காரணமில்லாமலில்லை.
தீபாவளி என்று சொல்லப்படும் பண்டிகையின் தத்துவம் என்று சொல்லப்படுவது என்ன?
தீமை செய்தவருக்கு தண்டனை கிடைத்த நாளே தீபாவளி!
அப்படியெனில் இன்று நான் தீபாவளி வாழ்த்து சொல்வது சரியானது தான்.
இந்திய அரசாங்கமே தண்டத்தில் தொங்கும் கோவணத் துணியில் தான் முடிச்சிடப்பட்டிருக்கிறது என்ற மமதையில் திரிந்த ஒரு கொலைகாரன் சரியாக மூன்றாண்டுகளுக்கு முன் இதே நவம்பர் 11-ஆம் தேதி இரவில்தான் கைது செய்யப்பட்டான்.
தண்டத்தை தூக்கிப்போட்டுவிட்டு நேபாளப் பெண்ணோடு ஓடியவனைத் தேடிக் கண்டுபிடிக்க அன்றைய குடியரசுத்தலைவராக இருந்த வெட்கங்கெட்டவனின் மனைவி தலைமையில் அமைக்கப்பட்டது குழு. அக்குழு விளக்குப் பிடித்தபடி தேடி தலைக்காவிரியில் போய் சல்லாபம் செய்து கொண்டிருந்தவனைப் பிடித்து வந்தது.
'கோவணம் காயவைக்கும் தண்டத்தை விட்டுவிட்டு வந்துவிட்டீர்களே!' என்று கேட்டதற்கு, "தண்டத்தின் சக்தியை என்னுடலில் ஏற்றிக் கொண்டேன்" என்றது நடுவால்.
இதனால் ஆதிசங்கரன் அமைத்த நான்கு பீடங்கள் தவிர, ஐந்தாவதாக உருவாக்கப்பட்ட டூப்ளிகேட் மடத்தின் பெரிய வால் அதிர்ச்சிக்குள்ளானது. அதற்கிடையில் 'குட்டி வால்' ஒன்றுக்கு 'பெரியவால்' பட்டம் கட்டிவிட, திரும்பி வந்த தண்டமும் வெட்கமில்லாமல் தண்டத்தைத் தூக்கி தோளில் சுமந்தது.
பின்னர் பெரியவால், நடுப் பெரியவால், குட்டிவால் என்று மூன்றும் காந்தியின் மூன்று குரங்குகளை நினைவுபடுத்தியபடி திரிந்தன.
பல காலம் பிணம் போலக் கிடந்த பெரியவாலுக்கு சதாபிஷேகம் நடத்தி அதன் தலையில் பொற்காசுகளைக் கொட்டி சாகடித்த பின்பு பெரியவால்-ஆக பட்டம் கட்டிக்கொண்ட நடுப்பெரிசு, தனது சல்லாபங்களை மடத்திற்குள்ளேயே அரங்கேற்றிக் கொண்டது. அதன் வயதுக்கேற்ற அளவு அது பார்த்துக்கொள்ள, சிறிசு அது வயதுக்கேற்ற சொர்ணங்களைப் பார்த்துக் கொண்டது.
இது பொறுக்காத மொட்டைக் கடுதாசி சங்கர்ராமன், தன் புலம்பலை ஊருக்குச் சொல்ல மென்னியை நெறித்து, கோயிலுக்குள்ளேயே கொலை செய்துவிட்டுப்போனது ஊத்தவாயின் கும்பல்.
எதையும் உளறிக்கொட்டியே மாட்டி பழக்கப்பட்ட ஊத்தவாய், இதிலும் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்டது. 'என் கால் விரல் நகத்துக்குப் பங்கம் வந்தாலும், பொறுக்காத பக்தர்கள் செய்திருக்கலாம் என்று பெருமை பாடியது.
அப்புறம் அது மாட்டிக் கொண்டு நாறிய கதைதான் அனைவருக்கும் தெரியுமே? இன்னும் அதன் படுக்கையறை பிரதாபங்களையும், சங்கரமட சல்லாபங்களையும் தொடர்கதையாகப் படித்தோமே!இப்படி அதிகாரத்தின் உச்சியில் இருப்பதாகக் கருதிக் கொண்டிருந்த அதுகளுக்கு ஆப்பு வைத்து அடக்கப்பட்ட நாள் தானே தத்துவப்படி உண்மையான தீபாவளி! அதனால் தான் இந்த வாழ்த்துகள்!
ஆனால் வழக்குமன்றத்தின் அதிகாரத்தில் இருக்கும் பூணூல்களின் கொட்டமடங்கி, இன்னும் முடியாமல் இருக்கும் வழக்குகளை விரைந்துமுடித்து தீர்ப்பு வழங்கி அதிகாரப்பூர்வமாக அவ்வாளுக்கு ஆப்படித்து, தீபாவளித் தேதி அறிவிக்கப்பட வேண்டும் என்பதே நம் அவா!
புலனடக்கத்தின் அடையாளமாக சொல்லப்படும் காந்தியின் குரங்குகளை, புலனடக்கப் பொன்விழா கொண்டாடிய பொறுக்கிக் கும்பலோடு ஒப்பிட்டமைக்கு குரங்குகளிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
கருத்துகள்