முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2007 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சாமிக்கு மாலை போடும் உரிமை....!

என்னை விட்டுவிட்டு
சாமிக்கு
மாலை போடுகிற
உரிமை
உனக்கு
உண்டென்றால்

உன்னை விட்டுவிட்டு
வேறொருவனுக்கு
மாலை போடுகிற
உரிமை
எனக்கும்
உண்டுதானே!
-அறிவுமதி (நன்றி: செம்பருத்தி -டிசம்பர் 2007)

பேராசிரியரின் இனமானப் பேருரை!

நேற்றுபிறந்தநாள் கண்ட பேராசிரியர் க.அன்பழகன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் வண்ணமாக அவரது நெல்லை தி.மு.க. இளைஞரணி மாநாட்டு உரையை இங்கு வெளியிடுகிறோம்.
இளைஞர்களே, இளைஞர்களே! பகுத்தறிவுதான் நம் மூலக் கொள்கை!
வாய்ப்பு கிடைக்கும்பொழுதெல்லாம்தந்தை பெரியார் அவர்களின் நூல்களைப் படியுங்கள்!
நெல்லை மாநாட்டில் இனமானப் பேராசிரியர் க. அன்பழகன் வழிகாட்டும் உரை


திருநெல்வேலி, டிச. 18- நமது இளைஞர்கள் வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் தந்தை பெரியார் அவர்களின் நூல்களைப் படிக்கவேண்டும் என்றார் தி.மு.க., பொதுச்செயலாளரும், தமிழ்நாடு நிதியமைச்சருமான பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள்.திருநெல்வேலியில் நடைபெற்ற தி.மு.க., இளைஞரணி முதல் மாநில மாநாட்டில் உரையாற்றியபோது அவர் குறிப்பிட்டதாவது:
இந்த மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்று எழுச்சிமிக்க உரைகளை இளைஞர்கள் பலபேர் இங்கே நிகழ்த்துவதை நான் கேட்டு உள்ளபடியே மிகுந்த பூரிப்பு அடைகிறேன். காலையில் இருந்து இந்த நேரம் வரையில் தொடர்ந்து இளைஞர்கள் முழங்கினார்கள். அந்த முழக்கம் இளைஞர்களுக்கு இயல்பான ஒரு முழக்கமாக அது அமைந்திருக்கிறது. நெல்லை மாநகரம், முழுவதும் கொடிக்காடு,…

ஆறடிக்கே இந்தப்பாடுன்னா...?

தமிழர் தலைவர் 75-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மிகச்சிறப்பாக வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. அய்யா வீரமணி அவர்களுக்கு பிறந்தநாள் பரிசாக '10000' விடுதலை சந்தாக்கள் வழங்கப்பட்டன.

அவர் கேட்ட இரண்டு வரங்களை உடனடியாக வழங்கினார் முதல்வர் கலைஞர்! 95 அடி உயர பெரியார் சிலை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.. என்று கோரினார் ஆசிரியர்! தந்தேன் வரம் என்றார் கலைஞர்!

அப்போது கலைஞர் சொன்னதுதான் பலபேரின் வயிற்றில் புளியைக்கரைத்திருக்கிறது. ஹிந்து பார்ப்பனர்கள் கூட, "என்ன வந்தாலும், செய்து முடிப்பேன்" என்று பேசியதைத்தான் முக்கியப்படுத்தியிருந்தன... சந்தோசம்தானே! இதைத்தானே எதிர்பார்க்கிறோம் கலைஞரிடம் இருந்து...!

சென்னையை சுற்றி சிலை அமைக்க ஏற்பாடு செய்வோம் எனச் சொன்ன கலைஞர் அடுத்து என்ன சொன்னார் தெரியுமா?

"ஆறடி சிலைக்கே (இன எதிரிகள்) இந்தப் பாடுபடுகிறார்கள் என்றால் 95 அடியில் சிலை வைத்தால் இன்னும் அதன் வீச்சு எப்படியிருக்கும்?" என்று கலைஞர் மகிழ அரங்கமே கரவொலியில் தங்கள் ஆதரவை தெரிவித்தது!

எப்படியிருக்கும்...... அசத்தலா இருக்கும்....!
கலைஞர் பேச்சைப் பார்க்க போங்க ... இங்க!

நேரடி ஒளிபரப்பு துவங்கியது...

முதல்வர் கலைஞர் தலைமையில் தமிழர் தலைவர் பிறந்தநாள் விழாவின்
நேரடி ஒளிபரப்பு துவங்கியது...

நேரடி ஒளிபரப்பு: தமிழர் தலைவர் கி.வீரமணி பிறந்தநாள்

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் பவளவிழா (75-ஆம் ஆண்டு பிறந்தநாள்) விழா மிகவும் சிறப்பான முறையில் இரண்டு நாள் விழாவாக நடைபெற்றுவருகிறது.

அதன் நிகழ்வுகளை உலகத் தமிழர்கள் கண்டு களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை பெரியார் திடலில் காலையில் நடைபெறும் நடைபெறும் விழாவும், மாலையில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் விழாவும் இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

தமிழர் தலைவருக்கு, தமிழக முதல்வர் தலைமையில் நடைபெறும் விழா மாட்சியை உலகின் இன்னொரு மூளையில் உள்ள நீங்கள் கண்டு மகிழ நமது periyar.org.in இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்டு மகிழுங்கள். வரவிருக்கும் பெரியார் வலைக்காட்சி(Periyar Web TV)க்கான முன்னோட்ட நிகழ்வாகவும் இது அமையும்!

http://periyar.org.in/ இணைய தளத்தில்...தமிழக நேரப்படி மாலை 5:30 மணியிலிருந்து... காணத் தவறாதீர்கள்!

கிடைத்தது ராமனின் Birth Certificate!

ஸ்ரீ ராமர் மனித உருவில் மண்ணில் அவதரித்த நாளை அறிவியலின் துணைகொண்டு ஆய்ந்தறிந்து அறிஞர்கள் வெளியிட்டுள்ளனர்.
ராமர் பிறந்த இடத்தில் கோயிலைக் கட்ட வேண்டும் கட்ட வேண்டும் என நீண்ட காலமாகக் கோரி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. (பிறந்த இடத்தில கோயில் கட்டுறதா? தாங்காதுய்யா)

இந்நிலையில் தசரதன் காலத்தில் பதிவு செய்யப்பட்ட ராமரின் birth certificate கிடைத்துள்ளது. சமஸ்கிருத மொழியில் உள்ள இந்த சான்றிதழில் பிறந்தநாள் கி.மு.5114 ஜனவரி 10 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

17.50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ராமர் பிறந்தார் என்று நமது புராணத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில் கி.பி 2007க்கும் கி.மு.5114-க்கும் இடையில் 7121 ஆண்டுகள் மட்டுமே கணக்கில் வருகிறது. மீதம் 17,42,879 ஆண்டுகள் கி.மு.வுக்கும், கி.பி.க்கும் இடையில் விடுபட்டுப் போயிருப்பதாகவும், இடைப்பட்ட அந்தக் காலத்தை ராம சூன்யம் என்றழைக்கலாம் என்றும் அவ்வாராய்ச்சியாளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

மேலும் கிடைத்திருக்கும் சான்றிதழில், தாயார் என்ற இடத்தில் கோசலையின் பெயர் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தந்தையார் என்ற இடத்தில் ஏகப்…

கர்நாடகத்தில் கவுந்த க....மலம்!

தமிழ்நாட்டில் கணக்குத் திறந்துவிடடோம் என்று மகிழ்ந்து திராவிடக் கட்சிகளின் தோளில் ஏறி சவாரி செய்துவந்த பதவிப் பசிக்கு இரையான பா.ஜ.க, இரண்டு கட்சிகளும் தூக்கி எறிந்தவுடன் காணாமல் போனதுபோல் தான் நடந்திருக்கிறது கர்நாடகத்தில்!

13 நாள் இந்தியாவை ஆண்டு சாதனை செய்த பா.ஜ.க. தனது சாதனையை தானே முறியடித்துக் கொண்டுள்ளது.

எட்டு நாளில் கவிழ்ந்து விட்டார் எடியூரப்பா!

எப்படியாவது ஆட்சிக் கட்டிலில் ஏறிவிடமாட்டோமா என்ற ஏக்கத்தில் ஆரம்பம் முதலே இந்த வெட்கங்கெட்ட கூத்துகளை நடத்தி வந்தது பா.ஜ.க..

இதில் முதல்முறையாக தென்னகத்தில் ஆட்சியைப் பிடித்துவிட்டோம் என்ற பூரிப்பில் அத்துவானி முதல் அத்தனைப் பேரும் ஆஜராகி ஆசிவேறு.

வாழும் கலையை சொல்லித்தரும் (சாமியார்) ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் என்பவரிடம் ஆசி பெற்று பதவியேற்றவர் வாழ்வை வெறுத்துவிடுவார் போலிருக்கிறது!!

முதலில் ஆதரவு மறுத்து, வெறுத்து... அப்புறம் துரத்தி.... மீண்டும் ஆதரவு தந்து... பிறகு நிபந்தனைகள்...

ஏற்கனவே தேசிய அரசியலில் நுழைந்து பிரதமராகி, பின்பு மீண்டும் முதல்வர் பதவிக்குத் தயாரன தந்தையைப் போலவே, முதல்வர் பதவி வகித்து ஆண்டுவிட்டு, அடுத்த சில நாட்களில் துணைமுதல…

நட்சத்திரமே 100 அடிச்சா...

ஒரு மாதத்திற்கான
வேலைத்திட்டங்களோடு
வரும் அப்பாவின் கடிதத்திற்காக
அய்ந்தாம் தேதிகள்
எப்போதும் பிடிக்கும் எனக்கு!
'வாரம் ஒரு முறையாவது
பேசுடா' என்று
அம்மா சொன்னது
தொலைபேசி வந்த புதிதில்.
அரைநொடிக் கொருமுறை
பதில் பெறுகிறோம்- என்
அருமைத் தங்கையே!
அலுவலக இணையத்துக்கு
நன்றி சொல்வோம்!
(ஆளுக்கொரு மூலையில் இருந்தபடி தொலைத்தொடர்பு இணைப்பால்
வாழ்ந்துவரும் எம்மை ஒத்த சொந்தங்களுக்கு...)
-----------------------------------------
நட்சத்திர வாரத்திலேயே நூறாவது பதிவும் இடுவதற்கான வாய்ப்பு...
இத்தனை பதிவுகளுக்கும், என் வலை உலாவலுக்கும் உதவிய வாழ்த்திய ஊக்குவித்த அத்தனை உள்ளங்களுக்கும், நட்சத்திர வாரத்தில் இடம்பெற வாய்ப்பளித்த தமிழ்மண நிர்வாகத்திற்கும் விரிவான நன்றிகள் அடுத்த பதிவில்....

அதுவரை இத்தனைக்கும் வாய்ப்பளித்த எங்கள் அலுவலக இணையத்துக்கு இந்த நன்றி!

என் தங்கையிடம் உடனுக்குடன் வலையில் உரையாடிய மகிழ்ச்சியில் எழுதியது இக்கவிதை...
கவிதை தாம்ப்பா...
நீங்க ஒத்துக்கிட்டுதான் ஆகணும்.

நட்சத்திர வாரத்தில இருந்ததுக்கு இதையாவது ஒத்துக்கக் கூடாதா?

விடுபடக் கூடாதவை!

* திராவிட தேசங்களில் முதல் முறையாக கர்நாடகாவில் ஆட்சி அமைக்கப்போவதாகப் பெருமை கொள்கிறது பா.ஜ.க.
இப்படித்தான் கணக்குத் திறப்பதாக பெருமை கொண்டது தமிழகத்தில்... பின்பு பின்னங்கால் பிடறியிலடிக்க ஓடிப்போனது.
இப்போது கர்நாடகாவில் பி.ஜெ.பி-யுடம் கூட்டு சேரக்கூடாது என்பதற்காக தனிக் கட்சி கண்ட மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் பதவிப் பித்தின் வெட்கங்கெட்ட அரசியலை மூலதனமாகக் கொண்டு ஆட்சிக் கட்டிலைப் பிடிக்கிறது காவிக்கூட்டம். காலொடிந்த கட்டிட்லுக்கு முட்டு எத்தனை நாள் நீடிக்கும் என்பது தெரியாது. மராட்டியத்துடன் ஒட்டியிருப்பதனாலோ என்னவோ கொஞ்சம் எப்போதும் திராவிடத்தின் சாயலிலிருந்து விலகியே இருக்கும் கர்நாடகா. அதனால் இது பெரிய விசயம் இல்லை என்று நினைத்துக் கொண்டு கொஞ்சம் மோப்பம் பிடிக்க விட்டாலும், சொட்டு ரத்தத்தின் ருசி கண்டாலும் காவிரத்தக் காட்டேரிகளை கட்டுக்குள் கொண்டுவருவது கடினம். அதிலும், ஏற்கனவே அடிப்படைவாதிகள் நிறைந்த அம்மாநிலத்தில் மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டியது அவசர அவசியமாகும்.
* கலைஞர் தொலைக்காட்சி பெரும்பாலும் பிற தொலைக்காட்சிகளின் சாயலைக் கொண்டே நிகழ்ச்சிகளை வழங்கிக் கொண்டிருந்தாலும…

வாகனத்தில் மாட்டு - சாணி மேட்டு!

பழைய புல்லட்டுகள், வண்டிகளின் மிடுக்கோடு அழகு சேர்க்கும் அணிகலன் இன்னொன்றும் உண்டு.
டுபு டுபு வென சைலன்சரிலிருந்து வரும் புகையைத் தடுத்து ஒலியைப் பெருக்கியபடி ஆடிவரும்..
மேடுபள்ளங்களைக் கடக்கும்போது சாலையை உரசிய படி கூட்டிச் செல்லும்..
அடுத்த தெருவில் நுழையும்போதே விரைந்து சென்று கதவைத் திறக்க வைக்கும் வண்ணம் ஒலிக்கும் எங்கள் இருசக்கர வாகனத்தின் ஹார்ன்.
முன்புறம் படபடவென துடிக்கும் திராவிடர் கழகக் கொடியுடன் வரும் எம் தந்தையின் "டிசிஏ - ங உ எ எ (TCA 3277)" எண்ணிடப்பட்ட டி.விஎஸ். சாம்ப்.. பள்ளிக்காலத் தோழர்கள் மத்தியில் ரொம்பவே பிரசித்தம்.
என்னையும் தங்கையயும் அழைத்துச் செல்ல எங்கள் தந்தை பள்ளியில் நுழைந்தால் அடுத்த 5 நிமிடத்தில் மணியடிக்கப்போகிறது என்று அர்த்தம்.
எங்கள் வண்டிச் சத்தம் என் தோழர்களுக்கும் பழக்கப்பட்டுப் போன ஒன்று.
சரியாக பள்ளி முடிந்து வண்டியின் பின்புறத்தில் எங்கள் புத்தக மூட்டையை வைத்துவிட்டு ஏறி அமர்ந்தால் எஸ்.எம்.எஸ். பள்ளியிலிருந்து கிளம்பும் வாகனம் மகர்நோன்புப் பொட்டல் வழியாகவோ, அல்லது ரயில்வே சாலை வழியாகவோ வீட்டுக்கு விரையும்.
பின்னால் தொடரும் மாணவர்களுக்கு த…

தீபாவளி வாழ்த்துகள்!

பெரியாரிடமிருந்துதான்...

காரணமில்லாமலில்லை.

தீபாவளி என்று சொல்லப்படும் பண்டிகையின் தத்துவம் என்று சொல்லப்படுவது என்ன?

தீமை செய்தவருக்கு தண்டனை கிடைத்த நாளே தீபாவளி!
அப்படியெனில் இன்று நான் தீபாவளி வாழ்த்து சொல்வது சரியானது தான்.
இந்திய அரசாங்கமே தண்டத்தில் தொங்கும் கோவணத் துணியில் தான் முடிச்சிடப்பட்டிருக்கிறது என்ற மமதையில் திரிந்த ஒரு கொலைகாரன் சரியாக மூன்றாண்டுகளுக்கு முன் இதே நவம்பர் 11-ஆம் தேதி இரவில்தான் கைது செய்யப்பட்டான்.

தண்டத்தை தூக்கிப்போட்டுவிட்டு நேபாளப் பெண்ணோடு ஓடியவனைத் தேடிக் கண்டுபிடிக்க அன்றைய குடியரசுத்தலைவராக இருந்த வெட்கங்கெட்டவனின் மனைவி தலைமையில் அமைக்கப்பட்டது குழு. அக்குழு விளக்குப் பிடித்தபடி தேடி தலைக்காவிரியில் போய் சல்லாபம் செய்து கொண்டிருந்தவனைப் பிடித்து வந்தது.
'கோவணம் காயவைக்கும் தண்டத்தை விட்டுவிட்டு வந்துவிட்டீர்களே!' என்று கேட்டதற்கு, "தண்டத்தின் சக்தியை என்னுடலில் ஏற்றிக் கொண்டேன்" என்றது நடுவால்.
இதனால் ஆதிசங்கரன் அமைத்த நான்கு பீடங்கள் தவிர, ஐந்தாவதாக உருவாக்கப்பட்ட டூப்ளிகேட் மடத்தின் பெரிய வால் அதிர்ச்சிக்குள்ளானது. அதற்கிடையில் &…

காதல் சுவடு

கவிஞர் ஏ.ராஜசேகரின் கவிதைகளுக்கு காட்சி வடிவம் ...இந்த கவிதைப்படம் உருவான, உருவாக்கிய தடங்கள் பின்னர் ஒரு பதிவில்....

அதுவரை காதல் சுவடு பதியட்டும் உங்கள் நெஞ்சில்...

NRS Creations-ன் புகை (குறும்படம்)

குறும்படங்களின் வருகை தமிழில் அதிகரித்திருக்கிறது. பலருக்கு அது திரைப்படத்துறையில் நுழைவதற்கான அடையாள அட்டை. காட்சி தொடர்பியல் மாணவர்களுக்கு அது மதிப்பெண். ஆனால் அவ்வடிவம் தமிழில் கவனம் பெற்றிருக்கிறது என்பது உண்மை. அதற்கு வணிக ரீதியான வரவேற்பு வரும் நாளும் எதிர்காலத்தில் வரக்கூடும்.

சரி, இப்போது நம் செய்திக்கு வருவோம். முதன்முதலில் கதை எழுதுவோருக்கு என்று பொதுவாக சில கருக்கள் இருக்கும். ஏழைத் தாய், அநாதைச் சிறுவன்... இப்படி..
அதேபோல், நாடகம், குறுநாடகம், பள்ளி, கல்லூரி கலைநிகழ்ச்சிகளில் செய்வதற்கென்று தயாராக எய்ட்ஸ், தேசீய ஒருமைப்பாடு ... இப்படி சிலதுகள் இருக்கும்.

அதேபோல குறும்படம் எடுக்க நினைப்போருக்கும் சில பொதுவானவை உண்டு...
ரொம்ப சீரியஸான சிலரின் முதல் ஸ்கிரிப்ட் கண்டிப்பாக பாலியல் தொழிலாளிகள் பற்றியதாக இருக்கும். அவை போக இன்னும் புகைப்பிடித்தல், எய்ட்ஸ், சாலைவிதிகள் இப்படி சில....

அந்த வகையில் திரைப்படக்கல்லூரியில் சேர்ந்த பிறகுநான் எடுத்த முதல் குறும்படமும் சம்பிரதாயத்தை மீறாமல்(இதில் மட்டும்) புகை பற்றியதே. ஏதோ கொஞ்சம் நக்கல் தொணியில் சிந்தித்தேன்.

மற்றபடி, என்னுடைய முதல் குறும்பட…

எழுத்துச் சீர்திருத்தம் (விளக்க ஆவணப் படம்)

"தமிழைக் காட்டுமிராண்டி மொழி" என்றார் பெரியார் என்று 'சோ' போன்ற சவுண்டிகளும், அதைக் கேட்டுக் கொண்டு நம்மவர்களிலேயே சில அரைவேக்காடுகளும் பெரியார் மீது சேற்றை வாரி இறைக்கத் தலைப்படுவார்கள்.
ஆமாம். பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி காலத்து மொழி என்றுதான் கூறினார். உண்மைதானே கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியிருந்தால் அது காட்டுமிராண்டி காலத்து மொழியாகத் தானே இருக்க முடியும். ஆனால், அதுதான் பெரியார் அப்படிச் சொல்லக் காரணமா? இவ்வாண்டு விடுதலை தந்தை பெரியார் 129-ஆம் ஆண்டு பிறந்தநாள் மலரில் விளக்கியிருக்கிறாரே முனைவர் தமிழண்ணல். அவரைவிட யாரே சொல்ல முடியும்? (விரைவில் அந்தக் கட்டுரையைப் பதிவிடுகிறேன் அல்லது சுட்டி தருகிறேன்.)
தமிழ்மக்கள் மீதும், தமிழ் மீதும் அக்கறை கொண்ட தந்தை பெரியார் ஒருவரால்தான் அப்படிச் சொல்ல முடியும். அவருக்கு மட்டுமே அதற்கான தகுதியும் உரிமையும் உண்டு. ஏனெனில் துவண்டு கிடந்த தமிழுணர்வையும், தூங்கிக் கிடந்த திருக்குறளையும் மாநாடுகள் போட்டு தூக்கி நிறுத்தியவர் தந்தை பெரியார். மறுக்க முடியுமா?
காலத்துக்கு ஏற்றவாறு மாற்றம் அடையும் எதுவொன்றும்தான் நிலைத…

பெரியாரின் மயிரைப் பிடுங்கி...

தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

வான் தவழும் வெண்மேகத் தாடியாடும்
வளையாத சிந்தனைக்கோர் ஆட்டம் இல்லை
- கவியரசு கண்ணதாசன்

வெண்தாடி வெளிச்சம்
- கவிஞர் கலி.பூங்குன்றன்

நின் அடையாளம்
தாடியும் தடியும்
நீதான் எங்கள்
அடியும் முடியும்
- கவிப்பேரரசு வைரமுத்து

உன் முகத்தில்
படர்ந்திருக்கும்
நரைமுடிகள்
போதிமர வேர்கள்!
- கவிஞர் பழநிபாரதி

சவரம் செய்யும் நேரம் கூட என் சமூகத்திற்குப் பயன்பட வேண்டும் என்று நினைத்த தங்கள் தலைவனின் அடையாளத்தை பாடி மகிழ்ந்தனர் கவிஞர்கள். சுருக்கமாகச் சொன்னால் தந்தை பெரியாரின் தடிக்கு நிகராய் பாடல் பெற்ற தலம்தான் தாடி.

சிங்கமாய்ச் சிலிர்க்கும் அந்த முகத்துக்கு வனப்பு சேர்த்தது அவரது தாடி! பார்ப்போரை கவர்ந்திழுத்த அந்தத் தாடியைக் கவர்திழுத்த கதை தெரியுமா? இதோ கேளுங்கள்!

06.03.1973 - காரைக்குடி பகுதிக்கு எப்போது வந்தாலும், கல்லுக்கட்டியில் இருக்கும் என்.ஆர்.சா…

நான் இந்துவல்ல; மானமுள்ள தமிழன்!

ராமேஸ்வரத்தில் ஒரு தெருமுனைக்கூட்டம். திராவிடர் கழகத்தின் தலைமைக்கழகப் பேச்சாளர் உரையாற்றிக் கொண்டிருக்கிறார். கடவுள்கதைகளின் யோக்கியதையைத் தோலுரித்துக் கொண்டிருக்கிறார். கூடியிருந்த நல்ல கூட்டத்தினைப் பொறுக்க முடியாமல் பக்கத்திலிருந்து ஒரு குரல் வருகிறது.
'நிறுத்து பேச்சை!'
குரலோடு ஒரு சின்ன கும்பல் சேர்ந்துகொள்கிறது.
"நிறுத்துடா பேச்சை!" வார்த்தைகள் தடிக்கின்றன.

ஒன்றல்ல; இப்படி ஓராயிரம் சலசலப்புகள் கண்டது திராவிடர் கழகம். இந்த கத்தலுக்கெல்லாம் பேச்சை நிறுத்தியிருந்தால் பெரியார் பட்டிதொட்டிக்கெல்லாம் எப்படி சென்றிருப்பார். கவனம் சிதறாமல் மேலும் வேகமாக பேச்சு தொடர்கிறது.
"ஏய்! நீ சொல்றதையெல்லாம் நாங்க கேகணுமா? நிறுத்துறியா இல்லையாடா!" என்றபடி மேடைக்கருகில் சூழ்ந்துகொண்ட 5, 6 பேர் ஒலிவாங்கியைப் பிடுங்க முயற்சிக்க... சூழல் மாறுகிறது.

பேச்சாளரைப் பாதுகாக்க தோழர்கள் அவரைச் சூழ்ந்துகொள்ள, காவல்துறையின் முழுக்கவனம் திரும்புவதற்குள் சின்ன கைகலப்பு அரங்கேறுகிறது.

வந்தது: சொல்லித் தெரியவேண்டியதில்லை... ஆர்.எஸ்.எஸ். காலிகள்
பேச்சாளர்: தி.என்னாரெசு பிராட்லா

காரணம்: வழக்கமானதுத…

சொந்த மண்ணிலும் உதை வாங்கவா? தேசஒற்றுமையாம்- மயிராச்சு! (வீடியோ)

பர்மா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, மலேசியா, சவுதி உலகெங்கும் உழைத்து உதைப்பட்ட தமிழன் சொந்த நாட்டிலும் உதைபடுவதை பவா சமத்துவன் தனது வரிகளில் வெளிப்படுத்துகிறார்.

"கல்தோன்றி மண்தோன்றாக்
காலத்துக்கும்
முந்தோன்றிய
மூத்தக்குடி,
இந்திய மாநிலத்திற்குள்ளும்
கால்பந்தாய்
உதைபடுகிறான்...

கேரளாவிலிருந்து
துரத்தப்பட்டான்
கர்நாடகாவிலிருந்து
விரட்டப்பட்டான்.
மராட்டியத்திலிருந்து
திருப்பப்பட்டான்.!

சொந்த மண்ணாவது
சொல்லிக் கொள்ளும்படி
இருக்கிறதா...?"

இந்தக் கேள்வியின் நியாயமும், வலியும் கண்முன்னே புரிந்தது ஒருநாள்.

28-03-2006:
திரைப்படக் கல்லூரியின் உணவு இடைவேளையில் எதிரிலிருக்கும் செல்வம் கடையில் உணவுண்பது வழக்கம். அப்படி ஒரு மதிய வேளையில் எங்கள் உணவுத்தட்டுக்குப் பக்கத்தில் வந்து விழுந்தது ஒரு கல். திடீரென சலசலப்பு... எழுந்து பார்ப்பதற்குள் கூட்டம் கூடியிருந்தது. மாணவர்களுக்குள் எழுந்த மோதல்.
தரமணி கல்வி வளாகத்தில் அவ்வப்போது இப்படி மாணவர் மோதல் சிறிய அளவில் நிகழும். அதில் ஏதோ ஒன்று என்று எல்லோரும் அமைதியகிவிட்டார்கள். சாலைக்கு வந்துவிட்ட வன்முறை எதுவாக இருப்பினும் காவல் துறைக்கு தகவல் தர வேண்டியது கடமை என்பதா…

எழுக, என் தாய்நாடே! -- பவா சமத்துவன்

(துபாயில் புதிய நகரம் அமைக்கும் பணியில் மாண்ட எம் தமிழ்ச் சொந்தங்களுக்கு....)
உலக உருண்டையின்
ஒவ்வொரு மூலையும்
தமிழனின்
உழைப்பால் செழித்தது!

அட்சரேகை
தீர்க்கரேகை
மத்தியரேகை
எதுவும் அவன் கால்களைக்
கட்டிப் போடவில்லை..!

யாதும்
அவன் ஊராய் இருந்தது.
ஆனால்
உலகம் அவனை
உறவாய் கொண்டதா..?

இரத்தம் முழுதும்
உறிஞ்சப்பட்டு
ஓடுகள் மட்டும்
வெளியே
துப்பப்படுகிறது.

பர்மாவிலிருந்து
விரட்டப்பட்ட தமிழன்
காடு மலை எங்கும்
கால்நடையாகவே நடந்து
வீடு வந்து சேர்ந்தான்.

இலங்கையின்
முதல்குடியாய் இருந்த
தமிழன்
நாடற்றவனாக்கப்பட்டு
அகிலமெங்கும்
அகதியாய் திரிகிறான்...

இருண்ட கண்டத்தை
வெளிச்சமாக்கிய
தென் ஆப்பிரிக்க தமிழன்
கறுப்பர்களுக்கே ஆப்பிரிக்கா
என எழுகிற கோஷத்தால்
தெருவில் நிற்கிறான்...

ரப்பர் தோட்டங்களில்
தோல் உரிய உழைத்த
மலேசியத் தமிழன்
விசாவெல்லாம்
பிடுங்கப்பட்டு
திரும்புவதற்கும்
வழியில்லாமல்
தவிக்கிறான்...

அரபு நாட்டுத் தமிழனோ -
எண்ணெய் வயல்களெங்கும்
எலும்பு உருக
கருகித் தீய்கிறான்.

சவுதியின் நீண்ட நெடிய
பாலைவனக்களில்
இரண்டு கால் ஒட்டகமாய்
'ஷேக்குகளை'
முதுகில் சுமது
மூச்சடங்கிப் போவதும்
தமிழனே...

கல்தோன்றி
மண்தோன்றாக்
காலத்துக்கும்
முந்தோன்றிய
மூத்தக்குடி,

இந்தி…

'அணுத்திமிர் அடக்கு'

பாவலர் அறிவுமதியின் 'அணுத்திமிர் அடக்கு' நூலிலிருந்து...

*ஆயுதத்திடம்
கேள்
அகிம்சை
புரியும்

*மௌனம்
செய்
சந்திப்பில்

*பிரிவில்
பேசு
பேசு
பேசு

*சிறைகள்
இடி

*இராணுவம்
அழி

*அரசுகள்
அற்ற
அரசினைச்
செய்

*விழு
விழுந்து
விழுந்து
எழு

*நிழல்
கசிய
நட

*குருதி
திகைக்க
உழை

*சலுகை
வெறு

*திணித்தலை
எதிர்

*மிரட்டலைச்
சந்தி

*அடங்க மறு

*மூச்சு
என்பது
உரிமைக்குப்
பிறகு

*உளிகளைச்
செதுக்கு

*பக்தி
விடு

*உண்டியல் தடு

*தனிமையை
நேசி

*நகம் தின்று
யோசி

*கோபம் நடு

*குருதிபாய்ச்சு

*துளி
மண்
ஆயினும்
சுதந்திரம்
வேண்டும்

*பெண்னைப்
பேசப்
பெண்ணே
எழு

*காத்திருக்காதே

*கற்பு
உடலுக்கு

*காதல்
உயிருக்கு

*காதலி

*நச்சுக்
கொடி
தாலி

*வளையல்
விலங்கு

*குருதிப்
பிணம்
குங்குமம்

*விழித்துப்
பார்

*விடிந்தே
இருக்கும்

*புணரும்
நிழலைக்
காறித்
துப்பு

*ஆண்பெண்
சுவர்
இடி

*நட்பில்
பால்
சிதை

*ஆண்பெண்
சமன்
செய்

*அறிவியல்
முகம்
கொள்

*விளையாடு
விளையாடு
தோல்வியும்
புகழ

*முரண்
படு

*மோது

*எதிரிகள்
நெருக்க
நெருக்க
காண்
இயக்கம்

*இனவலி
உனர்

*பசி
பசி
நட்சத்திர யுத்தம்
அணூலைக்
கசி

*அச்சம்
வேண்டாம்

*மனிதரைக் காக்க
மனிதரே வருவார்.

*******************
வெளீயீடு: சாரல்
189, அபிபுல்லா சாலை,
தியாகராய நகர்,
சென்னை-17

தோழிமார் கதை

கவிப்பேரரசு வைரமுத்துவின் 'பெய்யெனப் பெய்யும் மழை' தொகுப்பில் தோழிமார் கதை என்றொரு கவிதை உண்டு.

"ஆத்தோரம் பூத்தமரம்
ஆனை அடங்கும்மரம்
கெளையெல்லாம் கூடுகட்டிக்
கிளியடையும் புங்கமரம்

புங்க மரத்தடியில்
பூ விழுந்த மணல் வெளியில்
பேன் பார்த்த சிறுவயசு
பெண்ணே நெனவிருக்கா?"
என்று தொடங்கும்.

காட்சியாய் விரியும் விவரணைகள். கனியினும் இனிதான வைரமுத்துவின் குரல்.

கள்ளிக்காட்டு கன்னிகளின் நட்பை எத்தனை ஆழமாய் விவரித்திருக்கிறார் கவிஞர்? வைரமுத்து பெண் பெயரோ? என ஒரு கணம் திகைக்க வைக்கிறது கவிதை.
முன்பே ஒருமுறை சக பதிவர் பிரேம்குமார் இந்தக் கவிதையைப் பதிவிட்டிருக்கிறார். அதில் விடுபட்ட வரிகளை என் நினைவிலிருந்து நான் சேர்த்திருக்கிறேன் -பின்னூடத்தில்...

எண்ணற்ற கவிஞர்களைப் பார்க்கிறோம்.கவிதைகளை வாசிக்கக் கேட்கிறோம். இரண்டிரண்டு முறை படிக்கப்படும் கவியரங்கங்களின் வாசிப்பை லொள்ளு சபாவில் கிண்டல் செய்கிறோம். ஏனெனில் கவிதைகளை படைக்கத் தெரிந்த அளவுக்கு உணர்வோடு அதைப் படித்துக் காட்டத் தெரிந்த கவிஞர்கள் குறைவு என்றே தோன்றுகிறது. ஆனால் கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைகளை அவர் படிக்கும் விதமே அலாதியானது.

எனக…

'புலம்' - (விடைகொடு எங்கள் நாடே)

திரைப்படக் கல்லூரியின் பயிற்சித் தேர்வுக்காக பாடல் ஒன்றைப் படமாக்க வேண்டியிருந்தது. ஏற்கனவே இருக்கும் திரைப்படப் பாடலை வேறுவடிவத்தில் படமாக்கலாம் என்ற வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டேன். என்னை வெகுவாக பாடலாக பாதித்த, காட்சியாக கவரத் தவறிய "விடைகொடு எங்கள் நாடே" பாடலைத் தேர்ந்தெடுத்தேன்.நேரடியாக சிங்களக் கொடியைப் பயன்படுத்த முடியாத சூழல்- அரசுக் கல்லூரி என்பதால்!
எனவே முந்தைய அ.தி.மு.க அரசு காலகட்டத்தில் மாணவன் ஒருவனால் படமாக்கப்பட்ட பாடல் என்பதைக் கருத்தில்கொண்டு பார்க்க வேண்டுகிறேன்.

கூகிளாண்டவர் என் தளத்தில் காட்சி தர மறுத்தால் கீழ்க்காணும் சுட்டியைக் கொண்டு ஆண்டவரைத் தட்டுங்கள்!
http://video.google.com/videoplay?docid=-8652878290372582009&hl=en

கலைக்கட்டும் கலைஞர் அரசை!

('கலைத்துப்பார் கலைஞர் அரசை' என்றுதான் முதலில் தலைப்பு வைக்க நினைத்தேன்...
சவால் விடுவதைப்போல! இப்போதல்ல...
உச்சநீதிமன்றத் தடையை மீறி மக்கள் நடத்திய கடையடைப்பு என்ற மூக்கறுப்பு நிகழ்ந்தபோது, தலையில் முளைத்த நீதிபதிகள் கலைஞர் அரசைக் கலைக்க பரிந்துரை செய்தனரே! அப்போது வைத்த தலைப்பு.
சவால் விட்டு ஒருவேளை கலைக்காமல் போய்விட்டால்....
அதனால் அந்தத் தலைப்பை விட 'கலைக்கட்டும் கலைஞர் அரசை!' என்பதுதான் சரியெனபட்டது.)

காலை எழுந்ததும் கலைஞர் அரசைக் கலைக்கக்கோரி ஒரு அறிக்கையை விட்டுவிட்டு காலைக்கடன் முடிக்கப்போகும் அம்மையாரைப் போல அல்ல... நாங்கள் கோருவது!
கொள்கைக்காக ஆட்சியை இழந்தார் கலைஞர் என்ற வரலாறு மீண்டும் பதிவாக 'கலைக்கட்டும் கலைஞர் அரசை!'
தமிழின நன்மைக்காக ஆட்சியை இழந்தார் கலைஞர் என்று வையம் வாழ்த்த 'கலைக்கட்டும் கலைஞர் அரசை!'
தமிழ்ச்செல்வன் படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்தமைக்காக ஆட்சியை இழந்தார் கலைஞர் என்ற வரலாறு உருவாக ''கலைக்கட்டும் கலைஞர் அரசை!''
அவ்வப்போது கூட்டணிக் கட்சிகளால் எழும் சிறு சிறு சலசலப்புகள் கூட இல்லாமல் முழுமையான, மெஜாரிட்டி அ…

திடலிலிருந்து 'தீபாவளி மலர்'

'பூமா தேவிக்கும், பன்றி அவதார எடுத்த மகாவிஷ்ணுவுக்கும் பிறந்த நரகாசுரனைக் கொன்ற நாளே தீபாவளி!'

'நரகாசுரன் யார்?'

'அவன் ஒரு அசுரன். அரக்கன்'

பூமாதேவிக்கும் விஷ்ணு பகவானுக்கும் பிறந்த பிள்ளை எப்படி அசுரனாக முடியும். நாய்க்கும் நாய்க்கும் பிறக்கும் பிள்ளை நாயாகத்தானே இருக்க வேண்டும். தேவருக்கும் தேவிக்கும் பிறந்த பிள்ளை அசுரனான மாயம் என்ன? அதிருக்கட்டும், நரகாசுரன் ஏன் கொல்லப்பட வேண்டும்?'

'அவன் பூதேவர்கள் செய்த யாகங்களை அழித்தான். அதனால் அவன் அசுரன். எனவே அவனைக் கொல்ல வேண்டும்'

'விலங்குகளையும், உணவுப்பொருள்களையும் யாகம் என்னும் பெயரால் அழித்த கயவர்களை காவு வாங்குவது தானே மன்னன் கடமை. அப்படியாயின் நரகாசுரன் செய்தது சரிதானே!'

'??????'
- - - - - - - - - - - - - - -
சும்மா இந்த கேள்விளுக்கே கலங்கிட்டா எப்படி?

தினகரன் தொடங்கி, தீக்கதிர் வரைக்கும் தீபாவளி மலர் வெளியிட்டுக் கொண்டிருக்க, பெரியார் திடலிலிருந்து தீபாவளி மலர் வந்தால் எப்படி இருக்கும்!

இதோ, கடந்தாண்டு தீபாவளியை ஒட்டி வெளிவந்த கருவூலம் போன்ற விடுதலை 'நரகாசுரன் மலர்' வண்ணமயமாக உங்களுக…

பக்குரித்தல்

எனக்கு
விழுப்புண் பட்டு
நீண்ட நாட்களாகிறது.

விழுந்து புண் பட்டதுதான்
விழுப்புண் என்பதாகும்.

சேற்றிலாட முடியாமல்
வளர்ந்ததால்
சிரங்கு வரும் வாய்ப்பில்லை!

செருப்பில்லாமல் நடந்ததில்லை
என்பதால்
சேற்றுப்புண்ணுக்கும் வழியில்லை!

மிதிவண்டி பழகியதில்
தொடங்குகிறது எனது
விழுப்புண் வரலாறு!

வாடகைக்கு எடுத்த
வண்டியில் விழுந்தபோதும்
விருந்தினர் கொணர்ந்த
வண்டி ஓட்டி விழுந்தபோதும்

என் சிராய்ப்புகளுக்கு
மருந்து போடுகையில்
'புதுப்புது மொழிகளை
உருவாக்கி உளறியதாய்'
அண்ணன் சொல்லிச்
சிரித்தபோது
ஆறிவந்த தடத்தின்
பக்குகளை உரித்தபடி
பொருமிக் கொண்டிருந்திருக்கிறேன்.

ஜான்டிரோட்ஸ் போல
பாய்ந்து பிடிக்கிறேன் என
ஆர்வக்கோளாறில்
விழுந்து எழுந்தபோது
வழிந்த குருதி துடைத்தபடி
வீடு நோக்கி நடந்திருக்கிறேன்.

காயம்பட்ட இடத்தில்
களிம்பு தடவிப்பின்
காத்திருந்து தடவிப் பார்க்கையில்
இடறுகின்ற பக்குகளை
மெதுவாய் உரிப்பதொரு...
சுகம்!

வெங்காயத் தோல்களாய்
விரியும் அடுக்குகளுக்குள்
வடுக்களாய் ஒளிந்திருக்கிறது
காலம்!

காயாத பகுதிவரை
கிழிப்பதில் வேண்டும்
தனிக்கவனம்!

விழுப்புண்கள்
குழிப்புண்கள் ஆகிவிடாதிருக்க
தேவை எச்சரிக்கை!

உதடுகளின் உலர்ந்த
தோலை
உரிப்பதிலிருந்து...
பிறந்த குழந்தை…

இருக்கு...(சில நல்ல எழுத்துக்களால் ஆன கெட்ட வார்த்தைகள்)

'ந.முத்து'-வின் (நா.முத்துக்குமார் அல்ல) "இருக்கு" கவிதை குறுநூல்.. படித்து நீண்ட நாட்களாகியும், அதற்கொரு முக்கியத்துவம் தரவேண்டி நட்சத்திர வாரத்தில்தான் வலையேற்ற வேண்டும் என்று நினைத்திருந்தேன்.
பலர் படித்திருக்கக்கூடும்.. படிக்காத சிலருக்காக... சில கவிதைகள்.
(நான் எழுதுற 'ஒன்னுக்குக் கீழ ஒன்னு' மாதிரி இல்லாம, உண்மையிலேயே கவிதைதாங்க இது!)
இருக்கு... (சில நல்ல எழுத்துக்களால் ஆன கெட்ட வார்த்தைகள்)
நீங்கெல்லாம்
சேத்துல கையை
வச்சாத்தா
நாங்கெல்லாம்
சோத்துல கையை
வைக்க முடியும்னு
சொல்லுறான்
கூத்துல பொறந்தவன்.
எலேய்!
சேத்துல
கைய வச்சதால
எங்க கையெல்லாம்
எரிஞ்சுகிட்டிருக்கு
சூத்துல
கைய வச்சதால
உங்க கையெல்லாம்
சொறிஞ்சிகிட்டிருக்கு
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

ஒரு துளி வியர்வைக்கு
ஒரு பவுன் தங்கக் காசு
கொடுத்தது
தமிழல்லவா...
-திரைப்படப் பாடல்

எட்டுவயசுப் புள்ள
ஒட்டுன தீப் பெட்டில
ஒண்ணு, ரெண்டு
ஒழுங்கா ஒட்டலைனு
ஒருநா(ள்) கூலிய
புடுச்சிட்டுத் தர்ரானுக
கூறுகெட்ட கூ....யானுக
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

குண்டி காய்ஞ்சு
கிடக்கிற ஊருக்குள்ள
எண்ணெக் கிணறு தவிர
எல்லா இட…

வீரவணக்கம்! வீரவணக்கம்!!

மாநாட்டுத் தீர்மானங்களின் தொடக்கத்தில் களத்தில் நின்று போராடி மடிந்த கொள்கை மறவர்களுக்கு வீரவணக்கம் தெரிவிக்கும் இரங்கல் தீர்மானம் தெரிவிக்கும் வழக்கம் உண்டு.

முற்றிலும் எதிர்பார்க்காத வண்ணம், நம் அனைவரையும் துயரக் கடலில் ஆழ்த்தியதோடு நாம் இன்னும் முனைப்பாக செயலாற்றி, நம் உரிமையை வென்றெடுக்க நம்மைத் தூண்டியுள்ள வீரத் தளபதிகளின் மறைவுக்கு வீர வணக்கம் செலுத்த வேண்டிய நிலையில் நாம் உள்ளோம்.
வீரவணக்கம் செலுத்துவதோடு, தமிழீழத் தாயகத்தில் எழுச்சி ஏற்கும் நாளாக அமைந்துவிட்ட மாவீரர்களின் இறுதி நிகழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.


(நன்றி: த.அருள்எழிலன்)

வீரவணக்கம்; வீரவணக்கம்!

வென்றெடுக்கப் போகும் எங்கள் நாட்டின்
வீரவித்துக்கள் நீவீரே!
மண்கொள்வதில்லை உங்கள் உடல்கள்...எங்கள்
மனங்கொண்டு சினம் வளர்த்து
ஈழம் படைக்க உரமாகின்றன!
வீரவணக்கம்; வீரவணக்கம்!

உம்மைக் கொன்றதும்
எங்கள் அமைதி முகத்தைச்
சிதைத்ததும் ஒன்றே!
பேச்சு தேவையில்லை
இனியென சிங்களம்
சொல்கிறது!
இனி அவர்கள்
பேசவேகூடாது என்கின்றன
உம்முடல்கள்...
செய்து முடிப்போம்!
பகையைக் கொய்து முடிப்போம்!
வீரவணக்கம்; வீரவணக்கம்!

இந்த வாரம் பெரியார் வாரம்!

தமிழ்மண நட்சத்திர நிர்வாகத்திடம் இருந்து அழைப்பு வந்த நாட்களில் பணி இருந்ததால், வேறு நாட்களை ஒதுக்குமாறு வேண்டிக் கொண்டேன். மீண்டும் வழங்கப்பட்ட நாட்கள் நவம்பர் 5-இல் தொடங்கும் வாரம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


'ஆஹா! நொடிக்கொரு முறை இணையத்தை நோண்டும் வாய்ப்பு சென்னையில் எனக்கிருக்க, சரியாக ஊருக்குச் செல்ல முடிவு செய்திருந்த வாரத்தில் நட்சத்திர வாய்ப்புக் கிடைத்துள்ளதே! இம்முறையும் நாள் மாற்றிக் கேட்பது சரியில்லை. சரி, நட்சத்திர வாரத்தை என் ஊரில் காரைக்குடியிலிருந்தபடி கொண்டடுவதும் மகிழ்ச்சிதானே; இன்னும் ஊரைப் பற்றிய செய்திகளியும் கூட பகிரலாமே' என்று அதை ஒப்புக் கொண்டேன்.

'அட, தீபாவளி கொண்டாடாத பகுத்தறிவாளனான எனக்கு அதே வாரத்தில் நட்சத்திர அந்தஸ்து. சரி, இதையும் நம் மக்கள் அனுபவிக்கட்டுமே! பெரியாரின் குரல் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக ஒலிக்கட்டுமே!' என்று அதையும் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டேன்.

தமிழ்மணம் குறிப்பிடும் நாட்களுக்குள் பெரும்பாலான பதிவுகளை வலையேற்றிவிட்டு, பின் அந்தந்த நாட்களில் 'publish' மட்டும் கொடுத்துவிட்டு வேலையைப் பார்க்கலாம் என்று முடிவு செய்திரு…

நீலம்! (குறும்படம்)

தமிழீழம், தமிழ்நாடு என்று தமிழர்கள் வாழும் இடமாகப் பார்த்து நம் கண்முன்னே கடல் கொண்ட சோகத்தைக் காட்சியாகப் பதிவு செய்கிறார் அண்ணன் அறிவுமதி அவர்கள்.
ஒளிப்பதிவு: தங்கர் பச்சான்
நன்றி: உலகம் தொலைக்காட்சி