முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புரட்டர்களின் வெற்றி! அல்லது பத்ரிகா தர்மம்

புரட்டுகளின் மீது தான் முரட்டுத் தன வெற்றி என்பதால், இன்னமும் அந்த பொய்களை மெயிண்டெய்ன் செய்து கொண்டே இருக்கிறார்கள். ”மோடியின் 10” என்று 18-ஆம் தேதி தினமலர் பட்டியல் போட்டிருக்கிறது. இரண்டாவது இரும்பு மனிதர் என்று கட்டுரை வெளியிட்டிருக்கிறது. திரும்பத் திரும்ப குஜராத்-தை முதன்மை மாநிலமாக்கினார் என்று வாய் கூசாமல் பொய் சொல்லவும், கை கூசாமல் எழுதவுமாக இருக்கிறார்கள். கையில் விளக்குமாறுடன் ஏதோ ஒரு உழைப்பாளியின் படத்தில் தலையை வெட்டி மோடியின் படத்தை ஒட்டி வெளியிடப்பட்ட படத்தைப் பற்றி பலறை எழுதப்பட்டும் கூட இன்னமும் உண்மையான படம் போல அதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பொறியாளர் பெண்ணிடம் கடலை போடுவதற்காக தனியாக உளவுத் துறையில் ஒரு பிரிவே வைத்திருந்த மோடிதான் சுத்தமான அரசு வாழ்க்கை வாழ்ந்தவர் என்று அடித்துச் சத்தியம் செய்கிறது தினமலம். அரசுப் பணியில் அய்.ஏ.எஸ்-ஆக இருப்பவர்கள் அரசு சம்பளத்தில், அதிகாரத்தில் இருந்துகொண்டே மோடியின் அரசியல் பணிக்கு எப்படி பயன்பட்டார்கள் என்பதையும் கூச்சநாச்சமின்றி படம்போட்டு பெருமை கொள்கிறார்கள். குஜராத் வளர்ந்த மாநிலம் என்று பீலா விட்டு ஏமாற்றி

தகுதி - திறமை கூப்பாடு ஏன்?

இவய்ங்க தகுதி, திறமையின் லட்சணம் இதுதான். இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களே, இட ஒதுக்கீடு என்பதொன்று இருந்தும், நமக்கு அதைக் கேட்பதற்கு உரிமையும், அவர்களுக்கு அதை இட்டு நிரப்ப வேண்டிய கடமையும், சரியில்லையென்றால் முறையீடு செய்யும் வாய்ப்பும் இருக்கும் போதே எத்தனை தில்லு முல்லுகள், முடிச்சவிக்கித் தனங்கள் நடக்கின்றன, என்று பாருங்கள்! பி.ஹெச்.டி முடித்தாலும் நமக்கு தகுதி, திறமை வராது என்பான். முடிக்காதவனுக்கெல்லாம் வேலை போட்டுக் கொடுப்பான். இது தான் பார்ப்பனப் பண்ணையம். இதை விட மோசமான நிலையிலிருந்து இவ்வளவு தூரம் மீண்டிருக்கிறோம்.. நம் உரிமையைக் கேட்க துணிந்திருக்கிறோம் என்றால், இதற்குக் காரணமான தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்கரையும் நினைப்போம். நம் உரிமைகளை வென்றெடுக்கும் வரை இந்த மொள்ள மாரித் தனங்களுக்கெதிராகப் போராடுவோம்.. அய்.அய்.டி. பணி நியமனத்தின் அவலட்சணத்திற்கு ஒரு சிறிய எடுத்துக் காட்டு இதோ,,,, பாருங்கள்.... Employment opportunity in the IIT Madras at Chennai. from thaamaraichchelvi