முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

”பெரியாறு அணையைக் காப்போம்!“ கோவாவில் தமிழக மாணவர்கள் பதிலடி போராட்டம்!

”முல்லை பெரியாறு அணையைக் காக்க வேண்டும்!” கோவாவில் தமிழக மாணவர்கள் பதிலடி போராட்டம்
கடந்த நவம்பர் 23-ஆம் தேதி முதல் கோவா மாநிலம் பனாஜியில் 42-ஆவது பன்னாட்டுத் திரைப்பட விழா நடைபெற்றுவருகிறது. பல நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் திரைப்படத் துறையினரும், மாணவர்களுமாக மொத்தம் 8ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இன்று (நவம்பர் 29) மதியம் உணவு இடைவேளைக்குப் பிறகு திரைப்பட விழா நடக்கும் வளாகத்தில் கூடிய கேரளாவைச் சேர்ந்த நடிகர் ’ஒரு தலை ராகம்’ ரவீந்தர், சில பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 30 பேர் ‘முல்லைப் பெரியாறு அணை இடிந்துவிடும்’ என்றும், ’புதிய அணையைக் கட்ட வேண்டும்’ என்றும் குரல் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, வளாகத்திற்குள்ளேயே ஊர்வலம் போலவும் நடத்தினர். 
இதனைக் கண்டு வெகுண்டெழுந்த பல்வேறு திரைப்படக் கல்லூரிகளைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள், திரைப்படத் துறையினர் 50-க்கும் மேற்பட்டோர் உடனடியாக ஒன்றுகூடி, ”8000 ஏக்கர் விளைநிலம், 3 கோடி மக்கள் வறட்சியில் சாகும் அவலத்தைத் தடுக்க வேண்டும்”, “முல்லைப் பெரியாறு அணையைக் காக்க வேண்டும்”, “அணையைச் சிதைப்பது, இந்திய ஒற…

முகநூலில் ‘தேசீயவாதி’ ஆவது எப்படி?

தேவையான பொருட்கள்:

1. இந்திய தேசியக் கொடியின் படங்கள் சில.

2. கொடியின் வண்ணங்கள் கூடப் போதுமானது. அதிலும் குறிப்பாக ’வந்தே மாதரம்’ பாடல் டிசைனில் உள்ளது போன்ற நடுவில் அசோகச் சக்கரம் இல்லாத ஓவிய வடிவில் இருந்தால் இன்னும் உங்கள் தேசீய ‘கிரேடு’கூடும்!)


3. காந்தி, நேரு படம் பயன்படுத்தலாம். ஆனால் அதைப் பயன்படுத்தினால் காங்கிரஸ் சாயம் வந்துவிடும் ஆபத்து இருப்பதால், காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ்-சின் இன்றைய அடையாளமான மோடி படத்தைப் பயன்படுத்தலாம்.

4. அன்னா ஹசாரே, மதச்சார்பின்மையைக் காக்க அப்துல்கலாம் (வேறு எந்த முஸ்லிம் படமும் அனுமதியில்லை.)

5. ’பாரத் மாத்த்த்தா க்க்க்கீ ஜே!’, ’வந்த்த்தே மாத்த்தரம்’ போன்ற ரெடிமேட் ஸ்லோகங்கள் கொஞ்சம் போல வைத்துக் கொள்ளலாம்.


செய்முறை:
இந்தியாவின் இண்டிபெண்டன்ஸ் டே, ரிபப்ளிக் டே (எது ஜனவரி 26, எது ஆகஸ்ட் 15 என்றெல்லாம் தெரியவேண்டியதில்லை.) என்று யாராவது சொல்லும் போதெல்லாம் மேற்காணும் படங்களில் ஒன்றைப் profile படமாகப் போட்டுவிட்டு, forward mail எதாவதிலிருந்து எடுத்து ஸ்டேடஸ் மெசேஜ் போடலாம்..

கூடவே ஏ.ஆர்.ரஹ்மானின் ‘வந்தே மாதரத்தை’ப் பயன்படுத்துவது தூக்கலாக இருக்கும்…

தீபாவளியன்று வீட்டுக்கு வந்த பெரியார்

...... 1949க்குப் பிறகு அய்யா அவர்கள் எனது இல்லத்தில் தான் தங்குவார்கள் (காரைக்குடி வரும்போது) என்பது எனக்குக் கிடைத்த பெருமையாகும்.


ஒருமுறை 1950வாக்கில் தீபாவளி அன்று திடீரென்று பெரியார் அவர்கள் எங்கள் இல்லத்திற்கு வந்து விட்டார்கள். முதல் நாளில் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட நிகழ்ச்சி முடித்து மதுரை வந்த அய்யா மேலூர், திருப்பத்தூர் வழியாக காரைக்குடிக்கு வந்து விட்டார்கள்.

நேராக எனது கடைக்கு முன் அய்யாவின் வேன் வந்து நின்றுள்ளது. நான் அந்த நேரம் கடையில் இல்லை. எனது மைத்துனர் தனுக்கோடிதான் கடையில் இருந்தார். அப்போது மதியம் 3-4 மணி இருக்கும். வந்தவுடன் "சாமி எங்கே?" என்று கேட்டதும், "வீட்டிலிருக்கிறார். இதோ கூட்டி வருகிறேன்" என்று கிளம்பியவரை நிறுத்திவிட்டு, அய்யா அவர்களே தனியாக கடை எதிரே உள்ள ஒரே நீளமான சந்தில் வருகிறார்.

நான் கருப்புச்சட்டையுடன் எதிரே வருகிறேன். சற்று தூங்கிவிட்டு வருவதால் எனக்கே ஒரு சந்தேகம். 'காண்பது கனவோ' என்ற நிலை.  "அய்யா வாங்க" என்றேன்.  அய்யாவும் "வாங்க வீட்டிற்குப் போகலாம்" என்று சொன்னபடியே வீடு நோக்கி நடந்…

மாசு அகற்றிய மாசு!

இந்தக் கட்டுரையை நான் எழுதத்தொடங்குகிற இந்த நொடியோ (11:59:14 - 20.10.2011), அல்லது எழுதத் தோன்றிய 16-ஆம் தேதி இரவோ எந்த விதத்திலும், பிரச்சாரத்திற்கோ ஒரு ஓட்டிற்கோ கூடப் பயன்படப் போவதில்லை; அந்த நோக்கமும் இல்லை.
ஏன், எழுதும் நான், என் ஓட்டைக் கூடத் தர முடியாதவன்... சென்னை மாநகராட்சிக்கு! (காரைக்குடிக்குச் சென்று 19-ஆம் தேதி வாக்கிட்டுவிட்டு வந்துவிட்டேன்) வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்ட மாமன்ற உறுப்பினர்கள் மீதான வெறுப்பையும் தாண்டி, மக்களின் ஆதரவு என்னும் பேரலை இவருக்குச் சாதகமாக இருப்பினும், சென்னை மாநகராட்சியை எப்பாடுபட்டேனும் கைப்பற்றியே தீருவது என்ற வெறியில், இவரது வெற்றி ஆளுங்கட்சியினரால் தட்டிப் பறிக்கப்படலாம். ஆனாலும் என் நன்றியைத் தெரிவிக்கும் நோக்கம் ஒன்றே என்னை எழுதத் தூண்டுகிறது.
நேரடியாக மேயரைத் தேர்ந்தெடுக்காமல், மாநகராட்சி உறுப்பினர்களிலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் முறை கடந்த 2006-ஆம் ஆண்டு பின்பற்றப்பட்டது. அப்படி சென்னை சைதையிலிருந்து தி.மு.க.வின் சார்பில் மாமன்ற உறுப்பினராகத் தேர்வாகி, பின்னர் மாநகரத் தந்தை ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் மா.சு என்கிற மா.சுப்ப…

ராம்தேவை விட பெரிய தில்லாலங்கடி!

’சுடிதார் எஸ்கேப்’ புகழ் பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் இருந்தபோது, அவரது பல படங்களையும் ஊடகங்கள் பெரிதாக விளம்பரப்படுத்தின. ஏற்கெனவே ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளை மிகச் சரியாகப் பயன்படுத்தி வந்த ராம்தேவுக்கு இவை பெரிதும் பயன்பட்டன.

அதில், மூச்சை நன்கு உள்ளிழுத்து, வயிற்றைக் குழி விழுந்தது போல் காட்டும் படம் கூட பெரிய அளவு பிரபலமாகவில்லை. காரணம், சிறுவயதில் பள்ளிக்கூடம் பள்ளிக்கூடமாக வந்து, 2 ரூபாய் கட்டணம் வாங்கிக் கொண்டு, மேஜிக் ஷோ செய்யும் எளிய வகை நிபுணர்கள் காட்டும் தண்ணீரை நிறையக் குடித்து பம்புசெட்டு போல வெளியே விடுதல், பேப்பர் மேஜிக் போன்ற வித்தைகளில் ஒன்றுதான் வயிற்றை உள்ளிழுத்துக் காட்டி வியப்பூட்டுவதும்!


ஆனால், பிரபலமான மற்றொரு படம் - இரண்டு கால்களையும் பாம்புபோல் பின்னி நிற்கும் படமாகும். பல பேர் இதைப் பார்த்தே இவர் பெரிய யோகா வித்தகர், உண்மையான சாமியார் என்று பேசிக் கொண்டார்கள்.
அடப்பாவிகளா! நம்ம வைகைப் புயல் வடிவேலு, ”சிங்கார வேலன்” படத்திலேயே இந்த வேலையெல்லாம் காண்பிச்சுட்டுட்டாரே! அப்ப அவரையெல்லாம் ராம்தேவுக்கு முன்னோடின்னுல்ல சொல்லணும் என்று யோசித்துக் கொண்டேன்.

நேற்று …

எதற்காக டெல்லியில் குண்டுவெடித்தது?

வட இந்திய ஆங்கில ஊடகங்களைப் போலவே, புதிய தலைமுறை தொலைக்காட்சியின் இன்றைய பேசு பொருளாக டில்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பே இருந்தது!

நீதி கிடைக்குமென நம்பி சாதாரண மக்களும், நீதியை ’வாங்கு’வதற்கென சிலருமாகப் பொதுமக்கள் குழுமியிருக்கும் இடத்தில் நடத்தப்பட்டிருக்கும் குண்டு வெடிப்பு கடுமையான கண்டனத்திற்குரியது தான். நீதிமன்றத்திற்குள்  குத்து, வெட்டு, கொலை நடப்பதை நம்மூரில் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்தியாவின் தலைநகரல்லவா? குண்டு வெடித்திருக்கிறது. கடும் கண்டனத்திற்குரிய இந்நிகழ்வை யாரும், எக்காரணத்தைக் கொண்டும் ஆதரிக்க முடியாது.இதற்கு பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமா? அலட்சியம் காரணமா? CCTV கேமராக்கள் இல்லாத்தற்குக் காரணம் யார்? சகல திறமையும் பொருந்திய நமது இராணுவம், காவல்துறை இவற்றைவிட தீவிரவாதிகள் பெரியவர்களா? உளவுத்துறை என்ன செய்கிறது? இப்படி எண்ணற்ற கேள்விகள் எல்லா ஊடகங்களாலும் கேட்கப்பட்டன. புதிய தலைமுறை நிகழ்ச்சியிலும் கேட்கப்பட்டது.

இந்த விவாதத்தில் கலந்துகொள்ள ஓய்வுபெற்ற இந்திய இராணுவ உளவுப்பிரிவைச் சேர்ந்த கர்னல் ஹரிஹரன் என்பவரும், இதழாளர் பகவான் சிங்-கும் கலந்…

வீணை - சாதனை - ரசனை

தகுதி, திறமை என்றால் அவாள் தான் என்பது பார்ப்பனர்களின் வசதிக்காக, பார்ப்பனர்களாலேயே கட்டமைக்கப்பட்ட ஒரு கட்டுக்கதை. அதிலும், இசை என்றால் அவாள் தான் என்ற மாயையை அவ்வப்போது பலர் உடைத்து வருகிறார்கள். தமிழ்த் திரை என்று மட்டும் இல்லாமல், தமிழிசை, கர்நாடக இசை என்று சாஸ்திரீய சங்கீதத்திலும் கொடி கட்டிப் பறந்தது என்னவோ நம்மவர்கள் தான்.
கே.பி.சுந்தராம்பாளாக இருந்தாலும், வீணை தனம்மாளாக இருந்தாலும், பாகவதராக இருந்தாலும், கற்க வாய்ப்புக் கிடைத்த தமிழர்கள் தங்கள் திறனால் உலகு புகழ வளர்ந்தார்கள். ”எங்களாவாவை கட்டிண்டதாலதான் எம்.எஸ். இப்படி தேனா பாடுறா!” என்ற இங்கிதம் இல்லாத இவர்களின் சங்கீத பீலாக்களை வரலாறு பதிந்துதான் வைத்திருக்கிறது. 
இந்த வரலாற்றின் தொடர்ச்சியாக இதோ நேற்று (17.7.2011) ஓர் இளம் பிஞ்சு, இசைப் பாரம்பரியம் என்றெல்லாம் இல்லாத ஒரு 13 வயது மாணவி 16 மணி நேரம் வீணை வாசித்துச் சாதித்திருக்கிறார். கரூரைச் சேர்ந்த அந்த மாணவியின் பெயர் ஸ்ரீநிதி கார்த்திகேயன். கருவூர் தமிழிசைச் சங்கமும், கருவூர் திருக்குறள் பேரவையும் இணைந்து கரூர், நாரத கானசபாவில் நடத்திய இந்நிகழ்வில் சிறுமி ஸ்ரீநிதியின் இந்த…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

சின்னக்குத்தூசி - சில நினைவுகள்

திராவிட இயக்க சிந்தனையாளர், எழுத்தாளர், இதழாளர் சின்னக்குத்தூசி அவர்கள் நேற்று (22.5.2011) காலை இயற்கை எய்தினார். திருமணம் செய்துகொள்ளாமல் கூட தன்னை முழுமையாக இயக்கத்துக்கும் கொள்கைக்கும் ஒப்படைத்துக் கொண்ட கொள்கை வீரர். பிறப்பால் பார்ப்பனர் தான்... ஆனால் அதற்கான எந்த அடையாளமும் குணத்தின் எந்தத் துளியிலும் இருக்காது. உண்மையில் இவர் தான் அக்கிரகாரத்தின் அதிசய மனிதர். பொதுவுடைமை இயக்கத்தவருடன் பணியைத் தொடங்கி, திராவிட இயக்கத்தில் இணைந்து இறுதிவரை கொள்கையில் உறுதியாய் இருந்தவர்.
1996-97-க்குப் பிறகு நக்கீரனில் அவர் எழுதத் தொடங்கியிருந்தார். பதின்ம வயதின் தொடக்கத்தில் வாசிப்பு வேகம் கூடியிருந்த எனக்கு, நக்கீரனில் ஆதாரத்துடன், திராவிட இயக்க உணர்வுடன் வெளிவரும் சின்னக்குத்தூசியின் கட்டுரைகள் ஈர்ப்பை அளித்தன. அவர் யாரென விசாரித்த போது, ”பிறப்பால் பார்ப்பனர். ஆனால் உறுதியான பெரியார் பற்றாளர். கடுமையான திராவிடர் இயக்க உணர்வாளர்” என்று சாக்ரடீசு அண்ணன் சொல்லியிருந்தார். எனக்கோ பெரிய ஆச்சரியம். இப்படியொரு மனிதன் இருக்க முடியுமா?
பின்னர் ’பொன்னர் - சங்கர்’ படித்த போது, அதில் கலைஞரின் முன்னுரையில், …

கொஞ்சம் தயக்கத்தோடும், நிறைய வருத்தத்தோடும்...

எனதருமை தமிழீழச் சொந்தங்களே! கொஞ்சம் தயக்கத்தோடும், நிறைய வருத்தத்தோடும் உங்களிடம் இதனைப் பேசத் துணிகிறோம். இதைப் பேசுகிற உரிமை எமக்கிருக்கிறதென்றும் கருதுகிறோம். இதனால் எம்மீது உங்களில் சிலருக்கும், எம்மில் சிலருக்கும் கூட வருத்தம் உண்டாகலாம். ஆயினும் யாரேனும் ஒருவர் இது குறித்துப் பேசியே ஆகவேண்டும்.
தமிழக அரசியலில் யார் யார் எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி அருள்கூர்ந்து நீங்கள் கருத்து தெரிவிக்காதீர்கள். இனப்பாசத்தின் அடிப்படையில், எம் உறவுகள் என்ற அடிப்படையில், தமிழனுக்கென ஒரு கொடி உலக அரங்கில் பறக்கட்டும் என்ற ஆசையில் தமிழீழத்துக்கான எங்கள் ஆதரவு அமைகிறது. அதே வேளையில் எம் தமிழ்நாட்டின் நிலைக்கேற்ப, எங்களின் தேவைகளுக்கேற்ப, இங்குள்ள சூழல்களைப் பொறுத்து யாரை ஆதரிப்பது, யாரை எதிர்ப்பது என்பது எங்கள் விருப்பம்.
அதை விடுத்து, உங்கள் விருப்பத்திற்கு செயல்படவில்லை என்பதற்காக கலைஞரைத் திட்டுவது, ஆசிரியர் வீரமணியைத் திட்டுவது, திருமாவை, சுப.வீ-யைத் திட்டுவது, தரக்குறைவாகப் பேசுவது என்று நீண்ட உங்கள் பட்டியல், இப்போது வைகோ வரை வந்திருக்கிறது. தெளிவாகச் சொல்கிறோம்... உங்களுக்காக நாங்கள் இ…