முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இனப்படுகொலையைக் கண்காணிக்க வாக்களியுங்கள்!

கூகிள் நிறுவனத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள Project 10 100 திட்டத்தில் இடம்பெற்றுள்ள 16 திட்டங்களுள் முதன்மையாகத் தேர்ந்தெடுக்கப்படும் 5 திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கி செயல்படுத்தவுள்ளது. இந்த 16 திட்டங்களுள் இனப்படுகொலையைக் கண்காணித்தல் மற்றும் எச்சரித்தல் திட்டத்திற்கு அதிகப் படியான வாக்களிப்பதன் மூலம் இத்திட்டத்தை முதன்மைப் பட்டியலில் இடம்பெறச்செய்து, இதன் வாயிலாகவும் உலகின் கவனத்தைப் பெறமுடியும். எனவே, தோழர்கள் இத்திட்டம் குறித்து அறிந்துகொண்டு வாக்களிக்க வேண்டுகிறேன். திட்டம் பற்றி: http://www.project10tothe100.com/index.html இவ்விணைப்பில் உள்ள கீழ்க்காணும் பிரிவுக்கு வாக்களிக்கவேண்டும். இத்திட்டம் மேல், கீழாக எங்கும் இருக்கலாம். ஏனெனில் திட்டங்களின் வரிசை, மாறி மாறி வருவது போல் random-ஆக அமைக்கப்பட்டுள்ளது. எனவே கவனத்தோடு வாக்களிக்கவும். அல்லது, நான் வழங்கியிருக்கும் "Vote for this Idea" எனும் இணைப்பில் வாக்களிக்கவும். திட்ட எண்: 14 Create genocide monitoring and alert system Vote for this idea Community Build and refine tools capable of disseminating geno

இன்றும் பொருந்தும் திலீபனின் குரல்!

தமிழர் தாயகத்துக்கான வீரஞ்செறிந்த போராட்டத்தின் இன்னொரு வடிவம் தான் திலீபன்! ஆயுதம் தூக்காத வீரம்! அஹிம்சை, அஹிம்சை என்று வாய் கிழியக் கத்தும் இந்திய அரசுக்கெதிரான அறவழிப்போராட்டம்...! காந்தியின் உண்ணாவிரதப் போராட்டம் வென்றது! திலீபனது போராட்டம் அவன் உயிரைக் குடித்தது!! காரணம் காந்தி போராடியது ஆங்கிலேயர்களை எதிர்த்து...! திலீபனின் போராட்டமோ பாழும் இந்தியத்தை எதிர்த்து! நியாயமான எதிரியுடன் தான் நியாயமாகப் போராட வேண்டும்! அதைக் கற்றுக் கொடுத்தது திலீபனின் வீரச் சாவு! தியாகத் திருவுரு திலீபனின் அய்ந்தாம் ஆண்டு நினைவு நாளையொட்டி தமிழீழ விடுதலைப்புலிகளால் வெளியிடப்பட்ட ஆவனப்படம் காணக்கிடைத்தது. (நன்றி: வளரி.) அதில் திலீபன் ஆற்றும் உரை 22 ஆண்டுகள் கழித்தும், நமது இன்றைய சூழலுக்கு அவா ஆற்றிய உரை என்று கூறத்தக்க அளவில் பொருந்திப் போகிறது. "இனியும் ஆயுதம் எடுப்போம்... அந்நிலை வரும். எம் தேச விடுதலைக்காக எந்த தியாகத்தையும் செய்வோம்" என்றொலிக்கும் அந்தக் குரல் மீண்டும் மீண்டும் நாம் கேட்டு மனதில், புத்தியில், உணர்வில் பதிய வைக்க வேண்டிய குரலாகும். நீங்களும் கேளுங்கள்! திலீபனின் தியாகம்

செருப்பாலடித்தவரின் சிறப்புக் கட்டுரை

குறிப்பு: ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த ‘குற்றத்திற்காக’ ஒன்பது மாத சிறை வாசத்திற்குப் பின், கடந்த வாரம் விடுதலையாகியுள்ள முன்தாஜர் அல் ஜெய்தி எழுதிய கீழ்க்காணும் கட்டுரை, கார்டியன் செய்தித்தாளில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது . அதன் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது. … முன்தாஜர் அல் ஜெய்தி நான் விடுதலையடைந்து விட்டேன். ஆனால், எனது நாடு இன்னமும் போர்க் கைதியாக சிறை வைக்கப்பட்டிருக்கிறது. செயல் குறித்தும், செயல்பட்டவர் குறித்தும், நாயகனைக் குறித்தும், நாயகத்தன்மை வாய்ந்த செயல் குறித்தும், குறியீடு குறித்தும், குறியீடான செயல் குறித்தும் நிறையப் பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஆனால், எனது எளிமையான பதில் இதுதான். என் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும், எனது தாயகத்தை ஆக்கிரமிப்பானது எவ்வாறு தனது பூட்சுக் கால்களால் நசுக்கி இழிவுபடுத்த விரும்பியதென்பதும்தான், என்னை செயல்படக் கட்டாயப்படுத்தியது. கடந்த சில ஆண்டுகளில், ஆக்கிரமிப்பின் துப்பாக்கி ரவைகளுக்கு இரையாகி பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட தியாகிகள் தமது இன்னுயிரை இழந்தார்கள். கணவனை இழந்த ஐம்பது இலட்சம் பெண்களும், உடல் உறுப்பு

ஜாதி ஒழிப்பு மாநாடு! புதுவண்ணை அழைக்கிறது - புது வரலாறு படைக்க!!

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடக்கிறது - "ஜாதிப்பாகுபாட்டை ஒழிப்போம்" என்னும் தலைப்பில்! எண்ணற்ற இருபால் மாணவர்கள் பங்கேற்கிறார்கள். உணர்வு பொங்கப் பேசுகிறார்கள். தலைப்பில் கவனம் - ஜாதிப்பாகுபாடு தான் ஒழிய வேண்டும்; ஜாதி அல்ல. கை, கால்களை ஆட்டி, ஆட்டி, ஒரு திறமையான வணிகப் பேச்சாளரின் பாவனைகளுக்குப் பழக்கப்பட்டிருக்கிறது அவர்களின் உடல்மொழி! ஆனால் கருத்து? (படம் நன்றி: மதிமாறன்) "பாரதி பாடினானே, 'ஜாதிகள் இல்லையடி பாப்பா! குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்" என்று இப்படித் தொடங்குகிறார்கள். அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது அவ்வளவுதான். பெண்ணுரிமையோ, ஜாதி ஒழிப்போ அவர்கள் பாரதியில் தொடங்கி பாரதியோடு முடித்துக் கொள்வார்கள். தாண்டி வரமாட்டார்கள். அதை விடுவோம். (பாரதியும் முழுமையான ஜாதி ஒழிப்புப் பேசியிருந்தால்.... நமக்கு அதில் ஒன்றும் சங்கடமில்லை. அரைகுறைகளுக்குத் தெரிந்ததெல்லாம் அரைகுறைதானே!) நான்கைந்து பாடல் வரிகளை எடுத்துவிடுவார்கள். கடைசியில் தீர்வு வைப்பார்கள்! "பள்ளிகளில் சேர்க்கும் போதே ஜாதியைக் கேட்கிறார்களே, இந்நிலை ஒழியும்வரை ஜாதி எப்படி ஒழியும்