உயிரைக் கையில் பிடித்தபடி இருக்கும் ஒரு லட்சம் மக்களின் போராட்டம் காமெடியாக்கப்பட்ட கதை! ’ஆம் ஆத்மி’ - இப்போது தமிழில் ”எளிய மக்கள் கட்சி!” விரைவில்... உங்கள் அபிமான திரையரங்குகளில்! (ஒரு ஃபீல் கிடைப்பதற்காக டப்பிங் பட விளம்பர ஸ்டைல்ல வாசிச்சுப் பாருங்களேன்.) தமிழ்நாட்டிலேயே.... ஏன் இந்த வேர்ல்டுலேயே.... .... ... .. . டிரான்ஸ்லேட் பண்ணி கட்சியில சேர்த்திருக்கிற முதல் கட்சி - அது நம்ம கட்சி தானே! அதெப்படி தமிழ்நாட்டில மட்டும் தான் எ.ம.க-வா? இல்லை இந்தியா முழுக்க எ.ம.க-வா? ஒரு வேளை நம்ம உதயகுமார் எம்.பி-யாகி (ஸ்ஸ்ஸ் விடுங்க) நா.ம.உ ஆகி நாடாளுமன்றத்துக்குப் போனா, அங்க மத்த ’ஆம் ஆத்மி’ எம்.பிக்கள்லாம் (மறுபடியும் ஸ்ஸ்ஸ்சா?) ஆம் ஆத்மி-ன்னு இருக்கிறப்போ, இவர் மட்டும் எ.ம.க-ன்னு இருப்பாரா? இல்லை எல்லா ஆம் ஆத்மிக்களும், எ.ம.க.ன்னு இருப்பாங்களா? ஒரே கன்பீசா இருக்குபா!
சிரமப்படாதீங்க... பதம் பிரிச்சு சொல்றேன். "பிரின்சு என் ஆர் சமா". இப்படித்தான் படிக்கணும்.