முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Copy cat-ஆ பெரியார்?

”பெட்ரண்ட் ரசலின் Marriages and Morals நூலைத் தான், தமிழில் ”பெண் ஏன் அடிமையானாள்?” என்று காப்பியடித்தாரா பெரியார்? ”பெட்ரண்ட் ரசலின் Marriages and Morals நூலைத் தான், தமிழில் ”பெண் ஏன் அடிமையானாள்?” என்ற பெயரில் காப்பியடித்தார் பெரியார் என்று ஓர் அரைவேக்காடு எழுதியிருக்கிறது. அதை எப்படியும் நாளை காலைக்குள் ஆயிரக்கணக்கான முட்டாள்கள் பகிரப் போகிறார்கள். சங் பரிவாரின் காலைநக்கும் கும்பல் அதை மீம்சாக்கி பரப்பப் போகிறார்கள். போர்டு தாஸ் மாதிரியான கூலிகள் வீடியோவும் போடுவார்கள். நாம் சொல்ல வேண்டிய உண்மையைச் சொல்லி வைப்போம். “பெண் ஏன் அடிமையானாள்?” என்ற நூலில் உள்ள கருத்துகள் பெரியாருக்குத் திடீரென்று ஒரே நாளில் தோன்றி எழுதப்பட்ட சிந்தனைகள் அல்ல. தந்தை பெரியார் தன் குடும்பத்தில் அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே மறுமணம் செய்துகாட்டியதில் தொடங்கி, பெண்ணுரிமை பற்றிய சிந்தனைகள் ஒவ்வொரு கட்டத்திலும் அவருக்கு எப்படி பரிணமித்து வந்திருக்கின்றன என்பதைப் பெரியாரைப் படிப்பவர்கள், படித்தவர்கள் உணர முடியும். அதெல்லாம் தெரியாமல், வன்மத்தை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு திரியும் இந்த ஸோம்பிகள், 'தான் த

நினைவூட்டல் குறிப்புகள்

பணியில் இருக்கும்போது படித்துக் கொண்டிருக்கும்போது போனில் யாருடனும் பேசிக் கொண்டிருக்கும்போது பயணத்தில் இருக்கும்போது அடுத்தடுத்து செய்ய வேண்டியவற்றை நினைவில் வைக்கக் குறித்துக் கொள்வதுண்டு. துண்டுச் சீட்டோ டிக்கெட் பின்புறமோ சரியான குறிப்பேடோ சட்டை உள்மடிப்போ செல்பேசியோ உள்ளங்கையோ பத்துரூபாய் நோட்டோ குறிப்பெடுக்கப் பயன்படும். தேர்வு நேரங்களில் அமைதியான சூழலில் கேள்விக்கான பதிலை விட அடுத்தடுத்து செய்ய வேண்டிய பணிகளோ, நெடுங்காலத் திட்டங்களுக்கான நினைவூட்டல்களோ கேள்வித் தாளில் பிட் என்று கருத முடியாத அளவிற்கு குறித்துவைத்துக் கொள்வதுண்டு. எதுவும் இல்லையென்றால் பக்கத்தில் இருப்பவர் தான் என் குறிப்பேடு. எனக்கு மறந்துவிட்டாலும் ஏன் நினைவூட்டவில்லையென்று அவர் மேல் பொறுப்பைப் போடலாம். யாருடைய வேண்டுகோளானாலும் ’நீங்களே மீண்டும் மீண்டும் நினைவூட்டி என்னிடமிருந்து வேலையை முடித்துக் கொள்ளுங்கள். நான் தவறாக நினைக்க மாட்டேன்’ என்று சரண்டர் ஆகிவிடுவதுண்டு. நினைவூட்டுவதற்கு இவை, இவர்கள் இல்லாமல் என்ன செய்வது என்று யோசித்ததுமுண்டு. கையில் தாளோ, எழுதுகோலோ பக்கத்தில் ஆளோ செல்பேசியோ கணினியோ இருக்க முடியா