முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2007 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காலி(வி)க்கூட்டத்தின் தாக்குதல் தொடர்கிறது!

காரைக்குடியில் இன்றிரவு தொடர்ந்து தி.க. மற்றும் தி.மு.க.வினர் வீடுகளில் ஆர்.எஸ்.எஸ். காலிகள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் அமைச்சரும் தி.மு.க. மாநில இலக்கிய அணியின் பொறுப்பாளருமான மு.தென்னவன் இல்லத்தில் கார் உடைக்கப்பட்டுள்ளது. மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் தாக்குதல் நடந்த இடங்களை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளார்.

எம் இல்லத்தின் மீது தாக்குதல்! கா(வி)லிக்கூட்டத்தின் கைவரிசை

காரைக்குடி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சாமி சமதர்மம் அவர்களின் (எமது) இல்லத்தின் மீது ஆர்.எஸ்.எஸ். காலிகள் சற்றுமுன் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். ராமன் பாலம் என்ற புரட்டைக் கட்டவிழ்த்துவிட்டு சேது சமுத்திரத் திட்டத்தை தடுக்கும் முயற்சியில் உள்ள காவிக் கூட்டத்திற்கு தமிழர் தலைவர் வீரமணியும் தமிழக முதல்வர் கலைஞரும் விட்ட அறைகூவல்களையொட்டி கலவரமடைந்துள்ள காவிக்கூட்டம் வன்முறையில் இறங்கியுள்ளது. இரு சக்கர வாகனத்தில் வந்த ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. காலிகள் கல்வீசியதில் எமது வீட்டுக் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின. "உங்களையெல்லாம் உயிரோடு விட்டுவைக்கக்கூடாது? விரைவில் முடிவு கட்டுகிறோம்." என்று உரக்கக் கத்தியபடியும், கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்துவிட்டும் வண்டியில் ஓடி ஒளிந்திருக்கிறார்கள். கல்வீச்சில் மாடி வீட்டின் கண்ணடியும், வரவேற்பறையின் கண்ணாடியும் உடைந்து நொறுங்கியிருக்கிறது. படுக்கை அறையில் . காவல் துறையினர் வந்து விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதே நேரத்தில் (இரவு 12 முதல் 12:30க்குள்) காரைக்குடி நகர தி.மு.க. செயலாளர் துரை.கணேசன் மற்றும் இலுப்பக்குடி நாராயணன் ஆகிய

கலைஞர் தலைக்கு விலை! காவிக்கூட்டத்தின் கொக்கரிப்பு

தமிழர்களின் நூற்றாண்டு காலக் கனவான சேது சமுத்திரத் திட்டத்தை ராமன் பெயரைச் சொல்லி நிறைவேறவிடாமல் சதிசெய்யும் காவிக் கூட்டத்திலிருந்து தமிழினத்தின் இன்றைய ராவணனாம் தமிழக முதல்வர் கலைஞர் தலைக்கு விலை வைத்து அறிவிப்பு வெளியாகியிருக்கிறது . நாடெல்லாம் சுழன்று தமிழுணர்வை விதைத்த கலைஞரின் நாவுக்கும், தலைக்கும் கொய்து வருவோருக்கு அயோத்தியின் சாமியார்கள் தங்கம் தருவார்கள் என்று அறிவித்திருக்கிறான் காவி(லி)க் கூட்டமான வி.ஹெச்.பி.யின் கேந்திரிய மார்க்தர்ஷக் மண்டலின் தலைவனும் இருமுறை மக்களவைக்கு பாரதிய ஜனதாவின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவனுமான ராம்விலாஸ் வேதாந்தி என்பவன். இன்று இரவு திருச்சியில் பேசிய தமிழர் தலைவர்அய்யா வீரமணி அவர்களிடம் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. "உங்களால் கலைஞர் தலையில் இருக்கும் முடியைக் கூட அசைக்க முடியாது. முடிந்தால் உன் கைகூலிகளை விட்டு மோதிப்பார்" என்று உரையாற்றியிருக்கிறார். வரட்டும்...வரட்டும்... மீண்டும் ஒரு வெளிப்படையான தேவாசுரப் போராட்டம்.... மோதிப்பார்க்க தயார்! தயார்! ஆரியமே உன் கைக்கூலிகளோடு அணிவகுத்துவா! பார்ப்போம்! திராவிட இனம் திரண்டு வரும்

புது போர்டு! அதே வீடு!!

"கமெண்ட் போடுங்க பரிசை வெல்லுங்க" அப்பாவியார் அறிவிச்ச போட்டியில லக்கியின் பதிவைப் பார்த்துத் தான் கலந்துகொண்டேன். சரி, நாமளும் ஒரு கமெண்ட் போட்டுவைப்போமேனு போனா, அங்க ஒரு பதிவும் போடச் சொல்லிட்டாங்க. சரின்னு வழக்கம்போல "செல்லாத்தா... செல்ல மெயிலாத்தா..." தளத்தில் ஒரு பதிவும் போட்டுட்டு வலைச்சரத்தைத் தொகுக்கப் போயிட்டேன். சனிக்கிழமை வந்தா அப்பாவியோட மெயில்! 'பிரின்சு நீங்க ஜெயிச்சுட்டீங்க... இப்போதைக்கு யார்க்கிட்டேயும் சொல்லாதீங்க... உங்களுக்கான தளத்தை பதிவு பண்ணிட்டு அறிவிப்போம்'னு சொல்றார். நெசம்மா எனக்கு நம்புவதா இல்லையான்னு தெரியல... சரின்னு உறுதிப்படுத்திக்கிட்டு என்ன பெயருன்னு முடிவு செய்ய அய்யாகிட்டயும் தங்கைகிட்டயும் கேட்டேன். முந்தைய ஒருங்கிணைந்த முகவை (ராமநாதபுரம்) மாவட்டத்தில் இயக்கம் வளர்த்ததோடு, எங்கள் குடும்பத்தையே பெரியார் கொள்கையில் உருவாக்கிய, நூற்றாண்டு காணப்போகும் என் தாத்தா என்.ஆர்.சாமி (NRS) அவர்களின் பெயரால் அமைய வேண்டும் என்று கேட்டதும் ஒப்புக்கொண்டு ennares.info பதிந்தும் விட்டார் அப்பாவி! அதன் பின்னர் நான் கேட்ட '.info' &#

விடைத்தாள் பிடுங்கப்பட்ட பின்னும்....(வலைச்சரம் தொடர்கிறது)

வலைச்சர ஒருங்கிணைப்பாளர்கள் கோவிக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன். நன்றி கூட சொல்ல முடியலை... இன்னும் ரெண்டு பதிவு இங்கனேயே போட்டுட்டு நன்றி சொல்லிடுறேன். வலைப் பதிவுகள் பற்றித் தெரியாத எனக்குத் காலத்திலேயே மின்னஞ்சல்களில் வரும் இவரது கவிதை எனக்குப் பிடிக்கும். நல்லதொரு புகைப்படம் அல்லது ஓவியத்தின் மேல் எழுத்தோவியமாக அனுப்பப்படும் நிலாரசிகன் கவிதைகளின் ரசிகன் நான். அண்மையில் பதிவர் சந்திப்பில் சந்தித்து மகிழ்ந்தேன். "திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்" என்பார்கள்; தபூசங்கரைப் போல் காதலில் உருக முடியுமா என்பேன் நான். அப்படி உருகி, ஒற்றை முத்தம் தந்து ஏகப்பட்டோரது உள்ளத்தைக் கொள்ளை கொண்ட நந்தாபாய். “சந்தைக்கடைத் தெருவில் சத்தம் என்ன புதுசா?நந்தாவோட ப்ளாக்கில் முத்தம் என்ன புதுசா? - அடமுத்தம் என்றால் உதடுகள் குவியும். -ஆனால்உள்ளே உள்ள இதயமும் விரியும்.” நந்தாபாய் MBBS (MBBS- Muththa Blog; Blog of S….) சாரிப்பா என்ன போடுறதுன்னு தெரியல.." என்று நான் பின்னூட்டம் போட்டேன்ஒற்றை முத்தம் கவிதையாய் இருந்தாலென்ன... கதையாய் இருந்தாலென்ன... காதல் அவ்வளவுதான்... என்ன நந

அமிதாப்-பிடம் பாடம் கற்க வேண்டிய ரஜினி!

"அமிதாப்-பை விஞ்சிவிட்டார் ரஜினி...!" "ரஜினிக்குத் தான் இந்தியாவில் அதிக ஆதரவு" என்றெல்லாம் ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கிக் கொண்டிருந்த வேளையில் வெளிவந்தது அமிதாப் நடித்த 'சீனி கம்' திரைப்படம். வழக்கமாக இந்திப் படங்கள் அதிகம் பார்க்காத நானும் இளையராஜாவின் இசை.. அதுவும்.. ராஜா இசையமைத்த பழைய தமிழ்ப் பாடல்களின் 'ரீமிக்ஸ்' பாடல்களை ராஜாவே செய்திருக்கிறார் என்றதும் ஆர்வம் பொங்கியது... "விழியிலே..." பாடலையும், "மன்றம் வந்த தென்றலுக்கு..." பாடலையும் திரும்பக் கேட்கப் போகிறோம் என்று ஒரு ஆர்வம் வேறு..ராஜா தனது பழைய பாடல்களையே இன்றைய ஸ்டீரியோ மற்றும் துல்லிய இசையில் கேட்கவேண்டும்; அதையும் ராஜாவே செய்ய வேண்டும் என்று அடிக்கடி நான் சொல்லிக் கொண்டிருப்பேன். என் ஆசை நிறைவேறியது என்ற மகிழ்ச்சி வேறு. மொழி புரிகிறதோ இல்லையோ இசையை திரையரங்கில் கேட்டுவிட வேண்டுமென்று ஆவல் ஒருபக்கம் என்றால் 'Sugar Free Romance' என்ற அழகான சொல்லாடல் ஏற்படுத்திய ஆர்வம் ஒருபக்கம். ஒரு வழியாக ஈகாவுக்கு படம் பார்க்கக் கிளம்பினோம்... நான், தம்பி புருனோ, தோழன் வெற்றிமண

'சிவாஜி' பேரைச் சொல்லி சிக்கன் நூடுல்ஸ்

ஜென்ம சாபம் அடைய.... சீ.... ஜென்ம சாபல்யம் அடைய சிவாஜி படத்தையும் ஸ்ரேயாவையும் பாருங்க-ன்னு ஒரு பக்கம் எல்லாரும் விளம்பரம் குடுக்க... படத்தைப் பார்த்துட்டு வந்த மக்களெல்லாம் அந்தக் கருமத்தை நானும் பார்த்தேன்-ங்கிற ரீதியில பதிவு போட்டு பயமுறுத்த... இந்தக் கூட்டத்தில போயி சிவாஜியை பார்க்கிறதானு முடிவெடுக்குறதுக்குள்ள... படம் பாதியிலேயே படுத்துக்கிச்சு-ன்னு செய்தி வந்துடுச்சு... சரி, ஒரு 50 நாள் அவங்க ஓட்டுனதுக்குப் பிறகு டிக்கெட் விலை குறையும் அப்புறம் பார்ப்போமுன்னு, நானும் தம்பியும் முடிவெடுத்துஆல்பர்ட் திரையரங்குக்கு கிளம்பினோம். அப்பவும் பார்க்கலை. அது ஏன்னு கடைசியில சொல்றேன். சரி. இந்த முறையாவது பார்ப்பதுன்னு முடிவெடுத்து ரெண்டாவது தடவையா மூனுபேரு கிளம்பினோம். நல்லா காத்தோட்டமா இருக்குதே டிக்கெட் விலை குறைவாத் தானே இருக்கும்-னு நினைச்சா குறைந்தபட்சம் ரூ.70/- பொட்டிக்குள்ள உட்கார்ந்து பார்க்க ரூ.85-ன்னு போட்டிருக்காங்க... இந்தப் படத்தை காசு கொடுத்து பார்க்கக்கூடாதுன்னு ஏற்கனவே நினைச்சு வச்சிருந்தேன். சரி, தம்பி கூப்பிடுறானேன்னு போனா இன்னும் ரேட் கூடப் போட்டுக்கிட்டு இருக்காங்க (சரி,

பெரியார் விழிப்புணர்வு இயக்கம் - வரலாற்றுத் தேவை

"இந்தியாவில இருந்து வரும்போது எல்லா மூடப் பழக்கத்தையும் வச்சுட்டு வந்திருப்பீங்கன்னு நினைச்சேன். எல்லாத்தையும் மூட்டை கட்டி கூடவே எடுத்துட்டு வந்திருக்கீங்களே!" மலேசியாவில் தமிழர்களை சந்தித்த தந்தை பெரியார் அங்கும் கோயில்களும் மூடப் பழக்க வழக்கங்களும் மிகுந்திருப்பதைப் பார்த்து மனம் நொந்து சொன்ன வார்த்தைகள் இவை. இந்த வார்த்தைகள் புலம் பெயர்ந்து வாழும் அத்தனைத் தமிழர்களுக்கும் பொதுவாகிறது இன்று! எனது அண்ணன் பெரியார் சாக்ரடீசின் மகளுக்கு தமிழீழம் என்று பெயர் வைத்தோம்.'தமிழீழம் மலர்ந்தது' என்று விடுதலைக்கு நன்கொடையும் கொடுத்தோம்.சொல்வதற்குக் கடினப்பட்டும், பல முறை பிழையாக உச்சரிக்கப்பட்டு, எழுதப்பட்டும் இருந்தாலும், சிறு வயதிலிருந்தே ஒவ்வொரு முறையும் பள்ளியில் தன் ஆசிரியைகளுக்கு விளக்கம் சொல்லி "எங்கள் பிரபாகரன் மாமா போராடி வெல்லப் போகும் தமிழர்களின் நாட்டுக்குப் பெயர் தமிழீழம். அது தான் என் பெயர்" என்று வியக்கவைப்பாள் தமிழீழம். இப்போது அவளுக்கு பத்து வயது ஆகிறது. ஒருமுறை ஈழத் தமிழ்ப் பெண் ஒருவர் இவளது பெயரைக் கேட்டு ஆனந்தத்தில் அழுதுவிட்டார். ஒவ்வொருமுறை சந்த

நான் சின்னப் பப்பா!

சரியாக ஓராண்டாகிறது. விஜய் தொலைக்காட்சியின் 'நீயா? நானா?' விவாதத்திற்கு வந்த அழைப்புக்காக தயாராகிக்கொண்டிருந்தேன். மாலை 6 மணிக்கு வந்துவிடுங்கள் என்ற அழைப்போடு, எங்கள் அணியில் பேசத் தோழர்களையும் அழைத்துவருமாறு சொல்லியிருந்தார்கள். உடன் தோன்றிய சிலரில் 'மிதக்கும் வெளி' சுகுணா திவாகரும் ஒருவர். (அப்போது எனக்கு மிதக்கும் வெளியாக அறிமுகம் ஆகியிருக்கவில்லை.) தகவலைச் சொல்லி அழைத்தேன். தன் நண்பர் செந்தில் வந்திருப்பதாகவும், இணையத்தில் ப்ளாக் எழுதுகிற திராவிடத் தமிழர்கள் இன்றைக்கு மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்காவில் சந்திக்கவிருப்பதால் தான் அங்கே செல்வதாகவும் தெரிவித்தார். உடன் செந்திலின் எண் வாங்கிக் கொண்டேன். அவரிடம் பேசியபோதுதான், "திராவிட ராஸ்கல்கள் முன்னணி" என்று தாங்கள் இயங்கப் போவாதாக தெரிவித்தார். இணைய ஊடகம் நம் கையை விட்டுப் போய்விடுமோ என்று எண்ணியிருந்தவனுக்கு இப்படி ஒரு சந்திப்பு என்றதும் ஆனந்தம். அதிலும் சென்னை மட்டுமல்லாமல், நெல்லை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தெல்லாம் வந்து சந்திக்கிறார்கள் என்றதும், பழைய பேனா நண்பர்கள் முறையின் நினைவு... மு