முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பகுத்தறிவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கடவுள் நம்பிக்கையாளர்களுக்கு சத்யராஜ் சவால்!

சென்னை பெரியார் திடலில் நடைபெற்று வரும் முப்பெரும் மாநாடுகளில் ஒன்றான மாநில பகுத்தறிவாளர் கழக மாநாட்டில் இன்று (செப்டம்பர் 7-ஆம் தேதி), கலந்துகொண்டு உரையாற்றும் இனமுரசு சத்யராஜ், ஆத்திகர்களுக்கு ஒரு சவால் விடுத்திருக்கிறார். "எனக்கோ, அமைச்சர் வேலு போன்ற தலையில் முடி கொட்டிவிட்ட எங்களைப் போன்றவர்களுக்கோ, எந்தக்கடவுளை கும்பிட்டாவது முடி வளருமேயானால், நாங்கள் எங்கள் பகுத்தறிவு வாதங்களையும், கருப்புச் சட்டையயும் கழற்றிவிட்டு உங்களோடு வரத் தயார்...! ஆத்திகர்கள் தயாரா?" என்று சவால் விடுத்தார்... என்ன? எப்படி சவுகரியம்.... ஆத்திகர்கள் தயாரா? _____________________________________________________________ இன்று மாலை தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்கு "சமூகநீதிக்கான வீரமணி விருது" வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வாய்ப்புள்ள தோழர்கள் பெரியார் திடலுக்கு வாருங்கள்! மற்றவர்களுக்காக இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.. அவசியம் பாருங்கள்! http://periyar.org.in

Symposium on GLOBAL HUMANISM

PERIYAR INTERNATIONAL CHICAGO, USA AND TAMILNADU INTELLECTUAL FORUM CHENNAI, INDIA Cordially invite you to participate in the Symposium to be held at Annai Maniammaiyar Hall, Periyar Thidal, Chennai- 600 007 at 5 pm on 05-09-2008, Friday The topic for Discussion: Global Humanism President: Dr. K.Veeramani, President, Dravidar Kazhagam Welcome: Dr. Soma Elangovan, Periyar International, Chicago Chief Guest: Prof. Paul Kurtz, Internationally renowned Humanist The invitees will exchange their views in the symposium Vote of thanks: Dr. V.Sundararajulu, Secretary, TamilNadu Intellectual Forum, Chennai

திடலிலிருந்து 'தீபாவளி மலர்'

'பூமா தேவிக்கும், பன்றி அவதார எடுத்த மகாவிஷ்ணுவுக்கும் பிறந்த நரகாசுரனைக் கொன்ற நாளே தீபாவளி!' 'நரகாசுரன் யார்?' 'அவன் ஒரு அசுரன். அரக்கன்' பூமாதேவிக்கும் விஷ்ணு பகவானுக்கும் பிறந்த பிள்ளை எப்படி அசுரனாக முடியும். நாய்க்கும் நாய்க்கும் பிறக்கும் பிள்ளை நாயாகத்தானே இருக்க வேண்டும். தேவருக்கும் தேவிக்கும் பிறந்த பிள்ளை அசுரனான மாயம் என்ன? அதிருக்கட்டும், நரகாசுரன் ஏன் கொல்லப்பட வேண்டும்?' 'அவன் பூதேவர்கள் செய்த யாகங்களை அழித்தான். அதனால் அவன் அசுரன். எனவே அவனைக் கொல்ல வேண்டும்' 'விலங்குகளையும், உணவுப்பொருள்களையும் யாகம் என்னும் பெயரால் அழித்த கயவர்களை காவு வாங்குவது தானே மன்னன் கடமை. அப்படியாயின் நரகாசுரன் செய்தது சரிதானே!' '??????' - - - - - - - - - - - - - - - சும்மா இந்த கேள்விளுக்கே கலங்கிட்டா எப்படி? தினகரன் தொடங்கி, தீக்கதிர் வரைக்கும் தீபாவளி மலர் வெளியிட்டுக் கொண்டிருக்க, பெரியார் திடலிலிருந்து தீபாவளி மலர் வந்தால் எப்படி இருக்கும்! இதோ, கடந்தாண்டு தீபாவளியை ஒட்டி வெளிவந்த கருவூலம் போன்ற விடுதலை 'நரகாசுரன் மலர்' வண்ணமயமா...

அட்சய திருதியை! - ஆரியக் கொள்ளை!!

தலைப்பைப் பார்த்ததும் சிலர் குதிக்கக்கூடும்... "இது துவேஷம், அர்த்தமற்ற ஆவேசம், இதற்கும் பிராம்மானோத்தமர்களுக்கும் என்ன தொடர்பு? நகைத் தொழில் செய்வது எங்கள் குலத் தொழில் அல்லவே, லாபம் எங்களுக்கா வருகிறது???" இப்படியெல்லாம் கேள்விகள் வரக்கூடும், அதனால் செய்தியைப் படித்துவிட்டு பிறகு குதிக்கவும்... இந்த வருடம் அட்சய திருதியை ரெண்டு நாளாம்! ஒரே நாளில் ஒட்டுமொத்தக் கூட்டமும் வந்தால் சமாளிக்க முடியாது என்பதால், இரண்டு நாள் என்று ஆக்கிவிட்டார்கள்! அடுத்த ஆண்டு ஆடித் தள்ளுபடி மாதிரி ஒரு மாதம் முழுக்க என்று அறிவித்தாலும் இந்த பேராசைக் கூட்டம் வரிந்து கட்டி வரிசையில் நிற்கத்தான் போகிறது. (என்ன ஆடியில் எது செய்தாலும் விளங்காது என்ற மூடத்தனத்தை ஆடித் தள்ளுபடி அடித்து உடைத்தது என்பது தான் ஒரு மகிழ்ச்சி!) சரி,இதில் ஏன் பார்ப்பனர்களைக் குறை சொல்கிறாய் என்பவர்களுக்கு ஒரு செய்தி: இன்று மதியம் சன் தொலைக்காட்சியில் (19.04.07) அட்சய திருதியை பற்றிக் கருத்துச் சொன்ன ஜோதிடத்திலகம் ஒருவர், "இந்த ஆண்டு அட்சய திருதியை கரிநாளில் வருகிறது; அதனால் அது தோஷம். அந்தப் பிரச்சினை தீர வேண்டுமானால் பிரா...

எது தமிழ்ப் புத்தாண்டு? -- அறிவியல் மற்றும் வரலாற்று முடிவு

--மஞ்சை வசந்தன் திராவிட இயக்கத்துக்கு பார்ப்பனரைத் தலைமைத் தாங்கச் சொல்லி இன்றைக்குத் தமிழன் எப்படி தரம் கெட்டு இழிந்து கிடக்கின்றானோ அதேபோல அன்றைக்கும் ஏமாந்து வாழ்ந்ததன் விளைவு சமஸ்கிருத ஆண்டை தமிழ்ப்புத்தாண்டு என்று கொண்டாடும் மடமை. தமிழாண்டு என்று 60 ஆண்டுகளைக் கூறுகிறார்களே அதில் ஏதாவது ஒன்று தமிழாண்டு என்றோ தமிழ்ச்சொல் என்றோ காட்ட முடியுமா? அத்தனையும் சமஸ்கிருதப் பெயர்கள் அல்லவா? தன் இனப் பெருமையை எல்லாம் இழந்து அடுத்தவன் அடையாளங்களை ஏற்று அலைகின்ற அவலம் நீங்கும்போதுதான் தமிழன் வாழ்வான்; தமிழும் வாழும்!. நாடார் சங்கத்திற்கு வன்னியர் தலைவர் என்றால் நாடே சிரிக்காதா? அது பைத்தியக்காரத்தனம் என்று சொல்லமாட்டார்களா? அப்படியிருக்க சமஸ்கிருத ஆண்டைத் தமிழாண்டு என்று மட்டும் எப்படி ஏற்றுக் கொண்டாடுகின்றனர்? அப்போது மட்டும் ஏன் சிந்திப்பதில்லை? அறிவைப் பயன்படுத்துவது இல்லை? மரபை மீறலாமா என்கின்றனர். எது மரபு? சமஸ்கிருத ஆண்டை தமிழாண்டு என்று சொல்லி தொல்காப்பியக் காலத் தமிழன் கொண்டாடினானா? தண்ணீர் என்பதற்கு ஜலம் என்று சொல்வதிலும் சோறு என்பதற்கு சாதம் என்று சொல்வதிலும் பெருமை கொண்ட ஏமாளித் தமி...

தாஜ்மஹால் இடம் மாறுது...!

தினமும் வரும் பல மின்னஞ்சல்களிலும், செல்குறுஞ்செய்திகளிலும் நான் ரசிக்கும் வெகு சிலவற்றை அனைவரோடும் பகிர்ந்து கொள்ள ஆசை. வழக்கமாக மின்னஞ்சல்களை கணினியிலும், செ.கு.செ.க்களை எழுதி அனுப்பியவர் பெயரோடு தொகுப்பாகவும் சேமித்து வைத்துக்கொள்வது எனது பழக்கம். இனி நல்ல செ.கு.செ.க்களை தொகுத்து இந்த வலைத்தளத்திலும் பதிந்து, யாம் பெற்ற இன்பத்தை இவ்வுலகுக்கு பகிர்ந்திட விரும்புகிறேன். இதில் இன்னொரு வாய்ப்பும் என்னவென்றால், காலத்துக்கும் அவை நிற்கும். என்னிடமும் சேரும் துண்டுச்சீட்டுகளின்/ கோப்புகளின் எண்ணிக்கை குறையும். செ.கு.செ: என்னதான் பெரிய பக்திமானா இருந்தாலும், அவரால கப்பல் கிளம்புறதுக்கு முன்னாடி எலுமிச்சைபழம் வைக்க முடியாது. -பகுத்தறிவோடு யோசிப்போர் சங்கம் அனுப்பியவர்: காமராசு (பச்சையப்பன் கல்லூரி மாணவர்) மின்னஞ்சல்: தாஜ்மஹால் ஆக்ரா-வில இருந்து பூனேவுக்கு மாறுதுன்னா உங்களால நம்ப முடியுமா? கொஞ்சம் சிரமம் தான் இல்லையா? இங்க பாருங்க. . . . . . . அனுப்பியது: சக்தி சரவணன் (பொறியியல் மற்றும் திரைப்பட வல்லுனர்)

சீசன் பிசினசில் ஏசு பெருமான்!

தீபாவளிக்கு வெடிக்கடை, பொங்கலுக்கு கரும்புக் கடை, வெயிலுக்கு இளநீர்க்கடை என்று சீசனுக்கு சீசன் தொழில் மாற்றுபவர்களைப் பார்த்திருப்போம். அதேபோல, எப்போதும் E.N.T. Specialist (காது, மூக்கு, தொண்டை நிபுணர்) மாதிரி செவிடர் காது கேட்க வைக்கும், குருடர் கண் பார்க்க வைக்கும், முடவர் கால்களை இயங்க வைக்கும் சர்வ வல்லமை படைத்த எல்லாம் வல்லவராகிய 'ஏசு'வும், அவரை சந்தைப்பபடுத்தும் சீடர்களும் சீசன் பிஸினசில் இறங்கியிருக்கிறார்கள். இது தேர்வுக் காலமல்லவா? அதனால் பள்ளிகளின் தேர்வு எண்ணிகைய உயர்த்த ஜெபக்கூட்டங்களை நடத்தி வருகிறார்களாம் தினகரன், பால் தினகரன் குடும்பத்தினர். ஒட்டுமொத்தமாய் 100% தமிழகத்தில் தேர்ச்சி விகிதம் கிடைக்கட்டும் நாமும் நம்புவோம். மானவர், மாணவியர் படித்து நல்ல மதிப்பெண் எடுத்தால், திறமையைத் திருடி பலன் அனுபவிக்க இவர்கள் தயாராக இருக்கிறார்கள். சரி! சரி! பிசினஸ்-னு இறங்கியாச்சு! அப்புறம் எதையும் விட்டு வைக்கக் கூடாது! இது கிரிக்கெட் சீசன் ... வாங்க பால் தினகரன் தலைமையில் ஜெபம் பண்ணுவோம்! (எல்லோரும் கண்களை மூடிக்கொண்டு ' தினகரன் & கோ போல் நடியுங்கள்... சாரி... ஜெபம்...

"பொருத்தம் பார்த்தல்" என்னும் ஆபாச மோசடி!

இன்று எம்மவர் மத்தியிலே காதல் திருமணம், பேச்சுத் திருமணம் என்று இரு வகையான திருமணங்கள் காணப்படுகின்றன. முன்னைய காலத்தில் தமிழர்கள் காதல் திருமணம் மட்டுமே செய்து வந்தார்கள். அதுவே தமிழர் பண்பாடாகவும் இருந்தது. பின்பு தமிழினத்திற்குள் ஆரியர்களால் வர்ணாச்சிரம தர்மத்தின் பெயரில் ஜாதிகள் திணிக்கப்பட்ட பொழுது, ஜாதியைக் காப்பதற்காக பேச்சுத் திருமணம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்குள் பார்ப்பனர்கள் எண்ணில் அடங்காத ஆபாசங்களையும் நுளைத்துவிட்டனர். இன்று வரை ஜாதியோடு, பேச்சுத் திருமணத்தையும் எமது தமிழர்கள் கைவிடாமல் கட்டிக் காத்து வருகிறார்கள். இதில் இடையிடையே காதல் திருமணம் சிறந்ததா? பேச்சுத் திருமணம் சிறந்ததா? என்று பட்டிமன்றமும் நடத்துவார்கள். இந்த பேச்சுத் திருமணத்தில் பொருத்தம் பார்ப்பது முக்கியமான ஒன்றாக இருக்கும். இதைப் போல ஒரு முட்டாள்தனமான விடயம் உலகத்தில் இருக்க முடியாது. இந்தப் பொருத்தம் பார்ப்பதில் "திரிம்சாம்சம்" போடுதல் என்கின்ற ஒரு விடயம் உண்டு. இதன் மூலம் வரப் போகும் பெண்ணின் குணத்தை அறிய முடியுமாம். இதன்படி ஏறக்குறைய 40 வீதமான தமிழ் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்களாக இருக்கிறா...

சாய்பாபாவும், வயதான ஹீரோக்களும்

ஏற்கனவே பார்த்த பதிவுகளில் உள்ள படங்களில் சாய்பாபா சிக்கியதைப் போல இப்போதும் சிக்குவார் என எதிர்பார்த்து நம்முடைய நண்பர்கள் யாரும் சாகச வேலைகளில் இறங்க முடியாது. பாபா சுதாரித்துக் கொண்டார். வருவோர், போவோர் எல்லாம் கையடக்க கேமரா வைத்துக் கொண்டு கண்ட கண்ட ஆங்கிள்களில் படமெடுத்து தனது 'கையடக்க' சித்து விளையாட்டுக்களை அம்பலப்படுத்த ஆரம்பித்தால் என்னாவது. சினிமாவின் நுணுக்கம் தெரிந்த நமது ஹீரோக்கள் தான் எந்த ஆங்கிளில் தன்னை எடுக்கக் கூடாது என்று முன்கூட்டியே தெளிவாக சொல்லிவிடுவார்கள். எடுத்துக்காட்டாக , லோ ஆங்கிளில் இருந்து எடுத்தால், தாடையின் கீழ் சதை தொங்குவது துண்டாக தெரியும். அதனால் ஆரம்ப காலங்களில் வில்லனுடன் சண்டையிடும் காட்சிகளிலும், அறிவுரை வசனங்கள் பேசும்போதும் விரும்பிக்கேட்ட லோஆங்கிளை, வயதான பின்னாளில் அவர்களே வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள். இது நிற்க.... லோ ஆங்கிள் என்பது எடுக்கப்படும் பிம்பத்தை உயர்த்திக்காட்டப் பயன்படும் ஆங்கிளாகும். இதனால் அவ்வளவு பெரிய திரையில் நடிகரின் பிம்பம் தெரியும் போது, அதைப் பார்க்கும் நமக்கு, அவர் மிகப் பெரியவர், பலம் வாய்ந்தவர் என்ற உள்ளுண...

“மர்ம சாமியார் சாயிபாபா”

பி.பி.சி.யில் பரபரப்பாகப் பார்க்கப்படும் “மர்ம சாமியார் சாயிபாபா” யோகிகள், குருக்கள் என்று கருதப்படும் சாமியார்கள் புனிதமானவர் களாகக் கருதப்படுவது இந்தியாவின் பாரம்பரியமாகும். ஏறுக்குறைய 3 கோடி பக்தர்களைக் கொண்ட சத்ய சாயி பாபாதான் இத்தியாவிலேயே மிகப்பெரிய ஆன்மீகத் தலைவராகக் கருதப்படுகிறார். தென்னிந்தியாவில் பெங்களூர் நகரின் அருகே உள்ள புட்டபர்த்தியை அவர் தன் இருப்பிடமாகக் கொண்டுள் ளார். அவரது ஆரஞ்சு வண்ண உடையும், அடர்ந்த தலை முடியும் அவரைத் தனித்து அடையாளம் காட்டுபவை. மனிதப் பிறவியான இவர் தன்னையே கடவுளாக, கடவுளின் அவதாரமாக அறிவித்துக் கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார். இந்தியாவில்; இருந்து மட்டுமல்ல உலகின் 165 நாடுகளில் தனக்கு பக்தர்கள் உள்ளனர் என்று அவர் பெருமையுடன் கூறிக் கொள்கிறார். ஆனால் பி.பி.சியின் உலகக் குழு ஒன்று இந்தியாவில் இருந்து கலிபோர்னி யாவுக்குப் பயணம் செய்தபோது, தங்களின் வாழ்வையே பாபா கெடுத்து விட்டதாக அவரின் முன்னாள் பக்தர்கள் பலர் தெரிவித்தனர். பாபா தன்னைப் பாலியல் ரீதியில் பயன்படுத்திக் கொண்டதாகக் கூறும் முன்னாள் பக்தர் அலயா கூறினார்: “நான் கூறுவதைப் போல நீ ச...

இப்படித்தான் அம்பலமானார் சாய்பாபா

இது ஒரு தபா! படவிளக்கம்: 1. முதலில் தண்ணீர் குடிப்பது போல பாவனை 2.லிங்கம் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கைக்குட்டையை கையிலெடுக்கிறார். 3. வாயைத் துடைப்பது போல் பாவனை 4. அப்படியே லிங்கத்தை வாயினுள் திணிக்கிறார். கவனிக்க: இடதுகை விரல்கள் 5. வாய்க்குள் லிங்கம் சென்றதும் முகத்தைத் துடைப்பது போல் ஒரு நடிப்பு. 6. மீண்டும் தண்ணீர் நடிப்பு (5,6,7-படங்களில் கவனியுங்கள் உதவியாளரின் பரபரப்பு.) 7. வாந்தி எடுப்பது போல் நடிப்பு 8, 9 வாயில் வைத்திருந்த லிங்கம் வெளியே வருகிறது. துரைமுருகனுக்கு மோதிரம் கொடுத்தது தொடர்பான பதிவை இங்கே படிக்கலாம்.

இணையத்தில் அம்பலமான சாய்பாபா

இது சில ஆண்டுகளுக்கு முன்பு நான் படித்த கட்டுரை, அதை பிய்த்து பிய்த்து உங்களுக்குத் தருகிறேன். இணையத்தில் அம்பலமான சாய்பாபா கடவுள் அவதாரம் எனக்கூறிக் கொள் ளும் சாயிபாபாவை பல ஆண்டுகளாக திராவிடர் கழகம் அம்பலப்படுத்தி வருவது தமிழ்நாட்டுக்குப் புதிதல்ல. தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பல முறை சாயிபாபாவின் மோசடிகளை தோலுரித்துக் காட்டியுள்ளார். பாபா செய்யும் மேஜிக்கு களை தி.க. பிரச்சாரகர்கள் மக்கள் மத்தியில் தொடர்ந்து செய்து காட்டி வருகின்றனர். நாம் இப்படிப் பகுத்தறிவு பரப்புரைகளை செய்து வரும் நிலையில் சாயிபாபாவின் முன்னாள் சீடர்கள் இணைய தளத்தில் இந்த வேலையை செய்து அசத்தியுள்ளனர். முன்பு ஒரு முறை ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு சாயிபாபா முன்னாள் சீடர் மலேசியாவைச் சேர்ந்த ஹரிராம் ஜெயராம் என்பவர் சாயிபாபா வின் மோசடி குறித்து தனது கருத்தை கடிதம் வழி எழுதியிருந்தது இங்கு நினைவு கூறத் தக்கது. இப்போது இவரைப் போன்றே சில சீடர்கள் இந்த மோசடிகளை அம்பலப்படுத்த தனி இணைய தளத்தையே துவக்கியுள்ளனர். www.exbaba.com என்ற இணைய தளம் பாபாவை அக்குவேறு ஆணிவேறாக புட்டுப் புட்டு வைத்திருக்கிறது. அதிலுள்ள படங்க ளையே...

சாய்பாபா மேஜிக் ஷோ! டிக்கெட் ரெண்டு ரூபாய்

தெலுங்கு கங்கை திட்டத்திற்காக 200 கோடி வழங்கிய சாமியார் சாய்பாபாவுக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் "ஆன்மீக சக்தியால் மொதிரம் வரவழைத்து கொடுத்தார் பாபா" என்று பெருமிதம் கொண்டாராம். செய்தி வெளியிட்டிருக்கிறது 'தினமலர்'. அதே கூட்டத்தில் (21.1.2007 காலை நிகழ்ச்சியில்) மத்திய அமைச்சர் மாண்புமிகு தயாநிதி மாறன் பேசும் போது, "அருள்மிகு பாபா முதலமைச்சர் வீட்டிற்கு வந்தபோது, எனக்கு மோதிரம் வரவழைத்துக் கொடுத்தார். அப்போது அவருக்கு மோதிரம் கொடுத்துவிட்டீர்கள், எனக்கும் ஒரு மோதிரம் தாருங்கள் என்று அமைச்சர் துரைமுருகன் கேட்டார். உடனே அவருக்கும் மோதிரம் வரவழைத்துக் கொடுத்தார். எங்களுக்குக் கொடுத்து விட்டீர்கள்; கலைஞருக்குக் கொடுங்கள் என்று (துரைமுருகன்) கேட்டபோது, அவருக்கு என் மனதையே தருகிறேன் என்றார். அவர் மனதில் நானும், என் மனதில் அவரும் இருக்கிறார் என்று பாபா தெரிவித்தார்.’’ (`தினத்தந்தி’, 22.1.2007) என்று கூறியுள்ளார். ஆகா! அற்புதம்...அற்புதம்....மோதிரம் ஸ்டாக் தீர்ந்து போச்சுங்கிறதை எவ்வளவு அழகா சமாளிச்சிருக்கிறாரு பாபா! இல்லாட...