முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

January, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ் நாள்காட்டி: ஒரே சொடுக்கில்... உங்கள் தளத்தில்...

”நித்திரையில் இருக்கும் தமிழா! சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்

தரணி ஆண்ட தமிழனுக்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு” என்றார் புரட்சிக் கவிஞர்.
அறிவுக்குப் பொருந்தாத, ஆபாசக் கதைகளைச் சொல்லி உங்கள் ஆண்டுக் கணக்கு இது தான் என்று, அறுபது ஆண்டுகளை நம் தலையில் கட்டிவிட்டது ஆரியம். இந்த பண்பாட்டுப் படையெடுப்பைக் கண்ட தமிழறிஞர்கள் 1921-ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகள் தலைமையில் கூடி விவாதித்தனர்.

திருவள்ளுவர் பிறப்பு கி.மு.31 எனக் கொண்டு தமிழ் ஆண்டைக் கணக்கிடவும், தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவான தை முதல் நாளே தமிழர்களின் புத்தாண்டுத் தொடக்கம் என்றும் முடிவு செய்தனர். கி.பி 1971-ஆம் ஆண்டு முதல் திருவள்ளுவர் ஆண்டு என்பதனை தமிழக அரசு ஏற்றுக் கொண்டாலும், தமிழ்ப் புத்தாண்டு என்பது சித்திரை 1-ஆகவே கருதப்பட்டு வந்தது.
தமிழ் உணர்வுள்ளவன் என்பதால் ஒவ்வோராண்டும் எனது நண்பர்கள் சித்திரை 1-க்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து சொல்வார்கள். அவர்களை மறுத்து விளக்கம் சொல்லி, தமிழ்புத்தாண்டு என்பது தை முதல் நாள் தான…

'ரைம்' கவிதை

ஆளாளுக்கு ரைம் (Rhym) கவிதை(!?) எழுதியிருக்கிறார்களே என்று நானும் அவ்வப்போது எழுதுவது உண்டு! (என்ன கொடுமையடா).
எழுதுவது என்றால் எழுதுவது அல்ல; பக்கத்தில் இருப்பவர்களிடம் சொல்வது... அவர்கள் சிரித்தால், மகிழ்ந்தால் 10 மறுமொழி வந்த மகிழ்ச்சி! (நம்ம அளவு அவ்வளவு தான்!)

அப்படி சொல்வதற்கு யாருமே பக்கத்தில் இல்லாமல், வாகனத்தில் சென்று கொண்டிருந்த நேரத்தில் ஒரு 'ரையும் கவிதை' உதித்துத் தொலைந்ததால், செல்பேசியில் பதிவு செய்துகொண்டு வந்து பின்னர் இங்கேயும் பதிவிடுகிறேன்.

"தாரில் போட்ட ரோடானாலும் ஒரு நாள் மழையில் கரையும்
அடுத்த முதல்வரை நாங்கள் தேட போதும் வெள்ளித் திரையும்
பண்பாட்டுப் படையெடுப்பால் மறந்தோம் கூத்தும் பறையும்
தோழர் என்று தோளில் கையிட தகுதி டீயும் பொறையும்
முல்லை அணையை உசத்தனுமாமே எந்தா சேட்டா பறையும்?"


(பின்குறிப்பு: ஒவ்வொரு வரியும் ஒரு வரிக் கவிதையாதலால் (!?) கவிதையா எனக் கேட்பவர்கள் மீது கவிதை பாதுகாப்புச் சட்டம் பாயும்!)