முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இருக்கு...(சில நல்ல எழுத்துக்களால் ஆன கெட்ட வார்த்தைகள்)

'ந.முத்து'-வின் (நா.முத்துக்குமார் அல்ல) "இருக்கு" கவிதை குறுநூல்.. படித்து நீண்ட நாட்களாகியும், அதற்கொரு முக்கியத்துவம் தரவேண்டி நட்சத்திர வாரத்தில்தான் வலையேற்ற வேண்டும் என்று நினைத்திருந்தேன்.
பலர் படித்திருக்கக்கூடும்.. படிக்காத சிலருக்காக...
சில கவிதைகள்.

(நான் எழுதுற 'ஒன்னுக்குக் கீழ ஒன்னு' மாதிரி இல்லாம, உண்மையிலேயே கவிதைதாங்க இது!)

இருக்கு...
(சில நல்ல எழுத்துக்களால் ஆன கெட்ட வார்த்தைகள்)

நீங்கெல்லாம்
சேத்துல கையை
வச்சாத்தா
நாங்கெல்லாம்
சோத்துல கையை
வைக்க முடியும்னு
சொல்லுறான்
கூத்துல பொறந்தவன்.
எலேய்!
சேத்துல
கைய வச்சதால
எங்க கையெல்லாம்
எரிஞ்சுகிட்டிருக்கு
சூத்துல
கைய வச்சதால
உங்க கையெல்லாம்
சொறிஞ்சிகிட்டிருக்கு
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

ஒரு துளி வியர்வைக்கு
ஒரு பவுன் தங்கக் காசு
கொடுத்தது
தமிழல்லவா...
-திரைப்படப் பாடல்

எட்டுவயசுப் புள்ள
ஒட்டுன தீப் பெட்டில
ஒண்ணு, ரெண்டு
ஒழுங்கா ஒட்டலைனு
ஒருநா(ள்) கூலிய
புடுச்சிட்டுத் தர்ரானுக
கூறுகெட்ட கூ....யானுக
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

குண்டி காய்ஞ்சு
கிடக்கிற ஊருக்குள்ள
எண்ணெக் கிணறு தவிர
எல்லா இடத்திலேயும்
குண்டப் போடுறானுகளேன்னு
நா பொலம்புறத கேட்டு
அப்பாத்தா சொன்னா

"இவனுகளத்தா நம்மூர்ல
பொனம் விழுந்த ஊட்டுலயும்
பொம்பளைக்கு அலையறவுனு
சொல்லுவாங்க"
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

கட்டுன பொண்டாட்டிய
காசுக்காக
கண்டவன்கிட்ட உட்டுட்டு
அப்புறம்
அரிப்பெடுக்கறப்போ
காசு கொடுத்து
போன கதையா இருக்கு
அரசாங்க சொத்த
அடுத்தவனுக்கு விக்கிறதும்
அவன்கிட்டேயே
கடன் கேட்கிறதும்
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

குளித்துவிட்டு
கோயிலுக்குள்
வரச் சொல்லியிருக்கிறாய்
சரி
எங்களையும்
விடச்சொல்
எல்லோரும்
குளிக்கிற
குளத்தில்
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

தங்கச்சி குளிக்க
தடுக்கு கட்டவக்கில்ல
தாயோளி
செங்கல்ல தூக்கிட்டு
போறான்
கோயில் கட்ட
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

குருடன் பார்க்கிறான்
செவுடன் கேட்கிறான்
முடவன் நடக்கிறான்
அரவாணி புள்ளை பெக்கிறான்

பிரார்த்தனை
கூட்டத்திற்குப்
போக முடியாமல்
மூட்டு வலியால்
படுத்திருக்கிறார்
போப்பாண்டவர்

(எனது குறிப்பு: இதில் ஊனமுற்றவர்களையோ, மூன்றாம் பாலினரையோ ஏகடியம் பேசும் நோக்கம் இல்லை.. மூட நம்பிக்கையை சாடுவதே இதன் நோக்கம் என்றே நான் கருதுகிறேன். தவறான புரிதலுக்கு இடம் கொடுக்க வேண்டாம்)
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

மாதவிலக்கின்
மஞ்சள் துணி மேல்
விந்துக்கறை போல்
உந்தன்
கவிதை.
எந்தப் பயனும்
இல்லாமல்.
(குறிப்பு: உன் அரிப்புத் தீர்ந்திருக்கும்)
வாழ்வானுபவக் கவிகளுக்கு...
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

உனக்கு சொரணை
இருக்கிறதா?
என்று கேட்டுவிட்டான்.
இருக்கிறது என்று
சொல்ல முடிவதில்லை.
எல்லாவற்றையும் பார்த்து
கவிதை மட்டுமே
எழுதிக் கொண்டிருப்பதால்.

நன்றி:
ந.முத்து
63, பொன்னி நகர்,
கோவை-37

ஓவியம்: குமரகுரு
உரிமை: வாங்கியவருக்கு.
(அதனால் தான் தைரியமாக வலையேற்றினேன்)
சனவரி 2003 ; விலை: ரூ.5/-

கருத்துகள்

♠ யெஸ்.பாலபாரதி ♠ இவ்வாறு கூறியுள்ளார்…
http://piditthathu.blogspot.com/2005/12/blog-post.html

தம்பி மேற்காணும் சுட்டியை சொடுக்கிப் பார்க்கவும். எப்படி ரெண்டு பேரும் கிட்டத்தட்ட ஒரே வேலையை செய்திருக்கிறோம்...?!
♠ யெஸ்.பாலபாரதி ♠ இவ்வாறு கூறியுள்ளார்…
சொல்ல மறந்த இன்னொரு முக்கியமான விசயம்.. இந்த முத்து என நெருக்கிய தோழன்.
cheena (சீனா) இவ்வாறு கூறியுள்ளார்…
யதார்த்தமான கவிதை. நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை எளியவர்களின் வெள்ளந்தியான வார்த்தைகளில் கவிதையாக வடித்திருப்பது பாராட்டத்தக்கது. நிகழ்வுகளைச் சாடும் வார்த்தைகளுக்கு வலிமை அதிகம்.(கெட்ட வார்த்தை என்பது மனிதனுக்கு மனிதன் வேறுபடும்).

//மாதவிலக்கின்
மஞ்சள் துணி மேல்
விந்துக்கறை போல்
உந்தன்
கவிதை.
எந்தப் பயனும்
இல்லாமல்.
(குறிப்பு: உன் அரிப்புத் தீர்ந்திருக்கும்)//

கவிதை எனில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது அழகாக விளக்கப் பட்டுள்ளது.
nagoreismail இவ்வாறு கூறியுள்ளார்…
சமுதாய அவலங்களை கடுமையாக சாடி இருக்கிறார் - படித்தவுடன் 'மாதவிலக்கின்..' என்று ஆரம்பிக்கும் கவிதையை போலில்லாமல் பலன் இருக்கும் என்று நினைக்கிறேன் - நாகூர் இஸ்மாயில்
குசும்பன் இவ்வாறு கூறியுள்ளார்…
"தங்கச்சி குளிக்க
தடுக்கு கட்டவக்கில்ல
தாயோளி
செங்கல்ல தூக்கிட்டு
போறான்
கோயில் கட்ட"

எப்பங்க கோயில் கட்டி இருக்கோம், இடிச்சுதானே இருக்கோம்:)
ஒருவேளை குஷ்பு கோயிலை சொல்லி இருப்பாரோ!

அனைத்தும் மிக அருமையாக இருக்கு.
ILA(a)இளா இவ்வாறு கூறியுள்ளார்…
//ஒருவேளை குஷ்பு கோயிலை சொல்லி இருப்பாரோ!//
அதையும்தான் இடிச்சாச்சே..
செல்லி இவ்வாறு கூறியுள்ளார்…
"உண்மை கசக்கும்" என்பார்கள்.ஏற்க மறுப்பார்கள்.
உண்மைநிலைச் சொல்கிறது இக் கவிதைகள்
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
பாலாண்ணனுக்கு,
"நம்மைப் போல நெஞ்சம் கொண்ட....."

ஹிஹிஹி

நன்றி...நாகூர் இஸ்மாயில், இளா, குசும்பன், சீனா
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
ராமன் கோயிலைக் கட்டத்தான் செங்கல் தூக்கிக்கிட்டு கைவேலை (கரசேவை) பார்க்கப்போறோம்னு கிளம்பினாங்க! அதைத் தான் சொல்றாரு முத்து!
மஞ்சூர் ராசா இவ்வாறு கூறியுள்ளார்…
ஒவ்வொன்றும் நிதர்சனம்.

கவிதைகள் என்ற மரபை தாண்டியவை

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எச்சரிக்கிறான் சரவணன்!

எச்சரிக்கிறான்
சரவணன்!
இது செய்யத்
துணிந்தவர்கள்...
எதுவும் செய்யத்
துணிவார்கள்!

உயர்கல்விக்கு
நுழையும் போதே
மருத்துவரின்
உயிரை உறிஞ்சுகின்றன
ஊசிகள்!எச்சரிக்கிறான்
சரவணன்!
இந்தியாவெங்கும்
சென்று பிணமாகத்
தயாரானால்
எழுதுங்கள்
நீட் தேர்வு!

முனைவராகும் முன்னே
முறிக்கப்படும்
ஆய்வு இறக்கைகள்!
கேட்காமலே இட ஒதுக்கீடு
வேமுலாவுக்கு அடுத்து
இடுகாட்டில்!

'என் சாவுக்கு யாரும் காரணமில்லை'
என்ற கடைசி வரிகளோடு
'யுவர்ஸ் சின்சியர்லி'க்குப் பிறகு
பெயர் சேர்க்க வசதியாய்
அய்.அய்.டி.களில் கிடைக்கின்றன
கடித நகல்கள்!

இழுத்தடிக்கும் பூணூல்களிடமிருந்து
விடுபட
சென்ட்ரல் யுனிவர்சிட்டி
கேம்பஸ் ஸ்டோர்களில்
குறைந்த விலையில்
தூக்குக் கயிறுகள்!

உயர்குடிக்கே
உயர்கல்வி !
பிறர் நுழைந்தால்
'உயிர்' குடிக்கும்
என்பதறிக!

பனியன் தைக்க
ஊசியெடுப்பவன் பிள்ளைக்கு
உயர் மருத்துவனாகி
ஊசியெடுக்க
ஆசையா?

தூண்டியது
நடக்காவிட்டால்
தூண்டியவர்களே
ஆயுதம்
தூக்குவார்கள்!
நூலிய சிந்தனை
தூக்கத் தொடங்கியிருக்கிறது
ஊசிகளை!

நூலியம்
பதறுகிறது...
கடிதத்தில்
கையெழுத்திடவும்
கணம் தரமுடியாது.

எச்சரிக்கிறான்
சரவணன்!
நூல்கள்
அ…

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ஜெயா தொலைக்காட்சிக்கு என் இரங்கல்!

ஜெயா தொலைக்காட்சியில் மூடிக் கிடக்கும் போயஸ் தோட்டத்தின் கதவுகளைக் காட்டியபடி, முதலமைச்சரின் மறைவுச் செய்தி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆம்... ஜெயா தொலைக்காட்சிக்கு இப்போது மட்டுமல்ல, எப்போதும் அவர் தான் முதலமைச்சர்.


அது காலம் முழுக்க ஜெயலலிதா அம்மையாரின் சிறப்புகளைச் சொல்வதற்காகவே உருவாக்கப்பட்டு செயல்பட்டு வரும் தொலைக்காட்சி. தேர்தல் தோல்வி என்றால் கூட அடுத்த சில நிமிடங்களில் தேர்தல் செய்திகள் கூட அதில் வராது. முதலமைச்சர் பதவி இல்லையென்றாலும் அதற்கு ஜெயலலிதா தான் முதல்வர். "மக்கள் முதல்வர்" என்ற பெயரை உருவாக்கிக் கொடுத்ததும் அதுதான்.

ஜெயலலிதா மீண்டும் ஜெயித்த போது இரட்டிப்பு போனசெல்லாம் வழங்கி மகிழ்ந்திருக்கிறார். பணியாற்றிய அனைவருக்கும், பதவி வேறுபாடற்று ஒரு லட்சம் ரூபாய் போனஸ் வழங்கியெல்லாம் கூட கொண்டாடியிருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அதிமுக என்ற கட்சியினுடையது என்றெல்லாம் அந்தத் தொலைக்காட்சியைச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. பிற கட்சி ஊடகங்களைப் போல, அதன் இரண்டாம் கட்ட, வருங்காலத் தலைவர்களுக்கெல்லாம் முக்கியத்துவம் தராதது. அது முற்றும் முழுதாக ஜெயலலிதா அவர்களின…