முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேங்காய் உரிக்கும் இயந்திரம்

எங்கள் வீட்டில் இரண்டு தென்னை மரங்கள். இரண்டுமே நான் நட்டவை! ஒன்று எதிர்வீட்டு பாண்டியுடனும், மற்றொன்று பக்கத்துவீட்டு திலக்குடனும் கூட்டணி வைத்து நட்டது என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளைத் தொடும் எங்கள் வீட்டில் தென்னைக்கு எப்படியும் 18 வயதுக்குக் குறையாமல் இருக்கும். குறைந்த உயரத்திலேயே சுவையான இளநீரையும், தேவைப்படும்போது தேங்காய்களையும் தந்து கொண்டிருந்தன இரண்டு மரங்களும்! தொடக்கத்தில் அரிவாள் மூலம் தேங்காய் உரித்துக் கொண்டிருந்த எங்கள் அய்யா, பின்னர் தேங்காய் உரிப்பதற்கென்றே உள்ள கருவியை வாங்கி வந்தார். தொடக்கத்தில் ஆர்வத்துடன் அதில் தேங்காய்கள் உரிப்பதற்குத் தாவுவேன். எப்போதும் அய்யா தான் உரிப்பார். ஆனால், நாளடைவில் அதில் எனக்கு ஒருவித பயம் தோன்றத் தொடங்கியது. கையை வைத்து குத்தி, அழுத்தி, கம்பியை நிமிர்த்தினால், மட்டை பிய்ந்து வரும்.

கம்பியில் குத்தி அழுத்துவதில் கொஞ்சம் பிசகினாலும், ஸ்லிப்பாகி கருவியின் கூர்முனைப்பகுதி வயிற்றில் குத்திவிடும் ஆபத்து உண்டு. எனவே நீங்கள் தேங்காயே உரிக்கவில்லையென்றாலும் பரவாயில்லை. அந்த கருவியில் கைவைக்காதீர்கள் என்று எங்கள் அய்யாவிடம…

புரட்டர்களின் வெற்றி! அல்லது பத்ரிகா தர்மம்

புரட்டுகளின் மீது தான் முரட்டுத் தன வெற்றி என்பதால், இன்னமும் அந்த பொய்களை மெயிண்டெய்ன் செய்து கொண்டே இருக்கிறார்கள். ”மோடியின் 10” என்று 18-ஆம் தேதி தினமலர் பட்டியல் போட்டிருக்கிறது. இரண்டாவது இரும்பு மனிதர் என்று கட்டுரை வெளியிட்டிருக்கிறது. திரும்பத் திரும்ப குஜராத்-தை முதன்மை மாநிலமாக்கினார் என்று வாய் கூசாமல் பொய் சொல்லவும், கை கூசாமல் எழுதவுமாக இருக்கிறார்கள்.

கையில் விளக்குமாறுடன் ஏதோ ஒரு உழைப்பாளியின் படத்தில் தலையை வெட்டி மோடியின் படத்தை ஒட்டி வெளியிடப்பட்ட படத்தைப் பற்றி பலறை எழுதப்பட்டும் கூட இன்னமும் உண்மையான படம் போல அதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.


பொறியாளர் பெண்ணிடம் கடலை போடுவதற்காக தனியாக உளவுத் துறையில் ஒரு பிரிவே வைத்திருந்த மோடிதான் சுத்தமான அரசு வாழ்க்கை வாழ்ந்தவர் என்று அடித்துச் சத்தியம் செய்கிறது தினமலம். அரசுப் பணியில் அய்.ஏ.எஸ்-ஆக இருப்பவர்கள் அரசு சம்பளத்தில், அதிகாரத்தில் இருந்துகொண்டே மோடியின் அரசியல் பணிக்கு எப்படி பயன்பட்டார்கள் என்பதையும் கூச்சநாச்சமின்றி படம்போட்டு பெருமை கொள்கிறார்கள்.

குஜராத் வளர்ந்த மாநிலம் என்று பீலா விட்டு ஏமாற்றியது போல,…

தகுதி - திறமை கூப்பாடு ஏன்?

இவய்ங்க தகுதி, திறமையின் லட்சணம் இதுதான். இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களே, இட ஒதுக்கீடு என்பதொன்று இருந்தும், நமக்கு அதைக் கேட்பதற்கு உரிமையும், அவர்களுக்கு அதை இட்டு நிரப்ப வேண்டிய கடமையும், சரியில்லையென்றால் முறையீடு செய்யும் வாய்ப்பும் இருக்கும் போதே எத்தனை தில்லு முல்லுகள், முடிச்சவிக்கித் தனங்கள் நடக்கின்றன, என்று பாருங்கள்!


பி.ஹெச்.டி முடித்தாலும் நமக்கு தகுதி, திறமை வராது என்பான். முடிக்காதவனுக்கெல்லாம் வேலை போட்டுக் கொடுப்பான். இது தான் பார்ப்பனப் பண்ணையம். இதை விட மோசமான நிலையிலிருந்து இவ்வளவு தூரம் மீண்டிருக்கிறோம்.. நம் உரிமையைக் கேட்க துணிந்திருக்கிறோம் என்றால், இதற்குக் காரணமான தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்கரையும் நினைப்போம்.

நம் உரிமைகளை வென்றெடுக்கும் வரை இந்த மொள்ள மாரித் தனங்களுக்கெதிராகப் போராடுவோம்..

அய்.அய்.டி. பணி நியமனத்தின் அவலட்சணத்திற்கு ஒரு சிறிய எடுத்துக் காட்டு இதோ,,,, பாருங்கள்....


Employment opportunity in the IIT Madras at Chennai. from thaamaraichchelvi

நான் உன் விலா எலும்பில் இருந்து வரவில்லை...

நான் உன் விலா எலும்பில் இருந்து வரவில்லை...
நீ(யே/யோ) என் பெண்ணுறுப்பிலிருந்து வந்தாய்!
I didn't come from your Rib! You came from my vagina!

இளங்கோவன் பாலகிருஷ்ணன் அவர்கள் பகிர்ந்திருந்த இந்தப் படமும் வாசகமும் வெகுவாகக் கவர்ந்தது. 
பைபிளின் புரட்டுக்கு மறுப்பு சொல்லும் பகுத்தறிவு வாதமாகவும், பெண்ணின் முதன்மையைக் காட்டுவதாகவும் இருந்த இந்த ஆங்கில வாசகத்தை தமிழில் எழுதலாமே என்று தொடங்கினேன். Vagina என்ற சொல்லுக்கு சரியான வார்த்தையைத் தேட விக்சனரி சென்றேன். வசைச் சொற்களாக பயன்படுத்தப்படும் சொற்களும் பட்டியலில் இடப்பட்டிருந்தது. அதற்கு என்ன விளக்கம் சொல்லியிருக்கிறார்கள் என்று படிக்க அதையும் சொடுக்கினேன். ஒலிப்பு பகுதியும் இருந்தது. இயக்கினேன். 
ஹுப்ப்ப்..
பலமுறை வசையாகக் கேட்ட வார்த்தை தான். ஆறாம் வகுப்பில் முதன்முதலாகக் கேட்டது தொடங்கி பலமுறை செவியில் விழுந்த கெட்ட வார்த்தை தான். எப்போதும் யாரையும் திட்டுவதென்றால் முதலில் பெண்ணை இழிவுபடுத்தும் சொற்கள் தானே சமூகத்தில் புழங்குகிறது; பால்வேற்பாடற்ற ஒரு திட்டுச் சொல் வேண்டும் என்று கூட முன்பு நிலைத் தகவல் போட்டிருக்கிறேன், ஆனாலும், ஒரு ப…

சிறுத்தைகளுக்கு ஒரு இடம் மட்டுமா?’

ணர்ச்சி வசப்படுவதற்கான நேரம் இதுவன்று! நாம் நம்பி ஒப்படைத்துக் கொண்ட தலைவர்களை இக்கட்டான சூழலுக்குத் தள்ளிவிடக் கூடாது. சராசரியான நேரத்தில், உடனிருப்பதும், உயர்த்திப் பேசுவதும் அனைவரும் செய்யக் கூடிய ஒன்று. கடுமையான நேரத்தில் நம்மை முழுமனதோடு ஒப்படைத்துக் கொள்ளுதலே சரியான போராளியின் முதல் கடமையாக இருக்கமுடியும்.

இவர் சரியில்லை; நம்பி ஏமாந்தோம்; அ்னைவரையும் போல் இவரும் விலைபோய்விட்டார் என்று பேசுவதற்கு பலர் வருவார்கள். அதில் அக்கறையாக நடிப்பவர்களும் இருப்பார்கள்; உண்மையில் அங்கலாய்ப்பவர்களும் இருப்பார்கள். அவர்கள் எல்லாம் இப்போது முக்கியமல்ல. அவர்களின் கருத்தும் முக்கியமல்ல. நேரடியாக கரம்கோர்த்து களத்தில் நிற்கிறவர்கள் உறுதியுடன் - கவனமாக இருக்க வேண்டிய தருணம் இது!

தவறான முன்னுதாரணத்தைப் பரப்ப ஊடகங்களும், பற்றவைக்க உளவுத் துறையும் துடித்துக் கொண்டிருக்கின்றன. கொஞ்சமும் உணர்ச்சிவசப்படாத வண்ணம் நிலைமையை அணுக வேண்டியது அவசியம் தோழர்களே! இன்று எடுக்கப்பட்டிருக்கும் முடிவுக்குப் பின்னால் எவ்வளவோ இருக்கிறது. இனி அடைய வேண்டியதும் எவ்வளவோ இருக்கிறது.


ஆனால், நாம் அடைவதற்கான இலக்கும், அந்த இலக்…

’இராம’ராஜ்யம்

நீண்டுபோய்க் கிடந்த
கரடு முரடான குறுகிய பாதை!
இரு பக்கமும் பார்த்தேன்.

ஒரு புறம்...
‘மவுத்’ஆக்கப்பட்ட
முகமதியர் கபர்ஸ்தானம்!
மறுபுறம்...
மரிக்கும்படி செய்யப்பட்ட
’மாதா’ புதல்வர்களின் கல்லறை!

’ராமராஜ்யம்’ எனும்
நாமத்தை உச்சரித்தபடி
ஒரு கூட்டம்
எதையோ
தூக்கிச் சென்றது.

என்னவென்று பார்த்தேன்!
என்னென்று சொல்வேன்?
பெயர் மட்டும்
சொல்லிக் கொண்டிருந்த
இந்திய ‘மதச் சார்பின்மைக்கு’
காவி சுற்றப்பட்ட
வசதியான
அருமையான பாடை!

கண் திறந்தது.
கனவு தான்... ஆயினும்
நனவாவதற்கு
சாத்தியக் கூறுள்ள கனவு!

ஒரு வேளை...
கனவு நனவாகி
இராம இராஜ்யம் வந்தால்...?

மாளப்போவது
மதச்சார்பின்மை மட்டுமல்ல
மிச்சமீதியிருந்த
மனிதநேயமும் தான்.

சாகப்போவது
சிறுபான்மையோரல்ல...
பெரும்பான்மையோர்

ஆம்..
தப்பித் தவறி
இப்போது தான் படிக்கும்
நம் காதுகளில் தேனாய்பாய
காய்ச்சப்பட்ட ஈயம்
அணியமாய் இருக்கும்!

நம்மை
சம்புகவதம் செய்ய
கொடுவாள் தயாராகி
ராமனார் கையில்
கொடுத்தனுப்பப்படும்!
கல்லூரிகளெல்லாம்
கல்லுடைப்புத் தளங்களாகும்!

’சதி’யை நம்பாத
‘பதி’யின் ஆட்சியில்
அக்கினி குண்டங்கள் கட்ட
அக்கர(ம) சேவகர்கள் உண்டு!

இராமராஜ்யம் அமைக்க
அவர்கள் தயார்!
ந…

’ஆம் ஆத்மி’ - இப்போது தமிழில்!

உயிரைக் கையில் பிடித்தபடி இருக்கும் ஒரு லட்சம் மக்களின் போராட்டம் காமெடியாக்கப்பட்ட கதை!
’ஆம் ஆத்மி’ - இப்போது தமிழில் ”எளிய மக்கள் கட்சி!”
விரைவில்... உங்கள் அபிமான திரையரங்குகளில்!

(ஒரு ஃபீல் கிடைப்பதற்காக டப்பிங்  பட விளம்பர ஸ்டைல்ல வாசிச்சுப் பாருங்களேன்.)


தமிழ்நாட்டிலேயே.... ஏன் இந்த வேர்ல்டுலேயே....
....
...
..
.
டிரான்ஸ்லேட் பண்ணி கட்சியில சேர்த்திருக்கிற முதல் கட்சி - அது நம்ம கட்சி தானே!

அதெப்படி தமிழ்நாட்டில மட்டும் தான் எ.ம.க-வா? இல்லை இந்தியா முழுக்க எ.ம.க-வா? ஒரு வேளை நம்ம உதயகுமார் எம்.பி-யாகி (ஸ்ஸ்ஸ் விடுங்க) நா.ம.உ ஆகி நாடாளுமன்றத்துக்குப் போனா, அங்க மத்த ’ஆம் ஆத்மி’ எம்.பிக்கள்லாம் (மறுபடியும் ஸ்ஸ்ஸ்சா?) ஆம் ஆத்மி-ன்னு இருக்கிறப்போ, இவர் மட்டும் எ.ம.க-ன்னு இருப்பாரா? இல்லை எல்லா ஆம் ஆத்மிக்களும், எ.ம.க.ன்னு இருப்பாங்களா? ஒரே கன்பீசா இருக்குபா!

மண்ணில் வீசுங்கள் எங்கள் மணவிழா அழைப்பிதழை! - புதுமையான மணமக்கள்

திருமணம் அல்லது மகிழ்வான நிகழ்வு என்ற தகவலைச் சொல்வதற்கானதாக மட்டுமின்றி, தங்களின் பணக்காரத்தன்மையை, ஆடம்பத்தை, படாடோபத்தைக் காட்டுவதற்காகவும் சர்வ சாதாரணமாக ஓர் அழைப்பிதழ் ரூ.50 முதல் 500, 1000 வரைக்கும் செலவு செய்கிறார்கள். சிலர் திறந்தால் பேசும் அழைப்பிதழ் தருகிறார்கள். அதன் மூலமே குரலால் அழைக்கிறார்கள். இன்னும் சிலர் சிடி தந்து பார்க்கச் சொல்கிறார்கள். ஆனால், அழைப்பிதழ் வாங்கும்போதே எங்கு,என்று, யாருக்கு என்ற விவரத்தைத் தெரிந்துகொண்ட பிறகு அதை போட்டுப் பார்க்கப் போவதில்லை. (அவனவன் கல்யாண வீடியோவையே திரும்பப் பார்க்கிறதில்லை.)


அதையும் தாண்டி, யாரும் அந்த அழைப்பிதழை எடுத்து கண்ணாடிக்குள் அடைத்து வைத்துப் பாதுகாக்கப் போவதில்லை. திருமணம் முடிந்த பின்னோ, முடியும் முன்னோ குப்பைக் கூடைக்குப் போகப் போகிறது. ஆனாலும் அப்படி செலவு செய்வதற்கும் அழகு படுத்துவதற்கும் பின்னால், இதை யாராவது வைத்திருக்க மாட்டார்களா என்ற நப்பாசையும் சிலருக்கு இருக்கும். ஆனால் அதனால் ஏற்படக்கூடிய பலன்கள் ஏதாவது இருக்குமா? ’இதெல்லாம் நடக்கிற காரியமாடா மண்டையா?’ என்று குப்பைக் கூடையில் போடுவதற்குச் சிரமமாக இருக்கும் …

மார்க்கமும் மனிதமும்!

முகநூலில் தோழர் அபுராயன் எழுதிய பதிவு
//சிந்திக்க மட்டும்...!!!

நேற்று விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இரண்டாவதாக வந்த சையத் சுபஹானிடம் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என விஜய் டிவி தொகுப்பாளர் கேட்டதற்கு அவர் " எல்லா புகழும் இறைவனுக்கே" என்றார்.

அவரின் தாயாரிடம் அதே கேள்வி கேட்கப்பட்டது அதற்கு அவர் " என் மகனுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் தலைவணங்குகிறேன்" என்று கூறி தலையை சற்று தாழ்த்தினார்...

பிள்ளைகளைவிட பெற்றோர்களுக்கே இஸ்லாமிய மார்க்கம் குறித்த விழிப்புணர்வு அதிகம் தேவைபடுகிறது... என்பதனை இந்த நிகழ்வு நமக்கு உணர்த்தியது...

# இறைவனை தவிர எதற்கும் எவனுக்கும் தலைவனங்குவது மாபெரும் குற்றமாகும்...!!! - @அபு ரயான்//

அபுராயன் அவர்களின் பதிவில் தோழர் மதி மதி அவர்களின் கருத்து:

//மகன் ஒரு பாடகராகத் தம் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்; வெற்றி பெறும் அளவுக்கு தம் திறமையை வளர்த்து, தம் உழைப்பால் வெற்றிக்கனியைப் பறித்து விட்டார்;

ஆனால், இதில் எந்த தொடர்புமில்லாத 'இறைவனுக்கு' நன்றி கூறுகிறார்!
அறிவின் மீது நம்பிக்கையின்றி!

ஆனால், அவரின் தாயாரோ அறிவைப் பயன்…

இயேசு சிலையில் ரத்தம் வடிகிறதாம்! ஓ பாசிட்டிவா? நெகட்டிவா?

சென்னை சேத்துப்பட்டு புனித அன்னாள் மேல் நிலைப்பள்ளியில் சிலுவையில் அறைந்த நிலையில் இயேசு சிலை உள்ளது. இந்த சிலையின் கால், கை மற்றும் கழுத்து பகுதியில் இருந்து புதன்கிழமை மாலை 3 மணியளவில் ரத்தம் வடிந்ததாக கூறப்படுகிறது. அதை பார்த்த கன்னியாஸ்திரிகள் ஆச்சரியமடைந்தனர். பின்னர் இந்த தகவல் காட்டுதீ போல பரவியது. உடனே பொதுமக்கள் கூட்டம் கூடத் தொடங்கியதை அடுத்து ஆயிரக்கணக்காண பொதுமக்கள் திரண்டனர். அப்போது (5 காயங்கள்) மற்றும் சிலை பகுதியில் ரத்தம் வடிந்து காய்ந்த நிலையில் இருந்ததாக தெரிகிறது. இதனையடுத்து அங்கு கூடிய பொதுமக்கள் பரவசமடைந்தனர். அங்கு சிறப்பு பிரார்த்தனை செய்து சென்றனர். சிலையில் ரத்தம் வடிந்த தகவல் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் பரவியுள்ளது. வெளியூர்களில் இருந்து கிறிஸ்தவர்கள் வேன், பஸ் மூலமாக சேத்துப்பட்டுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் ரத்தம் வடிந்ததாக கூறப்படும் ஏசு சிலை முன்பு கூட்டம் கூட்டமாக நின்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு செல்கின்றனர். செல்போன்கள், வீடியோ காமிராக்களிலும் ஏசு சிலையை படம் எடுத்து சென்றனர். இதனால் சேத்துபட்டு சிறிஸ்தவ …

காரட் போய்... கான்கிரீட் வந்தது

பெங்களூரில் இருக்கிறேன். இதை பெங்களூரு என்று சொன்னால் பெங்களூர் வாசிகள் ஏற்க மாட்டார்கள். அதன் புறநகர்ப் பகுதி - ஒயிட்ஃபீல்ட் அருகில்! வரிசையாக பெரும் பெரும் அடுக்குமாடிக் குடியிருப்புகளாக இருக்கும் பகுதியில் வசிக்கும் தங்கை வீட்டிலிருந்து பார்த்தால், பக்கத்தில் இருக்கும் நீளமான ஓரிடம் மட்டும் பச்சைப் பசேல் என்று இருக்கும். முழுக்கவே விவசாயம் இருந்த பகுதியில் பிளாட் போடப்பட்டது போக அந்த வால் போன்ற நிலத்தில் தான் விவசாயம் நடைபெற்றுவந்ததாம். அதுவும் காரட் செடிகள். 4-ஆவது மாடியிலிருந்து பார்க்க குட்டி குட்டியாக மிக அழகாக இருக்கும். அந்த இடத்தை பலரும் விலைக்குக் கேட்டுவருவதாகவும், அதன் உரிமையாளர் மறுத்துவருவதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
பொங்கலுக்காக இந்த முறை வந்து பார்க்கும்போது அதிர்ச்சி! அண்மையில் அதற்கு எதிர்ப் பகுதியில் கட்டப்பட்டுவரும் மற்றொரு அ.மா.கு-க்காக, அதன் பணியாளர்கள் தங்கும் பகுதியாக மாற்றப்பட்டிருக்கிறது அந்த நிலம். தகரத் தகடுகள் வேயப்பட்ட குடிசைத் தொகுப்பாக இருக்கிறது அந்தப் பகுதி! வடநாட்டுப் பணியாளர்களும், பள்ளி என்றால் என்னவென்றே அறியாத அவர்களது குழந்தைகளுமாக நிரம்பிவி…

மனிதநேய சமத்துவ விழா

திராவிடர் திருநாள் - தமிழர் திருநாள் - உழவர் திருநாள் என்று நாம் கொண்டாடும் பொங்கல் விழாவை நல்ல நேரம் பார்த்து, சூரியனுக்குப் படைத்து, கும்பிட்டு, சங்கராச்சாரி கும்பல் சங்கராந்தி என்று விளிக்க ஏதோ இந்து மதப் பண்டிகையைப் போல மாற்றிவிட்டிருக்கிறார்கள். இந்தப் போக்கு தான் கிறிஸ்துவ, இஸ்லாமியர்கள் பலரை பொங்கல் விழாவிலிருந்து விலகி நிற்கச் செய்திருக்கிறது. கலைஞர் ஆட்சிக் காலத்தில் சமத்துவப் பொங்கல் என்று கொண்டாடி அனைத்து மத நம்பிக்கையாளர்களான தமிழர்களும் கொண்டாடும் வண்ணம் செய்தார். இன்றும் கூட பல இடங்களில் சமத்துவப் பொங்கலைக் கொண்டாடியிருக்கிறார்கள்.

நாங்கள் பொங்கல் கொண்டாடுவோம் என்று சொல்லும்போது, என் சிறுபிள்ளையிலிருந்து பலரும் கேட்ட கேள்வி ‘நீங்க பொங்கல் கொண்டாடுவீங்களா?’ என்பது. அப்போது நாங்கள் சொல்லுவோம் “பொங்கல் மட்டும் தான் கொண்டாடுவோம். அது தான் எந்த மதமும் சாராதது. தமிழருக்கானது. உழைப்பின் உயர்வை நினைவூட்டுவது.” அவர்களின் கேள்வி - இது இந்து மதப் பண்டிகை என்ற எண்ணத்திலிருந்து எழுந்தது. 

எனவே ஜாதி, மதம் சாராத மனிதநேய சமத்துவ விழாவாக வளர்த்தெடுப்பது தான் பொங்கலின் தனித்தன்மையைக் காப்…

வக்கீல் அவ்வாவுக்கு வீரவணக்கம்!

இயக்கம் தான் எங்களுக்குக் குடும்பம். தந்தை வழி தாய், தந்தையர் தான் நான் பார்த்து வளர்ந்த பாட்டி, தாத்தா. (தாய் வழி தாத்தா, பாட்டி எனக்கு நினைவு தெரியும் முன்பே மறைந்துவிட்டார்கள்) அவர்களைத் தவிர்த்து சிறு குழந்தை பருவத்திலிருந்து எனக்குத் தெரிந்த தாத்தா, பாட்டி என்றால் அது வக்கீல் தாத்தா, வக்கீல் பாட்டி தான்.

எங்கள் தாத்தா காரைக்குடி என்.ஆர்.சாமி அவர்கள் ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்டத்தின் செயலாளர் என்றால் சிவகங்கை வக்கீல் சண்முகநாதன் அவர்கள் தான் மாவட்டத் தலைவர். கிட்டத்தட்ட 25 ஆண்டுகாலம் கடுமையான எதிர்ப்பின் இடையே இயக்கத்தை வளர்ந்த பெரியார் தொண்டர்கள்.

இவர்கள் இருவருக்கும் ஈடுகொடுத்து உழைக்கச் சளைக்காத இருவர் என்றால் அது எங்கள் அவ்வா பேராண்டாள் அவர்களும் வக்கீல் அவ்வா இராமலக்குமி அவர்களும் தான். போராட்டக் களத்தில் நிற்கும் தங்கள் இணையர்களுக்குத் தோள்கொடுத்து குடும்பத்திலும், கழகத்திலும் தங்கள் பங்கைச் செலுத்தியவர்கள். போராட்டம், மாநாடுகள், இயக்கக் கூட்டங்கள் - எது என்றாலும் ஆபத்துக்கு அஞ்சாமல் போராடியவர்கள். காங்கிரசின் எதிர்ப்பை மீறித் தான் அத்தனை பொதுக்கூட்டங்களும், மாநாடுகளும…

இன்னும் "இளமை இதோ இதோ"...

நான் அடிக்கடி சொல்வதுண்டு. இன்று புலர்ந்தபோது கூட அருகில் இருந்த தம்பியிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். இன்னும் "இளமை இதோ இதோ" பாடலை அடித்துக் கொள்ள ஒரு பாட்டு வரவில்லை என்று! அதே போன்று ஒரு தொகுப்பையே பதிவு செய்திருக்கிறார் நண்பர் Muralikannan Rengarajan.

நிறைய முயற்சிகள் நடந்திருக்கின்றன. ஆனால், இளமை இதோ... தான் இன்னும் இளமையுடன்! இவ்வளவுக்கும் அப்பாடலின் தொடக்கத்தில் வரும் "ஹாய் எவ்ரி படி... விஷ் யூ ஹேப்பி நியு இயர்" என்ற வரிகளைத் தவிர புத்தாண்டுக்கும் அப்பாடலுக்கும் யாதொரு தொடர்பும் இருக்காது; கமல்ஹாசனின் பெருமை பேசும் பாடலாகத் தான் அது இருக்கும். ஓரிடத்தில் 'இந்தியிலும் பாடுவேன்' என்று எஸ்.பி.பி.யின் பெருமையும் உள்ளே வரும். ஆனாலும் நம் மனதில் அப்பாடல் நின்று நிலைப்பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏன் என்பது சிந்திக்கத்தக்கது.

ராஜாவின் துள்ளலான அதன் இசை அதற்கு முக்கியக் காரணம். பாடல் எங்கும் பாடுபவர் உற்சாகம் கொள்ளத்தக்க பாவனைகள் வெளிப்படும் (யார் பாடினாலும்). பைக், ஸ்கேட்டிங், டார்ஜான் மாதிரி கயிற்றில் தொங்குதல், ஆடுதல், ஒடுதல், தாவுதல் என்று அத…