முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அந்தோ! கொடுமை! கொடுமை! - திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வீரவணக்கம்


அந்தோ! கொடுமை! கொடுமை!

ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்

தளபதி பிரிகேடியர் தமிழ்ச்செல்வமும் -

முக்கியத் தளபதிகளும் மாண்டனரே!

ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டம் விடுதலைப் போராட்டமாகி முகிழ்த்துக் கிளம்பி மும்முரமாய் நடந்துவரும் இக்காலகட்டத்தில், நேற்று ஈழத்திலிருந்து வந்த செய்தி, உலகத் தமிழர்களின் உள்ளங்களை வெந்தணலில் தள்ளி வாட்டி வதைக்கும் துன்பச் செய்தியாகும்.

வான் வழித் தாக்குதல் காரணமாக, பிரிகேடியர் தமிழ்ச்செல்வமும், லெப்டினன்ட் கர்னல் அன்புமணி (எ) அலெக்ஸ், மேஜர் முகுந்தன், கேப்டன் நேதாஜி, லெப்டினன்ட் ஆட்சிவேல், வாகைக்குமரன் ஆகிய தளபதிகளும் கொல்லப்பட்டனர் என்ற செய்தி தமிழர்களை மட்டுமல்ல, மனிதாபிமானம் கொண்ட அனைவருக்கும் நெஞ்சுருக்கும் செய்தியாகும்!

அரசியல் மேதை ஆன்டன் பாலசிங்கம் மறைந்த நிலையில், அவ்விடத்தைப் பெரும் அளவில் நிரப்பி, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைசிறந்த பேச்சாளராகவும், சிந்தனையாளராகவும், அமைதிக்குழுவிடம் அடக்கத்தோடும், உறுதியோடும் தமது உரிமைகளை எடுத்து வைத்து பேச்சுவார்த்தைகளைத் திறம்பட நடத்திய நாயகருமான மானமிகு தமிழ்ச்செல்வன் மறைவு ஒரு பேரிடி போன்ற செய்தி!

முன்பு ஒரு முக்கிய கட்டத்தில் தளபதி கிட்டுவையும், மற்ற முன்னணியினரையும் இழந்த கொடுமைக்கு இயற்கை அவர்களை ஆளாக்கியது.அதன்பிறகு ஆன்டன் பாலசிங்கம், அதன்பிறகு இப்படி ஒரு ஈடு செய்ய இயலாத இழப்பினால் ஏற்பட்டுள்ள சோகம்!
அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் எய்தியது லட்சியப் போரில், விடுதலைப் போரில் - வீரமரணங்கள்! அவர்களுக்கு நமது வீர வணக்கங்கள்!

அவ்வியக்கத்திற்கும், அதன் தலைவர் பிரபாகரனுக்கும், ஈழத் தமிழர் பெருங்குடும்பத்திற்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். போர் முனையில் இதுபோன்ற அதிர்ச்சிகள் வந்தாலும், லட்சியத்தை முன்னெடுத்துச் செல்லும் பயணத்தினை தொய்வின்றி தொடர்ந்து, எதற்காக அம்மாவீரர்கள் தங்களை விதைத்துக் கொண்டார்களோ, அவர்தம் லட்சியத்தினை செயலுருவில் காண உலகத் தமிழர்கள் ஆதரவு காட்டும் உணர்வுகளாக அனுதாபங்களை மாற்றுவார்களாக!


கி. வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்.
3.11.2007
சென்னை-7

கருத்துகள்

THARANI இவ்வாறு கூறியுள்ளார்…
உலகத் தமிழர்களின் உள்ளங்களை வெந்தணலில் தள்ளி வாட்டி வதைக்கும் துன்பச் செய்தியாகும்.


eluvom meendum
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கர்ய்ப்பு சட்டை சூரமணி அங்க போய் சண்டையில் உயிர்த் தியாகம செஞ்சிருந்தா இன்னொரு பகுத்தறிவு முண்டம் அதுக்கும் வீரவணக்கம் போட்டிருக்குமே.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
தமிழ்ச்செல்லவனால் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதே இந்நேரத்தில் பொருத்தமானதாகும். எனவே எனது அஞ்சலியினை தமிழ்ச்செல்லவனால் கொல்லப்பட்ட மக்களுக்கு செலுத்துகின்றேன்.

- திவாகர்
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
thamilchelvanai thuppakki thookkath thoondiya singala ranuvathaal kollappatta thamilargalukkum porali thamilchelvanukkum veeravanakkam
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
அடே அனானிப் பிண்டங்களே!

தான் ஏற்ற கொள்கையின் வெற்றிக்காக உயிர்த்தியாகம் செய்ய வேண்டியிருந்தால் அதை மகிழ்வோடு ஏற்கக்கூடிய, பெரும் பேறாகக் கருதக் கூடியவர்தான் எங்கள் தலைவர் வீரமணி..

தமிழீழம் எங்கள் சகோதர மக்க்களின் தேசம் - அவர்களின் வாழ்வுரிமைக்கு குரல் கொடுப்பதால் உயிர் போகுமெனினும் உரக்கத் த குரலை உயர்த்திவிட்டு மடியும் வீரம் வீரமணிக்கு உண்டு..

முடிந்தால் பெயரோடு வந்து உன் வீரத்தை இங்கே காட்டு...
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
புலிகளின் பிரிகேடியர் தமிழ்ச் செல்வனின் மரணம்

யாருடைய மரணமும் மனித நாகரீகம் கொண்ட கண்ணியம் கொண்ட எவருக்கும் உவப்பானவையல்ல. வழிபடுதற்குரியனவல்ல.

நேற்றைய தினம்(02-11-2007) அதிகாலை 6.00 மணியளவில் கிளிநொச்சி இரணைமடு மற்றும் திருவையாற்றில் நிகழ்ந்த விமானக் குண்டு வீச்சில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு புலிகளின் முக்கியஸ்தர்கள் வீரச்சாவடைந்ததாக புலிகளின் சமாதான செயலகம் அறிவித்திருந்தது.

மனித மரணங்களை வன்முறை மனநோயாளிகள்தான் விரும்புவார்கள். நாம் அனைத்து வகைப்பட்ட மனித மரணங்களையும் வெறுக்கிறோம்.

ஆனால் புலிகள் மனிதர்களின் மரணங்களை மூலதனமாக்குபவர்கள். அதை வைத்து பணம் பண்ணுபவர்கள். அதை வைத்து தமது அதிகாரத்தை ஸ்தாபிப்பவர்கள். வாழ்வின் மீது நம்பிக்கையற்றவர்கள். மரணங்களை பூசிப்பவர்கள். உயிரோடு இருக்கும் மனிதர்களை வெறுத்து நடுகற்களை வழிபடுபவர்கள்.

சகோதர மாற்று தமிழ் கட்சிகளின் தலைவர்களை கொன்று விட்டு குதூகலித்தவர்கள். இந்தியாவின் முன்னாள் தலைவர் ரஜீவ்காந்தி அவர்களை படுகொலை செய்துவிட்டு அதனை வன்னியில் இனிப்பு கொடுத்து கொண்டாடியவர்கள். அப்பாவி தமிழ் மக்கள் மாத்திரமல்ல முஸ்லீம், சிங்கள மக்கள், நாட்டின் தலைவர்கள், கல்விமான்கள், சமூக சேவையாளர்கள், சாதாரண பிரஜைகள் என பலரையும் கொன்றுவிட்டு குதூகலிப்பவர்கள். மக்களின் அவலங்களில் குளிர்காய்பவர்கள்.

மாற்று தமிழ் கட்சியினரை துணை இராணுவக் குழுக்கள் என விரோதமும் வன்மமும் தொனிக்க விளிப்பவர் பிரிகேடியர் சு.ப. இவர் எத்தனை பேரின் குரூர மரணங்களில் நேரடியாக சம்பந்தப்பட்டவர், எவற்றுக்கெல்லாம் குதூகலித்தவர் என்பதை இன்னோரிடத்தில் விரிவாக ஆராய்வோம்.

இந்திய அமைதி காப்பு படை இலங்கையில் நிலை கொண்டிருந்தபோது யாழ்ப்பாணத்தில் புலிகள் நிகழ்த்திய பயங்கரவாத தாக்குதல்களில் இவர் முன்னணியில் நின்றவர். இவருடைய குரூரங்களாலும், கொலை மனோபாவத்தாலும் பிரபாகரனின் விருபத்திற்கும், நம்பிக்கைக்கும் உரிய ஆளாக தன்னை மாற்றிக் கொண்டார்.

தமிழ்ச்செல்வன் புலிகள் இயக்கத்தில் இருந்த மிதவாத தலைவரென சிலர் அவருக்கு முலாம் பூச முனைகிறார்கள். அவருடைய வசீகரமான முகத்தோற்றத்திற்கும் நஞ்சும் அயோக்கியத்தனமும் நிறைந்த அவருடைய மனதிற்குமிடையே பாரிய இடைவெளி நிலவியது என்பது பலருக்கு தெரியாத சங்கதி. அவர் ஒரு பாசிச இயக்கத்தின் அரசியல் பேச்சாளராக வெளிவேஷம் போட்டபடி உலா வந்தார் என்பதை பலரும் அடிக்கடி மறந்து விடுகிறார்கள்.

இந்த பாசிச இயக்கத்தின் பிரமுகர்கள் அவர்களின் வெளிவேஷ சிரிப்பு இங்கிதம் என்பவற்றை வைத்துக் கொண்டு இனப்பிரச்சனையை அணுகுபவர்கள் தமிழ் மக்களின் வாழ்க்கையை தாம் நரக படுகுழிக்கு இட்டுச் செல்கிறோம் என்பதை உணர்ந்து கொள்வதில்லை.

அவர் ஊடகவியலாளர்களுக்கு அதிகூடிய பேட்டிகளை அளித்தவர், அதிக பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றியவர், சமாதானத்தில் ஆர்வம் கொண்டிருந்தவர் என்று அகிம்சை முகம் ஒன்றை கொடுக்க பலரும் பிரயத்தனம் செய்கிறார்கள்.

தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகவும், சமாதானத்திற்காகவும் ஏனைய சமூகங்களுடன் சகவாழ்விற்காகவும் இதயபூர்வமாக உழைத்த பல நூற்றுக்கணக்கான தலைவர்களை, சமாதான ஆர்வலர்கள், கல்விமான்கள், சமூக ஆர்வலர்களை, போராட்டக்காரர்களை படுகொலை செய்த ஒரு பாசிச இயக்கத்தின் வேஷம் கட்டப்பட்ட பிரதிநிதி. இந்த அக்கிரமங்களையெல்லாம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட, இந்த அக்கிரமங்களில் பல சந்தர்ப்பங்களில் நேரடியாக சம்பந்தப்பட்ட ஒருவர்தான் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன்.

ஒருவர் வெள்ளை உடையையும், முகத்தை மலர்வாகவும் வைத்திருந்தால் அவர்கள் சமாதானத் தூதுவர்கள் என்றில்லை. அயோக்கியர்களும் இத்தகைய வேடத்தை தாங்க முடியும்.

புலிகள் இயக்கம் சதிகளும், குழிபறிப்புக்களும் நிறைந்தவொரு இயக்கம் என்பதை நாம் மனதில் இருத்த வேண்டும். அண்மைக்காலமாக பல சதிகள் குழப்பங்கள் புலிகள் இயக்கத்தினுள் நிகழ்வதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பது பலருக்கும் தெரிந்த சங்கதிகளே. கடற்புலிகளின் தளபதி கேணல் சூசை படகு விபத்தில் படுகாயமடைந்தது ஒன்றும் தற்செயலான நிகழ்ச்சியல்ல என்றும் பேசிக்கொள்ளப்படுகிறது. இதேவேளை பொட்டம்மான், தமிழ்ச்செல்வன் புலிகளின் வேறு தளபதிகளுக்கிடையே முரண்பாடுகள், காழ்ப்புணர்வுகள் இருந்து வந்ததும் பரகசியம்.

குழிபறிப்பு என்பது புலிகளின் வரலாறு முழுவதும் காணப்படும் சமாச்சாரம். 70 களின் பிற்பகுதியில் பக்கத்தில் பாயில் படுத்திருந்த சகாக்களை நள்ளிரவில் கொல்லைபுற வாழை தோட்டத்திற்கு அழைத்துச் சென்று படுகொலை செய்தவர் தேசிய தலைவர் பிரபாகரன். அது மாத்திரமல்லாமல் அவர் முன்னர் அங்கத்துவம் வகித்த டெலோ இயக்கத்தின் தலைவர்களான குட்டிமணி, தங்கத்துரை ஆகியோர் 80 களின் முற்பகுதியில் தீவிரமாக அரச படைகளால் தேடப்பட்ட போது அவர்கள் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயல்கையில் அவர்கள் பற்றிய தகவல்களை அளித்து அவர்கள் கைது செய்யப்படுவதற்கு உடந்தையாக இருந்தவர். பிரதித்தலைவராக இருந்த மாத்தையா தனது பதவிக்கு சவாலாக எழுந்துவிடுவாரோ என அஞ்சி அவரை தீர்த்துக் கட்டியவா. யாழ்ப்பாணத்தில் புலிகள் நிகழ்த்திய தாக்குதலொன்றில் செல்லக்கிளியை பின்புறமிருந்து சுட்டவர்.

மன்னாரில் செல்வாக்குமிக்க புலி தளபதியான விக்டரை பின்புறமிருந்து சுட்டு படுகொலை செய்வதவர்களுக்கு தூண்டுகோலாக இருந்தவர். தேசியத் தலைவரின் இந்தக் கலையை, கைவண்ணங்களை புலிகளின் அடுத்த நிலை தலைவர்கள் கற்றிருக்கமாட்டார்கள் என்றில்லை.

தமிழ்ச்செல்வன் பரவலாக சின்டுமுடியும் ஆள் என பரவலாக புலிகள் இயக்கத்தினுள் கருதப்பட்டிருந்தார். அவருக்கு அளிக்கப்படும் மித மிஞ்சிய முக்கியத்துவம் புலிகள் இயக்கத்தினுள்ளே காழ்ப்புணர்வுகளையும் குரோதங்களையும் அதிகப்படுத்தியிருந்தது. மற்றவர்களின் குற்றம் குறைகளை தலைவருக்கு போட்டுக்கொடுப்பவர் என பெயர் பெற்றிருந்தார்.

விமான குண்டுவீச்சை துல்லியமாக நடத்துவதற்கு வன்னியில் இருந்து கிடைத்த தகவல்களும் உதவியிருந்தன என படைத்தரப்பு செய்தி குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.

தகவல்களை அளிப்பதற்கு எத்தனையோ இலகுவான வழிகள் இருக்கின்றன. எனவே தமிழ்ச்செல்வனின் மரணத்தில் உள்வீட்டு பங்களிப்புக்களையும் மறுதலித்துவிட முடியாது.

தவிர மாற்று கட்சிகளின் தலைவர்களை, உறுப்பினர்களை, சர்வதேச தலைவர்களை, உள்நாட்டு தலைவர்களை படுகொலை செய்யும் போது அவர்கள் பெரும் எடுப்பில் மகிழச்சி ஆரவாரங்களை செய்வார்கள். அதேபோல் தமது கீழ்மட்டத்திலுள்ள உறுப்பினர்களை தற்கொலையாளிகளாக மாற்றி அவர்கள் வெடித்து சிதறும் போது அவர்களின் இரத்தமும் அவர்களால் கொல்லப்பட்டவர்களின் இரத்தமும் சங்கமமாகும் போது குதூகலிப்பார்கள். அண்மையில் அனுராதபுரத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலிலும் தமது குதூகலிப்பை வெளிப்படுத்தியிருந்தார்கள்.

இந்த குதூகலங்களுக்கு இடையே குறிப்பிட்ட சில மரணங்கள் மட்டும் மிகைப்படுத்தப்பட்ட சோகத்துடன் நினைவு கூரப்படும். அண்மையில் புலிகளின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கத்தின் மரணமும் தற்போது தமிழ்ச்செல்வனின் மரணமும் அவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மற்றவர்களின் உயிர்கள் அற்பமானவை என்றும் புலிகளின் தலைவர்களின் உயிர்கள் உப்பரிகை துயரங்கள் போலவும் ஏதோ சமூகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகவும் சித்தரிக்கப்படுகின்றது. புலிகள் எட்டடி பாய்ந்தால் புலிகளின் ஊதுகுழலான தமிழ் ஊடகங்களோ பதினாறடி பாய்வார்கள். தமிழர்களுக்கு ஒரேயொரு ரட்சகர் இருந்தார் அவரும் போய்விட்டார் என்பது போல அரற்றுவார்கள்.

யாருடைய மரணமும் மனித நேயம் கொண்டவர்களுக்கு, நாகரீகமான மனிதர்களுக்கு உவப்பானவையல்ல. தமிழ்ச்செல்வனின் மனைவி பிள்ளைகள் உற்றச் சுற்றத்தை பொறுத்தவரை அவர்களுக்கு இது ஒரு துயரம். இதேபோன்றதுதான் புலிகளால் கொல்லப்பட்ட பல்லாயிரக் கணக்கானவர்களின் உறவுகளினதும், உற்ற சுற்றத்தாரினதும் துயரம்.

வஞ்சகமும், சூழ்ச்சிகளும் போலித்தனங்களும் முதலில் எமது சமூகத்தில் இல்லாதொழிய வேண்டும். சிலரது மரணங்களை ஈடு செய்ய முடியாதது என்பதும், பலரது மரணங்களை துச்சமாக எண்ணுவதுமான இழிநிலை எமது சமூகத்தில் ஒழிந்தாக வேண்டும்.

சிறிதோ பெரிதோ சமூகத்திற்காக தம்மை அர்ப்பணித்தவர்களின் உயிர்த்தியாகங்களும் மதிக்கப்பட வேண்டும். சமூகம் தொடர்பில் ஒழிவு மறைவற்ற செயற்பாடுகள் இருக்க வேண்டும். அப்போதுதான் எமது சமூகம் விமோசனத்தை நோக்கிச் செல்ல முடியும். திறந்த வெளிப்படையான அணுகுமுறையில்லாத ஏகபிரதிநிதித்துவ பாசிச கருத்தியல் செயற்பாடு என்பன தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக செழுமையான ஆக்கபூர்வமான, பல நூற்றுக்கணக்கான பங்களிப்புக்கள் கருத்துக்களை, செயற்பாடுகளை நிராகரிக்கிறது. உடல் மீதியின்றி அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கிறது. இது சமூகத்தை மேலும், மேலும் அழிவை நோக்கியே நகர்த்துகிறது. அரசியல், மனித உரிமை, பொருளாதாரம், சமூகம், கல்வி என பல்துறை செயற்பாடுகளின் ஆக்கபூர்வமான தேடலுடனான இயக்கத்தை இது நிராகரிக்கிறது. இதுவே எமது சமூகத்தின் இன்றைய பேரவலம்.

யாருடைய மரணமும் மனித நாகரீகம் கொண்ட கண்ணியம் கொண்ட எவருக்கும் உவப்பானவையல்ல. வழிபடுதற்குரியனவல்ல.

நன்றி.தமிழ்நியூஸ்வெப்
Raghunandhan இவ்வாறு கூறியுள்ளார்…
நாகரீகமற்ற அனானிகளே...

கேவலமாக இல்லையா உங்களுக்கு??
ஜெ வின் ஜெட்டி தோய்த்துப்போடுபவர்களா நீங்கள்??
திராவிட சிசு இவ்வாறு கூறியுள்ளார்…
இலங்கையின் ஆதிகுடிகளான இசுலாமியர்களை கொன்ற கொடியவனான தமிழ்செல்வனின் மரணம் எங்களுக்கு சந்தோசத்தையே தரும்.

இலங்கை ராணுவத்திற்கு நன்றிகள்.
Thamizhan இவ்வாறு கூறியுள்ளார்…
பிறப்பால்,வளர்ப்பால்,வாழ்வால் தடுமாறியவரிடம் தரத்தை எதிர் பார்த்து ஏமாந்தது போதும்.
தமிழர்களே பட்டதுங் கெட்டதும் போதும்!
வெளியேறி விடுங்கள்.
இனமானங் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
பணமும்,பதவியும் பகட்டும் வாழ்க்கையல்ல!
nagoreismail இவ்வாறு கூறியுள்ளார்…
தமிழ்செல்வனுக்கு அஞ்சலி செலுத்தும் பதிவோடு தொடங்கும் இந்த வார நட்சத்திர பதிவர் பிரின்ஸ் என் ஆர் சமா அவர்களுக்கு வாழ்த்துக்கள் - நாகூர் இஸ்மாயில்
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
இசுலாமியர்கள் ஆதி குடிகளா? அவர்கலை கேட்டால் தாங்கள் அரபு நாட்டில் இருந்து வந்தவர்கள் என்று அலாவா கூறுவார்கள், அவர்கள் வந்தார்கலா அலாது அவர்களது உயிர் அணுக்கள் வந்ததா யாருக்கு தெரியும்:-))))))))))
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
செஞ்சோலையில் பிஞ்சுகளை குதறியபோது கொண்டாட்டம் போட்ட தமிழர்கள் சிலர் இருக்கின்றார்கள். சிங்களம் தமிழரை கொல்லும் போதெல்லாம் கொண்டாட்டம் போடும் தமிழர்கள் சிலர் இருக்கின்றார்கள். அவர்களுக்கெல்லாம் இப்போதும் கொண்டாட்டம் தான். எலும்புத்துண்டுகளை சிங்களம் தூக்கி வீச எட்டி கவ்வித்திரியும் எச்சில் பொறுக்கிகள் இப்படித்தான் எழுதுவார்கள். ஆயிரமாயிரம் மக்கள் கதறித்துடிக்கின்றார்கள். அவர்களில் நானும் ஒருவன்.


கோத்தபாய வெடிகொளுத்தி கொண்டாடும் கூட்டத்தில் இருப்பவனுக்கு தமிழில் எழுத தெரிந்தால் அவனை தமிழன் என்று தமிழ் மக்கள் நம்பமாட்டார்கள். ராணுவத்துக்கு நன்றி தெரிவிக்கின்றான் ஒருவன். அது திராவிட சிசுவாம். பிக்குவுக்கு பிறந்தது திராவிட சிசு என்று சொல்லும் கேவலத்தை கூடவா தமிழர்கள் புரிந்து கொள்ளமாட்டார்கள்?
பிறைநதிபுரத்தான் இவ்வாறு கூறியுள்ளார்…
அனானிப்பேதைகளின் அர்த்தமற்ற பிதற்றல்களை புறந்தள்ளி வீரத்தமிழன் தமிழ்செல்வனுக்கு என் கண்ணீர் அஞ்சலியை காணிக்கை ஆக்குகிறேன்..
பிறைநதிபுரத்தான் இவ்வாறு கூறியுள்ளார்…
'அம்மா'வின் புடவைக்குள் ஒளிந்துக்கொண்டு - அய்யா வீரமணியின் அறிக்கையில் குதர்க்கம் காணும் - கோழை ஜந்துக்களுக்கு
உரைக்கிற மாதிரி எழுதுவதா அல்லது - 'குரைக்கிறதுகள்' குரைத்துவிட்டு போகட்டும் என்று அப்பன் பெயர் - அடையாளம் இல்லாத அனானி புலம்பல்களை புறந்தள்ளுவதா?
ராயன் இவ்வாறு கூறியுள்ளார்…
ஒரு இலட்சியத்திற்காக மரணித்த மாவீரகளின் வாழ்வும், மாமனிதர்களின் செயல்பாடுகளும் காலம் கடந்தும் உலகில் நிலைக்கொள்ளும். அவர்களது பெயரும் நிலைப்பெறும்.

அர்த்தமற்ற, நியாயமற்ற வீண் வார்த்தைப் பிரயோகங்களை பிரயோகிக்கும் அனானிகளின் பெயரையும் செயலையும் யாரடா மதீப்பர்? (சொந்தப் பெயரையே மறைத்து வாழும் வாழ்க்கையல்லோ உமக்கு)
சீனு இவ்வாறு கூறியுள்ளார்…
//
தான் ஏற்ற கொள்கையின் வெற்றிக்காக உயிர்த்தியாகம் செய்ய வேண்டியிருந்தால் அதை மகிழ்வோடு ஏற்கக்கூடிய, பெரும் பேறாகக் கருதக் கூடியவர்தான் எங்கள் தலைவர் வீரமணி..

தமிழீழம் எங்கள் சகோதர மக்க்களின் தேசம் - அவர்களின் வாழ்வுரிமைக்கு குரல் கொடுப்பதால் உயிர் போகுமெனினும் உரக்கத் த குரலை உயர்த்திவிட்டு மடியும் வீரம் வீரமணிக்கு உண்டு..//

ஐயையோ! ஆட்ட கேக்காமலேயே வெட்டிபுட்டீங்களே!!!
தமிழ் குரல் இவ்வாறு கூறியுள்ளார்…
இங்கே சிங்கள பேரினவாத்திற்கு சப்பை கட்டும்... வெட்கம் கெட்டவர்களே...

இப்படி எழுதுவதற்கு... உங்கள் வீட்டு பெண்களை கூட்டி கொடுக்கலாம்... சிங்கள காட்டுமிராண்டிகளுக்கு...

சங்கராச்சாரிக்கும்... ஜெவுக்கும் மாமா வேலை பார்க்கும் சோ போன்ற மனநோயாளிகள்தான்... தமிழனத்தின் எதிரிகள்...
Kathir இவ்வாறு கூறியுள்ளார்…
அனானிப்பேதைகளின் அர்த்தமற்ற பிதற்றல்களை புறந்தள்ளி வீரத்தமிழன் தமிழ்செல்வனுக்கு என் கண்ணீர் அஞ்சலியை காணிக்கை ஆக்குகிறேன்.

தோழர் NRSAMA அவர்களுக்கு இந்த பார்ப்பன பிண்டங்கள் எழுதுவதை எல்லாம் ஏன் இங்கு வெளியிடுகிறீர்கள். ஏற்கெனவே பெரும்பாலான வலைத்தளங்களில் வாந்தி எடுத்து உளறிக்கொட்டி வைக்கிறார்கள். இங்கும் அவர்களை அனுமதித்தால் நம்முடைய பகுதி நேரம் அவர்களுக்கு பதிலளிக்கவே சரியாக இருக்கும். இந்த விச ஜந்துக்களை இங்கு விடாதீர்கள்
Kathir இவ்வாறு கூறியுள்ளார்…
'அம்மா'வின் புடவைக்குள் ஒளிந்துக்கொண்டு - அய்யா வீரமணியின் அறிக்கையில் குதர்க்கம் காணும் - கோழை ஜந்துக்களுக்கு
உரைக்கிற மாதிரி எழுதுவதா அல்லது - 'குரைக்கிறதுகள்' குரைத்துவிட்டு போகட்டும் என்று அப்பன் பெயர் - அடையாளம் இல்லாத அனானி புலம்பல்களை புறந்தள்ளுவதா?

//
மிக மிக நன்று.
தேரியூரான் இவ்வாறு கூறியுள்ளார்…
இசுலாமியர்கள் ஆதி குடிகளா? என்று கேட்ட அனானியே! இந்து மட்டும் வந்தேரி இல்லையா?

உயிரை மட்டுமே பெரியது என நினைத்து ஓலம் இடும் அனானிகளே! உன் உலரல் உனக்குள் கூட கேட்க இயலாத உன் இழிநிலை சோகமே!
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
//உயிர் போகுமெனினும் உரக்கத் த குரலை உயர்த்திவிட்டு மடியும் வீரம் வீரமணிக்கு உண்டு..//

அட இப்பேற்பட்ட வீரத்திலகமா நம்ம ஆளு?அப்ப இது இங்கேயே இரட்டை குழல் துப்பாக்கியின் ஒரு குழலாக ஜெ வோடயோ,கலைஞரோடயோ சேர்ந்து வெடிக்கறதுக்கு பதிலா ஈழம் போய் இரட்டை குழல் பீரங்கியின் ஒரு குழலாக ப்ரோமஷன் பெற்று வெடிக்கலாமே.நாமெல்லாம் அப்போ இந்த முகத்துக்கு நிறைய வீர வணக்கம் போடுவோமில்லை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்!

இன்றொரு வரலாற்றுக் குறிப்புநாள். 'பெரியார்' படத்தில் பெரியாரின் மீது செருப்பு வீசப்படும் காட்சி அனைவருக்கும் நினைவிருக்கும். திரையரங்கில் பெரும் கைதட்டல்களை அள்ளிய காட்சிகளில் அதுவும் ஒன்று. திரைப்படத்திற்கான கால சமரசம் உள்ளிட்ட பிற காரணங்களுக்காக அந்தக் காட்சியில் சில மாற்றங்கள் உண்டு. உண்மையில் நடந்த நிகழ்வு இன்னும் சுவாரஸ்யமானது.
ஆண்டு-1944: கடலூர் மாவட்டம் உள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் 'தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு' நடைபெற்றது. கடும் மழையிலும் தந்தை பெரியார் எழுச்சியுரையாற்றுகிறார். கூட்டம் முடிந்து பெரியார், தொண்டர்கள் புடைசூழ கைவண்டி ரிக்சாவில் வைத்து திருப்பாதிரிப்புலியூர் தொடர்வண்டி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

பெரியாரும் தோழர்களும் கடிலம் நதி பாலத்தைக் கடக்கும்போது எங்கும் இருட்டு சூழ்ந்திருக்கிறது. அப்போது பெரியாரின் மீது பாப்பு வீசப்படுகிறது. தோழர்கள் பாம்பு, பாம்பு எனக் குரல்கொடுக்க, பின்னர் அது தண்ணீர் பாம்பு என்பதால் தொடர்ந்து பாலத்தைக் கடந்துவிட்டனர். சிறிது தூரம் சென்றபின், பெரியார் வண்டியைத் திருப்பச் சொல்லியிருக்கிறார். வந்த திசையில…