முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

March, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

"தீராத விளையாட்டுப் பிள்ளை" Part -1

"என்னத்த சொல்றது? கலி முத்திடுத்து... பாருங்கோ இந்தப் புள்ளாண்டானை எல்லாரும் என்னமா நம்பிண்டிருந்தா.... இப்போ என்னடான்னா... இப்படி நடந்திண்டிருக்கானே.. ஹிந்து மதத்துக்கே அவமானம். நம்ம மதத்தையே அசிங்கப்படுத்துற இந்த மாதிரி ஆசாமிகளையெல்லாம் என்ன பண்றதுன்னே தெரியலை... ஈஸ்வரா?" என்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை நோக்கி தொழுகிறார்களாம்.

அருணாசலேஸ்வரப் பெருமானின் அருள்பார்வை விழும் திருவண்ணாமலையில் தானே இத்தனையும் நடந்திருக்கிறது. அதைக் கண்டு கொள்ளாதவனிடம் இதைக் கேட்கலாமா? அதெப்படி அவர் கண்டு கொள்வார்? அங்கே நடந்தது சிவலிங்க பூஜைதானே! இதுவாவது அருணாசலேஸ்வரரின் பேரில் அவரது ஊர்க்காரரால் நடந்தது. கண்டுகொள்ள முடியாமல் போய்விட்டது என்று சொல்லலாம்.
இன்னொரு ஈஸ்வரரான மச்சேஸ்வரரின் சன்னதியிலேயே தேவநாத லீலைகள் நடந்தபோதும் அல்லவா அவர் கண்டுகொள்ளாமல் இருந்தார். பிறகு அவரிடம் முறையிட்டு என்ன பயன்?
இங்கேயெல்லாம் கடவுளின் கண்கள் வேலை செய்தனவோ இல்லையோ, கேமராவின் கண்கள் ஒழுங்காக வேலை செய்திருக்கின்றன என்பதை நம்மால் தெளிவாகப் (:P) பார்க்க முடிகிறது.
எல்லா படங்களையும் இவர்களே வாங்கி விநியோகிக்கிறார்கள…