முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புஷ்--ஷுக்கு செருப்படி! பெரும் அவமதிப்பு... செருப்புக்கு!

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது செருப்பு (shoe) வீசியதன் மூலம் செருப்புக்கு மாபெரும் அவமரியாதையை ஏற்படுத்தியுள்ளார் ஈராக்-கின் பத்திரிகையாளர் முன்டேதர் ஸைதி.

செருப்புக்கு ஏற்பட்டுள்ள இந்த அவமரியாதையால் உலகெங்கும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொளுத்தப்பட்டது 'இந்தியா டுடே'!

இட ஒதுக்கீட்டையும், சமூக நீதிக்காவலர் வி.பி,சிங் அவர்களையும் கொச்சைப்படுத்திய பார்ப்பன ஊடகமான "இந்தியா டுடே"யைக் கண்டித்து மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள இந்தியாடுடே அலுவலகத்தின் முன்பு
திராவிடர் கழக இளைஞரணி சார்பில் "இந்தியா டுடே" க்கு செருப்படி தந்து எரியூட்டப்பட்டது. சுமார் அரை மணிநேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஈடுபட்டோரைக் காவல் துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். பின்னர் மாலை விடுதலை செய்யப்பட்டனர். மேலும் படங்களுக்கு: http://picasaweb.google.com/princenrsama/DemonstrationAgainstINDIATODAY#

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களுக்கு வீரவணக்கம்

சமூக நீதிக் காவலரும்,
"ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக எனது பதவியை இழக்கிறேன் என்றால் அதைவிட மகிழ்ச்சி வேறில்லை"
என்று சிங்கமென முழங்கிய
இந்திய வரலாற்றின் ஈடிணையற்ற மதிக்கத்தகுந்த ஒரே
பிரதமர் வி.பி.சிங்(விஸ்வநாத் பிரதாப் சிங்)
அவர்கள் இன்று மறைவுற்றார்.
அவருக்கு நமது செலுத்துவதோடு
அவர் விட்டுச் சென்ற பணிகளை தொடர்வோம்
என்று உறுதியேற்போம்.

பிரபாகரன் - ஒரே வார்த்தையில்...

" தலைவர் புரட்சி விடுதலை போராளி தமிழடையாளம் வீரர் " முடியவில்லை வேறு வார்த்தைகளால்...
சரி....ஒரே வார்த்தையில்...
தமிழகராதியில் அத்தனை பொருளுக்கும் கிடைத்த ஒரு வார்த்தை 'பிரபாகரன்' (தமிழின் தனிப்பெரும் வார்த்தை)
21.09.2006 (Orkut - இல் பிரபாகரனை ஒரு வார்த்தையில் வரையறுக்கச் சொன்னபோது எழுதியது)

நடிகர் சங்க உண்ணாவிரதம்: குழப்பவாதிகளுக்கு திருமா உடனடி பதில்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் நடைபெற்றுவரும் உண்ணாநிலைப் போராட்டத்தில் உணர்ச்சியைக் கட்டுப்படுத்திவிட்டு வந்து பேசுங்க:ள் என்றெல்லாம் நீட்டி முழக்கினர் அதன் பொத்க்குழுவினர். ஆமால் அதையெல்லாம் மீறி இயக்குநர் பாரதிராஜா அவர்களை விமர்சித்தார் நடிகர் ராதாரவி.
அதையெல்லாம் விடக் கொடுமை... குழப்பத்தின் உச்சம்....
"இலங்கைத் தமிழர்களை, இலங்கை வாழ் இந்தியர்கள் என்று அழைக்க வேண்டும்; அப்படி அழைத்தால் இந்தியா உதவும்" என்று ஏதோ ஒரு கூமுட்டை கூறியதை வழிமொழிந்து உணர்ச்சிகரமாக அந்தக் கருத்தை ஆதரித்து. ராதாரவி பேசிக் கொண்டிருந்தார் அப்போது போராட்டத்தை வாழ்த்த வந்த விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் அரங்கத்தில் நுழைந்துகொண்டிருந்தார். ராதாரவி பேசியதும், அடுத்து திருமா அவர்களை வருங்கால நடிகர்சங்க உறுப்பினர் என்று வரவேற்று எங்கள் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு வாழ்த்திப்பேச அழைத்தார்கள். வந்தார்... "உங்கள் கட்டுப்பாட்டை மதிக்கிறேன் அதே நேரத்தில், ஈழத் தமிழர்களை இந்தியத் தமிழர்கள் என்றழைத்தால் தான் இந்திய அரசு உதவும் என்றொரு கருத்தைத் தெரிவித்தார்கள். ஆனால் அவர்கள் இந்த…

எழுச்சியோடு நடந்த ரயில் மறியல் போராட்டம் - வீடியோ காட்சி

பார்க்க இயலாதவர்கள் இந்த சுட்டியைப் பயன்படுத்திக் கொள்க. http://in.youtube.com/watch?v=tT7Q-UpF0JM

மாபெரும் ரயில் மறியல் போராட்டம்

ஈழத் தமிழர்கள் படுகொலையைக் கண்டித்தும், சிறுபான்மையினர் படுகொலையைக் கண்டித்தும் திராவிடர் கழகம் சார்பில் தமிழர் தலைவர் கி.வீரமணிஅவர்கள் தலைமையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாபெரும் ரயில் மறியல் போராட்டம். நாள்: 23-09-08 10:00 pm தோழர்கள் பெரியார் திடலில் கூடும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வாழ்த்துரை: தொல்.திருமாவளவன், பாவலர் அறிவுமதி, அன்புத் தென்னரசன், எஸ்றா.சற்குணம், பேரா.செல்வநாயகம், சையத் சத்தார் மற்றும் தமிழின உணர்வாளர்கள். தமிழனப் பெருமக்களே! ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்களப் பேரினவாத அரசைக் கண்டித்தும், மதவெறிச் சக்திகளின் வன்முறை வெறியாட்டத்தைக் க்ண்டித்தும் ஒன்றிணைவோம்!

கரும்புலிகள் முகத்தில் தோன்றும் பெருமிதம் பார்!

களப்பலி ஆகப் போகிறோம் என்று தெரிந்தும் - அந்தக்
கரும்புலிகள் முகத்தில் தோன்றும் பெருமிதம் பார்!

"பெரும் புலித் தலைவன் அருகிருந்து எங்கள் விடுதலைப்
பெருங் கனவை வென்றெடுக்க, பாரில் தமிழீழப் புலிக் கொடி
சிறகடிக்க, எதிரி கோட்டையை தூள்தூளாய் சிதறடிப்போம்!
அதில் வெடிகுண்டாய் மாறி எம் உயிர் கொடுப்போம்! - பின்னர்
மாவீரர் தோட்டத்தில் ஓய்வெடுப்போம்" என்று நாட்டுக்காகக்

களப்பலி ஆகப் போகிறோம் என்று தெரிந்தும் - அந்தக்
கரும்புலிகள் முகத்தில் தோன்றும் பெருமிதம் பார்!

போருக்கனுப்பும் தாய் போல தலைவன் முகத்தில் கடமையுணர்வு!
"பாரெங்கள் தலைவனுடன் நாங்கள்" -இது கரும்புலிக் கூட்டத்தின் பெருமையுணர்வு!
தலைவருக்கருகில் அமர்ந்திருக்கும் அந்த இளம்பெண்ணின் பூரிப்பு!
தமிழ் விடுதலையைக் கண்டுவிட்ட பெருஞ்சிரிப்பு! -வீரக்
களப்பலி ஆகப் போகிறோம் என்று தெரிந்தும் - அந்தக்
கரும்புலிகள் முகத்தில் தோன்றும் பெருமிதம் பார்!-----------------------------------------------------------------------------------
தலைவர் பிரபாகரனுடன் நிழற்படத்தில்...
வவுனியா தாக்குதலில் உயிர் விதைத்த கரும்புலிகள்:
கரும்புலி லெப்டினன்ட் கர்னல் மத…

கடவுள் நம்பிக்கையாளர்களுக்கு சத்யராஜ் சவால்!

சென்னை பெரியார் திடலில் நடைபெற்று வரும் முப்பெரும் மாநாடுகளில் ஒன்றான மாநில பகுத்தறிவாளர் கழக மாநாட்டில் இன்று (செப்டம்பர் 7-ஆம் தேதி), கலந்துகொண்டு உரையாற்றும் இனமுரசு சத்யராஜ், ஆத்திகர்களுக்கு ஒரு சவால் விடுத்திருக்கிறார்.
"எனக்கோ, அமைச்சர் வேலு போன்ற தலையில் முடி கொட்டிவிட்ட எங்களைப் போன்றவர்களுக்கோ, எந்தக்கடவுளை கும்பிட்டாவது முடி வளருமேயானால், நாங்கள் எங்கள் பகுத்தறிவு வாதங்களையும், கருப்புச் சட்டையயும் கழற்றிவிட்டு உங்களோடு வரத் தயார்...!
ஆத்திகர்கள் தயாரா?" என்று சவால் விடுத்தார்...
என்ன? எப்படி சவுகரியம்.... ஆத்திகர்கள் தயாரா?

_____________________________________________________________
இன்று மாலை தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்கு "சமூகநீதிக்கான வீரமணி விருது" வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வாய்ப்புள்ள தோழர்கள் பெரியார் திடலுக்கு வாருங்கள்! மற்றவர்களுக்காக இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.. அவசியம் பாருங்கள்!
http://periyar.org.in

Symposium on GLOBAL HUMANISM

PERIYAR INTERNATIONAL
CHICAGO, USAAND TAMILNADU INTELLECTUAL FORUM CHENNAI, INDIA Cordially invite you to participate in the Symposium to be held at Annai Maniammaiyar Hall, Periyar Thidal, Chennai- 600 007 at 5 pm on 05-09-2008, Friday
The topic for Discussion: Global Humanism President: Dr. K.Veeramani,President, Dravidar Kazhagam Welcome: Dr. Soma Elangovan, Periyar International, Chicago Chief Guest: Prof. Paul Kurtz,Internationally renowned Humanist The invitees will exchange their views in the symposium
Vote of thanks: Dr. V.Sundararajulu, Secretary, TamilNadu Intellectual Forum, Chennai

"அவனாம் - இவனாம்!"

மாநாட்டுச் சிந்தனைகள்- மின்சாரம்எல்லோருக்குமே தெரியும் தந்தை பெரியார் நூல்களை வெளியிடுவதிலோ, பகுத்தறிவு வெளியீடுகளைக் கொண்டு வருவதிலோ திராவிடர் கழகத்தோடு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தோடு போட்டி போட முடியாது என்று அந்தக் குழுவுக்கு மட்டுமா - எல்லோருக்குமே தெரியும்.
மிக நன்றாகவே தெரியும்! தந்தை பெரியார் கருத்துகளை பகுத்தறிவுச் சிந்தனைகளை யார் எடுத்துச் சொன்னாலும் மானமிகு வீரமணி என்ன சொல்லுகிறார் என்பதுதான் எடுபடும் என்பது அந்தக் குழுவுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே தெரியும்.
உலகுக்கே தெரியும்! தந்தை பெரியார் கருத்துகளுக்குக் சட்டம் வடிவம் கொடுக்க தேவையான அழுத்தத்தைத் தந்து, சாதிக்கக் கூடிய ஆற்றல் ஆசிரியர் வீரமணிக்குத்தான் உண்டு என்பது அந்தக் குழுவுக்கு மட்டுமல்ல. அகில உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு மிக மிக நன்றாகவே தெரியும்.
யாருக்குத்தான் தெரியாது? தந்தை பெரியார் அவர்களின் தத்துவங்களை எல்லைக் கோடுகளைத் தாண்டி, உலகின் பிற பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லும் திறனும், திட்பமும் - அதற்கான அமைப்புகளை உருவாக்கித் தொடர்ந்து செயல்படச் செய்விக்கும் செயல் திறன் சிறு வயது முதலே இயக்கத்தால…

மோதல் போக்குதான் நோக்கம்!

மோதல் போக்குதான் நோக்கம்!- மின்சாரம்தந்தை பெரியாரின் நூல்கள் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனதிற்குச் சொந்தமானவை. அவை பதிப்புரிமை பெற்றவை என்று தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் ஓர் அறிவிப்பினை செய்தாலும் செய்தார்-
இது என்ன அநியாயம்! பெரியாரின் சிந்தனைகள் தனி உடைமையா? பெரியாரின் கருத்துகள் மக்களுக்குப் போய்ச் சேரவேண்டாமா? - அதனைத் தடுப்பதா? என்று பெரியார் கொள்கையைப் பரப்புவதற்கென்றே பிறந்தவர்கள்போல் தாம் - தூம் என்று எகிறிக் குதிக்கிறார்கள். கருத்துப் பஞ்சம் ஏற்பட்டு வற்றிப் போய்க்கிடக்கும் சில இதழ்களும், தொலைக்காட்சிகளும் ஆகா - கிடைத்தது ஒரு விஷயம்; அதை வைத்துக் காலட்சேபம் செய்வோம் என்று புறப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது.
இதுதான் சந்தர்ப்பம் என்று பார்ப்பனர் ஒருவர் கூடப் புறப்பட்டு விட்டார் - பெரியார் கருத்துகளைப் பரப்புவதில் அவ்வளவு ஆர்வம் பீறிட்டுக் கிளம்பியிருக்கிறது அவாளுக்கு. தொலைக்காட்சி ஒன்றில் ஒருபட்டி மன்றத்தையே நடத்தினர். பொதுவாக நடுவராகயிருக்கின்றவர் திறந்த மனத்தோடு ஆசனத்தில் அமர்ந்திருக்கவேண்டும். அந்த இலக்கணம் கூடத் தெரிந்து கொள்ளாமலே சில்க் புகழ் வீரர் நடுவராக அம…

ஊன்றிப் படித்து உண்மையை அறிக!

ஊன்றிப் படித்து உண்மையை அறிக! சென்னை மாநாடுகளும் - நமது சிந்தனையும்! - கலி. பூங்குன்றன், பொதுச்செயலாளர், திராவிடர் கழகம். மதவாதம் இந்தியத் துணைக் கண்டத்தை மட்டுமல்ல - உலகப் பந்தையே உருட்டி மிரட்டிக் கொண்டு இருக்கிறது!வெடிகுண்டுகள் ஒரு பக்கம்; மனிதனே வெடிகுண்டாகி ரத்தத்தைக் குடித்துக் கொண்டு இருக்கிறான் மறுபக்கம்! ஓருயிர் போகட்டும் - அதற்கு விலையாக ஒரு நூறு உயிர்களைக் குடிப்போம் என்கிற குரூரப் புத்தியை மதங்கள் மலிவாக வழங்கிக் கொண்டு இருக்கின்றன.கடவுளிடம் அனுமதி பெற்று ஈராக்கின் மீது போர் தொடுத்தோம் என்று படித்த மனிதன் - அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் விஷம் கக்குகிறார்.ஒரு மதத்துக்கும், இன்னொரு மதத்துக்கும் மட்டுமல்ல - ஒரு மதத்தின் குட்டிகளுக்குள்ளேயே கூட அடிதடி - ரணம் - ரத்த ஆறு!மதம் வழி காட்டியது போதும், போதும்! புது வழியைத் தேடும் - புதுப் பார்வையை நாடும் ஒரு காலகட்டம் இது.இதற்குத் தேவைப்படும் மாமனிதர்தான் தந்தை பெரியார் - மாமருந்துதான் தந்தை பெரியார் என்ற சமூக விஞ்ஞானி கண்டுபிடித்துக் கொடுத்த சுயமரியாதை - சமத்துவ - பகுத்தறிவுச் சித்தாந்தம்!உலகில் இதற்கான ஒரே ஒரு தனித்தன்மை வாய்ந்த இயக்கம் …

வரட்டும் கலைஞருக்கு கைது ஆணை!

கொம்பு முளைத்த உச்சநீதிமன்றம், மக்கள் மன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழினத் தலைவர் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு கைது ஆணை பிறப்பிக்கப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
நூற்றண்டு கால தமிழர்களின் கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தை, பாதி பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் மத நம்பிக்கை என்னும் புரட்டைச் சொல்லி தடுக்க நினைப்பவர்களுக்கு உச்சநீதிமன்றம் அடைக்கலம் கொடுக்குமாம்; இதைப் பார்த்துக் கொண்டு இன உணர்வாளர்கள் சும்மா இருக்க வேண்டுமாம். உச்சிக்குடுமி நீதிமன்றம் என்ன சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு தலையாட்டிக் கொண்டிருக்க வேண்டுமாம்.

அப்படி இல்லாமல், சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து முடிக்கக்கோரி அமைதியான வழியில், சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட வழியில் பந்த் அறிவித்தால் அதை இரவுக்கிரவே கூடித் தடுக்குமாம் உச்ச நீதிமன்றம்.
சரி, உச்சநீதிமன்றத்திற்கு மதிப்புக் கொடுத்து உண்ணாநிலைப் போராட்டம் என்று அதை மாற்றிக் கொண்டு, உரிய நேரத்தில் அலுவலகத்துக்கு சென்று கையொப்பமிட்டு பணியை மேற்கொண்டார் கலைஞர்.
பார்த்துக்கொண்டிருந்த தமிழக மக்கள் தன்னெழுச்சியாக 'பந்த்' நடத்தி, உச்ச நீதிமன்றத்தின்…

வென்றது அய்க்கிய முற்போக்குக் கூட்டணி!

மக்களவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றிபெற்றது.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 253 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது.
எதிர்த்து 232 வாக்குகள் பதிவாயின. கடந்த சில நாட்களாக நீடித்து வந்த மர்மம் நீங்கியது. கம்யூனிஸ்டுகளின் பணியால் நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு நின்ற மதவாதத்தின் முயற்சி தோல்வியடைந்தது.

வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்

பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் IPL T20 இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் கடைசி பந்து வரை போராடி தோல்வியடைந்தது! ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றியடைந்தது!

தமிழர்கள் தூக்கிச் சுமந்த மூத்திரச் சட்டி!

ராமன், அனுமன் வேடங்களில் இருப்போர் ஒன்னுக்கு அடிப்பதைப் போன்ற திரைப்பட சுவரொட்டி பற்றிய எமது பதிவுக்கு பின்னூட்டமிட வந்த அனானி ஒருவர் பெரியார் மூத்திரம் இருப்பதைப் போன்ற படத்தை சுவரொட்டியாக அடித்து ஒட்ட விரும்பியிருக்கிறார். அவருக்கு உதவியாக இருக்கட்டுமே என்று...
___________________________________________________________________

பெரியார் ஒன்னுக்கு அடிப்பதைப் போன்ற படத்துக்காக அவ்வளவு சிரமப்படவெல்லாம் வேண்டாம். மூத்திரம் வெளியேறும் போதெல்லாம் 'அம்மா அம்மா' என்று அலறித் துடித்தபிறகும், தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு தன் மக்களுக்காக பிரச்சாரம், பயணம் என்று சுற்றிய பெரியாரையும் அவரது மூத்திரச் சட்டியையும் தூக்கிச் சுமந்தவர்கள் தமிழர்கள்!அதனால் அந்தப் படத்தை தாராளமாக தமிழகமெங்கும் போஸ்டர் அடித்து ஒட்டுங்கள்.. அப்போதுதான் இன்றைய தமிழனுக்கு பெரியாரின் பெருங்குணமும் அவரது கடும் உழைப்பும் விளங்கும்! அனானியின் இந்த முயற்சிக்கு நாம் துணை நிற்போம்! அதற்காக அந்த புகைப்படங்களை பதிவாக இடுவதில் நாம் பெருமை கொள்கிறோம்.

ஒவ்வொரு சொட்டாக மூத்திரம் இறங்கும் போதெல்லாம் வலியால் துடித்து முகம் சிவந்தபடி…

ராமனுக்கு வராதா ஒன்னுக்கு?

தென்னவன் கலைக்கூடம் சார்பில் தயாரிக்கப்படும் 'வணக்கம்மா' என்ற திரைப்படத்தின் தொடக்க விழா நேற்று சென்னை ஏ.வி.எம். அரங்கில் நடைபெறவிருந்தது. தொடக்க விழாவுக்கான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன. இந்நிலையில் சுவரொட்டி ஒட்டியவர்களைக் கைது செய்தது காவல் துறை. காரணம் இந்துமுன்னணி உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக காரணம் கூறப்பட்டது.
பிறகு தொடக்கவிழாவின் போதும் இந்து முன்னணி உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் தங்கள் காலித் தனத்தை அரங்கேற்றி உள்ளன.

என்னடா காரணம்ன்னா...."ராமனை இழிவுபடுத்திவிட்டார்கள்! எங்கள் மனம் புண்பட்டுவிட்டது" என்று தேய்ந்து போன நொந்து போன பழைய ரெக்கார்டை ஓட்டி இருக்கிறார்கள்.
சரி.. அப்படியென்ன இழிவுபடுத்திவிட்டார்கள்ள்ள்ள்-னு கூப்பாடு போடுறீங்கன்னு கேட்டா...
"ராமனும் அனுமானும் ஒன்னுக்கு போவது போல சுவரொட்டி ஒட்டப்பட்டிருக்கிறது. அது எங்கள் மனதைப் புண்படுத்திவிட்டது." அப்படின்னு நம்ம ராம கோமாளி சொல்றாரு.
புண்பட்டதெல்லாம் அப்புறம் இருக்கட்டும்... இப்படியே புண்பட்டுப் போச்சு... புண்பட்டுப் போச்சுன்னு இவங்க சொன்ன கணக்குப் படி பார்த்தா இதயம…

அண்ணா பரிமளம் மறைவு

பேரறிஞர் அண்ணா அவர்களின் வளர்ப்புப் புதல்வரும், பேரறிஞர் அண்ணா இலக்கியப் பேரவைத் தலைவருமான மானமிகு சுயமரியாதைக்காரர் டாக்டர் அண்ணா பரிமளம் அவர்கள் மறைந்துவிட்டார்கள் என்ற துயருறும் செய்தியை அறிவிக்க வருந்துகிறோம்.

இறுதி வரை கொள்கையுடன் வாழ்ந்த அந்த கொள்கைக் கோமானுக்கு வீரவணக்கம்!
அவர் தொகுத்தளித்த அறிஞர் அண்ணா பகுத்தறிவுக் களஞ்சியம் நூல் வெளிவரப்போகும் இத்தருணத்திலும், அவர் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்த அறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு தொடங்க இருக்கும் இத்தருணத்திலும் அவரது மறைவு என்பது ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
அவருக்கு நமது வீரவணக்கம்!

அறிஞர் அண்ணாவின் எழுத்துகளை இன்றைய தமிழ் இளைஞர் உலகம் அறிந்துகொள்ள வேண்டும் என்பதில் பெரும் ஆர்வம் செலுத்தி அண்ணாவின் படைப்புகளை இணையத்தில் கொண்டுவருவதில் முனைப்பாக இருந்து செயல்பட்டார். அவரது உழைப்பின் பலனாய் http://www.arignaranna.info/ என்ற தளம் உருவாகி செயல்பட்டு வருகிறது.

சரத்குமாருக்கு மட்டுமல்ல... மானமற்ற மடையர்கள் அனைவருக்கும்!

"தமிழ் வளர வேண்டும். தமிழர்கள் வழிபடும் ஆலயங்களில் தமிழில் மந்திரங்கள் ஒலிக்க வேண்டும். தமிழில் அர்ச்சனைகள் நடக்க வேண்டும் என்ற ஆர்வம் தவறில்லை. ஆனாலும், காலகாலமாய் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மரபுகளையும் மனதில் கொண்டே மாற்றங்களை நிகழ்த்த அமைதி வழியில் முயற்சிக்க வேண்டும். அதற்கு இறை நம்பிக்கை கொண்டோரை, ஆன்மீகப் பெரியோர்களை, அறிஞர் பெருமக்களை கொண்ட ஒரு குழு அமைத்து அதன் வழியில் தீர்க்கமான சுமூக முடிவை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று ***** கூறியுள்ளார்." (தினமணி 4.3.2008 )
இது தினமணியில் வந்த செய்தி.

அதே பேட்டியை சன் டி.வி-யும் ஒளிபரப்பியது. அதில் சொன்னார், "கடவுளுக்கு எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்று ஆகமத்தில் இருக்கிறது அதன்படி தான் செய்ய வேண்டும். கடவுள் நம்பிக்கையற்றவர்கள் இப்பிரச்சினையில் உள்நுழைந்து குழப்பக்கூடாது." என்று.
இப்பேட்டி யார் கொடுத்தது என்று நினைக்கிறீர்கள்? பா.ஜ.க. 'இலக்கடை' கணேசன் கொடுத்தது என்றுதானே! அதுதான் கிடையாது;
இல்லை 'சோ'...ம்ஹூம்... அதுவும் கிடையாது

இந்த அரிய பெரிய கருத்தினை தெரிவித்தவர் 2011-ன் தமிழக முதல்வர்களில் ஒருவரு…

தாழ்த்தப்பட்ட மாணவர்களின் உதவித் தொகைக்கு நிபந்தனை ரத்து

மத்திய அரசு சார்பில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் பெற குறைந்தபட்சம் 60 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்று நிபந்தனை வித்ஹிக்க இருப்பதாக தகவல் வந்ததை அடுத்து தமிழகம் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளிலும் மாணவர்களும் சமூக நீதியில் அக்கறை கொண்டவர்களும் குரலெழுப்பினார்கள். மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.
தமிழ்க முதல்வர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் மத்திய அரசின் இந்த நிபந்தனையாஅல் தமிழக மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் தமிழக அரசே அந்த நிதிஉதவியினை செய்யும் என்று அறிவித்தார். அத்தோடு மட்டுமல்லாமல் மற்ற மாநில மாணவர்களும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.
திராவிடர் கழகம் கடந்த 16-ஆம் தேதி தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
முதல் தலைமுறையாக, மிகவும் பிந்தங்கிய பகுதிகளில் இருந்தும், தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து படிக்க வருவோரின் வாய்ப்பை இந்த நிபந்தனை மூலம் கெடுத்துவிடக்கூடாது என்று குரலெழுப்பினார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
இந்நிலையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கலைஞரின் கடிதம் பற…

சித்திரையில் "தான்' புத்தாண்டா?

சித்திரையில் புத்தாண்டு பிறக்கிறது (தினமணி, 24 ஜனவரி 2008) என்பது வரலாற்று ரீதியாகவும் தமிழ் மரபின்படியும் மறுக்க முடியாத உண்மையே. ஆனால், சித்திரை மாதத்தில் புத்தாண்டு தொடங்குவது என்பது வான நூலையும் பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது, இயற்கையான காலக் கணக்கீடு என்று கட்டுரை ஆசிரியர் கூறியிருப்பதை அறிவியல் கண்ணோட்டத்தில் ஏற்பதற்கு இல்லை.
ஏனெனில், சித்திரை முதல் தேதியன்று (ஏப்ரல் 13 14) முற்காலத்தில் நிகழ்ந்த விசு (பகலும் இரவும் ஒரே கால அளவைக் கொண்ட நாள்) தற்காலத்தில் பங்குனி 8 9 தேதிகளிலேயே (மார்ச் 21 22) நிகழ்ந்து விடுகிறது.இது போன்றே, ஐப்பசி விசு, தட்சிண அயனம், உத்தர அயனம் ஆகிய வானவியல் இயற்கை நிகழ்வுகளும் இன்றையப் பஞ்சாங்கங்களில் குறிப்பிட்டுள்ள தேதிகளுக்கு முன்னரே நிகழ்ந்து விடுகின்றன. "சித்திரை' விசு பங்குனியிலும், "அய்ப்பசி' விசு புரட்டாசியிலும் தற்காலத்தில் நிகழ்கின்றன. இவை அறிவியல் அடிப்படையிலான இன்றைய வானவியல் காட்டும் நிதர்சன உண்மைகளாகும். இக்குழப்பத்துக்கு நம் முன்னோர்கள் பொறுப்பாளிகள் அல்லர். அவ்வப்பொழுது வானநூல், பருவங்களின் சுழற்சி ஆகியவற்றின்…