில் உள்ள படங்களில் சாய்பாபா சிக்கியதைப் போல இப்போதும் சிக்குவார் என எதிர்பார்த்து நம்முடைய நண்பர்கள் யாரும் சாகச வேலைகளில் இறங்க முடியாது. பாபா சுதாரித்துக் கொண்டார். வருவோர், போவோர் எல்லாம் கையடக்க கேமரா வைத்துக் கொண்டு கண்ட கண்ட ஆங்கிள்களில் படமெடுத்து தனது 'கையடக்க' சித்து விளையாட்டுக்களை அம்பலப்படுத்த ஆரம்பித்தால் என்னாவது.
சினிமாவின் நுணுக்கம் தெரிந்த நமது ஹீரோக்கள் தான் எந்த ஆங்கிளில் தன்னை எடுக்கக் கூடாது என்று முன்கூட்டியே தெளிவாக சொல்லிவிடுவார்கள். எடுத்துக்காட்டாக , லோ ஆங்கிளில் இருந்து எடுத்தால், தாடையின் கீழ் சதை தொங்குவது துண்டாக தெரியும். அதனால் ஆரம்ப காலங்களில் வில்லனுடன் சண்டையிடும் காட்சிகளிலும், அறிவுரை வசனங்கள் பேசும்போதும் விரும்பிக்கேட்ட லோஆங்கிளை, வயதான பின்னாளில் அவர்களே வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள்.

இது நிற்க....
லோ ஆங்கிள் என்பது எடுக்கப்படும் பிம்பத்தை உயர்த்திக்காட்டப் பயன்படும் ஆங்கிளாகும். இதனால் அவ்வளவு பெரிய திரையில் நடிகரின் பிம்பம் தெரியும் போது, அதைப் பார்க்கும் நமக்கு, அவர் மிகப் பெரியவர், பலம் வாய்ந்தவர் என்ற உள்ளுணர்…

“மர்ம சாமியார் சாயிபாபா”

பி.பி.சி.யில் பரபரப்பாகப் பார்க்கப்படும்
“மர்ம சாமியார் சாயிபாபா”


யோகிகள், குருக்கள் என்று கருதப்படும் சாமியார்கள் புனிதமானவர் களாகக் கருதப்படுவது இந்தியாவின் பாரம்பரியமாகும். ஏறுக்குறைய 3 கோடி பக்தர்களைக் கொண்ட சத்ய சாயி பாபாதான் இத்தியாவிலேயே மிகப்பெரிய ஆன்மீகத் தலைவராகக் கருதப்படுகிறார். தென்னிந்தியாவில் பெங்களூர் நகரின் அருகே உள்ள புட்டபர்த்தியை அவர் தன் இருப்பிடமாகக் கொண்டுள் ளார். அவரது ஆரஞ்சு வண்ண உடையும், அடர்ந்த தலை முடியும் அவரைத் தனித்து அடையாளம் காட்டுபவை.

மனிதப் பிறவியான இவர் தன்னையே கடவுளாக, கடவுளின் அவதாரமாக அறிவித்துக் கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார். இந்தியாவில்; இருந்து மட்டுமல்ல உலகின் 165 நாடுகளில் தனக்கு பக்தர்கள் உள்ளனர் என்று அவர் பெருமையுடன் கூறிக் கொள்கிறார்.

ஆனால் பி.பி.சியின் உலகக் குழு ஒன்று இந்தியாவில் இருந்து கலிபோர்னி யாவுக்குப் பயணம் செய்தபோது, தங்களின் வாழ்வையே பாபா கெடுத்து விட்டதாக அவரின் முன்னாள் பக்தர்கள் பலர் தெரிவித்தனர்.

பாபா தன்னைப் பாலியல் ரீதியில் பயன்படுத்திக் கொண்டதாகக் கூறும் முன்னாள் பக்தர் அலயா கூறினார்: “நான் கூறுவதைப் போல நீ செய்ய…

இப்படித்தான் அம்பலமானார் சாய்பாபா

இது ஒரு தபா!படவிளக்கம்:
1. முதலில் தண்ணீர் குடிப்பது போல பாவனை
2.லிங்கம் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கைக்குட்டையை கையிலெடுக்கிறார்.
3. வாயைத் துடைப்பது போல் பாவனை
4. அப்படியே லிங்கத்தை வாயினுள் திணிக்கிறார்.
கவனிக்க: இடதுகை விரல்கள்
5. வாய்க்குள் லிங்கம் சென்றதும் முகத்தைத் துடைப்பது போல் ஒரு நடிப்பு.
6. மீண்டும் தண்ணீர் நடிப்பு
(5,6,7-படங்களில் கவனியுங்கள் உதவியாளரின் பரபரப்பு.)

7. வாந்தி எடுப்பது போல் நடிப்பு
8, 9 வாயில் வைத்திருந்த லிங்கம் வெளியே வருகிறது.


துரைமுருகனுக்கு மோதிரம் கொடுத்தது தொடர்பான பதிவை இங்கே படிக்கலாம்.

இணையத்தில் அம்பலமான சாய்பாபா

இது சில ஆண்டுகளுக்கு முன்பு நான் படித்த கட்டுரை, அதை பிய்த்து பிய்த்து உங்களுக்குத் தருகிறேன்.இணையத்தில் அம்பலமான சாய்பாபாகடவுள் அவதாரம் எனக்கூறிக் கொள் ளும் சாயிபாபாவை பல ஆண்டுகளாக திராவிடர் கழகம் அம்பலப்படுத்தி வருவது தமிழ்நாட்டுக்குப் புதிதல்ல. தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பல முறை சாயிபாபாவின் மோசடிகளை தோலுரித்துக் காட்டியுள்ளார். பாபா செய்யும் மேஜிக்கு களை தி.க. பிரச்சாரகர்கள் மக்கள் மத்தியில் தொடர்ந்து செய்து காட்டி வருகின்றனர். நாம் இப்படிப் பகுத்தறிவு பரப்புரைகளை செய்து வரும் நிலையில் சாயிபாபாவின் முன்னாள் சீடர்கள் இணைய தளத்தில் இந்த வேலையை செய்து அசத்தியுள்ளனர். முன்பு ஒரு முறை ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு சாயிபாபா முன்னாள் சீடர் மலேசியாவைச் சேர்ந்த ஹரிராம் ஜெயராம் என்பவர் சாயிபாபா வின் மோசடி குறித்து தனது கருத்தை கடிதம் வழி எழுதியிருந்தது இங்கு நினைவு கூறத் தக்கது. இப்போது இவரைப் போன்றே சில சீடர்கள் இந்த மோசடிகளை அம்பலப்படுத்த தனி இணைய தளத்தையே துவக்கியுள்ளனர். www.exbaba.com என்ற இணைய தளம் பாபாவை அக்குவேறு ஆணிவேறாக புட்டுப் புட்டு வைத்திருக்கிறது. அதிலுள்ள படங்க ளையே இங…

சாய்பாபா மேஜிக் ஷோ! டிக்கெட் ரெண்டு ரூபாய்

தெலுங்கு கங்கை திட்டத்திற்காக 200 கோடி வழங்கிய சாமியார் சாய்பாபாவுக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் "ஆன்மீக சக்தியால் மொதிரம் வரவழைத்து கொடுத்தார் பாபா" என்று பெருமிதம் கொண்டாராம். செய்தி வெளியிட்டிருக்கிறது 'தினமலர்'.


அதே கூட்டத்தில் (21.1.2007 காலை நிகழ்ச்சியில்) மத்திய அமைச்சர் மாண்புமிகு தயாநிதி மாறன் பேசும் போது, "அருள்மிகு பாபா முதலமைச்சர் வீட்டிற்கு வந்தபோது, எனக்கு மோதிரம் வரவழைத்துக் கொடுத்தார். அப்போது அவருக்கு மோதிரம் கொடுத்துவிட்டீர்கள், எனக்கும் ஒரு மோதிரம் தாருங்கள் என்று அமைச்சர் துரைமுருகன் கேட்டார். உடனே அவருக்கும் மோதிரம் வரவழைத்துக் கொடுத்தார். எங்களுக்குக் கொடுத்து விட்டீர்கள்; கலைஞருக்குக் கொடுங்கள் என்று (துரைமுருகன்) கேட்டபோது, அவருக்கு என் மனதையே தருகிறேன் என்றார். அவர் மனதில் நானும், என் மனதில் அவரும் இருக்கிறார் என்று பாபா தெரிவித்தார்.’’ (`தினத்தந்தி’, 22.1.2007) என்று கூறியுள்ளார்.ஆகா! அற்புதம்...அற்புதம்....மோதிரம் ஸ்டாக் தீர்ந்து போச்சுங்கிறதை எவ்வளவு அழகா சமாளிச்சிருக்கிறாரு பாபா! இல்லாட்…