முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

March, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நாங்க ரெடி! நீ ரெடியா?

இதைத் தாண்டா எதிர்பார்த்தோம்!
எவ்வளவு நாள் தான் எங்க ஆளையே  எங்க கூட மோத விட்டு வேடிக்கை பார்ப்பீங்க? 
நீ மட்டும்...  (ஆம்பிளையா இருந்தா...., ஒத்த அப்பனுக்கு பொறந்திருந்தா....  அபப்டின்னு எல்லாம் கேட்க மாட்டேன்.  ஏன்னா, நீ ஆம்பிளையா பொம்பிளையாங்கிறது அவசியமில்லாதது;  ஒத்த அப்பனுக்குமேல இருக்க முடியும்கிறது  அறிவியல் சொல்லாதது. அதனால் நீ சொல்ற மாதிரியே...)  சுத்த ப்ராஹ்மணனா இருந்தியின்னா,  நீ சொன்ன மாதிரி முதல்ல பார்ப்பனப் படையை ரெடி பண்ணு!  அப்ப ஆடுவோம் பாரு ஒரு ஆட்டம்! 
நாங்க ரெடி! நீ ரெடியா?

ஈழத்திற்கான தீர்வு 19-ஆம் வார்டிலா?

ஒரு வீடியோ கேம் விளையாடி, வெற்றி வாய்ப்பை நெருங்கிச் சென்று, பின் இழந்தால் கூட, மீண்டும் முதல் நிலையிலிருந்து தான் தொடங்க வேண்டும். விட்ட இடத்திலிருந்து தொடங்குவதற்கு வாய்ப்பில்லாத சூழலில் படிகளைக் கடந்து தான் ஏறமுடியும். ஒரே தாவலில் உயரத்தில் ஏறி நிற்க வாழ்க்கையும் போராட்டமும் சினிமா படமல்ல. 
ஈழப் போராட்டத்தை ஒரு ஹாலிவுட் சண்டைப் படத்துக்கு நிகராகப் பார்த்து, 'எப்படியும் இறுதியில் கதாநாயகன் வென்று விடுவான்'என்று நம்பிக்கொண்டிருந்துவிட்டு, முடிவு எதிர்மறையாகிவிட்ட பின்னும்....
இன்று மீண்டும் மெல்லத் துளிர் விடத் தொடங்கியிருக்கும் வாய்ப்பை, உடனடியாக உச்ச நிலைக்குக் கொண்டுவந்துவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பது அறிவார்ந்த செயலா? 
உலகநாடுகள் மெதுமெதுவாகத் தான் நகரும்... நம் அவசரம் அவர்களுக்கில்லை; நம் வலி அவர்களுக்குத் தெரியாது. அய்.நா.வில் கடந்த முறை கொண்டுவரப்பட்ட தீர்மானத்தைக் காட்டிலும் இந்தத் தீர்மானம் பரவாயில்லை என்றால் இதை ஒரு நகர்வாகக் கருதித் தான் ஆதரிக்க வேண்டும். உலக நாடுகள் தங்களின் சொந்த நலனையும் கவனத்தில் கொண்டு தான் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கும். பொறுமை இல்லாத…

என் முதல் தோழியை நினைவுகூர்ந்து...

உலகெங்கும் இன்று மகளிர் நாள்! எனக்கு அன்னையர் நாளும் கூட!

உண்மையைச் சொன்னால் இன்றொரு நாள் தான் உன்னை நினைக்கிறேன். அம்மா என்றவுடன் என் நினைவுக்கு வரும் இரண்டாம் அம்மாவை இருக்கும் போதே அடையாளம் காட்டிச் சென்றாய்! தங்கையாய், அக்காவாய், அண்ணியாய், மகளாய், ஆசிரியராய், தோழியாய்... இன்று, உன் இடத்தை நிரப்ப எண்ணற்றோரை அம்மாவாகப் பெறும் அளவு என்னை வளர்த்துவிட்டிருக்கிறாய்!

உன்னைத் தோழியாய்ப் பார்த்துப் பழகியது தான்... இன்று எல்லோரையும் தோழியராகப் பார்க்க வைத்திருக்கிறது. நீ எனக்குச் செய்ததில் முதன்மையானதாக இது தான் தெரிகிறது.

நான் இதை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் ‘கள்ளிக்காட்டில் பொறந்த தாயே’ பாடல் கலைஞர் தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த ’அம்மா’ செண்டிமெண்ட் எல்லாம் எனக்குக் கிடையாது என்று என்னைத் தெரிந்த எல்லோருக்கும் தெரியும். எல்லாமே எனக்குத் ’தோழி’ செண்டிமெண்ட் தான். ஆகவே என் முதல் தோழியை நினைவுகூர்ந்து அத்தனைத் தோழியர்க்கும் என் மகளிர் நாள் வாழ்த்துகள்!

எங்கள் குலக் கொழுந்தின் குரல் ஒலிக்கிறது கேள்...

எங்கள்
குலக் கொழுந்தின்
குரல் ஒலிக்கிறது
கேள்...
உலக அற மன்றமே!
கேள்!!

துப்பாக்கிக் குண்டுகளுக்கு
திறந்த மார்பு காட்டிய
எங்கள்
வீரப்புதல்வன்
கேட்கும் கேள்விக்கு
பதில் சொல்!

உன் கேளாக் காதுகளுக்கு
இப்படி
உரத்துச் சொல்ல
இன்னும்
எத்தனை உயிர்கள்
வேண்டுமுனக்கு?

எங்கள்
குலக் கொழுந்தின்
குரல் ஒலிக்கிறது
கேள்...
உலக அற மன்றமே!
கேள்!!