முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

November, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சுருட்டப்படுகிறது சேலம் உருட்டாலை!

நட்டத்தில் இயங்குகிறதென்று சேலம் உருட்டாலை தனியாருக்குத் தாரை வார்க்கப்படுகிறது மோடி அரசால்! இந்தியப் பணத்தையே ஏகபோகமாக தனியார்க் கும்பலுக்குத் தாரைவார்த்துவிட்டவரிடம் இதை எல்லாம் எதிர்பார்க்காமலா இருக்க முடியும்? பா.ஜ.க. அரசு தான் அரசுப் பங்குகளை விலக்குவதெற்கென்றே தனி அமைச்சகம் போட்டு வேலை பார்த்த அரசாயிற்றே! எங்க ஊருல மேங்கோப்பு பிரிப்பது என்பதே தனித் தொழில்! பழைய வீடுகளை இடித்து, அதில் தேறக்கூடியதை விற்பது. அப்படித் தான் அரசின் நிறுவனங்களையெல்லாம் கூறுகட்டி விற்கத் தொடங்கினார்கள். மேங்கோப்பு பிரிக்கப்படும் வீடுகள் என்பவை, இனி பயன்படுத்த முடியாத நிலையிலிருப்பவை. வீட்டு உரிமையாளருக்கு அதன் இறுதி நிலையும் பயன்படும். ஆனால், இவர்கள் பேய் புகுந்த வீடு என்று பிராடு கிளப்பி, மொத்தமாக சல்லிசாக ஆட்டையைப் போடும் அயோக்கியக் கும்பலைச் சேர்ந்தவர்கள். பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தி, நாட்டை நெட்டுக் குத்தலாக்கப்போகும் இந்த பொருளாதாரப் புலிகளும், தனியாருக்கு எல்லாவற்றையும் விற்பதற்கு போட்டிபோடும் இந்த அரசுகளும், அடிப்படையான நம் கேள்விக்கு பதில் சொல்வதே இல்லை. நட்டத்தில் இயங்குகிற நிறுவனத்தை, அரசுக்கு உ…