முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

டாபர் ஹனியும் கலைவாணரும்

டாபர் ஹனி புதிய விளம்பரம் ஒன்று. தேன் புட்டியைக் கையில் வைத்துக் கொண்டு எதிரிலிருக்கும் பெண்ணைப் பார்த்து வம்பிழுக்க, 'ஹனி' என்கிறார். அவர் முறைத்துவிட்டு, அதுவா ஹனி, இது ஹனி என்று டாபர் ஹனியைக் கையில் எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது அவ்விளம்பரம். இந்தக் காட்சியைக் கேட்டதும் உங்களுக்கு இன்னொரு காட்சியும் பாடலும் நினைவுக்கு வருமே! கண்டதும் எனக்கு வந்தது. ஏனெனில் சிறுவயதில் காலை எழுந்ததும் கேட்பது, அல்லது எங்களை எழ வைப்பதே என்.எஸ்.கே பாடல்கள் அல்லது எம்.ஜி.ஆர். இன உணர்வுப் பாடல்கள் போன்ற இசைப் பேழைகள் தான். (நன்றி: சாமி சமதர்மம்) அதில், டி.ஏ.மதுரத்தைப் பார்த்து, கலைவாணர் என்.எஸ்.கே., பாடுவதாக அம்பிகாபதி படத்தில் அமைந்தது அந்தப் பாடல். 'கண்ணே... உன்னால் நான் அடையும் கவலை கொஞ்சமா?' என்று தொடங்கி, தங்கமே, தேனே என்று ஒவ்வொரு சொல்லாக மதுரத்தை விளித்துப் பாடுவார். ஆசையுடன் கூடிய பொய்க் கோபத்தோடு மதுரம் அம்மாவின் முறைப்பும், ஒவ்வொன்றுக்கும் கலைவாணர் சொல்லும் விளக்கமும், அவரின் குரலிலேயே வெளிப்படும் பாவமும் அட்டகாசம். (பாடல் 2:18-ல் தொடங்கும்) ஏனோ இன்றைக்கு இர