முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

December, 2007 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சாமிக்கு மாலை போடும் உரிமை....!

என்னை விட்டுவிட்டு
சாமிக்கு
மாலை போடுகிற
உரிமை
உனக்கு
உண்டென்றால்

உன்னை விட்டுவிட்டு
வேறொருவனுக்கு
மாலை போடுகிற
உரிமை
எனக்கும்
உண்டுதானே!
-அறிவுமதி (நன்றி: செம்பருத்தி -டிசம்பர் 2007)

பேராசிரியரின் இனமானப் பேருரை!

நேற்றுபிறந்தநாள் கண்ட பேராசிரியர் க.அன்பழகன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் வண்ணமாக அவரது நெல்லை தி.மு.க. இளைஞரணி மாநாட்டு உரையை இங்கு வெளியிடுகிறோம்.
இளைஞர்களே, இளைஞர்களே! பகுத்தறிவுதான் நம் மூலக் கொள்கை!
வாய்ப்பு கிடைக்கும்பொழுதெல்லாம்தந்தை பெரியார் அவர்களின் நூல்களைப் படியுங்கள்!
நெல்லை மாநாட்டில் இனமானப் பேராசிரியர் க. அன்பழகன் வழிகாட்டும் உரை


திருநெல்வேலி, டிச. 18- நமது இளைஞர்கள் வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் தந்தை பெரியார் அவர்களின் நூல்களைப் படிக்கவேண்டும் என்றார் தி.மு.க., பொதுச்செயலாளரும், தமிழ்நாடு நிதியமைச்சருமான பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள்.திருநெல்வேலியில் நடைபெற்ற தி.மு.க., இளைஞரணி முதல் மாநில மாநாட்டில் உரையாற்றியபோது அவர் குறிப்பிட்டதாவது:
இந்த மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்று எழுச்சிமிக்க உரைகளை இளைஞர்கள் பலபேர் இங்கே நிகழ்த்துவதை நான் கேட்டு உள்ளபடியே மிகுந்த பூரிப்பு அடைகிறேன். காலையில் இருந்து இந்த நேரம் வரையில் தொடர்ந்து இளைஞர்கள் முழங்கினார்கள். அந்த முழக்கம் இளைஞர்களுக்கு இயல்பான ஒரு முழக்கமாக அது அமைந்திருக்கிறது. நெல்லை மாநகரம், முழுவதும் கொடிக்காடு,…

ஆறடிக்கே இந்தப்பாடுன்னா...?

தமிழர் தலைவர் 75-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மிகச்சிறப்பாக வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. அய்யா வீரமணி அவர்களுக்கு பிறந்தநாள் பரிசாக '10000' விடுதலை சந்தாக்கள் வழங்கப்பட்டன.

அவர் கேட்ட இரண்டு வரங்களை உடனடியாக வழங்கினார் முதல்வர் கலைஞர்! 95 அடி உயர பெரியார் சிலை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.. என்று கோரினார் ஆசிரியர்! தந்தேன் வரம் என்றார் கலைஞர்!

அப்போது கலைஞர் சொன்னதுதான் பலபேரின் வயிற்றில் புளியைக்கரைத்திருக்கிறது. ஹிந்து பார்ப்பனர்கள் கூட, "என்ன வந்தாலும், செய்து முடிப்பேன்" என்று பேசியதைத்தான் முக்கியப்படுத்தியிருந்தன... சந்தோசம்தானே! இதைத்தானே எதிர்பார்க்கிறோம் கலைஞரிடம் இருந்து...!

சென்னையை சுற்றி சிலை அமைக்க ஏற்பாடு செய்வோம் எனச் சொன்ன கலைஞர் அடுத்து என்ன சொன்னார் தெரியுமா?

"ஆறடி சிலைக்கே (இன எதிரிகள்) இந்தப் பாடுபடுகிறார்கள் என்றால் 95 அடியில் சிலை வைத்தால் இன்னும் அதன் வீச்சு எப்படியிருக்கும்?" என்று கலைஞர் மகிழ அரங்கமே கரவொலியில் தங்கள் ஆதரவை தெரிவித்தது!

எப்படியிருக்கும்...... அசத்தலா இருக்கும்....!
கலைஞர் பேச்சைப் பார்க்க போங்க ... இங்க!

நேரடி ஒளிபரப்பு துவங்கியது...

முதல்வர் கலைஞர் தலைமையில் தமிழர் தலைவர் பிறந்தநாள் விழாவின்
நேரடி ஒளிபரப்பு துவங்கியது...

நேரடி ஒளிபரப்பு: தமிழர் தலைவர் கி.வீரமணி பிறந்தநாள்

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் பவளவிழா (75-ஆம் ஆண்டு பிறந்தநாள்) விழா மிகவும் சிறப்பான முறையில் இரண்டு நாள் விழாவாக நடைபெற்றுவருகிறது.

அதன் நிகழ்வுகளை உலகத் தமிழர்கள் கண்டு களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை பெரியார் திடலில் காலையில் நடைபெறும் நடைபெறும் விழாவும், மாலையில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் விழாவும் இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

தமிழர் தலைவருக்கு, தமிழக முதல்வர் தலைமையில் நடைபெறும் விழா மாட்சியை உலகின் இன்னொரு மூளையில் உள்ள நீங்கள் கண்டு மகிழ நமது periyar.org.in இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்டு மகிழுங்கள். வரவிருக்கும் பெரியார் வலைக்காட்சி(Periyar Web TV)க்கான முன்னோட்ட நிகழ்வாகவும் இது அமையும்!

http://periyar.org.in/ இணைய தளத்தில்...தமிழக நேரப்படி மாலை 5:30 மணியிலிருந்து... காணத் தவறாதீர்கள்!