முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

February, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தங்கலட்சுமி பூரிக் கிழங்கும், புராணிகர்கள் அறிவியல் சிந்தனையும்

ஒரே திசையில பயணம் பண்ணோம்னா உலகத்தைச் சுத்தலாமா? முடியாதா? இந்த மாதிரி ஒரு கேள்வியை ஒரு சாதாரண சின்னப் புள்ளக்கிட்ட கேட்டோம்னா அது படிச்ச அறிவியலை வச்சே அது விளக்கம் சொல்லும். 
ஆனால், தங்கள் புத்தகங்கள்ல 1000 வருசங்களுக்கு முன்ன சொன்னதெல்லாம் இன்றைய அறிவியல் படியும் உண்மைன்னு சொல்றதுக்கு என்ன குழப்பு குழப்புறாரு இந்த மனுசன். பொறுமையா அந்த துல்கர்னைன் பய்ணத்தைப் பத்தி விளக்கம் தரும் தோழர்களைத் தான் பாராட்டணும். 
பின்னே என்ன? ச்சும்மா... நாங்க அணு விஞ்ஞானத்தை ஆயிரக்கணக்கான வருசத்துக்கு முன்னாடியே கண்டு பிடிச்சிட்டமாக்கும். எங்க புராணத்தில தான் அது இருக்குதாக்கும்.. இது இருக்குதாக்கும்னு இந்து மதத்தில பீலா வுடுற ஆளுக மாதிரி, ஒவ்வொரு மதத்துக்காரனும் அள்ளிவுடுறான்யா... 
அந்தந்த காலத்து அறிவு தான் அன்றைய இலக்கியங்கள், புராணங்கள், மதநூல்கள் எல்லாத்திலேயும் இருக்கும். ஆப்பிள் அய்பேட் அப்டேட் பண்றது எப்படின்னு திருக்குறள்ல போய்த் தேடக் கூடாது. இன்னும் சொல்லப்போனா... தொலைக்காட்சி தொடர்களால உறவுகள் பாதிக்கப்படுதுன்னு தீர்வைப் போய் வள்ளுவர்ட்ட கேட்கக்கூடாது; அவர் காலத்தில அந்தப் பிரச்சினை இல்லை.…