முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நெட்டிலிங்க மரமும் பாவாடை அணிந்த சிறுமியும்

கணிதத்தின் அடிப்படையைப் புரிய வைக்க முயலாமல் கணக்கு போடுவதற்கு எளிய முறை என்று பல வழிமுறைகளை பயிற்றுவிப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? எங்கள் சிறு வயதில்... பள்ளிக்கு பல்வேறு துறைகளைச் சார்ந்தோர் வருவார்கள். அவரவர் முயற்சியில் பல புதிய விசயங்களை அறிமுகப்படுத்துவார்கள். உண்மையில் அப்படிப்பட்ட அறிமுகங்கள் ஆர்வத்தை விதைத்தன என்பதை மறுப்பதற்கில்லை. மேஜிக் செய்பவர், அறிவியல் விளக்கங்கள் சொல்பவர், எளியமுறை கணிதம் என்று கணித விளக்கம் சொல்பவர், தாளை நறுக்கி அதில் பல்வேறு வேலைப்பாடுகள் செய்பவர், ஓவியத்தில் பூ வேலைப்பாடுகள் கற்றுத் தருபவர், குட்டிக் குட்டித் தையல்கள், பந்து-கூடைகள் நெய்யக் கற்றுத் தருபவர், விதவிதமான பேனா பென்சிகள் விற்பவர், பெட்ரோலைச் சேமிக்கும் புதிய வகை கார்ப்பரேட்டர் விற்பவர் என்று ஏராளமாக வருவார்கள். அவர்களில் சிலர் தங்கள் திறமைக்கு டிக்கெட் பணம் போல இரண்டு ரூபாய், அய்ந்து ரூபாய் வாங்கிக் கொள்வார்கள். சிலர் 8 பக்கத்திலோ, 16 பக்கத்திலோ ஏறத்தாழ சாம்பலைத் தாண்டி கருப்புக்கு நெருக்கமான நிறத்திலான சாணித் தாளிலும், அதே தரத்தில் மிக மெல்லிய காகிதக் கொடி தடிமனிலான வண்ண மேல்தாளிலு

புதிய திரட்டி “தமிழ்ச்சரத்”திற்கு வாழ்த்துகள்!

புதிய திரட்டி தமிழ்ச் சரத்திற்கு வாழ்த்துகள்! நான் வலைப்பூவுலகத்திற்குள் எண்ணற்ற திரட்டிகள் இருந்தாலும், என் மனம் கவர்ந்தது தமிழ்மணம். இன்று எப்படி பித்துப் பிடித்ததுபோல முகநூலின் காலக்கோட்டை அடிக்கடி புதுப்பித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேனோ, அப்படி ஒரு காலத்தில் தமிழ்மணம் திரட்டியை மீண்டும் மீண்டும் புதுப்பித்துப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறேன். மைக்ரோ பிளாக்கிங்கும், சமூக ஊடகங்களும் பெருகிய பின், அருகிப்போன வலைப்பூ பரப்பில், அவ்வப்போது முக்கிய பதிவுகளை மட்டும் பதிவேற்றிவிட்டு, ஒரு காலத்தில் ஓடிவிளையாடிய பூங்காவில் காய்ந்த சருகுகளுக்கு மத்தியில் கால்பதித்துத் திரும்புதல் போலச் சென்று வருவேன். நீச்சல்காரனின் பதிவொன்று, எதிர்நீச்சல் பதிவாக முகநூலில் கண்ணில் பட்டது. பூங்காவைப் புதுப்பித்து, பூச்சரம் தொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளமை கண்டு மகிழ்ந்தே, நானும் ‘தமிழ்ச்சரம்’ வலைப்பூ திரட்டியில் பதிவு செய்துள்ளேன். நல்முயற்சி வெல்ல வாழ்த்துகள்!