முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

October, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழில் சமஸ்கிருதத் திணிப்பா? - தமிழர் தலைவர் கி.வீரமணி எச்சரிக்கை

தமிழ் யூனிகோட் முறையில் சமஸ்கிருத கிரந்த எழுத்துகளைத் திணிக்க முயற்சிக்கும் பார்ப்பன முயற்சி குறித்துக் கண்டனம் தெரிவித்தும், தமிழர்களுக்கு அறைகூவல் விடுத்தும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கை பின்வருமாறு:
முதல்வரின் முக்கிய கவனத்துக்கு...
ஒருங்குறி (யுனிகோட்) என்ற அமைப்புக்குள்  பார்ப்பன சமஸ்கிருத ஊடுருவல்! ஊடுருவல்!!
யுனிகோட் (Unicode)  எனப்படும் ஒருங்குறி முறையென்பது, உலகளவில் உள்ள அனைத்து மொழிகளின் எழுத்துகளையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்ட கணினி எழுத்து குறியீட்டு முறையாகும். இம்முறையில் ஒவ்வொரு மொழிக்கும் இடம் வழங்கப்பட்டிருக்கிறது. இன்றைய கணினி, இணைய யுகத்தில் இத்தகைய ஒருங்கிணைப்பின் அவசியத்தை உணர்ந்து முக்கியமான மென்பொருள் தயாரிப்பாளர்கள் இணையதளங்கள் உள்பட அனைவரும் இக்குறியீட்டு முறையை ஏற்றுக் கொண்டுள்ளன. இதனால் தனியாக எந்த ஒரு புதிய தரவிறக்கமும் (Download) இன்றி சீனம் முதல் அரேபியம் வரை எந்தவொரு மொழி எழுத்தையும் யாரும் படிக்கலாம்; பயன்படுத்தலாம்.
தமிழ் ஒருங்குறியின் பயன்பாடு கணினித் தமிழ் வளர்ந்த தொடக்க காலத்தில் ஆளுக்கு ஒரு எழுத்துரு, குறிய…

இணையத் தமிழை சமஸ்கிருத மயமாக்க முயற்சி! - ஆரிய நரிகள் மீண்டும் வாலாட்டம்

கணினித்துறை, இணையம் இவற்றில் இந்திய மொழிகளிலேயே அதிக அளவில் வளர்ச்சி கண்டு வருவது தமிழ்தான். அதிலும் ஒருங்குறி எனப்படும் யூனிகோட் முறையில் தமிழ் எழுத்துகள் வந்தபிறகு எண்ணற்ற இணையதளங்கள் பழந்தமிழ் இலக்கியங்களையும், புதிய படைப்புகளையும் கொண்டும் அறிவியல் கருத்துகளை எளிய தமிழில் தந்து வருகின்றன. இதை எவ்விதத் தடங்கலுமின்றி, உலகின் எந்த மூலையிலிருந்தும் எழுத்துரு (Font) தடையின்றி படிக்கலாம்; எழுதலாம். கூகிள், விண்டோஸ் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் யூனிகோட் தமிழை அங்கீகரித்து தங்களது மென்பொருள்களிலும் இவற்றை பயன்படுத்திவருகின்றனர்.

ஏற்கெனவே தமிழுக்கென உலக அளவிலான யூனிகோட் ஒதுக்கீட்டில் 128 இடங்கள் மட்டுமே கிடைத்திருந்தன. இதை அதிகப்படுத்தி தமிழ் எழுத்துகள் அனைத்துக்கும் இடம் கிடைத்தால் தான் எளிமையாகவும், வேகமாகவும் பணிகள் நடைபெறும் . இதற்காக யூனிகோட் சேர்த்தியத்திடம் (Unicode Consortium) கணினித் தமிழ் ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கெனவே தமிழ் எழுத்துகளுடன், வழக்கத்தில் இருக்கும் கிரந்த எழுத்துகளான ஜ, ஷ, ஸ, ஹ, ஸ்ரீ ஆகியன சேர்க்கப்பட்டுள்ளன. தமிழ் அறிஞர்களின் வேண்டுகோளுக்கே…