முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

March, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

’தமுக்கு’ வீரமணி: ஆசிரியரின் அறிக்கையும், அலர்ஜிக்காரர்களின் அரிப்பும்!

தமுக்கு வீரமணி என்று பட்டம் தருகிறார்களாம்! அதற்கு ஆதரவு தந்து கை தூக்குகின்றனராம் அலர்ஜிக்காரர்கள்! http://www.facebook.com/photo.php?fbid=166589886723898&set=a.132067643509456.20892.100001186622923&comments
தமுக்கு எங்கள் ஒடுக்கப்பட்டோரின் இசைக்கருவி தான்! அதைச் சுமப்பதிலும் அடிப்பதிலும், அதன் மூலம் அடைமொழிபெயர் பெறுவதிலும் கூட எங்களுக்கு ஒன்றும் மனஒதுக்கீடு இல்லை! இன்னும் சொல்லப்போனால் அந்தப் பெயருக்கு ஒரு பொருத்தமும், கூடவே வரலாறும் உண்டு!
”1995 செப்டம்பரில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா உத்தரப்பிர தேச அரசு சார்பில் மூன்று நாள்கள் கோலா கலமாகக் கொண்டாடப்பட்டது. இந்தியா முழுவதுமிருந்தும் மக்கள் லட்சக்கணக்கில் வந்து குவிந்தனர். இதனைப் பொறுக்க மாட்டாத ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சந்திராசாமி பின்னணியில் பிள்ளையார் பால் குடித்ததாக இந்தியா முழுமையும் பரப்பினர். இது புரட்டு என்பது நிரூபிக்கப்பட்டது பிள்ளையார் கொழுக்கட்டை தின்றால் ரூபாய் ஒரு லட்சம் பரிசு என்று அன்றைய திராவிடர் கழக பொதுச்செயலாளர் கி. வீரமணி அவர்கள் சென்னை அண்ணா சாலையில் தமுக்கு (டாம்டாம்) அடித்துப் பிரச்சாரம் செய்தார்"…