முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

February, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பெரியாரியல் பரப்புநர் பூபதி மறைந்தாரே!

தந்தை பெரியாரின் கொள்கைகளை புத்தகங்கள் மூலம் நாளும் பரப்பும் அரும்பணி ஏற்றிருந்த தோழர் செங்கை பூ.பூபதி அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி ஆழ்ந்த வருத்தத்தையும், தாங்கொணாத துயரத்தையும் தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. 14.02.2011 இரவு 7 மணிக்கு தனது சொந்த ஊரான செங்கல்பட்டில் வயது நாற்பதுக்குள் தான் என்றாலும், காசநோய் தீவிரத்தின் காரணமாக இறப்பு நிகழ்ந்திருக்கிறது. கடந்த சனிக்கிழமையன்று அவரைத் திடலில் சந்தித்தேன். உடல்நிலை குறித்து கேட்டபோது, எப்போதும் போல் இருப்பதாகச் சொன்னார்.. உடலின் சோர்வை உழைப்பில் காட்டாமல்!
எப்போதும் வருத்தும் உடல்நிலையைக் குறித்தும் கவலை கொள்ளாமல் கொண்ட கொள்கைக்காக களப்பணியாற்றும் சுயமரியாதை வீரர். யாருடைய உதவியையும் எவ்விதத்திலும் ஏற்கமாட்டார்; யாருடைய பரிதாபத்தையும் கோர மாட்டார். அவருடைய உடல்நிலை மோசமாகும் சமயத்தில் எல்லாம், தென்சென்னை, வட சென்னை, தாம்பரம் கழகத் தோழர்கள் தான் அவருக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வார்கள். அவற்றையும் கூட ஒருவித தயக்கத்துடனே ஏற்றுக் கொள்வார்.
சென்னையைச் சுற்றி திராவிடர் கழகத்தின் சார்பில் எங்கு கூட்டம் நடந்தாலும், அது தெருமுனைக் கூட்டமோ, ம…